Untitled Document
April 17, 2025 [GMT]
நீச்சல் தடாகத்தில் குளித்த இளைஞன் நீரில் மூழ்கி மரணம்!
[Tuesday 2025-04-15 05:00]


 

வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். 
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது.

வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது.

  

வவுனியா, சிதம்பரபுரத்தில் தற்காலிகமாக வசித்து வந்த இளைஞர் ஒருவர் தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு தனது உறவினர்களுடன் வருகை தந்திருந்த நிலையில் குறித்த இளைஞர் நீச்சல் குளத்தில் இறங்கி குளித்துள்ளார்.

இதன்போது, அவர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்தில் கண்டி, நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இளைஞரின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக பிரதே அறையில் வைப்பதற்கு வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்த குளிரூட்டி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இயங்காமையால் சடலத்தை அங்கு வைக்க முடியாது எனவும், இறந்தவரின் உறவினர்களை வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஒப்படைக்குமாறும், மறுநாள் (நாளை-15.04) மீண்டும் வவுனியா வைத்தியசாலைன்கு கொண்டு வருமாறும் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த குடும்பத்தினர் தமது குடும்ப நிலை காரணமாக சடலத்தை செட்டிகுளம் வைத்தியாலைக்கு கொணடு செல்ல வாகனத்தை வாடகைக்கு அமர்த்த முடியாத நிலையில் அவதிப்பட்டனர். சம்பவம் தொடர்பில் செய்தி அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் குறித்த குடும்பத்தின் நிலமையை அறிந்து, வன்னி மாவட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் அவர்களின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், இறந்த இளைஞரின் உறவினர்களுடன் கலந்துரையாடியதுடன், சம்பவம் தொடர்பில் கேட்டறிந்த பின் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரின் கவனத்திறகு குறித்த விடயத்தை கொண்டு வந்ததுடன், வைத்தியசாலையால் பொறுப்பேற்கப்பட்ட சடலத்தை செட்டிகுளம் அனுப்பி அதனை மீள பெற வேணடியது வைத்தியசாலையின் பொறுப்பு எனத் தெரிவித்திருந்தார். அத்துடன் வவுனியாவின் பிரதான வைத்தியசாலையின் பிரேத அறை குளிரூட்டி நீண்ட நாளாக பழுதடைந்து இருந்தால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விளக்கம் கோரியிருந்தார். இதனையடுத்து வைத்தியசாலையால் சடலம் பொறுபேற்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாளை (15) உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

  
   Bookmark and Share Seithy.com



ஜி.எஸ்.பி பிளஸ் நிறுத்தப்பட்டால் ஆடை உற்பத்தித்துறை பின்னடைவைச் சந்திக்கும்!
[Thursday 2025-04-17 06:00]

ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்படும் பட்சத்தில், ஏற்கனவே அமெரிக்காவின் புதிய வர்த்தகக்கொள்கை மற்றும் அதன்கீழான தீர்வை வரி விதிப்பினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நாட்டின் ஆடை உற்பத்தித்துறை மேலும் பின்னடைவைச் சந்திக்கும் என பொருளியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.



தபால் வாக்களிப்பு திட்டமிட்டபடி நடக்கும்!
[Thursday 2025-04-17 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பு எதிர்வரும் வாரம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படும். தேர்தல் திகதியில் எவ்வித மாற்றமும் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



இஸ்ரேலின் முகவராக செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்!
[Thursday 2025-04-17 06:00]

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பலஸ்தீனுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி இன்று அது தொடர்பில் மௌனம் காக்கிறது. இந்த அரசாங்கம் தற்போது இஸ்ரேலின் முகவராக மாறியிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.



யாரைத் தெரிவு செய்யுங்கள் எனக் கூறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை!
[Thursday 2025-04-17 06:00]

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை உள்ளுராட்சிமன்றங்களுக்கு தெரிவு செய்தால் உள்ளூராட்சி மன்ற அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது முறையற்றதொரு கருத்தாகும். யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று மக்களுக்கு குறிப்பிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



கிளிநொச்சி பாலியல் துஷ்பிரயோக சந்தேக நபரை கட்சியில் இருந்து இடைநிறுத்தியது தமிழரசு!
[Thursday 2025-04-17 06:00]

கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தியோ அலன்டீலன் தமது கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளை உறுப்பினர் எனவும், குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையைக் கருத்திற்கொண்டு அவரை கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக இடைநிறுத்துவதாகவும் இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.



பெருந்தொகை கஞ்சா வாகனத்துடன் சிக்கியது!
[Thursday 2025-04-17 06:00]

கிளிநொச்சி, புளியம்பொக்கணைப் பகுதியில் சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி 60 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன. அதனை மறைத்துச் சென்ற வாகனமும் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.



காணாமல் போன இளைஞன் இரத்தக்கறைகளுடன் சடலமாக மீட்பு!
[Thursday 2025-04-17 06:00]

வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து இரத்தக் கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உளுக்குளம் பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைப் பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக அப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றவர்களால் உளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.



ஜனாதிபதிக்கு பாராட்டு- போலிச் செய்தி!
[Thursday 2025-04-17 06:00]

புத்தாண்டைக் கொண்டாட மறுத்ததற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைப் பாராட்டியதாகக் கூறும் சமூக ஊடகச் செய்தி போலியானது என்று கொழும்பு மறைமாவட்டத்தின் தகவல் தொடர்புக் குழு உறுப்பினர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார்.



பயத்திலேயே எங்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்!
[Thursday 2025-04-17 06:00]

ஏனைய கட்சிகள் கலக்கம் அடைந்து இருக்கிறார்கள், பயத்தில் இருக்கிறார்கள் ஆகவே எங்கள் மீது விமர்சனங்ளை வைத்து வருகிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.



18 வேட்பாளர்கள் உள்ளிட்ட 79 பேர் கைது!
[Thursday 2025-04-17 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 3 ஆம் திகதி முதல் இதுவரை 168 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



புலிகளை தோற்கடிக்க உதவியதற்குத் தண்டனையா?- கண்ணீர் விட்டு அழுத பிள்ளையான்.
[Wednesday 2025-04-16 17:00]

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் 'பிள்ளையான்' கிழக்கில் நடந்த கடத்தல் வழக்கு தொடர்பாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அரசாங்கம் கூறுவது போல் 2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் பிள்ளையானுக்குத் தொடர்பில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.



தமிழ்க் கட்சியினரால் தமிழ் மக்களைத் தமது பக்கம் மீண்டும் இழுக்க முடியாது!
[Wednesday 2025-04-16 17:00]

வடக்கு தமிழ்க் கட்சியினர் எம்மை விமர்சிப்பதால் அவர்கள் எதனையும் சாதிக்க முடியாது. இந்த விமர்சனங்களால் எமது பக்கம் வந்துள்ள தமிழ் மக்களைத் தமது பக்கம் மீண்டும் இழுக்க தமிழ்க் கட்சியினரால் முடியாது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.



உள்ளூராட்சி சபைகளை என்பிபி கைப்பற்றினால் மன்னாரைக் காப்பாற்ற முடியாது!
[Wednesday 2025-04-16 17:00]

உள்ளூராட்சி மன்றங்கள் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கணிய மணல் அகழ்வுக்கான அனுமதி யை வழங்கக் கூடிய அதிகாரம் கொண்டவை. எனவே உள்ளூராட்சி மன்றங்களை ஜே.வி.பி.அரசு முழுமையாக கைப்பற்றுமாக இருந்தால் மன்னார் மாவட்டத்தை காப்பாற்ற முடியாத ஒரு சூழலை ஏற்படும்.



பன்னாட்டு கம்பனிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த அரசும் செயல்படுகிறது!
[Wednesday 2025-04-16 17:00]

மக்களினுடைய நலனை கருத்தில் கொள்ளாமல் பன்னாட்டு கம்பனிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த அரசும் செயல்படுவது வேதனைக்குரிய விடயம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.



ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக கைது செய்து விசாரணை செய்ய வேண்டும்!
[Wednesday 2025-04-16 17:00]

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் உண்மையாகவே செயல்படுத்துவதாக இருந்தால், கொலை குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என முன்னணி சோசலிச கட்சியின் கல்விப் பொதுச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.



ஆளுநர்களின் அதிகாரங்களை குறைக்க வேண்டும்!
[Wednesday 2025-04-16 17:00]

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீண்ட காலமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கூறியதை வரவேற்றிருக்கும் தேசிய சமாதானப் பேரவை மாகாண சபை முறையைப் பலப்படுத்துவதற்கு ஆளுநர்களின் அதிகாரங்களை குறைத்து மக்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை அளிப்பது குறித்து ஆராய அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.



அமெரிக்க வரியால் நெருக்கடி ஏற்படும்!
[Wednesday 2025-04-16 17:00]

2028 ஆம் ஆண்டுக்குள் இலங்கை தனது கடன்களைத் தீர்க்க வழிகளைக் கண்டறிய வேண்டியிருக்கும் என்பதால், அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் புதிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளன என்பதை எடுத்துக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள அரசாங்கம் ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்றார்.



குருநகர் கடற்கரையில் ரி-56 ரக துப்பாக்கி மீட்பு!
[Wednesday 2025-04-16 17:00]

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் நேற்றிரவு இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பாவிக்க கூடிய நிலையில் இருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.



அமெரிக்கா செல்கிறது இலங்கை குழு!
[Wednesday 2025-04-16 17:00]

அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்படும் பரஸ்பர வரிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்காவிற்குச் செல்லவுள்ளது.



நிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின்பிறப்பாக்கி!
[Wednesday 2025-04-16 17:00]

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கி ஒன்றை ஏப்ரல் 11 ஆம் திகதி செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.


Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Latika-Gold-House-2025
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா