Untitled Document
April 16, 2025 [GMT]
“வனத்துறையினரால் இளைஞர் கொடுமைப்படுத்திக் கொலை” - ராமதாஸ் கண்டனம்!
[Monday 2025-04-07 06:00]

“தருமபுரி காட்டில் வனத்துறையினரால் இளைஞர் கொடுமைப்படுத்திக் கொலை: சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரி மாவட்டம் கொங்காரப்பட்டி கிராமத்திலிருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் என்ற இளைஞரை வனத்துறையினர் கொடுமைப்படுத்தி படுகொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மிகக் கொடூரமான முறையில் செந்தில் கொலை செய்யப்பட்டதற்கு சந்தர்ப்ப சாட்சியங்கள் ஏராளமான இருக்கும் நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து  விட்டதாக வனத்துறை பொய்க்கதை புனைவதும், அதற்கு காவல்துறை துணைபோவதும் கண்டிக்கத்தக்கது.

“தருமபுரி காட்டில் வனத்துறையினரால் இளைஞர் கொடுமைப்படுத்திக் கொலை: சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரி மாவட்டம் கொங்காரப்பட்டி கிராமத்திலிருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் என்ற இளைஞரை வனத்துறையினர் கொடுமைப்படுத்தி படுகொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மிகக் கொடூரமான முறையில் செந்தில் கொலை செய்யப்பட்டதற்கு சந்தர்ப்ப சாட்சியங்கள் ஏராளமான இருக்கும் நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாக வனத்துறை பொய்க்கதை புனைவதும், அதற்கு காவல்துறை துணைபோவதும் கண்டிக்கத்தக்கது.

  

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கொங்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். கொத்தனாராக பணி செய்து வரும் செந்திலையும், அவரது தந்தை கோவிந்தராஜ், சகோதரர் சக்தி ஆகியோரை கடந்த மார்ச் 17 ஆம் நாள் பென்னாகரம் வனக்காவல் நிலையத்திற்கு வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதன்பின் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாத நிலையில், அவர்களின் குடும்பத்தினர் இது குறித்து தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 19-ஆம் நாள் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து சக்தியை அவரது குடும்பத்தினரிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். அதேநேரத்தில், ஏமனூர் வனப்பகுதியில் யானை ஒன்று கொல்லப்பட்டு, அதன் தந்தம் திருடப்பட்டது தொடர்பான வழக்கில் கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், செந்தில் அவரது குடும்பத்தினரிடம் வனத்துறையினர் ஒப்படைக்கவில்லை. யானை கொல்லப்பட்ட இடத்தில் விசாரிப்பதற்காக கைவிலங்குடன் அழைத்துச் சென்ற போது அவர் தப்பி ஓடிவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

அதன்பின், 15 நாட்கள் கழித்து கொங்காரப்பட்டி வனப்பகுதியில் செந்திலின் உடலை கிடைத்ததாக வனத்துறையினர் கூறியுள்ளனர். அவர் வனத்துறையினரால் கொடுமைப்படுத்தி பின்னர், சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால், வனத்துறையோ, தங்களின் பிடியிலிருந்து தப்பி ஓடிய செந்தில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக விளக்கமளித்திருக்கிறது. வனத்துறையினர் தெரிவித்திருக்கும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

செந்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நாள் முதல் நடந்த நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது அவர் வனத்துறையினரால் கொடுமைப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு நம்பும்படியாகவே உள்ளது. செந்திலின் மர்ம மரணம் குறித்து கீழ்க்கண்ட சந்தேகங்கள் எழுகின்றன.

1. விசாரணை என்ற பெயரில் செந்திலை மார்ச் 17 ஆம் தேதி அழைத்த வனத்துறையினர், அவர் குறித்த விவரங்களையோ, அவர் கைது செய்யப்பட்டதையோ 19 ஆம் தேதி வரை குடும்பத்தினருக்கு தெரிவிக்காதது ஏன்?

2. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கு அடுத்த நாளே, செந்திலை வனத்துறையினர் கொலை செய்து வனப்பகுதியில் வீசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 18 ஆம் தேதி முதல் செந்திலின் உடல் கண்டெடுக்கப்பட்ட ஏப்ரல் 4 ஆம் தேதி வரை கொங்காரப்பட்டி வனப்பகுதியில் எவரும் நுழையாமல் வனத்துறை தடுத்து நிறுத்தி வைத்திருந்தது இந்த ஐயத்தை உறுதி செய்கிறது. செந்திலின் உடல் அழுகிவிட்டால் அவர் கொடுமைப்படுத்தப்பட்டதை நிரூபிக்க முடியாது என்பதற்காகவே வனத்துறையினர் இவ்வாறு செய்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

3. செந்தில் தப்பி ஓடி தற்கொலை செய்து கொண்டிருந்தால், அவரது கை விரல்களின் நகங்கள் மாயமானது எப்படி? உடல் அழுகினாலும் நகங்கள் உதிராது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். வனத்துறையினர் சித்திரவதை செய்து செந்திலின் நகங்களை பிடுங்கியதாகக் கூறப்படுகிறது.

4. கைவிலங்குடன் தப்பி ஓடிய செந்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது கைகளில் விலங்கு இல்லாதது எப்படி?

5. வனத்துறை பிடியிலிருந்து காட்டுக்குள் விலங்குடன் தப்பி ஓடியதாக கூறப்பட்ட செந்திலின் கைகளில் துப்பாக்கி கிடைத்தது எப்படி?

இந்த வினாக்கள் எதற்கும் விடையளிக்க வனத்துறை மறுக்கிறது. இது தொடர்பாக காவல்துறையில் செந்திலின் மனைவி சித்ரா புகார் அளித்துள்ள போதிலும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. வனத்துறை அதிகாரிகள் குறித்த பல ரகசியங்கள் செந்திலுக்குத் தெரியும் என்றும், அவற்றை செந்தில் வெளியில் கூறி விடுவார் என்ற அச்சத்தில் தான் அவரை வனத்துறையினர் படுகொலை செய்து விட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுகின்றனர். வனத்துறையினரின் இந்த நாடகத்துக்கு தருமபுரி மாவட்ட காவல்துறையினரும் துணை போவதை மன்னிக்கவே முடியாது.

2020ஆம் ஆண்டில் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் எவ்வாறு விசாரணை என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டார்களோ, அதேபோல் தான் செந்திலும் வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கை தமிழக காவல்துறையினர் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சாத்தான்குளம் காவல்நிலைய கொலை வழக்கைப் போலவே இந்த வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். கொல்லப்பட்ட செந்திலின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



சீமான் பேச்சுக்கு வழக்கு தொடர்வதாக இருந்தால் 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும்: நீதிபதி கருத்து!
[Wednesday 2025-04-16 18:00]

சீமான் பேச்சுகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால் இதுவரை 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதித்துறையை அவமிதிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.



டோலோ 650 குறித்த மருத்துவரின் எச்சரிக்கை பதிவு!
[Wednesday 2025-04-16 18:00]

டோலோ-650 மாத்திரையை இந்தியர்கள் Gems மிட்டாய போல் சாப்பிடுவதாக மறுத்த்துவர் ஒருவர் வெளியிட்ட கருத்து வைரலாகிவருகிறது. இந்தியாவில் பராசிடமால் (Paracetamol) குறைந்த உடல் வெப்பத்திலும் எளிதில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மருந்தாக இருக்கிறது. அதில், Dolo-650 எனும் பிராண்ட் மிகவும் பிரபலமானதாக வளர்ந்துள்ளது.



கள்ளக்காதலனுக்காக கணவரை கொன்று சாக்கடையில் வீசிய பெண்!
[Wednesday 2025-04-16 18:00]

வேறொரு ஆணுடன் நெருக்கமாக வீடியோ எடுத்ததை கணவர் தட்டிக்கேட்டதால், தன் காதலருடன் சேர்ந்து கணவரைக் கொன்று சாக்கடையில் வீசியுள்ளார் ஒரு பெண். ஹரியானாவைச் சேர்ந்த பிரவீன் என்பவரின் மனைவி ரவீனா (32). யூடியூபுக்காக வீடியோக்கள் எடுப்பவரான ரவீனா, ஒரு கட்டத்தில் வேறு பலருடன் இணைந்து வீடியோக்கள் எடுக்கத் துவங்கியுள்ளார்.



கருப்பாக இருப்பதாக கிண்டல் செய்த கணவரின் குடும்பம்: புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!
[Wednesday 2025-04-16 18:00]

இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணமான 4 மாதங்களில் புதுப்பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் சரண பசவேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் அமரேஷ் (30). இவருக்கும் பூஜா (27) என்ற பெண்ணும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் பூஜா தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து பூஜாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



போதைப்பொருள் கடத்தல்: வெளியான அதிர்ச்சி தகவல்!
[Wednesday 2025-04-16 06:00]

இராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடற்கரை மிகவும் நீண்ட பகுதி. இப்பகுதியில் தொடர்ந்து இலங்கைக்கு மஞ்சள், பீடி மருந்து பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவை கடத்தப்பட்டு வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சந்திஷ் பொறுப்பேற்றவுடன் சில மாதங்களில் கடத்தல்காரர்களை கட்டுக்குள் கொண்டு வந்தார். இந்நிலையில் பீடி மஞ்சள் புகையிலை மருந்து பொருட்களை கடத்திக் கொண்டிருந்தவர்கள் தற்சமயம் ஒரு படி மேலே சென்று கொகையின் போன்ற உயர்ரக போதை பொருளை கடத்தும் நிலைமைக்கு வந்துவிட்டனர்.



புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
[Wednesday 2025-04-16 06:00]

புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “17/04/2025 (வியாழக்கிழமை), 18/04/2025 (புனித வெள்ளி), 19/04/2025 (சனிக்கிழமை) மற்றும் 20/04/2025 (ஞாயிற்றுக் கிழமை) என தொடர் விடுமுறையை முன்னிட்டு வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை 3 நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



ராகுல், சோனியா காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
[Wednesday 2025-04-16 06:00]

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காங்கிரஸின் நாடாளுமன்ற குழுத்தலைவருமான சோனியா காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.



"ஈழப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ஜாட் படத்தைத் தடை செய்ய வேண்டும்" - சீமான் எச்சரிக்கை!
[Tuesday 2025-04-15 19:00]

ஜாட் திரைப்படத்தை தடை செய்யாவிட்டால் திரையரங்குகள் முற்றுகையிடப்படும் என சீமான் எச்சரித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பணியாற்றி வந்த கோபிசந்த் மலினேனி இயக்கத்தில், சன்னி தியோல், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி ஜாட்(Jatt) என்ற ஹிந்தி மொழிப்படம் வெளியானது.



வெயிலை தணிக்க முயற்சி: வகுப்பறையில் மாட்டு சாணம் பூசிய கல்லூரி முதல்வர்!
[Tuesday 2025-04-15 19:00]

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ், லட்சுமி பாய் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வரான பிரத்யுஷ் வத்சலா, வகுப்பறை சுவர் முழுவதும் மாட்டு சாணத்தை பூசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்லூரியின் C ப்ளாக் கட்டத்தில் உள்ள வகுப்பறையில் முதல்வர் பிரத்யுஷ் வத்சலா மாட்டு சாணத்தை பூசியுள்ளார்.



15000 கோடி மதிப்புள்ள அம்பானி வீட்டில் ஒரு ஏசி கூட இல்லை: ஏன் தெரியுமா?
[Tuesday 2025-04-15 19:00]

உலகளவில் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானிக்கு எண்ணிலடங்கா தொழில்கள் இருக்கின்றன. இவரது பிள்ளைகள், மனைவி நீடா அம்பானி என அனைவருமே பெரும் தொழிலதிபர்களாக இருக்கின்றனர். அம்பானி, தனது குடும்பத்தாருடன் மும்பையில் இருக்கும் கும்பலா மலையில் இருக்கும் அல்டமவுட்ன் சாலையில் இருக்கும் ஆண்டிலியா எனும் வீட்டில் தங்கியிருக்கிறார். உலகத்தரம் வாய்ந்த இந்த ஆன்டிலியா வீட்டில் மொத்தம் 27 கட்டடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.



பென்சிலால் ஏற்பட்ட பிரச்சனை: 8ஆம் வகுப்பு மாணவரை வெட்டிய சக மாணவர்!
[Tuesday 2025-04-15 19:00]

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி 4 நாள் விடுமுறைக்கு பிறகு, இன்று வழக்கம் போல் இயங்க தொடங்கியது. அப்போது 8ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர், வகுப்பறையில் வைத்து தனது பள்ளிக்கூட பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, சக மாணவரை வெட்டியுள்ளார்.



ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு: போலீசார் விசாரணை!
[Tuesday 2025-04-15 06:00]

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வடக்கு கொளக்குடி ஜாகிர் உசேன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த முஜிபுல்லா மகன் உபயத்துல்லா (வயது 8). ஜாபர் சாதிக் மகன் முகமது அபில் (வயது 10). சாதிக் பாட்ஷா மகன் ஷேக் அப்துல் ரஹ்மான் (வயது 13) உள்ளிட்ட 5 சிறுவர்கள் இன்று (14.04.2025) காலை வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஓடையில் உள்ள பள்ளத்தில் உபயத்துல்லா, முகமது அபில்,ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகிய 3 பேர் தவறி விழுந்து மூழ்கியுள்ளனர்.



“சமூக நீதியை நிலைநாட்டுவதாகக் கூறும் தமிழ்நாட்டில்....” - ஆளுநர் பரபரப்பு பேச்சு!
[Tuesday 2025-04-15 06:00]

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் (14.04.2025) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அவரது பிறந்தநாளை தமிழக அரசு சமத்துவ நாளாக அறிவித்து ஆண்டு தோறும் சாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்து வருகிறது.



“எனது நண்பர் விஜயகாந்த் அற்புதமானவர்” - பிரதமர் மோடி புகழாரம்!
[Tuesday 2025-04-15 06:00]

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சியின் நிறுவனரும், நடிகரும், அவரது கணவருமான மறைந்த விஜயகாந்த்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான நட்பு குறித்து ஆங்கில வடிவிலான வீடியோ ஒன்றை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில், “கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர்.



பா.ஜ.கவுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு: அ.தி.மு.க. நிர்வாகி பரபரப்பு கடிதம்!
[Monday 2025-04-14 18:00]

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுகவில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் மேற்கொள்ள ஏதுவாக ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் துணை முதல்வரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதன்படி இந்த குழுவினர் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளைப் பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



'ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்' - திக்குமுக்காடிய திருவண்ணாமலை!
[Monday 2025-04-14 18:00]

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களிலும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் விழா, ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோற்சவ விழா, ஆடி மாதத்தில் ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தை மாதத்தில் உத்தராயன புண்ணிய காலம் என ஆண்டுதோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் விமர்சையாக நடைபெறும்.



திடீரென மோடியை புகழ்ந்த பிரேமலதா!
[Monday 2025-04-14 18:00]

விஜயகாந்தை தமிழகத்தின் சிங்கம் என்று மோடி அன்பாக அழைப்பார் என்று பிரேமலதா கூறியுள்ளார். எந்த கட்சியுடனும் தற்போது கூட்டணியில் இல்லை என்று கடந்த வாரம் பிரேமலதா கூறி இருந்தார். இதனிடையே தான் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டணிக்குள் தேமுதிகவையும் கொண்டு வருவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



ஐபிஎல் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சிறுவன்!
[Monday 2025-04-14 18:00]

டிவியில் ஐபிஎல் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இளைஞரை 13 வயது சிறுவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், மீரட்டில் உள்ள கஜூரி கிராமத்தில் 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தனது தாத்தாவின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துள்ளான்.



“காவல் ஆணையரின் உத்தரவு அதிர்ச்சியளிக்கிறது” - வரிச்சூர் செல்வம் பேட்டி!
[Monday 2025-04-14 06:00]

மதுரை மாவட்டம் வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கழுத்தில் பெரிய தங்கச் சங்கிலிகளையும், கைகளில் தங்க நகைகளையும் அணிந்து மக்களின் கவனத்தை ஈர்த்தும் வருபவர் ஆவார். இத்தகைய சூழலில் தான் இவரும், இவரது ஆதரவாளர்களும் கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.



முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம்!
[Monday 2025-04-14 06:00]

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி முட்டுக்கட்டைப் போடுவதாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 8ஆம் தேதி (08.04.2025) பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், ‘தமிழக அரசின் சார்பில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்ற மசோதா உட்பட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது. 2வது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டபோது ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார்.


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா