Untitled Document
February 5, 2025 [GMT]
பல பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் கருப்பு கொண்டைக் கடலை குழம்பு!
[Tuesday 2025-02-04 18:00]

கருப்பு கொண்டைக்கடலையில் அதிகளவான புரோட்டீன் காணப்படுகிறது. இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் பெரும் வங்கு வகிக்கின்றது. கருப்பு கொண்டைக்கடலையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாத்து அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றது. அதில் காணப்படும் புரோட்டின் செறிவு காரணமாக உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றது.

கருப்பு கொண்டைக்கடலையில் அதிகளவான புரோட்டீன் காணப்படுகிறது. இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் பெரும் வங்கு வகிக்கின்றது. கருப்பு கொண்டைக்கடலையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாத்து அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றது. அதில் காணப்படும் புரோட்டின் செறிவு காரணமாக உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றது.

  

கருப்பு கொண்டைக்கடலை நாள்பட்ட நோய்களை விரட்டவும் உதவுகிறது. கொண்டைக்கடலையில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், இரத்தத்தில் உள்ள ஹூமோகுளோபின் அளவை உயர்த்த பெரிதும் உதவுகின்றது. சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதிலும் ஆற்றலுடன் செயல்ப்படுகின்றது.

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த கருப்பு கொண்டைக்கடலையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் நாவூரும் சுவையில் அசத்தல் குழம்பு செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்

கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்

பெரிய வெங்காயம் - 3

தக்காளி - 3

இஞ்சி பூண்டு விழுது -2 தே.கரண்டி

மல்லித்தூள் - 2 தே.கரண்டி

மிளகாய்த்தூள் - 1 தே.கரண்டி

மஞ்சள் தூள் - கால் தே.கரண்டி

சீரகத்தூள் - அரை தே.கரண்டி

கரம் மசாலா தூள் - 1 தே.கரண்டி

மிளகுத்தூள் - அரை தே.கரண்டி

தேங்காய் எண்ணெய் - 5 தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையானவை

தேங்காய் துருவல் - அரை கப்

முந்திரி பருப்பு - 10

பட்டை - 2 துண்டு

ஏலக்காய் - 3

கிராம்பு - 3

பிரியாணி இலை - 1

சோம்பு - கால் தே.கரண்டி

கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு

செய்முறை

முதலில் கருப்பு கொண்டைக்கடலையை குறைந்தது 8 மணி நேரம் வரையில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரில் கொண்டைக்கடலை மற்றும் உப்பு போட்டு நான்கு விசில் வரும் வலையில் வேக வைத்து இறக்கி குளிரவிட வேண்டும்.

அதனையடுத்து அரைக்கக் தேவையான ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பா்த்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கி, மல்லித்தூள், மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள், சீரகத்தூள் சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரையில் கிளறிவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி அடுப்பை 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து தக்காளியை நன்கு குழையும் படி விட வேண்டும்.

பின்னர் அதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலையை அதன் தண்ணீரோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அரைத்த தேங்காய் விழுது உப்பு ,கரம் மசாலா தூள் , மிளகுத்தூள் சேர்த்து பாத்திரத்தை மூடி 10 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.

குழம்பு கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் மல்லித்தழையை தூவி இறக்கினால் அவ்வளவு அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கருப்பு கொண்டைக்கடலை குழம்பு தயார்.

  
   Bookmark and Share Seithy.com



ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கும் பன்னீர் முட்டை இட்லி!
[Wednesday 2025-02-05 18:00]

பொதுவாக ஆண்களுக்கும் சரி , பெண்களுக்கும் சரி உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். ஆனால் எத்தனை பேர் அதனை ஆரோக்கியமான முறையில் செய்ய நினைக்கின்றார்கள் என்பது கேள்விக்குறியே. ஜிம்மிற்கு செல்பவர்களாக இருந்தாலும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை தான் காலை வேளையில் சாப்பிட வேண்டும். அது எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அப்படி ஆரோக்கியமான முறையில் உடல் எடையை விரைவில் குறைக்க உதவும் பன்னீர் முட்டை இட்லியை அசத்தல் சுவையில் எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



தேயிலை கெட்டுப்போகும்னு உங்களுக்கு தெரியுமா?
[Monday 2025-02-03 18:00]

நம்மில் பெரும்பாலான நபர்கள் தேநீர் போடுவதற்கு பயன்படுத்தும் தேயிலை காலாவதியாகி கெட்டுப் போய்விட்டதை நாம் எவ்வாறு கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்களின் புதிய நாளின் முதல் தெரிவாக தேநீர் இருக்கின்றது. தேநீர் அருந்துவது புத்துணர்ச்சியாக காணப்படுவதாக கூறுகின்றனர்.



உச்சி முதல் பாதம் வரை ஆராக்கியம் தரும் பாகற்காய்!
[Sunday 2025-02-02 17:00]

பாகற்காயில் இருக்கும் கசப்பு சுவை காரணமாக அதனை பலரும் உணவில் இருந்து ஒதுக்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் பாகற்காய் சாப்பிடுவதால் சருமம் முதல் தலைமுடி வரையிலான ஒட்டு மொத்த உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது. பாகற்காயை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. இது போன்று ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் பாகற்காயில் உள்ளது.



புற்றுநோயை தடுக்கும் ப்ராக்கோலி மிளகு வறுவல்!
[Saturday 2025-02-01 16:00]

ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அருமருந்தாகவும் பார்க்ப்படுகின்றது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் செறிந்து காணப்படுவதால், உடல் நலம் மட்டுமல்லாமல் மனநலம்,ஞாபக சக்தி, ஆகியவற்றையும் சீராக்க பெரிதும் துணைப்புரிகின்றது. ப்ராக்கோலியில் கால்சியம் அதிகமாக காணப்படுவதால், பல் மற்றும் எலும்பினை வலுவாக்குவதுடன், பல் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் இருக்கின்றது.



மாலை நேரத்தில் பூக்களை பறிக்கக்கூடாது: ஏன்?
[Friday 2025-01-31 18:00]

மாலை நேரத்தில் பூக்கள் மற்றும் இலைகளை பறிக்கக்கூடாது என்று கூறுவதற்காக காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மாலை வேளையில் பூக்கள் மற்றும் இலைகள் ஓய்வெடுக்கும் நேரம் என்பதால் இந்த நேரத்தில் அவற்றைப் பறித்தால் பாவத்திற்கு சமம் ஆகும். மாலை வேலையில் தான் பறவைகள், பூச்சிகள் தங்களது கூட்டிற்குள் வரும். எனவே அந்த நேரத்தில் பூக்கள் மற்றும் இலைகளைப் பறிப்பது அவற்றை தொந்தரவு செய்வதற்கு சமம்.



சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா?
[Thursday 2025-01-30 18:00]

உலகில் மில்லியன் கணக்கானோர் சர்க்கரை நோயால் அவஸ்தை அனுபவித்து வருகிறார்கள். “சர்க்கரை நோய்” என்பது நாள்பட்ட நோயாகவும் முழுமையாக குணப்படுத்த முடியாத நோயாகவும் பார்க்கப்படுகின்றது. இதனை நினைவுப்படுத்தும் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ம் தேதி “உலக சர்க்கரை நோய்” தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனெனில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்களின் உணவு பழக்கவழக்கங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.



தலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு தரும் எண்ணெய்!
[Monday 2025-01-27 18:00]

பொதுவாக பெண்கள் தற்போது அதிகமான கூந்தல் உதிர்வு, பொடுகு மற்றும் இளநரை போன்ற பிரச்சினைகளால் அவஸ்தைபடுகிறார்கள். இதனை உணவுகள் பயன்பாடு , சிகிச்சை முறைகள் மற்றும் மூலிகை எண்ணெய்கள் பாவணை மூலம் கட்டுபடுத்த முடியும். அந்த வகையில் தலைமுடி பிரச்சினைகளை எளிய முறையில் குறைக்ககூடிய ஒரு மூலிகை எண்ணெய் எப்படி தயாரிப்பது என்பது பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.



நாவூரும் சுவையில் காரசாரமான முட்டை சுக்கா!
[Sunday 2025-01-26 16:00]

பொதுவாகவே முட்டை என்றால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் பிடிக்கும். மேலும் இது ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான உணவாகவும் பார்க்கப்படுகின்றது. முட்டை கொண்டு ஆம்லெட், முட்டை மசாலா, முட்டை தொக்கு, முட்டை வறுவல் என விதவிதமாக செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் எப்போதாவது முட்டை கொண்டு சுக்கா செய்து சாப்பிட்டுள்ளீர்களா? மிளகு தூள் சேர்த்து எவ்வாறு காரசாரமான முட்டை சுக்கா செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.



தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
[Saturday 2025-01-25 20:00]

வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி' ஆகிய ஊட்ச்சத்துக்கள் செறிந்து காணப்படுவதுடன் அளப்பரிய மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. தினசரி ஒரு வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஏறாளமான ஆரோக்கிய நன்மைகள் தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.



பெங்களூர் பாணியில் கத்தரிக்காய் குழம்பு!
[Friday 2025-01-24 19:00]

பொதுவாக சிக்கன், மட்டன் பிரியாணியை விரும்பி சாப்பிடும் பிரியாணி பிரியர்களுக்கு கத்திரிக்காய் கிரேவியும் மிகப்பெரிய வரம். பிரியாணி பிரியர்களுக்கு பெரும்பாலும் கத்த்ரிக்காய் கிரேவியும் பிடிக்கும். அப்படியும் கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் உங்க வீட்டில் இருந்தால் ஒரு முறை பெங்களூர் பாணியில் கத்தரிக்காய் குழம்பு செய்து கொடுங்கள். அப்புறம் அவர்களின் விருப்பப்பட்டடியலில் கத்திக்காய் முக்கிய இடம் பிடித்துவிடும். ஆரோக்கியம் நிறைந்த கத்திரிக்கா கிரேவியை அட்டகாசமான சுவையில் விரைவாக எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



வாரத்திற்கு எத்தனை முறை அசைவம் சாப்பிடலாம்?
[Thursday 2025-01-23 19:00]

வாரத்திற்கு எத்தனை முறை அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இன்று பெரும்பாலான நபர்கள் அசைவ உணவுகளை தான் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிக சத்துக்களைக் கொண்ட இந்த அசைவ உணவை தினமும் சாப்பிடலாமா? என்பது பலருக்கும் தெரியாது.



காண்டாக்ட் லென்ஸ் அணிவதால் வரும் பாதிப்புக்கள்!
[Wednesday 2025-01-22 18:00]

தற்போது இருக்கும் ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் பார்வை குறைபாடு பிரச்சினை அதிகமாகி வருகின்றது. இதற்காக கண்ணாடி அணிவதற்கு பதில் காண்டாக்ட் லென்ஸை பயன்படுத்துவது வழக்கமாகவும் இருந்து வருகிறது. ஆனால், அதனை முறைப்படி சரியாக அணிவது முக்கியம்.



இரும்புச்சத்து குறைப்பாட்டை நீக்கும் பீட்ரூட் பொரியல்!
[Tuesday 2025-01-21 19:00]

பொதுவாக மலிவான விலையில் அதிக ஊட்டச்த்துக்களை கொண்ட காய்கறிகளின் பட்டியலில் பீட்ரூட் முக்கிய இடம் வகிக்கின்றது. இது அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு சூப்பர் உணவு என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் இதில் சோடியம், பொட்டாசியம் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் செரிந்த காணப்படுவமதால், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, வயிறு மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது.



அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!
[Monday 2025-01-20 18:00]

பொதுவாக பழங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் கிடைக்கின்றன. அந்த வரிசையில் எமக்கு ஏற்படும் சாதாரண நோய்கள் முதல் தீவிரமாகும் நோய்கள் வரை அனைத்தையும் கட்டுக்குள் வைக்கும் வேலையை அத்திப்பழம் செய்கின்றது. அதன் பழங்கள் மட்டும் இல்லாமல் இலைகளிலும் மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.



கனவுகள் எதிர்காலம் குறித்து எச்சரிக்குமா?
[Sunday 2025-01-19 19:00]

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கு தூக்கத்தில் கனவு வருவது இயல்பான விடயம் தான். அறிவியல் எவ்வளவு வளர்ச்சியடைந்தாலும் துள்ளியமான காரணம் சொல்லமுடியாத சில விடயங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது என்பதற்கு கனவுகளும் சான்று பகர்கின்றன. நாம் தூங்கும் போது வரும் கனவுகள் சிலருக்கு நினைவில் இருக்கும்.சிலருக்கு இருக்காது. ஆனால் புராணங்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி கனவுகள் குறிப்பிட்ட விடயங்களை எச்சரிக்கின்ற தன்மை கொண்டவை என குறிப்பிடப்படுகின்றது.



குக்கரில் சமைக்கக்கூடாத உணவுகள்!
[Saturday 2025-01-18 19:00]

குக்கரில் சமைக்கக்கூடாத உணவுகள் குறித்தும், ஏன் சமைக்கக்கூடாது என்பதைக் குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் மக்கள் பயங்கர பிஸியாக சென்று கொண்டிருக்கும் நிலையில், வீட்டு வேலைகள், சமையல் வேலைகளை சுலபமாக செய்து முடிக்கவே நினைக்கின்றனர். அதிலும் சமையல் வேலை என்றால், எந்த காய்கறி, பருப்பு இவற்றினை வேக வைக்க வேண்டும் என்றால் உடனே குக்கரில் வைத்து விரைவில் சமைத்து விடுகின்றனர்.



முகச்சுருக்கங்கள் நீங்கி கண்ணாடி சருமம் வேண்டுமா?
[Thursday 2025-01-16 19:00]

இலைகளின் அரசன் என அழைக்கப்படும் சக்கரவர்த்தி கீரையில் இருக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். சருமத்தின் அழகை தக்க வைகடக அனைவருக்கும் ஆசை அதிகமாக இருக்கும். இதற்காக தான் பெருந்தொகையை கூட அழக்க தயாராக இருக்கின்றனர். நாம் என்ன தான் உடலின் மேற்தோற்றத்தை அழகு படுத்தினாலும் எமது உள் உறுப்புக்கள் நமது அழகையும் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கும்.



தாங்க முடியாத பேன் தொல்லையா? தலையை விட்டு ஓட ஓட விரட்டும் மருத்துவம்!
[Wednesday 2025-01-15 17:00]

பொதுவாக பெண்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சினைகளில் பேன் தொல்லையும் ஒன்று. முடி வளர்ச்சி அதிகமாக உள்ளவர்களும், தலைமுடிகளில் அழுக்கு இருந்தாலும் கட்டாயம் பேன் பரவும். அப்படி பேன் தொல்லையால் அவதிபடுபவர்கள் இரு வழிகளில் பேன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். மற்றொன்று நாமாகவே இயற்கை முறையில் வீட்டில் மருத்துவம் செய்யலாம்.



கோவில் பிரசாதம் சுவையில் சர்க்கரை பொங்கல் வேண்டுமா?
[Tuesday 2025-01-14 18:00]

பொங்கள் பண்டிகை என்றாலே பொங்கல் தான் முக்கியத்துவம் பெறுகின்றது. பொங்கல் விழா, மக்களால் தொன்று தொட்டு கொண்டாடப்படும் ஒரு நன்றி செலுத்தும் விழாவாக பார்க்கப்படுகின்றது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதுடன் இனிப்பான பொங்கல் செய்து கொண்டாடி வருகின்றனர்.



நீரிழிவு நோயாளிகள் ருசித்து சாப்பிடும் சர்க்கரை பொங்கல்!
[Sunday 2025-01-12 18:00]

பொதுவாக சிறுதானியங்களை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் தண்ணீர் விடயத்தில் அதிகம் கவனமாக இருக்க வேண்டும். தானியங்களின் வகைகளுக்கு ஏற்ப சரியான அளவில் தண்ணீர் சேர்த்து சமைக்காவிட்டால் அதன் சுவையில் பாரிய மாற்றம் ஏற்படும். அத்துடன் அளவு அதிகமாக வேக வைக்கும் பொழுது அதன் சத்துக்களும் மாற்றமடையும். தானியங்களை கொண்டு சமைக்கும் உணவுகள் உடலுக்கு உடனடியாக ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும்.


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா