Untitled Document
November 22, 2024 [GMT]
 
காங்கேசன்துறை ரயில் நிலையத்தை உள்ளடக்கிய 201.3 ஏக்கர் காணிகள் விடுவிப்பு! Top News
[Saturday 2016-06-25 18:00]

வலி. வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொதுமக்களின் 201.3 ஏக்கர் காணிகள், இன்று விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இன்று, காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.


கோடையை குளிர்விக்க வரும் இளநீர் திருவிழா: - டொரொன்டோவை வந்தடைந்த கலைஞர்கள். Top News
[Friday 2016-06-24 22:00]

கனடாவில் Markham Fair மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் கோடை பெருவிழாவுக்கான ஏற்படுகள் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாளையும் நாளைமறு தினமும் மார்க்கம் பகுதியில் Markham Fair மைதானத்தில் நடைபெறவுள்ள (25, 26ம் திகதி) இளநீர் திருவிழாவிழாவில் பிரபல பாடகர் கானா பாலா, சூப்பர் சிங்கர் மது ஐயர் உட்பட பல பிரபல பின்னணி பாடகள் உள்ளிட்ட பிரபல சிறப்பு பட்டிமன்ற கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். உள்ளரங்கில் சிரிக்க சிந்திக்க சினங்கொள்ள வைக்கும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளும், வெளியரங்கில் குழந்தைகள் விரும்பும் ராட்டினம் உட்பட விளையாட்டுகளும் இடம் பெறவுள்ளன. அனைவரும் விரும்பும் உணவுவகைகளும் ஸ்டால்களும் இடம்பெறவுள்ளன. கலைனர்கள் அனைவரும் டொரன்றோவை வந்தடைந்த்துள்ளனர் - அவர்களை நிகழ்வின் அனுசரணையாளர்களான வர்த்தக பிரமுகர்கள் பலர் விமானநிலையத்தில் வரவேற்றனர். இந்நிகழ்வுக்கான நுழைவு கடடனம் 10 டொலர் ஆகும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். முற்றிலும் மாறுபட ஒழுங்கமைப்புடன் கோடைகாலத்தில் முதல் குதூகல விழாவாக இந் நிகழ்வு கனடாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

படங்கள் - கிருபா கிஷான்


ஊடகங்களில் அமைச்சர் இராதாகிருஸ்ணனையும் அவருடைய செயற்பாடுகளையும் அவதானித்துள்ளேன்: - மன்னார் ஆயர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை Top News
[Thursday 2016-06-23 18:00]

அண்மையில் மன்னாருக்கு விஜயம் செய்த கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மன்னார் ஆயர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளையை அவருடைய வாசஸ்தலத்தில் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். இந்த சந்திப்பின்போது ஆயர் அமைச்சருடைய சேவைகளை வெகுவாபாராட்டியதுடன் தொடர்ந்து சேவைகளை முன்னெடுக்க ஆசீர்வதிப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் ஊடகங்களில அதிகம் தான் பார்க்கின்ஒ ரு இராஜாங்க அமைச்சர் எனவும் ஆயர் தெரிவித்தார். இந்த சந்திப்பில் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன் வட மாகாண அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன்,தேசிய பாடசாலைகளில் அபிவிருத்தி பணிப்பாளர் முரளீதரன்,இராஜாங்க அமைச்சருடைய பாராளுமன்ற இணைப்பாளர் எம்.ஆர்.ரவீந்தரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


கனடாவில் தமிழ்ப் பட்டமளிப்பு விழா: Top News Top News
[Thursday 2016-06-23 07:00]

கனடாத் தமிழ்க் கல்லூரியானது தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தோடு இணைந்து நடத்திய இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டநெறிகளைப் பயின்று, தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தினால் நடத்தப்பெற்ற தேர்வுகளுக்குத் தோற்றி, பட்டம் பெறுவதற்கான தகமைசார் நியதிகளை நிறைவு செய்த மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குவதற்கான பட்டமளிப்பு விழா 2016.06.18 ஆம் நாள் ரொறன்ரோ நகரில் அமைந்துள்ள றயசன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. சரியாக முற்பகல் 10:45 மணிக்கு கனடாத் தமிழ்க் கல்லூரி இயக்குநர் அவை உறுப்பினர்கள், கனடாத் தமிழ்க் கல்லூரியில் கற்பிக்கும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் விழா மண்டபத்துக்கு வருகை தந்தனர்.


ஐநா மன்றத்தில் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் Top News
[Friday 2016-06-17 09:00]

ஐநா மனிதவுரிமை பேரவையின் 32 வது அமர்வு கடந்த 13 ம் திகதி ஆரம்பமாகி நடைபெறுகின்றது. இம் முறை அமர்வில் ஐநா மனிதவுரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பாக இடைகால அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.இக் காலப்பகுதியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை உறுப்பினர்கள் மற்றும் அனைத்துலக மக்களவையின் ஏற்பாட்டில் பன்னாட்டு மனிதவுரிமை அறிஞர்கள் ஐநா மன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கள நிலைமைகளை அறிந்துகொள்வது மட்டும் அல்லாமல் அங்கு பிரதான அவையிலும் உரையாற்றி வருகின்றனர்.


250 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பு செய்யும் சாதனை முயற்சி: - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொலைபேசி மூலம் வாழ்த்து Top News
[Thursday 2016-06-16 20:00]

250 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பு செய்யும் சாதனை முயற்சியை ஆரம்பித்தார் புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழரான சுரேஸ் யோகிம். நேற்று இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்த சாதனை முயற்சியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து ஆரம்பித்து வைத்தார். 250 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பு செய்யும் முயற்சியை ஆரம்பித்துள்ள சுரேஸ் யோகிம் யாழ்ப்பாணம் அச்சுவேலியை சொந்த இடமாகவும் வவுனியாவை பிறப்பிடமாகவும் கொண்டவராவார்.


இரண்டு வாரத்தில் மூன்று திட்டங்களுக்கு செந்தில் குமரன் புனர் வாழ்வு அமைப்பு 33 இலட்சம் நிதியுதவி! Top News
[Wednesday 2016-06-15 19:00]

(1) கரடியனாறு, மட்டக்களப்பு

"கடந்த அரசிலே கிட்டத்தட்ட 11,900 தொளாயிம் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. அதில் கணிசமானவர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆனால் அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு கடந்த அரசு எந்தவொரு பாரிய திட்டங்களையும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. இந்த அரசு வந்த பின்னரும் இந்த முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுக்குமாறு நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்திலே கனடாவில் உள்ளவர்கள் கல்விக்கு உதவி செய்ய முன்வந்தார்கள்.


கேவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பரிசளிப்பு நிகழ்வு: Top News
[Thursday 2016-06-09 18:00]

யாழ் வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட கேவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பரிசளிப்பு நிகழ்வு நேற்று 08-06-2016 காலை 10.00 மணிக்கு பாடசாலை அதிபர் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தயடைந்த மற்றும் கூடுதல் புள்ளிகளைப் பெற்று வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் பாராட்டப்பட்ட மாணவர்களையும் கௌரவிக்கும் வகையில் மேற்படி பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.


கனடாவின் 3 பிரதான கட்சி பிரதிநிதிகளும் ஈழத் தமிழருக்கான சுயநிர்ணய உரிமையை ஒரே மேடையில் அங்கீகரித்தனர்: Top News
[Thursday 2016-06-02 11:00]

கனடிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அனைத்துக்கட்சி பிரதிகளுக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடலில் ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தும், ஈழத்தமிழருக்கு எதிரான இன அழிப்பிற்கான சர்வதேச விசாரணையை கோரியும் தமது கட்சியின் நிலைப்பாட்டை ஒரே மேடையில் அவற்றின் பிரதி நிதிகள் வெளிப்படுத்தியிருந்தனர். லிபரல் கட்சி பிரதி நிதியாக மார்க் ஹொலண்ட் (Mark Holland - MP Ajax -Liberal), இன் நிகழ்வின் அனுசரணையாளராக பழமைவாத கட்சியின் சார்பில் டொனி க்லெமெண்ட் (Hon. Tony Clement, PC MP - Parry Sound - Muskoka - Conservative) அவர்களும், புதிய ஜனனாயகக் கட்சியின் சார்பில் பீட்டர் ஜூலியன் (Peter Julian - MP New Westminster - Burnaby - NDP) அவர்களும் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.


முல்
[Tuesday 2016-05-31 18:00]

முல்


டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் பேரணி Top News
[Friday 2016-05-20 22:00]

தமிழின அழிப்பு நாள் பேரணி டென்மார்க் முள்ளி வாய்க்கால் படுகொலையை முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத பெரு வலியை தந்த நாட்கள் சிங்கள இன வெறியர்களின் உச்சகட்ட தமிழின அழிப்பு அரங்கேறி இன்றுடன் (18.05.2016 புதன்) ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன.


சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நாள்! Top News
[Friday 2016-05-20 10:00]

தமிழினப்படுகொலையின் உச்சகட்ட அழிப்பான மே18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும்வகையில் சுவிஸ்வாழ் தமிழ்பேசும் மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டனர். 18.05.2016 சுவிஸ் பேர்ன் பாரளுமன்ற முன்றலில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களோடு சுவிஸ் ஈழத்தமிழரவையின் பிரதான ஒருங்கிணைப்புடன் சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பு, அக்கினி பறவைகள், தமிழ் இளையோர் அமைப்பு போன்ற அமைப்புக்களும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிபிடத்தக்கது.


தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு ஸ்ராஸ்பூர்க் மாநகரில் கவனயீர்ப்பு! Top News
[Friday 2016-05-20 10:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 7ம் ஆண்டு நினைவுநாள் 18.05.2016 புதன்கிழமை அன்று ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலில் பிற்பகல் 15.30 தொடக்கம் 17.00 வரை நடைபெற்றது. இந் நிகழ்வில் நூற்றுக் கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர். நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கமும் செய்யப்பட்டதுடன் படுகொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் சிறுவர் முதல் பெரியவர் வரை மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனர்.


பிரான்சு ஆர்ஜொன்தெய் நகரபிதா நாட்டிய தமிழினப் படுகொலையின் நீதிக்கான மரம்! Top News
[Friday 2016-05-20 10:00]

பிரான்சின் ஆர்ஜொந்தெய் நகரசபை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவேந்தும் நீதிக்கான மரத்தினை மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் நாட்டியது. ஆர்ஜொந்தெய் அவர்கள் ஜோர்ச் மொத்ரொன் Georges Mothron அவர்கள் நகரபிதா நீதிக்கான மரத்தினை நாட்டிவைத்து ஈழத்தமிழர்களுக்களின் நீதிக்கான போராட்டத்துக்கான தனது தோழமையினை வெளிப்படுத்தினார்.


தமிழர் இனவழிப்பு நினைவு நாள்
[Friday 2016-05-20 08:00]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஏழாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நினைவுகூரல் நிகழ்வும் ஒஸ்ரேலியாவில் மெல்பேர்ணில் 18


முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின உச்ச அழிப்பு நினைவேந்தல்: - மௌரிசியஸ் Top News
[Thursday 2016-05-19 23:00]

அனைத்துலக ஈழத்தமிழர் அவையின் தோழமை அமைப்புக்களான மௌரிசியஸ் தமிழக்கோயில்களின் கூட்டமைப்பு, மௌரிசியஸ் தமிழ் அமைப்பு என்பன இணைந்து முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின உச்ச அழிப்பு நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளன. மௌரிசியஸ் றோசில் பகுதியில் அமைந்துள்ள தமிழினப் படுகொலை நினைவுத்தூபியின் முன்பாக நேற்று புதன்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் மௌரிசியஸ் வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.


பிரான்சு பாரிஸில் கடும் மழைக்கு மத்தியில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Thursday 2016-05-19 21:00]

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை மிக பேரெழுச்சியுடன் நடைபெற்றது. பிற்பகல் 2.30 மணியளவில் பேரணி புறப்பட்டது. La Chapelle மெட்ரோ நிலையத்தின் அருகாமையில் இருந்து ஆரம்பமாகி Rue de Faubourg Saint Denis ஊடாக Gare de Nord சென்று Rue La Fayette வலது பக்க தெருவூடாக திரும்பி பின்பு இடது பக்கமாக Rue de Saint Quentin Clhf Boulevard Magenta சென்று Gare de l 'est முன்பாக Rue de 8 Mai 1945 ஊடாக சென்று பின்பு Rue du Faubourg Saint Martin வழியாக Rotonde de la Villette வழியாக Jaures metro நிலையத்துக்கு அருகாமையில் Place de la Bataille de Stalingrad இனைச் சென்றடைந்தது. குறித்த பேரணியில் குர்திஸ்தான் மக்களும் எமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் நடைபெற்ற ஏழாம் ஆண்டு முள்ளி வாய்கால் நினைவு தினம்: Top News
[Thursday 2016-05-19 20:00]

இலங்கை அரசினால் முள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூறும் வகையிலும் பாதிக்கப்பட்ட மகளுக்கான நீதி கோரியும் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் நேற்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்ட 7 ம் ஆண்டு நினைவு தினத்தில் பெரும் திரளாக ஒன்று கூடிய உறவுகள் முள்ளி வாய்க்காலில் படு கொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கான அஞ்சலியை செலுத்தியிருந்த அதே சமயம் இந் நிகழ்விற்கு சமூகமழித்திருந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பொது மக்கள் நீதி வேண்டி போராடும் தமிழ் மக்களுக்கான தமது முழு ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தனர்.


அகவை ஏழு காணும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: - நியு யோர்க்கில் கூடி விவாதிக்கும் பிரதிநிதிகள் ! Top News
[Monday 2016-05-16 22:00]

அகவை ஆறினை இந்த மே மாதத்தில் நிறைவு செய்ய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தனது அரசவை அமர்வினை அமெரிக்காவின் நியு யோர்க்கில் நடாத்தி வருகின்றது. புலம்பெயர் தேசங்களில் இருந்து அரசவைப் பிரதிநிதிகளும், மேற்சபை உறுப்பினர்களும், இந்த அரசவை அமர்வில் நேரடியாக பங்கெடுத்து வருகின்றனர். மே 15-16-17 ஆகிய நாட்களுக்கு இடம்பெறுகின்ற மைய அமர்வோடு, இருந்து ஒரு தொகுதி அவை உறுப்பினர்கள் லண்டனில் இருந்து இணையவழி தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக பங்கெடுத்து வருகின்றனர்.


பிரித்தானிய தமிழர் பேரவையினரால் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான கண்டனப் பேரணி Top News
[Friday 2016-05-13 21:00]

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் லண்டன் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரு நாட்களாக பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. நேற்றைய தினம் (12/05/2016) காலை 8 மணி முதல் மாலை 4மனி வரை இரண்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்ட இவ் கண்டனப் பேரணியில் லண்டனின் பல பாகங்களிலும் இருந்து பெரும் திரளாக தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.


வெள்ளி விழா கண்ட அவுஸ்திரேலிய சிட்னி தமிழ் அறிவகம் (நூலகம்) Top News
[Wednesday 2016-05-11 22:00]

அவுஸ்திரேலியாவில் பெருமளவிலான தமிழர்கள் வாழ்ந்து வரும் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் தமிழர்களின் வாசிப்புத் தேடலை பூர்த்தி செய்து வரும் சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த கலாச்சார நிகழ்வான 'வசந்த மாலை - 2016' வெள்ளி விழா நிகழ்வாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வு Ryde இல் உள்ள Civic Centre மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.05.2016) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வு ஹோம்புஷ் தமிழ்ப் பாடசாலை மாணவர்களின் தமிழ் மொழி வாழ்த்துடன் தொடங்கியது.


புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான முத்தேர் பவனி: Top News
[Monday 2016-05-09 16:00]

புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான முத்தேர் பவனி இன்று (09.05.2016) நடைபெற்றது. காலை 5.00 மணிக்கு விநாயகர் வழிபாடு யாக பூஜை மற்றும் 1008 சங்காபிஷேகம் பட்டு எடுத்தல் இடம்பெற்று வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து திருவூஞ்சல் சுவாமி உள்வீதி வலம் வந்து மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் வழங்கப்பட்டு அதனை தொடர்ந்து மேள தாள வாத்தியங்கள் முழங்க மின் தீபங்கள் பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முத்தேரில் ஸ்ரீ விநாயகப் பெருமான் ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஸ்ரீ துர்க்கை அம்மன் சகிதம் முத்தேர் பவனி வீதி உலா நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்த அடியார்கள்; கலந்து கொண்டார்கள்.


பிரித்தானியாவில் இடம்பெற்ற
[Wednesday 2016-05-04 19:00]

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாக புகுவிழா நிகழவுகள் கடந்த 01/05/2016 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திரு. இன்பன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மூன்று மாவீரர்களின் தாயாரான திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம்,, தமிழகத்தின் பிரபல பாடகர் திரு. டி எல் மகாராஜன், நாடுகடந்த தமிமீழ அரசாங்கத்தின் பிரித்தானிய அவை உறுப்பினரும் இரண்டு மாவீரர்களின் சகோதரனுமாகிய திரு.திருக்குமரன், கடற்கரும்புலி மாவீரர் காந்தரூபனின் தந்தை மற்றும் மாவீரர் சிரித்திரனின் சகோதரர் திரு. ஒப்பிலான் ஆகியோர் பொதுச்சுடர்களினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.


டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில் வருடா வருடம் வழமையாக நடந்து வரும் மேதின பேரணி: Top News
[Tuesday 2016-05-03 18:00]

டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில் வருடா வருடம் வழமையாக நடந்து வரும் மேதின பேரணி பொதுக்கூட்டம் இந்த முறையும் கடந்த 1-05-2016 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த மாபெரும் பொதுக்கூட்ட திடலில், டென்மார்க்கில் பதிவு செய்யப்பட்ட அரசியல் மற்றும் பொது இயக்கங்கள் தங்கள் கொள்கைகள் மற்றும் போராட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் பரப்புவதற்கு ஏதுவாக, சிறு சிறு குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.


இரண்டு தேசங்கள் ஒருநாடு என்ற கொள்கையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2016 மேதின எழுச்சி நிகழ்வு: Top News
[Monday 2016-05-02 19:00]

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நடாத்திய பாட்டாளி வர்க்க மக்களின் மே தினம் 2016 எழுச்சி நிகழ்வு பருத்தித்துறை சிவன் ஆலய திருமண மண்டபத்தில் பிற்பகல் 4.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, இறைமையுள்ள தமிழ் தேசத்தின் அங்கீகாரம் என்பவற்றை வலியுறுத்தி கட்சியின் கொடியேற்றலுடன் ஆரம்பமாகிய இவ் நிகழ்வில் ஈகைச்சுடரினை மாவீரர் ஆதவன் அவர்களின் தந்தையார் ஏற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து மண்ணின் மைந்தர்களுக்காகவும் போரில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.


கிளிநொச்சியில் வட மாகாண கூட்டுறவு சங்கங்களின் எழுச்சிமிகு மேதினம்: Top News
[Sunday 2016-05-01 18:00]

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த கூட்டுறவு சங்கங்களின் எழுச்சிமிகு மேதின ஊர்வலம் இன்றுபிற்பகல்; கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஆரம்பமாகி கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தை சென்றடைந்ததைத் தொடர்ந்து மேதினக் கூட்டம் நடைபெற்றது. கிளிநொச்சி கூட்டுறவுச் சங்கத் தலைவர் அ.கேதீஸ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்த மேதின ஊர்வலத்தில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வட மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,


YouTube இல் செந்தில் குமரனின்
[Saturday 2016-04-30 17:00]

கணினித் துறையின் ஏற்பட்டுள்ள அதீத தொழில்நுட்ப வளர்ச்சி இசைக்கலைத் துறையிலும் வரவேற்கத்தக்க பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. இவ்வளர்ச்சியைப் பயன்படுத்தி கனடா நாட்டில் நன்கு அறிமுகமான மெல்லிசைப் பாடகரும் மின்னல் இசை நிகழ்ச்சிப் படைப்பாளருமான செந்தில் குமரன் அவர்கள்


வ/ பிரமண்டு வித்தியாலயத்தின் கற்றல் கற்பித்தல் உபகரணக் கண்காட்சி: Top News
[Friday 2016-04-29 18:00]

பாடசாலையின் அதிபர் திருமதி எம்.ஏ.மோகன் தலைமையில் 29.04.2016 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா தெற்கு பிரதிக்கல்வி பணிப்பாளர் செல்வி.கந்தையா, வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை பொறியியலாளர் திரு.எஸ்.சிவகுமாரன், வவுனியா தெற்கு உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.கணேசபாதம், ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர் திரு.றோய் ஜெயக்குமார், ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி.அ.குணசீலன், இவர்களுடன் பாடசாலை சமுகத்தினர், பெற்றோர்கள் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டி சிறப்பித்தனர்.


சேலைகளால் மட்டும் அமைக்கப்படும்
[Friday 2016-04-29 08:00]

மலையக தோட்ட மக்களின் வாழ்வில் ஆன்மீக வாழ்வு ஒரு வித்தியாசமானதாகும். இலங்கைக்கு சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து இராமேஸ்வரம் வந்து மன்னார் வழியாக மலையக பகுதிகளுக்கு நடந்து வந்தனர் தொழிலாளர் மக்கள். வரும் வழியில் சிலருக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. அச்சந்தர்ப்பத்தில் காடுகளின் இடையே அம்மனை வழிப்பட்டு தங்கள் பயணங்களை தொடர்ந்தனர். சிலருக்கு வருத்தம் அதிகரித்தால் இடையே விட்டுவிட்டு வந்து விடுவார்களாம். அம்மனின் மேல் அவர்கள் வைத்த நம்பிக்கையால் அம்மை நோய் குணமாகி பின்னே வரும் கூட்டத்துடன் மலையகத்திற்கான பயயணத்தை தொடர்ந்துள்ளனர்.


"இசை எம்பயர்" இசை நிகழ்வுக்காக கனடா வந்திறங்கினார் திரு ஸ்ரீநிவாஸ்: Top News
[Thursday 2016-04-28 19:00]

நாளை ஏப்ரல் 29ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மார்க்கம் நகரில் அமைந்துள்ள மார்க்கம் ஈவென்ட் சென்றர் மண்டபத்தில் நடைபெறவுள்ள

Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா