Untitled Document
December 30, 2024 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



வெறும் சொக்லேட்டை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்த நாட்கள்: நினைவுகூரும் மன்மோகன் சிங்கின் மகள்!
[Monday 2024-12-30 17:00]

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பிரித்தானியாவில் கல்வி பயின்றபோது, சில நேரங்களில் வெறும் சொக்லேட்டை மட்டும் உண்டு வாழ்ந்ததாக தெரிவிக்கிறார் அவரது மகள். மன்மோகன் சிங், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்தவர் ஆவார். 1950களில் தன் தந்தையான மன்மோகன் சிங் பிரித்தானியாவில் கல்வி கற்றபோது, சாப்பிட பணம் இல்லாததால் உணவைத் தவிர்த்துவிடுவார் என்கிறார் மன்மோகனின் மகளான டாமன் சிங்.



விஜயின் செயலை வரவேற்ற பாஜக தலைவர் அண்ணாமலை!
[Monday 2024-12-30 17:00]

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்தது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது அண்ணா பல்கலை கழக மாணவி வன்கொடுமை தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.



தமிழக ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்தித்த நோக்கம் என்ன?
[Monday 2024-12-30 17:00]

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.



நீதா அம்பானி ஏன் பச்சை ரத்தினத்தை அடிக்கடி அணிகிறார்?
[Monday 2024-12-30 17:00]

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி பச்சை ரத்தினத்தை அணியும் காரணத்தை பற்றி பார்க்கலாம். முகேஷ் அம்பானியின் மனைவியும், தொழிலதிபருமான நீதா அம்பானி தனது நகைகள் மற்றும் ஃபேஷனுக்காக பிரபலமானவர். அவர் தன்னை அழகாகவும் நேர்த்தியாகவும் கொண்டு செல்வதற்கு தனக்கென தனி சிறப்பை வைத்துள்ளார்.



“பாலியல் வன்கொடுமைகளைக் கண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகிறேன்” - விஜய் வேதனை!
[Monday 2024-12-30 08:00]

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.



தோழர் நல்லக்கண்ணு பிறந்த நாள் விழா: நக்கீரன் ஆசிரியர் புகழாரம்!
[Monday 2024-12-30 08:00]

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா (29.12.2024) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தோழர் இரா. நல்லகண்ணு 100 நூறு கவிஞர்கள் நூறு கவிதைகள்" என்ற நூலினை வெளியிட்டார். இந்நிகழ்வில் நக்கீரன் ஆசிரியர் பேசுகையில், “நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மானப்பெரிது என்று அய்யன் திருவள்ளுவர் எழுதிய குரல் ஐயா நல்லக்கண்ணுவிற்கு உரித்தாகும். ஆரவாரம் இல்லாத அன்பு பண்பு இதெல்லாம் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் மலையை விட பெரியவர்கள் என்று அன்றைக்கு அய்யன் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். ஆசையே இல்லாத ஒரு மனிதன் 100 ஆண்டுகள் வாழ முடியுமா, நல்லக்கண்ணு அவர்கள் வாழ்ந்திருக்கிறாரே.



சடலமாக மீட்கப்பட்ட நர்சிங் மாணவி: அடுத்த கட்ட விசாரணைக்கு தயாராகும் போலீசார்!
[Monday 2024-12-30 08:00]

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் கருக்காக்குறிச்சி வடக்கு கிராமம் ராஜா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் சௌமியா (வயது 21). இவர் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இத்தகைய சூழலில் அவருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் சௌமியாவுக்கு அந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை (25.12.2024) இரவு சௌமியா திடீரென காணாமல் போனதாக அடுத்த நாள் ரமேஷ் வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.



“தமிழகம் தடைகளைத் தகர்த்து முன்னேறும்” - முதல்வர் ஸ்டாலின் உறுதி!
[Sunday 2024-12-29 18:00]

ஆழிப்பேரலையை எதிர்கொண்டு வெள்ளிவிழா காணும் அய்யன் வள்ளுவரின் பேரறிவுச் சிலை போல தமிழ்நாடும் தடைகளைத் தகர்த்து முன்னேறும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “உலகப் பொது மறையாம் திருக்குறளை வழங்கிய திருவள்ளுவர் தமிழர்களின் உலக அடையாளமாகத் திகழ்கிறார். உலக வாழ்வியலுக்கான பொது முறையை வழங்கும் அறநெறிகளைக் கொண்ட திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் உலகளாவிய புகழ் சேர்த்திடும் வகையில், முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலையை நிறுவியவர் கலைஞர்.



அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வு குறித்து டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பு!
[Sunday 2024-12-29 18:00]

குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-2 பதவியின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி (13.09.2024) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இத்தேர்விற்கான கணினிவழித் தேர்வு கடந்த 14ஆம் தேதி (14.12.2024) பிற்பகல் 15 மாவட்ட மையங்களில் 4 ஆயிரத்து 186 தேர்வர்களுக்கு நடத்தப்பட்டது. சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை.



'நேற்று மோதல், இன்று சமரசம்' - சந்திப்பு குறித்து விளக்கமளித்த அன்புமணி!
[Sunday 2024-12-29 18:00]

புதுச்சேரி மாநிலம் வானூரில் பாமக பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகளுக்கு பொறுப்புகளையும் ராமதாஸ் வழங்கினார்.



அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி!
[Sunday 2024-12-29 18:00]

தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 31ஆம் திகதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



“அ.தி.மு.க ஆட்சியில் சரியான தண்டனை கிடைத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது” - கனிமொழி!
[Sunday 2024-12-29 07:00]

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரைக் கடந்த 25ஆம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.



“மூன்று முறை முதல்வர் வந்தார்” - உருக்கமாக பேசிய பிரேமலதா விஜயகாந்த்!
[Sunday 2024-12-29 07:00]

நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதற்காக ஏராளமான ரசிகர்கள், மக்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கோயம்பேடு பகுதியில் உள்ள தே.மு.தி.க கட்சி அலுவலகத்தில் மறைந்த விஜயகாந்த்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.



ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடிக்கும் போது விபரீதம்: ஒருவர் பலி!
[Sunday 2024-12-29 07:00]

ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்துக்கு உட்பட்டது கேர்மாளம் ஊராட்சி . இந்த ஊராட்சி அலுவலகம் கட்டிடம் மிகவும் பழுதடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இந்த பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. புதிய கட்டிடம் கட்ட ஒப்பந்ததாரர் பழுதடைந்த அலுவலக கட்டிடத்தை ஆட்கள் மூலம் இடித்துக் கொண்டிருந்தார்.



யமுனை நதிக்கரையில் உடல் தகனம்: பிரியா விடை பெற்றார் மன்மோகன் சிங்!
[Saturday 2024-12-28 17:00]

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு (92) உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று முன்தினம் (26.12.2024) மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்சினையால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், டெல்லியில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.



2024: விடைதெரியா மரணங்கள்!
[Saturday 2024-12-28 17:00]

இதோ இன்னும் சில நாட்களில் விடை கொடுக்க காத்திருக்கிறது '2024'. 2000 ஆவது ஆண்டின் கால் நூற்றாண்டை தொட காத்திருக்கிறது உலகம். புத்தாண்டு நாளில் புதிய வேட்கைகளும், ஏற்றங்களும், நம்பிக்கைகளும் இடம் பிடித்திருக்க வேண்டியதைப் போல் வாழ்க்கையில் மறவாத சில சறுக்கல் நிகழ்வுகளையும் பின்னோக்கி பார்ப்பது அவசியமாகிறது. இன்பம் மட்டுமல்ல சில தும்பியல் நிகழ்வுகளும்தானே வாழ்க்கை. அந்த வகையில் 2024 ல் நாம் சந்தித்த சில துயரங்கள், மரணங்கள், வடுவாகிப்போன ரணங்களை தொகுப்பாக்கிறது இந்த வரைவு.



இலங்கையின் பொருளாதார மீட்சி இந்தியாவுடன் இணைக்க வேண்டும் - ரணில் வலியுறுத்தல்!
[Saturday 2024-12-28 17:00]

இலங்கையின் பொருளாதார மீட்சியை இந்தியாவின் "நிலையான மற்றும் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன்" இணைப்பது, இலங்கை நாட்டிற்கு பெரிய சந்தைகளை ஸ்தாபிக்க மற்றும் கடந்த இரு தசாப்தங்களாக கடனினால் தூண்டப்பட்ட வளர்ச்சியிலிருந்து ஒரு பாதையை வழங்கும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.



"நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்": ராமதாஸ் - அன்புமணி வார்த்தை மோதல்!
[Saturday 2024-12-28 17:00]

பாமக பொதுக்குழுக்கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதால் பரபரப்பானது. புதுச்சேரியில் பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது மாநில இளைஞரணி நிர்வாகியாக முகுந்தன் என்பவரை நியமிப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது.



விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம்: ஸ்தம்பித்த கோயம்பேடு!
[Saturday 2024-12-28 07:00]

நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக அவருடைய நினைவிடம் உள்ள கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகம் நோக்கி அதிகாலை முதலே ரசிகர்கள் மக்கள் பிரபலங்கள் படையெடுத்து வருகின்றனர்.



அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆய்வு?
[Saturday 2024-12-28 07:00]

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரைக் கடந்த 25ஆம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி சர்ச்சையானது.


Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா