Untitled Document
October 31, 2024 [GMT]
சுண்டிக்குளத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்களுடன் ரவிகரன் சந்திப்பு!
[Monday 2024-04-29 05:00]



கரியல்வயல், சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ள இடங்களுக்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஞாயிற்றுக்கிழமை களவிஜயம் மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

கரியல்வயல், சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ள இடங்களுக்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஞாயிற்றுக்கிழமை களவிஜயம் மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

  

1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் கடந்த வருடம் (07.12.2023) அன்றையதினம் தாக்கல் செய்திருந்தனர்.

சுண்டிக்குளம் தேசிய பூங்காவிற்குள் உட்சென்றமை , தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை , காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

610 ஏக்கர் காணியில் குறித்த மக்கள் விவசாயம் மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் 370 ஏக்கர் விவசாய நிலங்களில் சிறியளவில் பற்றைகள் வளர்ந்துள்ளதனால் பயிர்ச்செய்கை மேற்கொண்ட நிலங்களுக்கு அனுமதி வழங்கப்படாது உள்ளது. கிட்டத்தட்ட 1000 ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் 4 தலைமுறைக்கு மேற்பட்டு விவசாய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வழக்கானது (07.12.2023) அன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டதன் பின்னர் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 2ம் திகதிக்கு அடுத்த வழக்கிற்கு தவணையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



பருத்தித்துறையில் கணவன், மனைவி கொலை!
[Wednesday 2024-10-30 16:00]

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ளனர். கணவன், மனைவி இருவரும் வீட்டில் தலையில் கல்லினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.



காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி போராட்டம்!
[Wednesday 2024-10-30 16:00]

காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



உயர்தர பரீட்சை பிற்போடப்படமாட்டாது!
[Wednesday 2024-10-30 16:00]

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தரதார உயர்தர பரீட்சை பிற்போடப்படமாட்டாது- திட்டமிட்டப்படி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



பயங்கரவாத தடைச்சட்டத்தை தக்க வைக்க முனைகிறதா அனுர அரசு?
[Wednesday 2024-10-30 15:00]

பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள்,இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலவற்றின் ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அனுரகுமார திசநாயக்க மறக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்



பிரதமர் ஹரிணி எங்கே அரசியலமைப்பை படித்தார்?
[Wednesday 2024-10-30 15:00]

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு இலங்கையின் அரசியலமைப்பு தெரியாதா என கேள்வி எழுப்பிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் அரச அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.



கனடாவில் குறி வைத்தவர் அமித் ஷா!
[Wednesday 2024-10-30 15:00]

சீக்கிய பிரிவினைவாதிகள் கனடாவில் குறி வைக்கப்பட்டதற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவே காரணம் என்று கனடாவின் வெளியுறவு துணை அமைச்சர் டேவிட் மொரிசன் தெரிவித்துள்ளார்.



விமானங்களுக்கு அச்சுறுத்தல்- பாதுகாப்புச் சபை கூட்டத்தில் ஆராய்வு!
[Wednesday 2024-10-30 15:00]

இந்திய பயணிகள் விமானங்களை குறிவைத்து தொடர்ச்சியாக வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் மற்றும் இலங்கையின் சுற்றுலாத்துறையில் அவை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய பாதுகாப்பு சபை நேற்று கலந்துரையாடியது.



ஜனாதிபதி அநுர வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தி!
[Wednesday 2024-10-30 15:00]

இத்தனை நாட்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை மலரச் செய்யும் மாற்றத்துக்கான யுகத்தை நாம் ஆரம்பித்துள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
[Wednesday 2024-10-30 15:00]

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.



ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான மனு தள்ளுபடி!
[Wednesday 2024-10-30 15:00]

2024 பொதுத் தேர்தலில் நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க சமர்ப்பித்த தேர்தல் வேட்புமனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்யுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



அறுகம்குடாவை வைத்து ஆட்சியை கவிழ்க்க முயற்சி!
[Wednesday 2024-10-30 05:00]

அறுகம்குடா சம்பவத்தை அடிப்படையாக வைத்தேனும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக்கொண்டுள்ளன. அவ்வளவு எளிதில் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது. நாட்டை மீட்டெடுக்கும் வரை எம்மை வீழ்த்த முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.



ரோஹித போகொல்லாகம குறித்து விசாரணை!
[Wednesday 2024-10-30 05:00]

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரால் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்குத் தட்டுப்பாடு!
[Wednesday 2024-10-30 05:00]

யாழ்ப்பாணத்தில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில், பெற்றோலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஓரிரு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நீங்கலாக ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டது என்ற அறிவிப்புக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.



அடுத்த சில வருடங்களில் மின் கட்டணம் குறைப்பு!
[Wednesday 2024-10-30 05:00]

அடுத்த சில வருடங்களில் மின்சாரக் கட்டணத்தை கணிசமான அளவு குறைப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.



அரிசித் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை!
[Wednesday 2024-10-30 05:00]

நாட்டில் அரிசித் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.



க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம்!
[Wednesday 2024-10-30 05:00]

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பொய் சொல்கிறார் பிரதமர்!
[Wednesday 2024-10-30 05:00]

அரச துறையின் சம்பளம் தொடர்பான முன்னாள் அரசாங்கத்தின் பிரேரணை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அண்மையில் தெரிவித்த கருத்து பொய்யானது மற்றும் தவறானது என முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.



கம்மன்பிலவின் இரண்டாவது அறிக்கையையும் அரசாங்கம் நிராகரிப்பு!
[Wednesday 2024-10-30 05:00]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் இரண்டாவது ஈஸ்டர் வௌிப்படுத்தலின் ஊடாக ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



6 மாதங்களுக்கு ஒருமுறை சம்பளத்தை உயர்த்துவதாக கூறிய ஜே.வி.பி!
[Wednesday 2024-10-30 05:00]

அரச ஊழியர்களின் சம்பளத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிப்பதாகக் கூறிய ஜே.வி.பி. இன்று அதனை மறுக்கிறது. அரசு ஊழியர்கள் திசைகாட்டி மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வாக்களித்தனர். அந்த நம்பிக்கையை அரசாங்கம் தற்போது இழந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.



ஊவா தமிழ் பாடசாலைகளுக்கு வெள்ளி விடுமுறை!
[Wednesday 2024-10-30 05:00]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா