Untitled Document
August 16, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
என் மகள்களை கடத்த சதி திட்டம் தீட்டினர்: - கமல் திடுக் தகவல்
[Wednesday 2017-08-16 17:00]

கமல்ஹாசன் கடந்த 1994ம் ஆண்டு ‘மகாநதி’ படத்தில் நடித்தார். இதில் கமலின் மகளை சிலர் கடத்திச் சென்று கொல்கத்தா விபசார விடுத்தியில் விற்றுவிடுவார்கள். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு மகளை கண்டுபிடித்து அழைத்து வருவார். பிறகு மகள் கடத்தலுக்கு காரணமானவர்களை பழிக்குபழி வாங்குவதாக அக்கதை அமைக்கப்பட்டிருந்தது.


அனுஷ்காவை வெளியேற்றிய ஷரத்தா!
[Wednesday 2017-08-16 17:00]

பாகுபலி 2ம் பாகத்துக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் ‘சாஹோ’. இப்படத்திற்கு ஹீரோயின் ஒப்பந்தம் செய்வதில் கடந்த சில மாதங்களாக பெரும் போராட்டம் நடந்து வந்தது. கேத்ரினா கைப், அலியாபட் என இந்தி டாப் ஹீரோயின்கள் சிலரை அணுகினர். அவர்களில் பலர் தென்னிந்திய நடிகரான பிரபாஸுடன் ஜோடிபோட மறுத்துவிட்டனர்.


கவலைக்கிடமான நிலையில் காமெடி நடிகர் அல்வா வாசு!
[Wednesday 2017-08-16 17:00]

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி நடிகராக அல்வா வாசு நடித்துள்ளார். நிறைய படங்களில் தன்னுடைய காமெடி மூலம் மக்களை சிரிக்க வைத்த இவர் தற்போது மோசமாக நிலையில் உள்ளாராம். கடந்த ஆறு மாதங்களாக கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.


சமந்தாவை விட அழகான பெண் யாரும் இல்லை: -நாகசைதன்யா
[Wednesday 2017-08-16 17:00]

உலகில் சமந்தாவை விட அழகான பெண் யாரும் இல்லை என்று நடிகர் நாகசைதன்யா கூறியுள்ளார்.நடிகை சமந்தாவுக்கும், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இவர்கள் நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் முடிந்தது. திருமணம் அக்டோபர் மாதம் 6-ந் தேதி கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.


அறிமுகமாகும் ஐஸ்வர்ய லட்சுமி!
[Wednesday 2017-08-16 17:00]

புதுமுக ஹீரோ, ஹீரோயின்கள் அறிமுகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குறிப்பாக படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் மகன்களை ஹீரோக்களாக அறிமுகம் செய்வதும் அதிகரித்திருக்கிறது. ‘திருப்பதிசாமி குடும்பம்’ படத்தில் தயாரிப்பாளர் பாபுராஜா தனது மகன்களை அறிமுகம் செய்கிறார்.


பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் ஷ்ரதா கபூருக்கு ரூ. 9 கோடி சம்பளம்!
[Tuesday 2017-08-15 17:00]

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம் - சாஹூ. சுஜீத் இயக்கத்தில் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். பாகுபலி 2 படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சாஹூ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


உண்ணும் உணவும் வி‌ஷமாகி விட்டது: - கமல்ஹாசன் வேதனை
[Tuesday 2017-08-15 17:00]

நானும் விவசாயிதான், உண்ணும் உணவும் வி‌ஷமாகி விட்டது என்று நடிகர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.நடிகர் ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ தொண்டு நிறுவனம் சார்பில் ‘நானும் ஒரு விவசாயி’ என்ற தலைப்பில் பாரம்பரிய நாட்டு விதைகளை விதைத்து கின்னஸ் சாதனை படைக்க உள்ளனர். இந்த சாதனை நிகழ்ச்சி வருகிற 26-ந்தேதி திண்டிவனம் அருகில் உள்ள ஆவணிப்பூர் கிராமத்தில் நடைபெறுகிறது.


திருமணத்துக்கு பிறகும் என் குணம் மாறாது: - சமந்தா
[Tuesday 2017-08-15 17:00]

என் வாழ்வில் நாகசைதன்யாவை விட எதுவும் பெரிதில்லை என்று நடிகை சமந்தா கூறியிருக்கிறார்.சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் அக்டோபர் 6-ந்தேதி கோவாவில் திருமணம் நடைபெறுகிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த சமந்தா தனது காதல் பற்றி மனம் திறந்து கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி...


பிரபல நடிகை பெயரை வெளியிடுவேன்: - நடிகை கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்
[Tuesday 2017-08-15 17:00]

நடிகையை கடத்தி காரில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி பல்சர் சுனில் பிரபல நடிகை பெயரை வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்திருக்கிறார். நடிகையை கடத்தி காரில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரபல ரவுடி பல்சர் சுனில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது இதுபோல ஏராளமான வழக்குகள் கேரளாவில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இதை தொடர்ந்து அவரை போலீசார் அந்த வழக்குகளில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிறார்கள்.


நம் வயிற்றுக்கு சேர்த்துதான் விவசாயிகள் உழைக்கிறார்கள்: - ஜி.வி.பிரகாஷ்
[Tuesday 2017-08-15 17:00]

விவசாயிகள் தங்கள் குடும்பத்துக்காக மட்டும் உழைக்கவில்லை, நம் வயிற்றுக்கு சேர்த்துதான் அவர்கள் உழைக்கிறார்கள். விவசாயம், விவசாயிகளுக்கு எதிரானதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று நடிகர் ஜி.வி.பிரகாஷ் வலியுறுத்தி இருக்கிறார்.தலைநகர் டெல்லியில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக போராடி வருகிறார்கள் தமிழக விவசாயிகள். தள்ளாத வயதில் அவர்கள் தலையில் சட்டியைச் சுமந்துப் போராடுகிறார்கள்.


கணவர் என்னை விட உயரமாக இருக்க வேண்டும்: - நடிகை ரகுல் பிரீத்
[Monday 2017-08-14 18:00]

நடிகை ரகுல் பிரீத் தமிழ், தெலுங்கு என இரு படங்களில் நடித்து வருபவர். அடுத்தடுத்து படங்களில் நடித்து பிசியான ஹீரோயினாக இருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த ஜெய ஜனனி நாயகா படம் வெளியாகி வெற்றி பெற்றது.இதனால் மகிழ்ச்சியாக இருக்கும் இவர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இதில் அவர் என் கணவர் என்னை விட உயரமாக இருக்க வேண்டும். எல்லோரும் நல்லவர்கள் அல்ல. அவர்கள் நல்லவர்கள் போல காட்டிக்கொள்வார்கள்.


முன்னேற்றமான புதிய பாதைக்கு சினிமாவை எடுத்துச் செல்ல பாடுபடுவேன்: - வித்யாபாலன்
[Monday 2017-08-14 18:00]

மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை வித்யாபாலன் சினிமாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பாடுபடுவேன் என்று கூறியிருக்கிறார்.


சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேறிய சிம்பு: - சோகத்தில் ரசிகர்கள்
[Monday 2017-08-14 18:00]

சிம்பு தனக்கென நல்ல ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். அவ்வபோது அவர்களிடம் பேஸ்புக், டுவிட்டரில் கலந்துரையாடுவார்.அந்த வகையில் சமீப காலமாக இவர் எந்த ஒரு சமூக வலைத்தளத்தையும் பயன்படுத்துவது இல்லை, தற்போது தான் சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேறுவதாக அவரே கூறியுள்ளார்.


சமுத்திரக்கனியின் அப்பா படத்திற்கு குரல் கொடுத்த மோகன்லால்!
[Monday 2017-08-14 18:00]

மலையாளத்தில் ‘ஆகாசமிட்டாய்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படும் சமுத்திரக்கனியின் ‘அப்பா’ படத்திற்காக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் குரல் கொடுத்திருக்கிறார். சமுத்திரக்கனியின் ‘நாடோடிகள்’ படத்தை தொடர்ந்து அவர் இயக்கி நடித்த ‘அப்பா’ படம் மலையாளத்தில் ‘ஆகாசமிட்டாய்’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது.


அனைவருடைய வாழ்க்கையிலும் சோதனை இருக்கும்: - அமலா பால்
[Monday 2017-08-14 18:00]

பிரச்சினைகளை கண்டு கலங்க மாட்டேன், சாதிக்க அதிக காலம் இருக்கிறது என்று நடிகை அமலா பால் கூறியிருக்கிறார்.தனுஷ், அமலாபால், கஜோல் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி-2’ திரைக்கு வந்துள்ளது. இதில் நடித்த அனுபவம் பற்றி கூறிய அமலாபால்...


ராணாவின் படத்தை விளம்பரப்படுத்த ரூ. 30 லட்சம் வாங்கினாரா காஜல்?
[Sunday 2017-08-13 18:00]

காஜல் அகர்வால் தான் நடித்த படத்தை விளம்பரப்படுத்த ரூ. 30 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.காஜல் அகர்வால் அஜீத்துடன் சேர்ந்து விவேகம் படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் ராணாவுடன் சேர்ந்து நடித்த நேனே ராஜு நேனே மந்திரி தெலுங்கு படம் ரிலீஸாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.


மீண்டும் சினிமாவிற்குள் வர விரும்பும் சங்கீதா!
[Sunday 2017-08-13 18:00]

நடிகை சங்கீதாவை மறக்க முடியுமா என்ன? பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் கஞ்சா வியாபாரியாக நடித்து அசத்தினார்.பாடகர் கிருஷ் ஐ திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தையும் இருக்கிறது. மீண்டும் சினிமாவிற்குள் வர விரும்பும் சங்கீதா சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிறார்.


படங்களின் விழாக்களுக்கு வர மறுக்கும் நடிகைகள் மீது நடவடிக்கை பாய்கிறது?
[Sunday 2017-08-13 09:00]

நடித்த படங்களின் விழாக்களுக்கே வர மறுக்கும் ஹீரோயின்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் பட புரமோஷன் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சில தினங்களுக்கு முன் சதுர அடி 3500 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இந்த படத்தில் முக்கிய வேடம் ஏற்ற ரகுமானும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஹீரோயினாக நடித்துள்ள இனியாவும் வரவில்லை. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாக்யராஜ் பேசும்போது, ‘விழாவுக்கு வராததால் படத்துக்கு எந்த நஷ்டமும் கிடையாது.


என்னை ஒரு நடிகையாவே நான் நினைக்க மாட்டேன்: - ஸ்ரத்தா ஸ்ரீநாத்
[Sunday 2017-08-13 08:00]

தமிழில் காற்று வெளியிடை, இவன் தந்திரன், விக்ரம் வேதா படங்களில் நடித்தவர், ஸ்ரத்தா ஸ்ரீநாத். கன்னட வரவு. இப்போது நிவின் பாலியுடன் ரிச்சி படத்தில் நடிக்கிறார். நடிகை என்பதை தவிர, பல முகங்களை கொண்டிருக்கிறது இவரது மறுமுகம். இது பற்றி அவர் பேசினார்.“நான் காலேஜ்ல படிக்கிறப்ப, மேடை நாடகங்கள்ல நடிக்க ரொம்ப ஆர்வம் காட்டுவேன். காரணம், ஸ்டேஜ்ல நின்னு நடிக்கிறப்ப, நம்மையறியாம நமக்கு ஒரு தைரியம் வரும். பேச்சு சரளமா இருக்கும். எவ்வளவு பேர் இருந்தாலும், நமக்கு கொடுத்த டயலாக்கை மறக்காம பேசி நடிக்கிறப்ப கிடைக்கிற ஆடியன்சோட கைத்தட்டல், செம எனர்ஜியா இருக்கும்.


இயக்குநர் அல்லது நடிகருடன் படுத்தால்தான் நடிக்க வாய்ப்பு: - இளம் நடிகை பரபரப்பு
[Saturday 2017-08-12 18:00]

ஒரு படத்தில் வாய்ப்பு வேணும்னா இயக்குநர் அல்லது நடிகருடன் படுத்தால்தான் கிடைக்கும் என்ற நிலைதான் உள்ளது என மலையாள இளம் நடிகை ஹிமா சங்கர் புகார் கூறியுள்ளார். பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு, மலையாள திரையுலகம் கொந்தளிப்பில் உள்ளது. இப்போது நடிகைகளுக்கென தனி அமைப்பே உருவாகியுள்ளது.


மஞ்சுவாரியாரின் சதியால் குற்றச்சாட்டுக்கு ஆளானேன்: - திலீப்
[Saturday 2017-08-12 18:00]

நடிகை கடத்தல் வழக்கில் மஞ்சுவாரியாரின் சதியால் குற்றச்சாட்டுக்கு ஆளானேன் என்று புதிதாக தொடுத்துள்ள ஜாமீன் மனுவில் திலீப் குறிப்பிட்டிருக்கிறார்.கேரளாவில் பிரபல நடிகை ஓடும் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.


அஜித் விஜய்யின் படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளிய விக்ரம் வேதா!
[Saturday 2017-08-12 14:00]

விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் விக்ரம் வேதா. இப்படம் ரசிகர்களிடம் பிரமாண்ட வரவேற்பு பெற்றது.இப்படத்தின் வசூல் தான் இந்த வருடம் பாகுபலி-2விற்கு பிறகு தமிழகத்தில் அதிகமாம், அனைத்து தரப்பினருக்கும் லாபமும் கொடுத்தது.


நான்கு சீனில் நடிக்க நாற்பது லட்சம் வாங்கிய நடிகை!
[Saturday 2017-08-12 14:00]

இளம் நடிகைகள் பலர் சிங்கிள் டிஜிட் சம்பளம்தான் வாங்கிக்கொண்டிருக்கின்றனர். சீனியர் நடிகைகள் பலர் வாய்ப்பில்லாமல் டி.வியில் தலைகாட்டி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சீனியர் நடிகை வாணி விஸ்வநாத் 4 சீன்களில் நடிக்க டபுள் டிஜிட் சம்பளம் வாங்கியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மண்ணுக்குள் வைரம், நல்லவன், பூந்தோட்ட காவல்காரன், இதய திருடன் உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழியில் பல்வேறு படங்களிலும் நடித்திருப்பவர் வாணி விஸ்வநாத்.


குடிக்கு அடிமையான டிஸ்கோ சாந்தி!
[Saturday 2017-08-12 13:00]

1980களில் தொடங்கி சுமார் 15 வருடம் கோலிவுட், டோலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் டிஸ்கோ சாந்தி. தமிழில் வேட்டைக்காரன், மன்னவரு சின்னவரு, மார்கண்டேயன் போன்ற படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்த ஹரியை கடந்த 1991ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் செட்டிலானார். அதன்பிறகு சாந்தி நடிப்புக்கு முழுக்குபோட்டார்.


சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ள விக்னேஷ்சிவன்!
[Saturday 2017-08-12 13:00]

போடா போடி, நானும் ரவுடிதான் படங்களை இயக்கிய விக்னேஷ்சிவன் தற்போது சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை அவர் இயக்கவுள்ளார். சிவகார்த்திகேயன்-விக்னேஷ்சிவன் இயக்கும் அந்த படத்திற்கு அவர்கள் இருவரின் பிடித்தமான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கவுள்ளார்.


பாலியல் தொழிலாளியாக அஜித் ஹீரோயின் சதா!
[Friday 2017-08-11 07:00]

அஜித்துக்கு ஜோடியாக நடித்த சதா, ஒரு படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். ‘ஜெயம்’ படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சதா. நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ள சதா, மிக வேகமாக முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார். விக்ரம் ஜோடியாக ஷங்கர் இயக்கத்தில் ‘அந்நியன்’ படத்தில் நடித்தார். ஆனால், அதன்பிறகு பெரிதாக எந்தப் படமும் இல்லை.


பிக் பாஸ் போட்டியைவிட்டு வெளியேறிய ஓவியாவை பார்க்க துடிக்கும் நடிகை!
[Thursday 2017-08-10 09:00]

பிக் பாஸ் போட்டியைவிட்டு வெளியேறிய ஓவியாவை பார்க்க நடிகை பிரியா ஆனந்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய பிரியா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியை ஓவியாவிற்காகதான் பார்த்து வந்தேன். நான் இதுவரை ஓவியாவை நேரில் பார்த்தது இல்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு எனக்கு ஓவியாவை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்து உள்ளது என தெரிவித்துள்ளார்.


சினிமாவில் நடித்து பிரபலமாக வேண்டும் என்பதே ஆசை: - அனுஷா நாயர்
[Thursday 2017-08-10 09:00]

தமிழில், ’மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி’, ’சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’ மலையாளத்தில் 'தாவளம்', பகத்ஃபாசில் நடித்த 'அன்னயும் ரசூலும்' உட்பட சில படங்களில் நடித்தவர் அனுஷா நாயர். தமிழில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் நடனத்தில் கவனம் செலுத்திய அனுஷா, இப்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பியிருக்கிறார்.

Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா