Untitled Document
November 13, 2026 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



விருந்தில் முதலில் வெள்ளரிக்காய், கேரட் வைப்பது ஏன்?
[Friday 2026-11-13 16:00]

திருமண நிகழ்வில் பரிமாறப்படும் உணவு விருந்தில் வெள்ளரிக்காய், கேரட் இவற்றினை முதலில் கொடுப்பது ஏன் என்பதை தெரிந்து கொள்வோம். பொதுவாக சுப நிகழ்ச்சிகள் மற்றும் திருமணம் இவற்றிற்கு சென்றால், உணவு பரிமாறும் போது வாழை இலையில், வெள்ளரிக்காய், கேரட் துண்டுகளை வைப்பார்கள். இவ்வாறு எதற்காக வைக்கப்படுகின்றது என்பது அவ்வளவாக யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் சில இடங்களில் வெங்காயம், தக்காளி, எலுமிச்சை துண்டுகளும் வழங்கப்படுகின்றது.



தினமும் வெறும் வயிற்றில் டீ பருகுவது நல்லதா?
[Thursday 2026-11-12 18:00]

காலை வெறும் வயிற்றில் டீ பருகுவதால் உடலுக்கு ஆரோக்கியமா? அல்லது தீங்கா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக காலை பொழுது பெரும்பாலான நபர்களுக்கு ஒரு கப் காபி அல்லது டீ இல்லாமல் தொடங்குவதில்லை. இதவ்வாறு டீ குடிப்பதை வழக்கமாகவே வைத்துள்ளனர். மேலும் டீ பருகாமல் இருந்த அந்த நாளே சிலருக்கு மந்தமாக இருப்பதாகவும் நினைத்துக் கொண்டு இந்த பழக்கத்தினை தொடர்ந்து செய்து வருகின்றனர்.



இடுப்பு வலி, மூட்டு வலிக்கு உடனடி நிவாரணம்!
[Wednesday 2026-11-11 16:00]

உடம்பிற்கு ஆரோக்கியத்தினை அளிக்கும் சத்தான உளுந்தோரை சாதம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக வீட்டில் கலவை சாதம் செய்வது வழக்கமான ஒன்றாகும். ஆனால் எலும்பு ஆரோக்கியத்தினை உடனடியாக பெற வேண்டும் என்றால் உளுந்தம் பருப்பு சாதம் மிகவும் அருமையான தெரிவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும். கால்வலி, இடுப்பு வலி, மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த உணவாகவும் இருக்கின்றது. கருப்பு உளுந்தை பயன்படுத்தி இந்த சாதத்தினை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



தீபாவளி பலகாரங்களை அதிகமாக சாப்பிட்டீங்களா? - வயிறை சுத்தம் செய்யும் பானம் இதோ!
[Tuesday 2026-11-10 16:00]

தீபாவளி பலகாரங்களை அதிகமாக சாப்பிட்டுவிட்ட நிலையில், மறுநாள் வயிறை சுலபமாக சுத்தம் செய்யும் பானத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தீபாவளி பண்டிகையில் அதிகமான உணவுகளை கணக்கில்லாமல் சாப்பிடுவதை பெரும்பாலான நபர்கள் வழக்கமாக வைத்துள்ள நிலையில், மறுநாள் உடல்நிலையைக் குறித்து கவலைபடவும் செய்கின்றனர். ஏனெனில் வயிறுக்கு அதிகமாக பல உணவுகளை சாப்பிட்ட பின்பு வயிறு உப்புசம், செரிமான கோளாறு, உடல் சோர்வு, உடல் கனமாக இருக்கும் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும்.



பாய்வீட்டு மட்டன் பிரியாணி செய்ய வேண்டுமா?
[Monday 2026-11-09 17:00]

மட்டன் பிரியாணி மணக்க மணக்க பாய்வீட்டு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக பிரியாணி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இன்றைய காலத்தில் நள்ளிரவில் கூட பிரியாணி சாப்பிடுவதற்கு மக்கள் அலைமோதுகின்றனர். அந்த அளவிற்கு பிரியாணியின் சுவை மக்களை கவர்ந்துள்ளது. அதிலும் விடுமுறை தினம் என்றால் வீட்டில் கட்டாயம் அசைவ உணவாக தான் இருக்கும். அந்த அசைவ உணவு பிரியாணியாகத்தான் இருக்கும். அதிலும் இன்று தீபாவளி என்பதால் பெரும்பாலான வீடுகளில் பிரியாணி தான் செய்து சாப்பிடுவார்கள். மேலும் சாதாரணமாக பிரியாணியை விரும்பாமல் பாய்வீட்டு பிரியாணி என்றால் சற்று விரும்பும் கூட்டம் தனியாகவே இருக்கின்றது. தற்போது பாய்வீட்டு பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



குலாப் ஜாமூனுக்கு பிரபலமான கிராமம்: அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
[Sunday 2026-11-08 16:00]

இனிப்பு வகைகளில் ஒன்றாக இருக்கும் குலாப் ஜாமூனுக்கு பிரபலமான கிராமம் குறித்தும் எவ்வாறு அந்த பெயர் வந்தது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக குலாப் ஜாமூன் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு பெரும்பாலான வீடுகளில் செய்யும் முக்கியமான இனிப்பாகவும் இந்த குலாப் ஜாமூன் இருக்கின்றது. அவ்வாறு பண்டிகை காலங்களில் செய்யப்படும் குலாப் ஜாமூனுக்கு ஒரு கிராமம் பிரபலமாகியுள்ளது. பலரும் அறிந்திடாத கிராமம் குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.



தீபாவளி ஸ்பெஷல்: கர்நாடகா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு!
[Saturday 2026-11-07 17:00]

தீபாவளி தினத்தில் நாட்டுக்கோழி குழம்பு கர்நாடகா ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தீபாவளி வந்துவிட்டாலே அனைவருக்கும் காலை உணவு கறிக்குழம்பு, இட்லி என்று தான் இருக்கும். ஆதலால் தீபாவளிக்கு மட்டன், சிக்கன் அதிகமாகவே மக்கள் எடுக்கின்றனர். அதிலும் வழக்கமான குழம்பாக செய்யலாம் என்று வித்தியாசமாக நாட்டுக்கோழியும் எடுத்துக் கொள்ளலாம். பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி உடம்பிற்கு அதிக நன்மையை அளிக்கின்றது. அந்த வகையில் நாட்டுக்கோழியை கர்நாடக ஸ்டைலில் எவ்வாறு குழம்பு வைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.



சத்தான காலை உணவு: பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி!
[Friday 2026-11-06 16:00]

காலையில் சத்தான உணவாக பச்சை பயறு தேங்காய் பால் அரிசி கஞ்சி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தினமும் காலையில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவும் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இதற்காக நீங்கள் தொடர்ந்து தோசை, இட்லி இவற்றினை மட்டும் சாப்பிட்டு வருகின்றீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு அருமையான காலை உணவை இங்கு தெரிந்து கொள்ளலாம். பொதுவாக பச்சை பயறு அதிகமான சத்துக்கள் கொண்டதாக இருக்கின்றது. இதனை காலை உணவில் எடுத்துக் கொண்டால் அன்றைய நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம். இந்நிலையில் பச்சை பயறுடன், தேங்காய் பால் மற்றும் அரிசி சேர்த்து செய்யும் கஞ்சியை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



செட்டிநாடு ஸ்டைலில் நாட்டுக்கோழி கிரேவி!
[Thursday 2026-11-05 16:00]

அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பும் செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் நாட்டுக்கோழி. இதனை குழம்பு, கிரேவி, 65 என செய்து சாப்பிடுகின்றோம். ஆனால் சற்று வித்தியாசமாக செட்டிநாடு ஸ்டைலில் நாட்டுக்கோழி கிரேவி செய்யலாம். காரசாரமாக அட்டகாசமான சுவையில் நாட்டுக்கோழி கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



சத்தான காலை உணவு முருங்கைக்கீரை கோதுமை தோசை!
[Wednesday 2026-11-04 16:00]

காலை நேரத்தில் சத்தான முருங்கைக்கீரை கோதுமை தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு தான் நாள்முழுவதும் நம்மை ஆற்றலுடன் வைத்திருக்க உதவுகின்றது. அந்த வகையில் எப்போதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை என்று எடுத்துக் கொள்ளாமல் புரதச்சத்து நிறைந்த உணவினை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.



தீபாவளி ஸ்பெஷல்: பச்சை மிளகாய் தயிர் முறுக்கு!
[Tuesday 2026-11-03 16:00]

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பச்சை மிளகாய் தயிர் முறுக்கு எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே புதிய ஆடை, பட்டாசு என்று தான் குழந்தைகளுக்கு ஞாபகம் வரும். ஆனால் பெரியவர்கள் பலகாரம் செய்வதை குறித்து தான் யோசித்துக் கொண்டிருப்பார்கள். இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் பலகாரங்களை வீட்டில் செய்யாமல் கடையிலேயே வாங்கி முடித்து விடுகின்றனர். ஆனால் நமது வீட்டு பெரியவர்கள் வீட்டில் மட்டுமே செய்து குழந்தைகளுக்கு கொடுத்தனர்.



இதயத்தை ஆரோக்கியமாக வைக்க வேண்டுமா? - பூசணி விதை செய்யும் அற்புதம்!
[Monday 2026-11-02 16:00]

ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் பூசணி விதையினை 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் மக்கள் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தவறாமல் எடுத்துக் கொள்ள அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வாறு சத்தான உணவுகளில் ஒன்று தான் பூசணி விதை ஆகும். பூசணி விதையில் புரதச்சத்து, நார்ச்சத்து, மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் போன்றவை இருக்கின்றது.



தீபாவளி ஸ்பெஷல் நெய் மைசூர் பாக்!
[Sunday 2026-11-01 18:00]

தீபாவளி பலகாரமாக நெய் மைசூர் பாக் கடையில் வாங்காமல் வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். தீபாவளி நெருங்கும் நிலையில் மக்கள் வீட்டில் இனிப்பு வகைகளை செய்ய யோசனை செய்து வருகின்றனர். பொதுவாக தீபாவளி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது பட்டாசு, புத்தாடை, இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் தான்.



முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு: எடையை குறைக்க சரியான ரெசிபி!
[Saturday 2026-10-31 16:00]

முருங்கைக்கீரையுடன் கொள்ளு சேர்த்து குழம்பு எவ்வாறு வைப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக முருங்கைக்கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றது. ரத்த குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக முருங்கை கீரை இருக்கின்றது. இதில் இரும்புச்சத்து மட்டுமின்றி வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளும் அதிகமாக இருக்கின்றது. உடம்பிலுள்ள நச்சுக்களை நீக்குவதுடன், எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தினையும் மேம்படுத்துகின்றது.



செட்டிநாடு ஸ்டைலில் வெங்காய ரசம்!
[Friday 2026-10-30 16:00]

ரசம் விரும்பி சாப்பிடுபவர்களுகள் செட்டிநாடு ஸ்டைலில் வெங்காய ரசம் எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக வீடுகளில் சமையல் என்றால் அங்கு ரசமும் கட்டாயமாகவே இருக்கும். ஆனால் சிலருக்கு ரசம் என்பது பிடிக்காத உணவாகவும் இருக்கின்றது. ஆனால் ரசம் உடலில் பல நோய்களுக்கு தீர்வாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதில் ரசம் முக்கியமானதாக இருக்கின்றது. எப்பொழுதும் மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி இவற்றினை சேர்த்து ரசம் வைக்கும் நிலையில், தற்போது வெங்காய ரசம் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



ஹோட்டல் சுவையில் சின்ன வெங்காய சட்னி வேண்டுமா?
[Thursday 2026-10-29 16:00]

இட்லி, தோசை, ஊத்தப்பம் போன்ற தென்னிந்திய உணவுகளுக்கு ஹோட்டலில் பரிமாறப்படும் சுவையான சின்ன வெங்காய சட்னியின் சுவை பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும். அதே சுவையில் வீட்டிலேயே எளிதாகத் சின்னவெங்காய சட்னி தயாரிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? சின்ன வெங்காயத்தின் இயற்கையான இனிப்புச் சுவையுடன், வரமிளகாயின் காரமும், புளியின் புளிப்பும் கலந்து இந்தச் சட்னிக்கு தனித்துவமான சுவையை கொடுக்கின்றது.



மட்டன் பிரியாணியை மிஞ்சும் வித்தியாசமான முட்டை புலாவ்!
[Wednesday 2026-10-28 15:00]

மட்டன் பிரியாணியை மிஞ்சும் சுவையில் முட்டையை வைத்து வித்தியாசமான புலாவ் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மதிய உணவாக சாதம், பிரியாணி, புலாவ் என்று சாப்பிடும் நிலையில், புலாவ் பிரியர்களுக்கு சற்று வித்தியாசமான முறையில் முட்டையை வைத்து புலாவ் செய்து அசத்தலாம். அதாவது மட்டன் பிரியாணி சுவையை விட அசத்தலான சுவையில் முட்டையை வைத்து வித்தியாசமான புலாவ் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்யப் போறீங்களா? - உருளைக்கிழங்கில் கூட செய்யலாம்!
[Tuesday 2026-10-27 16:00]

உருளைக்கிழங்கினை வைத்து குலாப் ஜாமூன் ரெசிபி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் மிகவும் முக்கிய பண்டிகையாக இருக்கும் தீபாவளி இன்னும் சில வாரங்களில் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி வந்துவிட்டாலே பலகாரம் செய்வதற்கு ஏற்பாடுகளை வீட்டில் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இவ்வாறு செய்யப்படும் இனிப்பு வகைகளில் குலாப் ஜாமூன் ஆகும். அவ்வாறான குலாப் ஜாமூன் உருளைக்கிழங்கில் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.



காபி அருந்துவதால் உடல் கொழுப்பு குறையுமா?
[Monday 2026-10-26 16:00]

பெரும்பாலான நபர்களுக்கு மிகவும் பிடித்த பானமாக காபி திகழ்கின்றது. காபி குடிக்காம நாளே விடியாது' என சொல்லும் நபர்கள் தான் அதிகம் இப்படி உலகம் முழுவதும் காபி பிரியர்கள் ஏராளம். இதற்கு மிக முக்கிய காரணம் காபி குடித்தவுடன் உடலுக்கு கிடைக்கும் அதீத புத்துணர்வு தான். காபியில் இருக்கும் காபீன் எனும் வேதிப்பொருள் தான் இரத்தத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட்களை அதிகரித்து காபியை குடித்தவுடனேயே உடனடியாக இரத்த செல்களுக்கு புத்துணர்வு வழங்கி நமது மூளையில் சுறுசுறுப்பு உணர்வை தூண்டுகின்றது.



கிராமத்து ஸ்டைல் மட்டன் மிளகாய் தொக்கு: எப்படி செய்யனும் தெரியுமா?
[Sunday 2026-10-25 17:00]

சுவையான மட்டன் மிளகாய் தொக்கு கிராமத்து ஸ்டைலில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர். சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா