Untitled Document
April 21, 2025 [GMT]
என்பிபி ஆட்சி செய்யும் சபைகளுக்கு மட்டும் கண்களை மூடிக்கொண்டு நிதிகளை ஒதுக்குவோம்!
[Friday 2025-04-18 16:00]


தேசிய மக்கள் சக்தி ஆட்சி நடந்தால் அவர்களின் முன் மொழிவுகளை கண்களை மூடிக்கொண்டு ஏற்று அதற்கு நிதிகளை ஒதுக்குவோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சி நடந்தால் அவர்களின் முன் மொழிவுகளை கண்களை மூடிக்கொண்டு ஏற்று அதற்கு நிதிகளை ஒதுக்குவோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

  

யாழ்ப்பாணத்திற்கு நேற்று (17) வியாழக்கிழமை வருகை தந்த ஜனாதிபதி சங்கிலியன் பூங்காவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அதன் போது உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்கள் மக்களை பிரித்துள்ளன. ஆனால் கடந்த பொது தேர்தலின் போது வடக்கு, கிழக்கு, தெற்கு, தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் என அனைவரும் ஒன்றுபட்டு வாக்களித்தனர்.

அப்படிப்பட்ட ஒன்றிணைந்த தேர்தல்களே வேண்டும். மீள பிரிய மக்கள் பிரிந்து வாக்களிக்க வேண்டாம். தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் என அனைவரும் ஒரு நாட்டு மக்களாக ஒன்றாக வாழ வேண்டும்.

சகல மக்களுககும் சமனான உரிமை வேண்டும். அவ்வாறான நாடு தான் எமக்கு தேவை.

கடந்த காலங்களில் போர் புரிந்தோம் அதனால் என்ன நடந்தது ? அழிவுகளை தான் சந்தித்தோம். எம் உறவுகளை இழந்தோம். வடக்கிலும் தெற்கிலும் அதே நடந்தது. மீள அப்படி ஒரு நிலை எமக்கு வேண்டாம்

எங்கள் தலைமுறைகள் போர் புரிந்தோம் அடுத்த தலைமுறைகள் போர் இல்லாது சமாதானமாக அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும். போர் இனவாத அரசியல்வாதிகளுக்கே தேவை எமக்கு தேவையில்லை.

யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை பிரச்சனை இருக்கின்றது. அதனை இலகுவாக தீர்க்க முடியும். அதற்கு அந்த விகாரையை வைத்து வடக்கில் அரசியல் செய்பவர்கள் அதில் இருந்து விலக வேண்டும். அதேபோன்று தெற்கிலும் அந்த விகாரையை வைத்து அரசியல் செய்பவர்கள். அந்த அரசியலை கைவிட வேண்டும்.

அவ்வாறு அரசியல்வாதிகள் விகாரை பிரச்சனையில் இருந்து விலகுவார்களாக இருந்தால் எம்மால் அந்த பிரச்சினையை மிக இலகுவாக தீர்க்க முடியும்.

விகாரை காணி உரிமையாளர்கள் , விகாரைக்குரிய விகாராதிபதி , நாக விகாரை விகாராதிபதி ஆகியோர் இணைந்து பேசி அதற்கு ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.

நாட்டில் தொல்பொருள் எச்சங்கள் காணப்பட்டால் , அது தமிழா , சிங்களமா முஸ்லிமா , இந்துவா பௌத்தமா என பார்க்காது எமது நாட்டின் தொல்லியல் மரபு எமது பண்பாடு என ஒரு நாட்டு மக்களாக சிந்திக்க வேண்டும்

ஆனால் இனவாதிகள் அப்படி பார்ப்பதில்லை. அதன் ஊடாக இனவாதத்தை தூண்ட முயல்கின்றனர். அப்படியான இனவாத குழுக்களை மக்கள் இனம் கண்டு , அவர்களை தோற்கடித்துள்ளார்கள்.

இனி அவர்கள் எந்த வேடம் அணிந்து வந்தாலும் அவர்கள் இனவாதிகள் என்பதனை மக்கள் இனம்கண்டு அவர்களை தோற்கடிப்பார்கள். அதேவேளை தேசிய மக்கள் சக்தியும் இனியும் இனவாதம் நாட்டில் தோன்ற இடமளிக்கமாட்டாது.

யாழ்ப்பாணத்தில் பல பாரம்பரிய கட்சிகள் உள்ளன. கடந்த பொது தேர்தலில் அவற்றினை தவிர்த்து எமது கட்சியை சார்ந்த மூவரை தெரிவு செய்துள்ளீர்கள். புதிய ஒரு அணி யாழில் இருந்து பாராளுமன்றம் வந்துள்ளது.

யாழ்ப்பாண மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை நாம் வீணடிக்க மாட்டோம். இனவாதிகளுக்கு அஞ்சி மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாது இருக்கமாட்டோம். நாம் தேசிய ஒருமைப்பாட்டுக்காக என்றும் உழைப்போம்.

பாதுகாப்பு காரணங்களுக்கு என தமிழ் மக்களின் காணிகள் கையகப்படுத்தபட்டுள்ளது. அந்த காணிகளை பாதுகாப்பு தரப்பிடம் இருந்து மீள பெற்று காணி உரிமையாளர்களுக்கு கையளிப்போம்.

இன்னொரு யுத்தம் நாட்டில் தோன்றும் என்ற அச்சத்தில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை கடந்த அரசாங்கம் மீள கையளிக்கவில்லை. ஆனால் நாங்கள் இன்னொரு யுத்தம் நாட்டில் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணங்களுக்கு என காணிகள் தேவையில்லை. விரைவில் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்போம்.

மூடப்பட்ட வீதிகளையும் படிப்படியாக திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கிறோம். வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் மூடப்பட்டு இருந்த வீதிகளை திறந்துள்ளோம்.

கொழும்பில் பாதுகாப்பு காரணம் என மூடப்பட்ட வீதிகளை திறக்கும் போது ஏன் யாழ்ப்பாணத்தில் வீதிகளை திறக்க கூடாது. நாட்டில் பாதுகாப்பு காரணமாக என மூட்டப்பட்ட வீதிகளை திறப்போம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களையும் வெளிப்படுத்துவோம். அரசாங்கத்திடம் , பொலிஸாரிடம் , இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்துவோம்.

ஒருவர் இறந்தால் அவருக்காக அழுது, அவருக்கு செய்ய வேண்டிய கிரியைகளை செய்து சில காலத்தில் ஆறுதல் அடைவோம். ஆனால காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது ? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா ? இல்லையா ? என்பது தெரியாமல் படும் வேதனைகளை நான் நன்கு அறிவேன். எனது சகோதரர் கூட காணாமல் ஆக்கப்பட்டவரே. அதனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வலி எனக்கு புரியும்.

எமக்கு அமைதி தேவை. அதற்காக அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கண்டறிந்து வெளிப்படுத்துவோம்.

நாங்கள் நாட்டை பொறுப்பெடுத்த காலம் முதல் நாட்டை வளப்படுத்தி வருகின்றோம். எதிர்வரும் 5 வருடத்தில் அந்நிய செலவாணியை அதிகரிப்போம். கைவிடப்பட்ட பல செயற்திட்டங்களை தற்போது மீள ஆரம்பித்துள்ளோம்.

அதேபோன்று பல வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளோம். குறிப்பாக தமிழ் இளையோர் 2 ஆயிரம் பேருக்கு பொலிஸ் திணைக்களத்தில் வேலைவாய்ப்புக்களை வழங்கவுள்ளோம்.

அதேபோன்று இராணுவம், கடற்படை விமான படையிலும் தமிழ் இளையோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கு இங்குள்ள பெரியவர்கள் பெற்றோர்கள் இளையோர்களை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துமாறு எடுத்து கூற வேண்டும்.

காங்கேசன்துறையில் ஒரு ஜனாதிபதி மாளிகை உள்ளது. அது எமக்கு தேவையில்லை. அதனை யாழ்ப்பாண மக்களுக்கு பயன்பட கூடியவாறு மக்களுக்காக அதனை வழங்கவுள்ளோம்.

யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்தார்கள். அது எமது இதயங்களை காயப்படுத்தி உள்ளது. நூலகம் எரிக்கப்பட்டது இனவாதத்தின் உச்சமாகவே நாங்கள் பார்க்கின்றோம். அதற்காகவே நூலகத்தை புனரமைக்க நிதி ஒதுக்கியுள்ளோம்.

நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகின்றார்கள் அவர்கள் வடக்கு செல்வது குறைவாக உள்ளது.

அதனால் நாம் உள்ளூர் விமான சேவைகளை வலுப்படுத்த உள்ளோம். அதன் ஊடாக சுற்றுலா பயணிகளை வடக்குக்கு செல்ல வைக்க முடியும். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அழகிய கடற்கரைகள் உள்ளன. அவற்றினை சுற்றுலா தளங்களாக மேம்படுத்துவோம்.

அதேவேளை யாழ்ப்பாணத்தின் அதன் பாரம்பரியம் கலாசாரம் பண்பாடு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தை மீள கட்டி எழுப்புவோம்.

வடக்கு கடற்பரப்பில் உள்ள கடல் வளங்களை அழிக்க அனுமதிக்க மாட்டோம். அந்த கடல் வளங்களை நம்பி பெருமளவான கடற்தொழிலாளர்கள் உள்ள போது, அந்த வளங்களை அழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை அனுமதிக்க முடியாது.

வடக்கு கடல் வளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதனை எடுங்கள் என கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளோம்.

வடக்கில் இருந்து பலர் புலம்பெயர் நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் மீள நாட்டிற்கு வர வேண்டும். எமது நாட்டினை கட்டியொழுப்ப தங்கள் முதலீடுகளை நாட்டில் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து நாட்டை கட்டியெழுப்ப நாட்டிற்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

இந்த நாட்டில் கடந்த காலங்களில் பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டம் இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் என சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் பாகுபாடு இருந்தது. இனிஅவ்வாறு இருக்காது. அனைவருக்கு சட்டம் பொதுவானதாக இருக்கும்.

தற்போது வடமத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்கள் சிறையில் உள்ளனர். பல அமைச்சர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குகள் நடைபெறுகின்றன. முன்னாள் ஜனாதிபதியின் இரு மகன்களுக்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்குகள் நடைபெறுகின்றன.

குற்றம் செய்த யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. வெளியில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன

நாம் ஒரு புது அத்தியாயத்தை தொடங்கியுள்ளோம். ஜனாதிபதி , நாடாளுமன்றில் அறுதி பெரும்பான்மை என்பன எங்கள் கைகளில் உண்டு ஆனால் கிராமத்தை கட்டியொழுப்ப எமக்கு மக்கள் ஆதரவு வேண்டும்.

பிரதேச சபைகளில் இருந்து வரும் முன் மொழிவுகளில் இருந்தே கிராமத்தை கட்டி எழுப்ப முடியும். பிரதேச சபைகள் நகர சபைகள் மாநகர சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி நடந்தால் அவர்களின் முன் மொழிவுகளை கண்களை மூடிக்கொண்டு ஏற்று அதற்கு நிதிகளை ஒதுக்குவோம்.

வேறு யாருடைய கைகளில் சபைகள் சென்றால் அவர்களின் முன் மொழிவுகளை பத்து தடவைகளுக்கு மேல் யோசனை செய்தே நிதி ஒதுக்குவோம்.

ஏனெனில் கடந்த காலங்களில் பல ஊழல்கள் இடம்பெறுள்ளன. ஆனால் தேசிய மக்கள் சக்தி ஊழலற்ற அரசாங்கம். மத்தியில் ஊழலற்ற அரசாங்கமாக காணப்படும் போது , கிராம அபிவிருத்திகளில் ஊழல் செய்ய முடியாது. எனவே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களியுங்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள 17 சபைகளையும் எமக்கு தாருங்கள்.

கடந்த காலங்களில் தெற்கு மக்களை சந்தித்து அவர்கள் பிரச்சனை தொடர்பில் அறிந்து கொண்ட அளவுக்கு வடக்கு மக்களை நாம் சந்தித்து அவர்கள் பிரச்சனைகளை அறியவில்லை எனும் உண்மையை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் வடக்கு மக்கள் எங்களை நம்பியுள்ளீர்கள். கடந்த பொது தேர்தலில் எங்கள் கைகளை பிடித்து பலப்படுத்தியுள்ளீர்கள். எந்த கைகளை மேலும் பலப்படுத்துங்கள். உங்கள் கைகளை நாம் இறுக பற்றிக்கொண்டுள்ளோம்.

உங்கள் பிரச்சனைகளை படிப்படியாக தீர்த்து வைத்து, நாட்டில் சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம் என உறுதி அளிக்கிறேன் என தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
[Monday 2025-04-21 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்துவதை தடுக்கும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. அவரது இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.



பள்ளமடுவில் டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு!
[Monday 2025-04-21 06:00]

மன்னார் - பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை அடம்பன் பொலிஸார் இடை மறித்த போது தப்பிச் சென்ற டிப்பர் வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.



நல்லாட்சி அரசில் இருந்தவர்களே இப்போது உயர்பதவிகளில்!
[Monday 2025-04-21 06:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது நல்லாட்சி அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர்களே தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.



அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்!
[Monday 2025-04-21 06:00]

அதிகாரத்தைக் கைப்பற்றப் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரமான செயல் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்தது," ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க பொலன்னறுவையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.



போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
[Monday 2025-04-21 06:00]

சாவகச்சேரி - நுணாவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 1010 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.



தபால் மூல வாக்களிப்பு- தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
[Monday 2025-04-21 06:00]

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 24, 25, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மாத்திரமே தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



உடுத்துறையில் வாள்வெட்டு- ஒருவர் காயம்!
[Monday 2025-04-21 06:00]

யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



திருவிழாவில் சங்கிலி அறுப்பு- பெண் வேடமிட்ட ஆண் உள்ளிட்ட 4 பேர் கைது!
[Monday 2025-04-21 06:00]

யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நேற்று இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் 4 பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.



இலங்கையில் புதிய நுளம்பு இனம்!
[Monday 2025-04-21 06:00]

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க தெரிவித்துள்ளார். குறித்த புதிய நுளம்பு இனம் மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



வேண்டுமென்றே அழிக்கப்பட்ட போக்குவரத்துச் சபை!
[Monday 2025-04-21 06:00]

இலங்கை போக்குவரத்து சபை வீழ்ச்சியடையவில்லை, அது வேண்டுமென்றே சீர்குலைக்கப்பட்டுள்ளது. இந்த வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை சிஐடியிடம் ஒப்படைப்பு!
[Sunday 2025-04-20 15:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் பணிப்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டது



ஆசாத் மௌலானாவை விசாரணை செய்யவேண்டும்!
[Sunday 2025-04-20 15:00]

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் செயலாளர் ஆசாத் மௌலானாவை விசாரணை செய்யவேண்டும் என கொழும்பு மறைமாவட்ட தொடர்பாடல் இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிருசாந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.



மக்களை பாதிக்கும் வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக் கொள்ள கூடாது!
[Sunday 2025-04-20 15:00]

எங்களுடைய மக்களின் உரிமைகள் இருப்பு சார்ந்த விடயங்கள் வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலால் பாதிக்கப்படுவதாகயிருந்தால்,அதனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளகூடாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.



இந்த மாத இறுதிக்குள் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!
[Sunday 2025-04-20 15:00]

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.இருப்பினும், பல சிக்கல்கள் காரணமாக பெறுபேறுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சீனக் கப்பல்களின் வருகையை தடுக்கும் பாதுகாப்பு ஒப்பந்தம்!
[Sunday 2025-04-20 15:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து சீனா மாத்திரம் அன்றி பல நாடுகளும் கூடுதல் அவதானம் செலுத்தி இருந்தன. இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சீன ஆய்வுக் கப்பல்கள் தொடர்பான சிறப்பு சரத்து ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியதை தொடர்ந்து நிலைமை சூடுபிடித்துள்ளது.



வரணியில் குளத்தில் மூழ்கிய இளைஞனின் மரணத்தில் சந்தேகம்!
[Sunday 2025-04-20 15:00]

கொடிகாமம் - வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த 23 வயதுடைய இளைஞன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அந்த இளைஞனின் பெற்றோரும் உறவினர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்.



நாளை மறுநான் வொஷிங்டன் செல்கிறது இலங்கை குழு!
[Sunday 2025-04-20 15:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனல் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரி குறித்து கலந்துரையாடுவதற்கு இலங்கை பிரதிநிதிகள் குழு நாளை மறுநாள் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வொஷிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தொழில் அமைச்சர் அனில் ஜயந்த குறிப்பிட்டார். அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடனான பேச்சுக்களின் போது வரிகளைக் குறைத்தல் மற்றும் இறக்குமதியை அதிகரித்தல் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாட உள்ளது.



வல்வெட்டித்துறையில் தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர் அறிமுக கூட்டம்!
[Sunday 2025-04-20 15:00]

வல்வெட்டித்துறை நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் கூட்டம் நேற்று வல்வெட்டித்துறை நகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது.



திருடச் சென்ற இளைஞன் தாக்கி மூதாட்டி மரணம்!
[Sunday 2025-04-20 15:00]

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் திருடச் சென்ற இளைஞன் தாக்கியதில் 69 வயதுடைய மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் இன்றையதினம் காலை இடம்பெற்றுள்ளது.



நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடக்க முனைகிறது அனுர அரசு!
[Sunday 2025-04-20 15:00]

நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடக்குமுறை செய்ய அனுர தலைமையிலான தேசிய மக்கள் முனைகின்றது என சுட்டிக்காட்டிய யாழ் மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் வேட்பாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் சட்ட முறைமைகள் தொடர்பில் கூட தெரியாதவர்களாக இன்றைய அரசு இருப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Latika-Gold-House-2025
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா