Untitled Document
April 1, 2025 [GMT]
விடுதலையான அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் விரைவில் சட்ட நடவடிக்கை!
[Sunday 2025-03-30 05:00]


கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதுடன் இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதுடன் இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

  

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் சனிக்ககிழமை (29) பழைய கச்சேரி மண்டபத்தில் பிரதி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கவில்லை இதற்கு முதலிலே அரசியல் ரீதியாக பல்வேறுபட்ட அரசியல்வாதிகள் பழிவாங்கப்பட்ட வரலாறு இருக்கின்றது. 1950 ,60,70,80, 90, க்கு பிற்பட்ட காலமாக இருக்கலாம் இப்படிப்பட்ட பல்வேறு விடயங்கள் நாட்டிலே நடந்திருக்கின்றது.

1977 ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பொலிஸ் திணைக்களத்துக்கு ஒரு விடுமுறையை வழங்கி மக்களுக்கும் எதிர்கட்சிக்கும் சிறுபான்மைக்கும் எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது அப்படிப்பட்ட நாட்டிலே நாங்கள் வாழுகின்றோம்.

எனவே நாங்கள் பழிவாங்கும் செயற்பாடுகளுடன் செயற்பட்டிருந்தோம் என்றால் எவ்வளவோ வேலையை செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் சட்டரீதியாக ஒப்புவிக்கப்படுவதன் பிரகாரம் நாங்கள் அவர்களுக்கு எதிராக சரியான முறையில் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் கூட எதிர்வரும் காலங்களில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதுவும் அரசியல் பழிவாங்கல் அல்ல பிழை செய்திருந்தால் உங்களுக்கு எதிராக அரசாங்கம் என்ற அடிப்படையில் சட்டங்களை நடைமுறைப்படுத்துவோம் இதற்கு தான் மக்கள் எங்களுக்கு அனுமதியளித்துள்ளனர்.

பட்டலந்தை ஆணைக்குழு தொடர்பான விவாதம் இப்போதாவது வந்தது என்பது சந்தோஷமானது சம்பவம் துக்கமான விடயமாக இருந்தாலும் அரசியல் ரீதியாக இப்போது பெரும் விவாதமாக எடுக்கப்படுகின்றது.

இந்த நாட்டில் மக்கள் விடுதலை முன்னணிக்கு நடந்தது என்று பார்ப்பதை விட இது ஒரு உதாரணம் இந்த நாட்டில் சட்டவிரோதமான படுகொலைகள் அரச ஒடுக்கு முறைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் இருந்தது. என சொல்வதற்கான ஒரு உதாரணம் இது.

இது நீண்ட ஒரு கறுப்பான யுகத்தில் ஒரு உதாரணம் இது பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்று வருகின்றதுடன் நடைபெற்ற எல்லா விடயங்கள் தொடர்பாக விசாரிக்கப்படும்.

அரசாங்கத்தை பொறுப்பெடுக்கும் போது உண்மை அறியும் ஆணைக்குழுவை நியமித்து இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுவோம் என தெரிவித்தோம் அதற்காக மக்கள் 5 வருடத்துக்கு ஆட்சியை தந்துள்ளனர். அதன் பிறகு மக்கள் ஆட்சியை தரப் போகின்றனர். எனவே படிப்படியாக அறிக்கை செய்யப்பட்ட விடயங்களை ஒரே தடவையில் தீர்மானிக்க முடியாது எனவே இந்த விடயங்களை செய்ய 6 மாதகாலம் செல்லும்.

இந்த அடிப்படையில் உண்மையறியும் ஆணைக்குழு முக்கியமாக நல்லிணக்கத்தை கட்டியொழுப்புவதற்கு சாதகமாக இருக்கும் அதேவேளை நல்லிணக்கத்தை குலைக்கின்றதாக இருக்க முடியாது இது ஒரு நீண்ட தூர பயணம்.

நாட்டில் ஜனநாயக ரீதியாக ஒரு பாரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளோம் இவ்வாறு எந்தவொரு நாட்டிலும் ஜனநாயக ரீதியாக மாற்றம் இடம்பெறவில்லை. அந்த அடிப்படையில் இன்று பாரிய மாற்றம் வந்துள்ளது. இருந்தபோதும் ஆங்காங்கே பழைய ஆட்சியாளர்களின் எச்சங்கள் வெளிவரும் போது ஒட்டு மொத்தமான மக்கள் இந்த மாற்றத்தை உணர்ந்து கொண்டுள்ளனர்.

வாழ்க்கை சுமை படிப்படியாக குறைந்து வருகின்றது ஊழல் மோசடி இலல்லாத கலாச்சாம் மற்றும் அரசியல் கலாச்சாரம் இடம்பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் அமைச்சரோ அல்லது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ பல வாகனங்களில் பயணித்தனர் அதற்கு டீசல் பெற்றோல் மக்களின் பணத்தில் அறவிடப்பட்டது. ஆனால் இன்று நாங்கள் வாகனத்தை குறைத்து பாதுகாப்பு இல்லாமல் செய்தமையால் யாரோ ஒருவருடைய சாப்பாட்டுத் தட்டில் உணவு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவே எங்களால் மக்களுக்கு வரப்பிரசாதங்கள் இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

எனவே இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அதே ரீதியில் நாட்டில் ஒரு குரோதத்தை வளர இடமளியோம். அந்த வகையில் எல்லோரும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவோம் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



நாயாறு கடலில் நீராடிய இரு யுவதிகள் பலி!
[Tuesday 2025-04-01 05:00]

முல்லைத்தீவு- நாயாறு கடற்பகுதியில் மூழ்கிய நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு பெண் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.



நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார் ஜனாதிபதி!
[Tuesday 2025-04-01 05:00]

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீதிபதிகளை விமர்சித்து நீதிமன்றத்துக்கு நேரடியாக அழுத்தம் பிரயோகித்துள்ளார். எனது வழக்கு விவகாரத்திலும் பதவிக்கான கௌரத்தை மீறி நீதிமன்றத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க முயற்சித்துள்ளார். நீதிமன்ற விவகாரத்தில் ஜனாதிபதி முன்பிள்ளை பாடசாலை பிள்ளை போல் செயற்படுகிறார். ஆகவே ஜனாதிபதி சிறந்த சட்ட ஆலோசனைகளை வழங்க வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.



பெற்றோல் விலை மட்டும் 10 ரூபாவினால் குறைப்பு!
[Tuesday 2025-04-01 05:00]

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 309 ரூபாயாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லிட்டர் ஒன்றின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 299 ரூபாயாகும். 95 ஒக்டேன் பெற்றோல் லிட்டரின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 361 ரூபாயாகும்.



இராணுவத்தினர் மீது கைவைக்க விடமாட்டோம்!
[Tuesday 2025-04-01 05:00]

இலங்கையின் முன்னாள் படை பிரதானிகளுக்கு விதித்துள்ள தடையை பிரித்தானியா உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டும். பிரித்தானிய அரசாங்கத்தின் முன்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தலைக்குனிந்துள்ளமைக்காக ஒட்டுமொத்த இலங்கையர்களும் தலைகுனிய போவதில்லை. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் மீது கைவைப்பதற்கு இலங்கையின் இறையாண்மையை நேசிக்கும் மக்கள் இடமளிக்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.



பால்மா, தேநீர் விலைகள் அதிகரிப்பு - சம்பா அரிசிக்கும் தட்டுப்பாடு!
[Tuesday 2025-04-01 05:00]

பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலை மற்றும், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள் திங்கட்கிழமை (31) நள்ளிரவு 12.00 மணி முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் (AICROA) ஹர்ஷனா ருக்‌ஷன் தெரிவித்துள்ளார்.



குற்றத்தை வெளிப்படுத்த சுபநேரம் தேவையில்லை!
[Tuesday 2025-04-01 05:00]

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதிக்கு இறங்குவதை தடுப்பதற்காகவே ஏப்ரல் 21க்கு முன்னர் உண்மையை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். உண்மையை வெளிப்படுத்த சுபநேரம் பார்க்க வேண்டுமா என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.



சிஐடியில் 5 ½ மணி நேரம் வாக்குமூலம் அளித்த டிரான்!
[Tuesday 2025-04-01 05:00]

2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் 5 ½ மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் சிஐடியிலிருந்து வெளியேறினார். 2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் அமைச்சர் நேற்றுக் காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார்.



பாரிஸ் செல்கிறார் பிரதமர் ஹரிணி!
[Tuesday 2025-04-01 05:00]

உலக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றான இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தையும் அதனுடன் தொடர்புடைய வாழ்வியல் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை' என்ற தலைப்பில் சர்வதேச நிபுணத்துவ மாநாட்டின் உயர் மட்டப் பிரிவில் பங்கேற்பதற்காக இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரான்ஸ் தலைநகர் பாரிசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.



யாழ். பல்கலைக்கழக மாணவன் பகடிவதையினால் செவித்திறன் பாதிப்பு!
[Tuesday 2025-04-01 05:00]

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிலேச்சத்தனமான பகடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள அம் மாணவனுக்குப் பாதுகாப்பளிக்குமாறும், பகடிவதைக்கெதிராக நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் மேறகொள்ளக் கோரியும் அம் மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.



நள்ளிரவில் உயர்த்தப்பட்டது லாஃப்ஸ் எரிவாயு விலை!
[Tuesday 2025-04-01 05:00]

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை திங்கள் நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை 420 ரூபாய் அதிகரித்து புதிய விலை 4,100 ரூபாயாக இருக்கும். மேலும், 5 கிலோ சிலிண்டர் 168 ரூபாய் அதிகரித்து 1,645 ரூபாயாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது..



மாகாண சபை குறித்து இந்தியா எமக்கு கூற வேண்டியதில்லை!
[Monday 2025-03-31 15:00]

உள்நாட்டில் போர் நடந்தபோது, படைத் தரப்பாலும், விடுதலை புலிகளாலும், புலிகளுக்கு எதிராக வடக்கை மையப்படுத்தி செயல்பட்ட அமைப்புகளாலும் பல்வேறு முரணான செயல்பாடுகள் இடம்பெற்றன. இவை பொய்யல்ல. போர் ஒன்றின்போது அவ்வாறு (மனித உரிமைகள், விதிகள் மீறல்) இடம்பெறும். இது குறித்து உள்நாட்டில் உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்



3 ஆம் உலகப் போரில் பலியாகப் போகும் 220 இலட்சம் இலங்கையர்கள்!
[Monday 2025-03-31 15:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது, கைச்சாத்திடப்படவுள்ள இந்திய - இலங்கை இராணுவ ஒப்பந்தம் இலங்கையை உலகப் போரில் தள்ளும் என மக்கள் போராட்ட முன்னணியின் நிர்வாக உறுப்பினர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.



பலாலியை 4 மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம்!
[Monday 2025-03-31 15:00]

பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



கரன்னாகொட, ஜகத் ஜெயசூரியவுக்கு எதிரான தடைகள் நியாயமானவையே!
[Monday 2025-03-31 15:00]

சவேந்திர சில்வாவுக்கு எதிரான, ஐக்கிய இராச்சியத்தின் சமீபத்திய தடைகள் நியாயமற்றவை என, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை!
[Monday 2025-03-31 15:00]

சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.



அரசடியில் சிக்கியது 96 கிலோ கஞ்சா!
[Monday 2025-03-31 15:00]

யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து நேற்றிரவு நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், அரசடி பகுதியில் 96 கிலோகிராம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கேரள கஞ்சா அடங்கிய 45 பார்சல்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு சுமார் 32மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



ஏழாலையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!- தாயும் ஏற்கனவே சிறையில்.
[Monday 2025-03-31 15:00]

யாழ்ப்பாணம் - ஏழாலை, தெற்கு மயிலங்காடு பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



சிஐடியில் முன்னிலையானார் டிரான் அலஸ்!
[Monday 2025-03-31 15:00]

முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு மாத்தறை - வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலொன்றுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளார்.



இலங்கையில் எச்.ஐ.வி. பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு!
[Monday 2025-03-31 15:00]

இலங்கையில் எச்.ஐ.வி. பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் பரவும் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. சமீப காலங்களில் நாட்டில் எச்.ஐ.வியுடன் வாழும் புதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக குறித்த திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.



தடுப்பூசி போடப்பட்ட 2 மாதக் குழந்தை மரணம்!
[Monday 2025-03-31 15:00]

யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தை காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா