Untitled Document
April 4, 2025 [GMT]
ரயிலில் இருந்து பயணி வீசிய தண்ணீர் போத்தலால் உயிரிழந்த சிறுவன்!
[Thursday 2025-04-03 19:00]

ஓடும் ரயிலில் இருந்து பயணி வீசிய தண்ணீர் போத்தலால் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசம் ராஜ்கோட்டில் வசிக்கும் 14 வயது சிறுவன் பாதல். இந்த சிறுவன் கடந்த திங்கள் கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் ராஜ்கோட் பகுதி தண்டவாளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்திருந்தான்.

ஓடும் ரயிலில் இருந்து பயணி வீசிய தண்ணீர் போத்தலால் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசம் ராஜ்கோட்டில் வசிக்கும் 14 வயது சிறுவன் பாதல். இந்த சிறுவன் கடந்த திங்கள் கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் ராஜ்கோட் பகுதி தண்டவாளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்திருந்தான்.

  

அப்போது, அதே நேரத்தில் அவ்வழியாக சென்ற வேராவல்-பாந்த்ரா ரயிலில் இருந்து அடையாளம் தெரியாத பயணி ஒருவர் தண்ணீர் போத்தலை வெளியில் வீசினார்.

அது பாதலின் மார்பில் நேரடியாகத் தாக்கியதில் காயம் ஏற்பட்டு நிலை குலைந்து கீழே விழுந்தார்.

பின்னர், சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என்று கூறினர்.

ஆரம்பத்தில் சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணம் மாரடைப்பு என்று கூறப்பட்டது. ஆனால், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பயணி வீசிய தண்ணீர் போத்தல் தான் மரணத்திற்குக் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது கனமான பொருள் இதயத்தின் மீது தாக்குவதால் காயம் ஏற்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கும். மேலும், போத்தலை வீசிய பயணியின் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அவரை தேடி வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



"பள்ளிவாசல் அலங்கார விளக்கு மறைப்பு" - காரணம் என்ன?
[Friday 2025-04-04 06:00]

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த புதிய பாலம் ஏப்ரல் 6ஆம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். அதன்படி பிரதமர் மோடி இந்த பாலத்தை ஏப்ரல் 6ஆம் தேதி (06.04.2025) திறந்து வைக்க உள்ளார். இதற்கான சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.



காலையில் விசாரணைக்கு காவல் நிலையம் சென்றவர் மாலையில் விஷம் குடித்து உயிரிழப்பு!
[Friday 2025-04-04 06:00]

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ளது பட்டத்திக்காடு கிராமம். இந்த கிராமத்தில் மூதாட்டி உள்படச் சிலர் மது விற்பனை செய்வதாக ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து (02.04.2025) மதுவிலக்கு போலீசார் பட்டத்திக்காடு கிராமத்திற்கு மாற்று உடையில் சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட மூதாட்டி வீட்டில் 4 மதுப்பாட்டில்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த சிங்காரம் மகன் மகேந்திரன் (வயது 40) உள்ளிட்ட சிலர் மாற்று உடையில் இருந்த போலீசாரிடம், “நீங்கள் யார்?. போலீஸ் என்றால் சீருடை இல்லையே எப்படி நம்புவது உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள்” என்று வாக்குவாதம் செய்துள்ளனர்.



மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்!
[Friday 2025-04-04 06:00]

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் ரயில்வே ஊழியர் ஒருவர், மனைவி மற்றும் அவரது குடும்பத்தால் சித்ரவதை அனுபவித்ததை வீடியோ எடுத்து வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் பன்னாவைச் சேர்ந்தவர் லோகேஷ் (30). இவருக்கும் ஹர்ஷிதா (27) என்ற பெண்ணுக்கும் 2023யில் திருமணம் நடந்தது. சில மாதங்கள் கழித்து மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரால் லோகேஷ் கொடுமைகளை அனுபவிக்க ஆரம்பித்தார்.



விஜய் முதலமைச்சராக வேண்டும்" - வேளாங்கண்ணியில் மண்டியிட்டு வழிபாடு செய்த தொண்டர்!
[Thursday 2025-04-03 19:00]

விஜய் முதலமைச்சராக வேண்டும் என வேளாங்கண்ணியில் தவெக தொண்டர் முழங்காலால் மண்டியிட்டு வழிபாடு செய்துள்ளார். வருகிற 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய், தமிழகத்தில் தவெக மற்றும் திமுக இடையே தான் போட்டி என கூறினார்.



தடை செய்யப்பட்ட அந்தமான் தீவுப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு இளைஞர்!
[Thursday 2025-04-03 19:00]

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தடைசெய்யப்பட்ட பூர்வகுடி பகுதியான வடக்கு சென்டினல் தீவிற்குள் நுழைந்ததாக அமெரிக்க நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எந்த அனுமதியும் இல்லாமல் வடக்கு சென்டினல் தீவுக்குள் நுழைந்ததாகக் குறிப்பிட்டு 24 வயதேயான Mykhailo Viktorovych Polyakov என்பவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



மத்திய அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை?
[Thursday 2025-04-03 19:00]

இந்திய முழுவதும் பாஜகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. மாவட்ட தலைவர்கள் தேர்தல் முடிவுற்று மாநில தலைவர்கள் தேர்தல் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து தேசிய தலைவர் தேர்தல் நடத்தப்படும். இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க பாஜக திட்டமிட்டு வருகிறது.



“அச்சுறுத்துகிற வகையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்” - தொல். திருமா பேச்சு!
[Thursday 2025-04-03 06:00]

மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ (02.04.2025) தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த மசோதா மீதான அனல் பறக்கும் விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வி.சி.க. நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியின் உறுப்பினருமான தொல். திருமாவளவன் பேசுகையில், “இந்த வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவை முற்றாக நான் எதிர்க்கிறேன். இது இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது. தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது.



ஜாகுவார் போர் விமானம் விபத்து: மீட்பு பணி தீவிரம்!
[Thursday 2025-04-03 06:00]

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் என்ற போர் விமானம் (02.04.2025) இரவு விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் இரு விமானிகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதை பதைக்க வைக்கிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து எவ்வித முதற்கட்ட தகவலும் இன்னும் வெளியாகவில்லை.



பெண் எஸ்.ஐ. உள்ளிட்ட 4 காவலர்கள் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
[Thursday 2025-04-03 06:00]

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த காவல் துறையைச் சேர்ந்த ஒரு பெண் உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று தலைமைக் காவலர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (02.04.2025) ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு அவர் நிதியுதவியும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆவடி காவல் ஆணையரகம், ஆவடி காவல் மாவட்டம் பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மெர்ஸி (கணவர் பெயர் : சாம்சன்) என்பவர் 20.3.2025 அன்று காலை 10.30 மணியளவில் பணியின் நிமித்தமாக திருவள்ளூர் நீதிமன்றம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை திருப்பதி சாலையில் எதிரில் வந்த நான்கு சக்கர கனரக வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி அன்று பிற்பகல் சுமார் 02.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.



கச்சதீவை மீட்க தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்!
[Wednesday 2025-04-02 18:00]

கச்சதீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்திய பிரதமர் மோடி, வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி அரசு முறை பயணமாக இலங்கை செல்கிறார். இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து பேச உள்ள மோடி, அங்கு இந்தியா உதவியுடன் செயல்படுத்தும் முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், கச்சத்தீவை இலங்கை அரசிடமிருந்து மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று தமிழக சட்டபேரவையில் தீரமானம் கொண்டு வரப்பட்டது.



பணி ஓய்வு பெறுவதற்கு கடைசி நாளில் ரயில் ஓட்டுனருக்கு நேர்ந்த துயர சம்பவம்!
[Wednesday 2025-04-02 18:00]

பணி ஓய்வு பெறுவதற்கு கடைசி நாளில் வேலையை முடித்துவிட்டு குடும்பத்தினரை சந்திக்க காத்திருந்த ரயில் ஓட்டுனருக்கு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்திய மாநிலமான ஜார்கண்ட், சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் பராக்கா-லால்மதியா எம்.ஜி.ஆர்.ரயில்வே லைனில் நேற்று இரு சரக்கு ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 ரயில் ஓட்டுனர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் நிலக்கரி ஏற்றி வந்த ரயில் லோகோ பைலட் கங்கேஸ்வர் மால் உயிரிழந்தார். இவர் நேற்றைய தினம் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.



சில மாதங்களில் திருமணம்: மாணவி எடுத்த தவறான முடிவு!
[Wednesday 2025-04-02 18:00]

இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்துவரும் மாணவி ஒருவருக்கு சில மாதங்களில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அவர் தனது உயிரை தானே மாய்த்துக்கொண்ட துயர சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷிவாங்கி மிஷ்ரா (25) என்னும் இளம்பெண், பயோடெக்னாலஜி இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்துவந்துள்ளார்.



140 கிமீ பாதயாத்திரையாக செல்லும் ஆனந்த் அம்பானி!
[Wednesday 2025-04-02 18:00]

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, தனது பிறந்தநாளை முன்னிட்டு 140 கிலோ மீற்றர் பாதயாத்திரையாக செல்ல உள்ளார். இந்தியா மட்டுமில்லாமல் உலகளவிலும் பெரும் பணக்காரராக அறியப்படுபவர் முகேஷ் அம்பானி. இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.



‘நித்தியானந்தா நலமாக உள்ளார்’ - கைலாசா முகநூல் பக்கத்தில் விளக்கம்!
[Wednesday 2025-04-02 06:00]

நித்தியானந்தா கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதாவது நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் என்பவர் வீடியோ மூலமாக ஆன்மீக சொற்பொழிவில் இந்த தகவலைத் தெரிவித்த‌தாக கூறப்பட்டது. அதே சமயம் நித்தியானந்தாவிற்குச் சொந்தமான சுமார் 4 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க இந்த முயற்சி நடைபெறுகிறதா? எனவும், அவர் மீதான வழகுகளிலிருந்து தப்பிக்க இவ்வாறு தகவல் பரப்பப்படுகிறதா எனவும் குழப்பம் எழுந்திருந்தது.



‘விடிய விடிய கடை இருக்கும்’ - மதுபான பார் ஊழியர்!
[Wednesday 2025-04-02 06:00]

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்குத் திறந்து இரவு 10 மணிக்கு மூடப்பட்டு வருகிறது. அதே போல டாஸ்மாக் அருகில் உள்ள பார்களுக்கும் திறந்து மூட அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்த பார்கள் எந்த விதிமுறைகளையும் கடைப்பிடிப்பதும் இல்லை டாஸ்மாக், மதுவிலக்கு அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. அதற்கு ஈடாக மாதாந்திர கட்டணமும் தேதி மாறாமல் மாமூலாக வசூலித்துக் கொள்கின்றனர். மற்றொரு பக்கம் கிளப் என்ற பெயரில் ஏராளமான தனியார் மதுக்கள் நகரங்களை ஆக்கிரமித்து வருகிறது.



கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று தீர்மானம்!
[Wednesday 2025-04-02 06:00]

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது.



காதல் தோல்வியால் ஆட்டை திருமணம் செய்து கொண்ட இளைஞர்!
[Tuesday 2025-04-01 19:00]

காதல் தோல்வியை சந்தித்த இளைஞர்கள், பெரும்பாலும் அதில் இருந்து மீண்டும் வேறு திருமணம் செய்து கொண்டு, தனது வாழ்க்கையை தொடர்வார்கள். சிலர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல், விபரீத முடிவெடுப்பது உண்டு. ஒரு சிலர் விதிவிலக்காக காதல் தோல்விக்கு பின்னர், திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்க்கையை நடத்துவார்கள்.



பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழப்பு!
[Tuesday 2025-04-01 19:00]

குஜராத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான குஜராத், பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.



CSK தோல்வியை கிண்டல் செய்ததாக தாக்கப்பட்ட இளைஞர் மரணம்!
[Tuesday 2025-04-01 19:00]

சென்னையில் இளைஞர் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுற்றதை கிண்டல் செய்ததாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். துரைப்பாக்கம் பகுதியில் கடந்த 28ஆம் திகதி, ஜீவரத்தினம் என்ற இளைஞரை சிலர் கடுமையாக தாக்கியதால், படுகாயமடைந்து ஆபத்தான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியுற்றதை, ஜீவரத்தினம் கிண்டல் செய்ததால் அவர் தாக்குதலுக்கு உள்ளானார் என செய்தி வெளியானது.



2 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து துபாய் பயணம் - கடலுக்கடியில் ஓடவிருக்கும் ரயில்!
[Tuesday 2025-04-01 19:00]

தொழில்நுட்பம் வளர வளர மக்களின் பயண தூரம் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி வருகிறது. தரைக்கு மேல் புல்லட் ரயில் போன்ற அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கடலுக்கு அடியில் 600 கிமீ வேகத்தில் பயணிக்கும் ரயிலை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது. துபாயில் இருந்து இந்தியாவின் மும்பை வரை கடலுக்கு அடியில் செல்லும் ரயிலை இயக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய ஆலோசகர் பணியகம் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது.


Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Latika-Gold-House-2025
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா