Untitled Document
April 22, 2025 [GMT]
வடக்கு கிழக்கிற்கு எச்சரிக்கை!
[Tuesday 2025-04-22 16:00]


 வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 22) பிற்பகல் அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 22) பிற்பகல் அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, இப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இடி மின்னல் நேரங்களில் வெளியில் அல்லது மரங்களுக்கு கீழே நிற்பதை தவிர்க்கவும், பாதுகாப்பான கட்டடம் ஒன்றிற்குள் அல்லது மூடப்பட்ட வாகனம் ஒன்றிற்குள் இருக்கவும்.

வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்ற திறந்தவெளி இடங்களில் இருப்பதை தவிர்க்கவும்.

கம்பி இணைப்பு உள்ள தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட மின்னணு உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

மிதிவண்டிகள், உழவு இயந்திரங்கள், படகுகள் போன்ற திறந்தவெளி வாகனங்களை பயன்படுத்துவதை நிறுத்தவும்.

பலத்த காற்று காரணமாக மரங்கள் அல்லது மின்சார கம்பிகள் விழுவதற்கு வாய்ப்பு உள்ளதால், இதற்கு முன்னெச்சரிக்கையாக இருக்கவும்.

அவசர நிலைமைகளில், பிரதேச இடர் முகாமைத்துவ அதிகாரிகளின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பியினரை காலூன்ற விடாது துரத்தி அடிக்க வேண்டும்!
[Tuesday 2025-04-22 16:00]

ஜே.பி.வி ஆட்சியாளர்கள் தேர்தல்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை கூட பாராளுமன்றில் சட்டங்களை இயற்றி செய்ய கூடியவர்கள். எனவே ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பியினரை மண்ணில் காலூன்ற விடாது துரத்தி அடிக்க வேண்டும் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.



என்பிபி ஆட்சியில் இது தான் நடக்கிறது! Top News
[Tuesday 2025-04-22 16:00]

வடமராட்சி கிழக்கில் பொலிசாரின் கூட்டத்தில் கலந்து கொள்ளாத பெண் வேட்பாளரின் மகனை பொலிசார், அவரது சாரத்தைப் பிடித்து இழுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் முகநூலில் பதிவிட்டுள்ளார்.



வட்டுக்கோட்டைக்கு வழி கேட்க கொட்டைப் பாக்கிற்கு விலை சொன்ன அமைச்சரவைப் பேச்சாளர்!
[Tuesday 2025-04-22 16:00]

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து முன்னாள் அரசாங்க உறுப்பினர்கள் சிலர், தற்போது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள், ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்று அரசாங்கம் கேள்வி எழுப்பி வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



66 ஆயிரம் பக்க அறிக்கையை ஆராய 4 பொலிஸ் அதிகாரிகள் குழு!
[Tuesday 2025-04-22 16:00]

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் நால்வர் கொண்ட பொலிஸ் குழுவொன்றை நியமித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மானதுங்க தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் துரிதம்!
[Tuesday 2025-04-22 16:00]

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் இயக்கு நிலையை அடையக்கூடிய வகையில், யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.



வடக்கில் பல மனுக்கள் தள்ளுபடி!
[Tuesday 2025-04-22 16:00]

உள்ளூராட்சித் தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வடக்கில் உள்ள அரசியற் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் உள்ளடங்கலாக பல தரப்பாலும் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.



ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய குழுவை நியமிக்க கோரிக்கை!
[Tuesday 2025-04-22 16:00]

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் (Human Immunoglobulin) தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிக்க, மேல் நீதிமன்றின் மூவரடங்கி நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர், நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும்!
[Tuesday 2025-04-22 16:00]

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலில் இறந்தவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் நீதி கிடைக்கவும், இந்த நாட்டில் பரவி வரும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கவும் நாம் ஒன்றுபட வேண்டும் என்று பொதுபல சேனா (பிபிஎஸ்) பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறினார்.



நான்கு மாதங்களுக்கு தேவையான இன்சுலின் கையிருப்பில்!
[Tuesday 2025-04-22 15:00]

அடுத்த நான்கு மாதங்களுக்கு தேவையான இன்சுலின் இருப்பு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள் அநாவசிய பயத்தை ஏற்படுத்த வேண்டாமெனவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



நீதி கோரி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்- கலைந்து போகச் செய்த பேராயர்!
[Tuesday 2025-04-22 05:00]

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்கள் நிறைவடைந்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய சந்தியில் நேற்று மாலை 3.30 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் குறிப்பிடப்பட்ட அட்டைகளை ஏந்தியிருந்தனர்.



வல்வெட்டித்துறையை கைப்பற்ற தீவிரமாக உள்ளது ஜேவிபி!
[Tuesday 2025-04-22 05:00]

பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பியை நம்பித் தமிழ் மக்களில் கணிசமானோர் வாக்களித்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் ஊரும் நமதே என்று சகல உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று ஜே.வி.பி கடுமையாக முயற்சித்து வருகிறது. உலகில் ஈழத்தமிழினத்தின் முகவரியாக விளங்கும் வல்வெட்டித்துறையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் மிகத்தீவிரமாக உள்ளது என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார்.



பிரதான சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கம் வெளியிடவில்லை!
[Tuesday 2025-04-22 05:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி யார் என்பது தொடர்பிலான தகவல்களை இன்றைய தினம் விசேட அறிவிப்பின் மூலம் வெளிக்கொணர்வதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்புடைய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை மாத்திரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவிற்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும்!
[Tuesday 2025-04-22 05:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட குழுவின் தலைவர் என கருதப்படும் சஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவ புலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஜனாதிபதி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



வீதியை மறித்து போராட்டம் நடத்தி ஜனாதிபதியானவர் தான் ரணில்!
[Tuesday 2025-04-22 05:00]

வீதிகளை மறித்து போராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில் விக்ரமசிங்க, அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



பல்கலைக்கழக நடைபவனியை முடக்கிய பொலிஸ்!
[Tuesday 2025-04-22 05:00]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பழைய மாணவர் சங்கம் முன்னெடுக்கும்"வேரிலிருந்து விழுது வரை" ஒன்றிணையும் பொன் விழா சங்கமத்தை முன்னிட்டு நடைபவனி திங்கட்கிழமை (21) நடைபெற்றது.



தபால் வாக்களிப்புக்கு அடையாள ஆவணம் முக்கியம்!
[Tuesday 2025-04-22 05:00]

2025 மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கு உங்கள் தபால் மூல வாக்கைப் பதிவு செய்ய, தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை எடுத்துச் செல்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.



பிணை நிபந்தனைகளை மீறியதாக தேசபந்து மீது குற்றச்சாட்டு!
[Tuesday 2025-04-22 05:00]

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மாத்தறை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச அழைப்பாணை விடுத்துள்ளார். ஏப்ரல் 10 ஆம் திகதி பிணை வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறும்போது நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதவான் இந்த அழைப்பாணையை பிறப்பித்தார்.



மைத்திரியிடம் 7 மணிநேரம் விசாரணை!
[Tuesday 2025-04-22 05:00]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தி்லிருந்து நேற்றுமாலை வெளியேறியுள்ளார். ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக 7 மணி நேர வாக்குமூலம் அளித்த பிறகு, குற்றப் புலனாய்வுத் திணைக்கத்திலிருந்து வெளியேறினார்.



மூளைக் காய்ச்சலால் இளம் பெண் பலி!
[Tuesday 2025-04-22 05:00]

மூளைக் காய்ச்சலால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பளை வீமன்காமம், தெல்லிப்பளையைச் சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புது வருடத்தன்று காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த சனிக் கிழமை மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலை மாற்றப்பட்டிருந்த நிலையில்திங்கள் கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



போப் பிரான்சிஸ் காலமானார்!
[Monday 2025-04-21 16:00]

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார் என வத்திகான் அறிவித்துள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் நுரையீரல் தொற்று காரணமாக நீண்டகாலமாக போராடி வந்தார். அண்மையில் இவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. பல்லாயிரக்கணக்காணவர்களின் பிரார்த்தனையால் அதிலிருந்து போப் பிரான்சிஸ் மீண்டு வந்திருந்தார். எனினும் இன்று காலை 7.35 மணியளவில் அவர் காலமானதாக வத்திகான் அறிவித்துள்ளது


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா