Untitled Document
April 17, 2025 [GMT]
குற்றச் செயல்களின் சட்டக்கோவை நிறைவேறியது!
[Wednesday 2025-04-09 06:00]


குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை ஆகியவற்றின் விவாதத்துக்காக ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, குற்றச் செயல்களின் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை ஆகியவற்றின் விவாதத்துக்காக ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, குற்றச் செயல்களின் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.

  
  
   Bookmark and Share Seithy.com



தபால் வாக்குப் பதிவு திகதிகளில் மாற்றம்!
[Thursday 2025-04-17 17:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவுக்கான திருத்தப்பட்ட திகதிகளை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 22, 23, 24, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தபால் வாக்குப்பதிவு நடைபெறும் என்று முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. அத் திகதி திருத்தப்பட்டு ஏப்ரல் மாதம் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தபால் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



சூத்திரதாரிகளை வெளிப்படுத்துங்கள்!
[Thursday 2025-04-17 17:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் மற்றும் அந்த கொடூரமான செயலிற்கு உதவியவர்கள் யார் என்பதை கண்டறிவது அவசரமான விடயம் என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குறித்த தனது விசேட செய்தியில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை இதனை தெரிவித்துள்ளது.



பிள்ளையானுக்காக வாதாடப் போகும் கம்மன்பில- பின்னணி என்ன?
[Thursday 2025-04-17 17:00]

சட்டத்தரணி என்ற போர்வையில் ஒரு அரசியல்வாதியாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையானை) உதய கம்மன்பில சிறையில் வைத்து சந்தித்துள்ளார் என சுகாதார, வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



உச்சத்தை தொட்ட தங்கம்!
[Thursday 2025-04-17 17:00]

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஏற்ப, இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று சாதனை அளவை எட்டியுள்ளது. இலங்கையில் தினசரி தங்க விலை குறித்த நம்பகமான தகவல்களை வெளியிடும் GOLDCeylon Gold News Network,இன் தகவல்களின்படி, இன்று செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 242,000 ரூபாவாகவும் 24 கெரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை 262,000 ரூபாவாகவும் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.



ஜனாதிபதியின் மிரட்டல் - செயலாளருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்!
[Thursday 2025-04-17 17:00]

தேர்தல் சட்டங்களை மீறும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அளித்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.



மன்னார் - இராமேஸ்வரம் இடையே படகு சேவைக்கு விரைவில் நடவடிக்கை!
[Thursday 2025-04-17 17:00]

மன்னார் - இராமேஸ்வரம் இடையே படகு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.



உள்ளூரில் உற்பத்தி செய்த பால், யோகட்டுக்கு வற் வரி விலக்கு!
[Thursday 2025-04-17 16:00]

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலத்தின்படி, உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் யோகட் ஆகியவை வற் ( VAT) வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.இந்த மாதம் 11 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திரவ பால் மற்றும் யோகட் மீதான வற் (VAT) வரி நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



காரைநகரில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட என்பிபி வேட்பாளர் கைது!
[Thursday 2025-04-17 16:00]

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தியின் காரைநகர் பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவர் நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் மணல் ஏற்றிய வாகனம் பொலிஸ் நிலையத்திலேயே உள்ளது.



மன்னாரில் 18 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது!
[Thursday 2025-04-17 16:00]

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள வெட்டயமுறிப்பு பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, 18 கிலோ 200 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.



யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் நிதானம் தேவை!
[Thursday 2025-04-17 16:00]

தமிழ்க் கட்சிகள் எல்லாமே உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுவருகின்றன. ஜே.வி.பியை மாத்திரம் அல்ல; தென்னிலங்கைக் கட்சிகள் எதையுமே நாம் ஆதரிக்க முடியாது. தென்னிலங்கைக் கட்சிகளை நிராகரிக்கும் அதேசமயம் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்பதிலும் எமக்கு நிதானம் தேவை. தமிழ்த் தேசிய அரசியலை வியாபாரப் பண்டமாக்கி மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ் அரசியற் கட்சிகளையும் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



ஜி.எஸ்.பி பிளஸ் நிறுத்தப்பட்டால் ஆடை உற்பத்தித்துறை பின்னடைவைச் சந்திக்கும்!
[Thursday 2025-04-17 06:00]

ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்படும் பட்சத்தில், ஏற்கனவே அமெரிக்காவின் புதிய வர்த்தகக்கொள்கை மற்றும் அதன்கீழான தீர்வை வரி விதிப்பினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நாட்டின் ஆடை உற்பத்தித்துறை மேலும் பின்னடைவைச் சந்திக்கும் என பொருளியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.



தபால் வாக்களிப்பு திட்டமிட்டபடி நடக்கும்!
[Thursday 2025-04-17 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பு எதிர்வரும் வாரம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படும். தேர்தல் திகதியில் எவ்வித மாற்றமும் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



இஸ்ரேலின் முகவராக செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்!
[Thursday 2025-04-17 06:00]

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பலஸ்தீனுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி இன்று அது தொடர்பில் மௌனம் காக்கிறது. இந்த அரசாங்கம் தற்போது இஸ்ரேலின் முகவராக மாறியிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.



யாரைத் தெரிவு செய்யுங்கள் எனக் கூறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை!
[Thursday 2025-04-17 06:00]

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை உள்ளுராட்சிமன்றங்களுக்கு தெரிவு செய்தால் உள்ளூராட்சி மன்ற அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது முறையற்றதொரு கருத்தாகும். யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று மக்களுக்கு குறிப்பிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



கிளிநொச்சி பாலியல் துஷ்பிரயோக சந்தேக நபரை கட்சியில் இருந்து இடைநிறுத்தியது தமிழரசு!
[Thursday 2025-04-17 06:00]

கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தியோ அலன்டீலன் தமது கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளை உறுப்பினர் எனவும், குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையைக் கருத்திற்கொண்டு அவரை கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக இடைநிறுத்துவதாகவும் இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.



பெருந்தொகை கஞ்சா வாகனத்துடன் சிக்கியது!
[Thursday 2025-04-17 06:00]

கிளிநொச்சி, புளியம்பொக்கணைப் பகுதியில் சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி 60 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன. அதனை மறைத்துச் சென்ற வாகனமும் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.



காணாமல் போன இளைஞன் இரத்தக்கறைகளுடன் சடலமாக மீட்பு!
[Thursday 2025-04-17 06:00]

வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து இரத்தக் கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உளுக்குளம் பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைப் பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக அப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றவர்களால் உளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.



ஜனாதிபதிக்கு பாராட்டு- போலிச் செய்தி!
[Thursday 2025-04-17 06:00]

புத்தாண்டைக் கொண்டாட மறுத்ததற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைப் பாராட்டியதாகக் கூறும் சமூக ஊடகச் செய்தி போலியானது என்று கொழும்பு மறைமாவட்டத்தின் தகவல் தொடர்புக் குழு உறுப்பினர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார்.



பயத்திலேயே எங்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்!
[Thursday 2025-04-17 06:00]

ஏனைய கட்சிகள் கலக்கம் அடைந்து இருக்கிறார்கள், பயத்தில் இருக்கிறார்கள் ஆகவே எங்கள் மீது விமர்சனங்ளை வைத்து வருகிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.



18 வேட்பாளர்கள் உள்ளிட்ட 79 பேர் கைது!
[Thursday 2025-04-17 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 3 ஆம் திகதி முதல் இதுவரை 168 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


Asayan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா