Untitled Document
April 21, 2025 [GMT]
நம்பிக்கையின் சாட்சிகள் அகராதியில் 167 கத்தோலிக்க விசுவாசிகளின் பெயர்கள்!
[Monday 2025-04-21 16:00]


உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்க விசுவாசிகளின் பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் என்ற அதிகாரபூர்வ புத்தக அகராதியில் சாட்சியாக இணைக்கப்பட்டுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்க விசுவாசிகளின் பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் என்ற அதிகாரபூர்வ புத்தக அகராதியில் சாட்சியாக இணைக்கப்பட்டுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

  

இன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

திருத்தந்தையின் திருப்பீடமான வத்திக்கானில் இயங்கும் இறைமக்களை தூயவர்களாக வழிகாட்டும் திருத்துறை நம்பிக்கையின் சாட்சிகள் அடங்கிய அகராதியில் பெயர்களை பதிவு செய்யும் அதிகாரபூர்வ அறிவிப்புக்கான பிரகடனத்தை வாசித்த போதே மேற்கெண்டவாறு தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



போப் பிரான்சிஸ் காலமானார்!
[Monday 2025-04-21 16:00]

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார் என வத்திகான் அறிவித்துள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் நுரையீரல் தொற்று காரணமாக நீண்டகாலமாக போராடி வந்தார். அண்மையில் இவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. பல்லாயிரக்கணக்காணவர்களின் பிரார்த்தனையால் அதிலிருந்து போப் பிரான்சிஸ் மீண்டு வந்திருந்தார். எனினும் இன்று காலை 7.35 மணியளவில் அவர் காலமானதாக வத்திகான் அறிவித்துள்ளது



தேசிய மக்கள் சக்தியின் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் இடம்கொடுக்க கூடாது!
[Monday 2025-04-21 16:00]

வடக்கில் காலூன்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் அரசியல் ரீதியில் இடம்கொடுக்க கூடாது என வலியுறுத்தியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை அதற்கானதாக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.



சுயாதீன வழக்குத் தொடரும் அலுவலகத்தை அமையுங்கள்!
[Monday 2025-04-21 16:00]

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்காக, குறிப்பாக ஒரு சுயாதீனமான வழக்குத் தொடரும் அலுவலகத்தை நிறுவுமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்தார்.



மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நினைவேந்தல்!
[Monday 2025-04-21 16:00]

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று காலை தேவாலயத்தின் முன்பாக உயிரிழந்தவர்களின் உறவுகளால் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அனுஷ்டிக்கப்பட்டது.



வேட்புமனுக்கள் நிராகரிப்புக்கு எதிரான 60 மனுக்கள் தள்ளுபடி!
[Monday 2025-04-21 16:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சுமார் 60 ரிட் மனுக்களை விசாரணையின்றி தள்ளுபடி செய்து மேன்மூறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த மனுக்கள் அரசியல் கட்சிகளாலும் சுயேச்சைக் குழுக்களாலும் சமர்ப்பிக்கப்பட்டன.



வீட்டை ஒப்படைக்குமாறு கோரி இதுவரை கடிதம் வரவில்லை!
[Monday 2025-04-21 16:00]

தனது வீட்டை ஒப்படைக்குமாறு கோரி இதுவரை தனக்கு கடிதம் வரவில்லை என்றும், கிடைத்தால் அதை ஒப்படைப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.



பிள்ளையான் குறித்து நாமல் கவலையடைய காரணம் உள்ளது!
[Monday 2025-04-21 16:00]

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம் உள்ளதாகவும், அதனை எதிர்காலத்தில் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



லொறியுடன் மோதிய பஸ் - 22 இராணுவத்தினர் காயம்!
[Monday 2025-04-21 16:00]

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளனர் என கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர். இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு!
[Monday 2025-04-21 15:00]

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பதுளை நீதவான் நீதிமன்றம் 2025 மே 05 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சாமர சம்பத் தசநாயக்க கடந்த மார்ச் 27 ஆம் திகதி, கைது செய்யப்பட்டார்.



ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
[Monday 2025-04-21 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்துவதை தடுக்கும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. அவரது இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.



பள்ளமடுவில் டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு!
[Monday 2025-04-21 06:00]

மன்னார் - பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை அடம்பன் பொலிஸார் இடை மறித்த போது தப்பிச் சென்ற டிப்பர் வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.



நல்லாட்சி அரசில் இருந்தவர்களே இப்போது உயர்பதவிகளில்!
[Monday 2025-04-21 06:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது நல்லாட்சி அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர்களே தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.



அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்!
[Monday 2025-04-21 06:00]

அதிகாரத்தைக் கைப்பற்றப் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரமான செயல் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்தது," ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க பொலன்னறுவையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.



போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
[Monday 2025-04-21 06:00]

சாவகச்சேரி - நுணாவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 1010 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.



தபால் மூல வாக்களிப்பு- தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
[Monday 2025-04-21 06:00]

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 24, 25, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மாத்திரமே தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



உடுத்துறையில் வாள்வெட்டு- ஒருவர் காயம்!
[Monday 2025-04-21 06:00]

யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



திருவிழாவில் சங்கிலி அறுப்பு- பெண் வேடமிட்ட ஆண் உள்ளிட்ட 4 பேர் கைது!
[Monday 2025-04-21 06:00]

யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நேற்று இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் 4 பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.



இலங்கையில் புதிய நுளம்பு இனம்!
[Monday 2025-04-21 06:00]

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க தெரிவித்துள்ளார். குறித்த புதிய நுளம்பு இனம் மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



வேண்டுமென்றே அழிக்கப்பட்ட போக்குவரத்துச் சபை!
[Monday 2025-04-21 06:00]

இலங்கை போக்குவரத்து சபை வீழ்ச்சியடையவில்லை, அது வேண்டுமென்றே சீர்குலைக்கப்பட்டுள்ளது. இந்த வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை சிஐடியிடம் ஒப்படைப்பு!
[Sunday 2025-04-20 15:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் பணிப்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டது


Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Latika-Gold-House-2025
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா