Untitled Document
April 24, 2025 [GMT]
பாதுகாப்பு அமைச்சின் இணையத் தளம் மீது சைபர் தாக்குதலா?
[Thursday 2025-04-24 19:00]



இலங்கை பொதுப் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இன்று வியாழக்கிழமை தகாத மற்றும் முகஞ்சுழிக்கத்தக்க வார்த்தைகளை காணக்கூடியதாக இருந்தது.

இலங்கை பொதுப் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இன்று வியாழக்கிழமை தகாத மற்றும் முகஞ்சுழிக்கத்தக்க வார்த்தைகளை காணக்கூடியதாக இருந்தது.

  

இணையத்தில் பரவி வரும் ஒரு ஸ்கிரீன்ஷொட்டில், அமைச்சக செயலாளர் தொடர்பான அமைச்சக தகவல்களைக் காண்பிக்கும் ஒரு பிரிவின் கீழ் ஆபாசமான மற்றும் தகாத வார்த்தைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வார்த்தைப் பிரயோகம் இருப்பதால், வலைத்தளம் வெளிப்புறத் தரப்புகளால் ஊடுருவப்பட்டு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விடயத்தில் அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை, ஆனால் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் விசாரணை மற்றும் உடனடி திருத்தத்தின் அவசரத் தேவையை வலியுறுத்தியுள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்!
[Thursday 2025-04-24 19:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளைய தினமும் (25) எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



செம்மணி படுகொலை நினைவு முற்றம்-தமிழ்தேசிய பேரவை வாக்குறுதி!
[Thursday 2025-04-24 19:00]

தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் வகையில் செம்மணி படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படுவதோடு தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும் என தமிழ்தேசிய பேரவை தெரிவித்துள்ளது.



தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் அரச சொத்துக்கள், அதிகாரங்கள்!
[Thursday 2025-04-24 19:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரச அதிகாரத்தையும் அரச சொத்துக்களையும் தவறாகப் பயன்படுத்திய 30 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.



இராணுவம் வசமுள்ள யாழ். வைத்தியசாலை காணியை விடுவிக்குமாறு கோரிக்கை!
[Thursday 2025-04-24 19:00]

யாழ்ப்பாணம் கொட்டடி - மீனாட்சிபுரத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சி.யமுனானந்தா வலியுறுத்தியுள்ளார்.



பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி!
[Thursday 2025-04-24 19:00]

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியாழக்கிழமை (24) பிற்பகல் வத்திக்கான் தூதரகத்திற்கு சென்றார். தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே ஆண்டகை (Archbishop Brian N. Udaigwe) வரவேற்றார்.



தேர்தலுக்கான 2 நாட்கள் மூடப்படும் பாடசாலைகள்!
[Thursday 2025-04-24 19:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, மே 7 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



தலைக்கவசத்துடன் நடமாடினால் சோதனை!
[Thursday 2025-04-24 19:00]

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது.



போப் பிரான்சிஸ் மறைவுக்கு சனியன்று துக்கதினம்!
[Thursday 2025-04-24 19:00]

வத்திக்கான் நகரில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கை ஒட்டி, இலங்கை அரசாங்கம் 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி சனிக்கிழமையை தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது. உலக அமைதிக்கு, மறைந்த பாப்பரசரின் பங்களிப்புகள் மற்றும் இலங்கைக்கு அவர் ஆற்றிய இரக்கமுள்ள பங்களிப்புகளுக்கு தேசம் செலுத்தும் மரியாதையை பிரதிபலிக்கும் வகையில், பொது நிர்வாக அமைச்சகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.



மூதூர் விபத்தில் குடும்பஸ்தர் பலி!
[Thursday 2025-04-24 19:00]

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாலம் பகுதியில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். கெப் வாகனம் ஒன்று முன்னால் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதில் மூதூர் -ஆனைச் சேனையைச் சேர்ந்த 62 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.



பிள்ளையான் செய்த தவறு ஒன்றுமட்டுல்ல!
[Thursday 2025-04-24 05:00]

கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியரை காணாமலாக்கியது மாத்திரமே பிள்ளையான் செய்த ஒரே தவறு என்று தீர்மானம் எடுத்துவிட வேண்டாம். அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. தடுப்புக்காவலில் வைத்து அவரிடம் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



யாழ். முஸ்லிம் மக்கள் ஒன்றியம், தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவு!
[Thursday 2025-04-24 05:00]

தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் விழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக யாழ். முஸ்லிம் மக்கள் ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பரீக் ஆரீப் தெரிவித்துள்ளார்.



இந்த ஆண்டு 26 பேர் சுட்டுக்கொலை!
[Thursday 2025-04-24 05:00]

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (22) வரையில் 112 நாட்களில், நாடு முழுவதும் 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 23 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 14 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



தெல்லிப்பழை வைத்தியர்களை அச்சுறுத்திய பெண்!- ஆளும்கட்சி செல்வாக்கு பெற்றவராம்.
[Thursday 2025-04-24 05:00]

தெல்லிப்பழை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டதுடன், வைத்தியர்களை அச்சுறுத்திய பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் மீது பொலிசார் நடவடிக்கை எடுப்பதில் அசமந்தமாக செயற்படுவதாக வைத்தியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



அமெரிக்காவுடனான பேச்சு வெற்றி!
[Thursday 2025-04-24 05:00]

பரஸ்பர வரிகள் குறித்து இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பலனளித்ததாகக் கூறி, இலங்கையும் அமெரிக்காவும் விரைவில் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.



அறிக்கையை ஆராயும் குழுவில் ஷானியும் இணைந்தார்!
[Thursday 2025-04-24 05:00]

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிக்கும் குழுவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கினார். அதன்படி, விசாரணை அறிக்கையை ஆய்வு செய்வதற்காக, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு, ஐந்து உறுப்பினர்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.



10 மில்லியன் மக்கள் ரின் எண்களைப் பெற்றனர்!
[Thursday 2025-04-24 05:00]

வரி செலுத்துவோர் அடையாள எண்களை (TIN) பெறுவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் மொத்தம் 10 மில்லியன் மக்கள் பதிவு செய்துள்ளனர், அதே நேரத்தில் குறைந்தது 7 மில்லியன் மக்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதிப் பணிப்பளார் நாயகம் பி.கே.எஸ். சாந்த தெரிவித்தார்.



மின்தடைக்கான காரணம் தெரிந்தது- குரங்கின் மீதான பழி விலகியது!
[Thursday 2025-04-24 05:00]

கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டமைக்கு நிபுணர்கள் குழு காரணத்தை கண்டுபிடித்துள்ளனர். இதன்படி, சூரிய மின்கலங்கள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்தமை காரணமாகவே தேசிய மின் கட்டமைப்பு நிலைத்தன்மை குறைந்து மின் தடை ஏற்பட்டுள்ளது.



டான் பிரியசாத் கொலை - மூவர் கைது!
[Thursday 2025-04-24 05:00]

சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்களை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.டான் பிரசாரத் தனது உறவினர் வீட்டில் நடைபாதையில் இரண்டு பேருடன் விருந்து உண்டுகொண்டிருந்த போது, ​​அந்த இடத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.



முட்டை விலை இறங்கியது!
[Thursday 2025-04-24 05:00]

சந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு முட்டை 23 ரூபா முதல் 29 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சித்திரை புத்தாண்டு காலத்தில் முட்டை ஒன்று 47 ரூபா முதல் 50 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது சந்தையில் முட்டை விலை குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.



ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பியினரை காலூன்ற விடாது துரத்தி அடிக்க வேண்டும்!
[Tuesday 2025-04-22 16:00]

ஜே.பி.வி ஆட்சியாளர்கள் தேர்தல்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை கூட பாராளுமன்றில் சட்டங்களை இயற்றி செய்ய கூடியவர்கள். எனவே ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பியினரை மண்ணில் காலூன்ற விடாது துரத்தி அடிக்க வேண்டும் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Latika-Gold-House-2025
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா