Untitled Document
April 19, 2025 [GMT]
யாழ். மாவட்டத்தில் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை!
[Friday 2025-04-18 07:00]


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது தற்போதைய நாட்களில் எச்சரிக்கை மட்டத்துக்கு அதிகரித்து வருகின்றமையால் அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் T.N.சூரியராஜா அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது தற்போதைய நாட்களில் எச்சரிக்கை மட்டத்துக்கு அதிகரித்து வருகின்றமையால் அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் T.N.சூரியராஜா அறிவுறுத்தியுள்ளார்.

  

வெப்பத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்குமாறு சூரியராஜா அறிவுறுத்தியுள்ளார்.

அதேநேரம், யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றைய தினம் வெப்பநிலையானது 34.2 பாகை செல்சியஸ்ஸாக பதிவாகியிருந்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் T.N. சூரியராஜா தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



தேசிய மக்கள் சக்தியின் போலிமுகம் தையிட்டி திஸ்ஸ விகாரையில் அம்பலம்!
[Saturday 2025-04-19 06:00]

தொல்பொருள் சான்றுகள் எவையும் கண்டறியப்படாத யாழ். தையிட்டியில் திஸ்ஸ விகாரையை நிர்மாணிப்பதற்கு நாம் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பை வெளிப்படுத்திவந்தோம். அதற்கு முரணாக அவ்விகாரை சட்டவிரோதமான முறையிலேயே நிர்மாணிக்கப்பட்டது என்ற உண்மை சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறிருக்கையில் நாம் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நீதிக்காகப் போராடுவதை இனவாதம் என ஜனாதிபதி கூறுவாராயின், அவரது அரசாங்கமும் கடந்தகால இனவாத அரசாங்கங்களைப் போன்றுதான் செயற்படப்போகிறது என்பதே அர்த்தம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.



பிள்ளையானின் சாரதியும் கைது!
[Saturday 2025-04-19 06:00]

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதி ஜெயந்தனை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நேற்றுக் கைது செய்துள்ளனர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.



மக்களை அச்சுறுத்துகிறார் ஜனாதிபதி!
[Saturday 2025-04-19 06:00]

ஏனைய கட்சிகள் ஆட்சியமைக்கும் உள்ளுராட்சிமன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பலமுறை சிந்திப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறுவது மக்களை அச்சுறுத்துகின்ற நடவடிக்கையாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இத்தேர்தல் விதிமீறல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



ஜனாதிபதியின் கருத்துக் குறித்த முறைப்பாடு- விசாரிக்க கூடும் தேர்தல் ஆணைக்குழு!
[Saturday 2025-04-19 06:00]

தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இவ்வாறு ஆணைக்குழு ஊடகவுள்ளது.



மன்னம்பிட்டி தேவாலயம் அருகே துப்பாக்கிச் சூடு!
[Saturday 2025-04-19 06:00]

மன்னம்பிட்டியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றினருகே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையெனவும், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.



ஜனாதிபதி ஊடகங்களையும் மக்களையும் அச்சுறுத்துகிறார்!
[Saturday 2025-04-19 06:00]

தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கப்படாது என ஜனாதிபதி குறிப்பிடுவது ஒழுக்கத்துக்கு முரணானதாகும். இது தொடர்பில் செய்திகளை வெளியிடும் ஊடகங்களையும் ஜனாதிபதி அச்சுறுத்துகின்றார். ஜனாதிபதியால் தெரிவிக்கப்படும் இந்த கருத்துக்கள் முற்றுமுழுதாக தேர்தல் சட்டத்துக்கு முரணானதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வருண தீப்த ராஜபக்ஷ தெரிவித்தார்.



பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏமாற்றப்பட்டுள்ளார்!
[Saturday 2025-04-19 06:00]

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி அவரே பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவுக்கு இரண்டாம் பிரதானியாக செயற்பட்டார். அரசியல் நோக்கத்துக்காக குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எந்த விசாரணை அறிக்கைகளிலும் குறிப்பிடப்படவில்லை. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏமாற்றப்பட்டதையிட்டு கவலையடைகிறோம் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.



இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
[Saturday 2025-04-19 06:00]

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.



பிள்ளையானுக்குப் பாதுகாப்புக் கோருகிறார் ஹிருணிகா!
[Saturday 2025-04-19 06:00]

பிள்ளையான் என்பவர் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் மிக முக்கிய சாட்சியாளராவார். எனவே அவர் அவற்றை வெளியிடுவதைத் தடுப்பதற்கு ஒரு குழு முயற்சிக்கின்றது. அவருக்கு சுயாதீன சட்டத்தரணிகள் குழுவையும், சிறப்பு பாதுகாப்பையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர வலியுறுத்தினார்.



இன்று மோசமான வெயில்! - கவனமாக இருக்க அறிவுறுத்தல்.
[Saturday 2025-04-19 06:00]

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



தேர்தல் விதிமுறைகளை மீறினார் ஜனாதிபதி - தமிழரசு முறைப்பாடு!
[Friday 2025-04-18 16:00]

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னாரில் ஆற்றிய தேர்தல் பிரசார உரை தேர்தல் விதிமுறை மீறல் என இலங்கைத் தமிழரசுக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,



என்பிபி ஆட்சி செய்யும் சபைகளுக்கு மட்டும் கண்களை மூடிக்கொண்டு நிதிகளை ஒதுக்குவோம்!
[Friday 2025-04-18 16:00]

தேசிய மக்கள் சக்தி ஆட்சி நடந்தால் அவர்களின் முன் மொழிவுகளை கண்களை மூடிக்கொண்டு ஏற்று அதற்கு நிதிகளை ஒதுக்குவோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி உண்மைக்கு மாறாக பேசுவது என்பது ஜனநாயக விரோதம்!
[Friday 2025-04-18 16:00]

மன்னாரில் ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கிவிட்டுச் சென்றுள்ளார். தேர்தல் மேடையில் வாக்கு பெறுவதற்காக நடைபெறுகின்ற சம்பவத்தை இல்லை என்று கூறுவது அரசின் ஆட்சி முறைமைக்கான அவமானம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.



நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில்!
[Friday 2025-04-18 16:00]

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.



மற்றவர்களிடம் களவாடிக் கொடுக்கும் நத்தார் பாப்பாவாக மாறியுள்ளார் அநுரகுமார!
[Friday 2025-04-18 16:00]

நத்தார் பாப்பா என்றால் தங்களிடம் உள்ள பரிசையே வழங்கவேண்டும். மற்றவர்களிடம் களவாடிக்கொடுக்கும் நத்தார் பாப்பாவாக அநுர குமார திசாநாயக்க மாறியுள்ளதாகவும் இதுதான் இன்றைய நாட்டின் நிலைமை என மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.



சிஐடியில் முன்னிலையாகிறார் பிள்ளையானின் நெருங்கிய சகா!
[Friday 2025-04-18 16:00]

ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நெருக்கமான சகா ஒருவர், தனது சுயவிருப்பின்பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருக்கிறார்.



யாழ்பாணத்தில் சந்திரசேகர் குழுவினரின் சித்து விளையாட்டுக்கள் விரைவில் வெளியாகும்!
[Friday 2025-04-18 16:00]

தமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம், ஊழல் மோடிகளை இல்லாதொழிப்போம், சமூக சீர்திருத்தங்களை செய்வோம் என்று கூறிவரும் சந்திரசேகர் குழுவினர் யாழ்பாணத்தில் பல கிராமங்களிலும் சமூக சீர்கேடாக பல விளையாட்டுக்களை செய்கின்றார்கள். அவர்களது இந்த சித்து விளையாட்டுக்கள் விரைவில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியாகும் என வலிகாமம் கிழக்கின் முன்னாள் தவிசாளர் நிரோஸ் சவால் விடுத்துள்ளார்.



உள்ளூராட்சித் தேர்தலில் மக்களுக்கு ஆர்வம் இல்லை!
[Friday 2025-04-18 16:00]

பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பித்த நாள் முதல் இதுவரையிலான காலப்பகுதியில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எந்தவொரு தீவிர நிலைமையும் பதிவாகவில்லை என, தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பெஃப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது.



மட்டக்களப்பில் கோபு வாள்வெட்டுக் குழுவின் தாக்குதலில் 2 பேர் காயம்!
[Friday 2025-04-18 16:00]

வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட “கோபு” வாள்வெட்டுக் குழுவினர் வீடொன்றில் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.



மாதக்கணக்கில் இயங்காத வைத்தியசாலை குளிரூட்டி!- என்பிபி உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள்?
[Friday 2025-04-18 16:00]

ஆளுங்கட்சியை சேர்ந்த பிரதி அமைச்சர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் வன்னி பிரதேசத்தில் இருந்தபோதிலும் வவுனியா வைத்தியசாலையில் பல நாட்களாக இயங்காமல் இருக்கின்ற பிரேத அறையின் குளிரூட்டியை சீர் செய்வது தொடர்பில் தமது சுகாதார அமைச்சின் கவனத்துக்கு கொண்டுசெல்லாமை கவலைக்குரிய விடயம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா