Untitled Document
June 22, 2026 [GMT]
மூன்று நிபந்தனைகளுக்கு இணங்குவதாக தமிழரசுக் கட்சி கடிதம்!
[Sunday 2026-06-21 18:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டிணைவதற்காக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முன்வைத்திருந்த ஆறு நிபந்தனைகளில் இணைந்த கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையாக, சுருக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தப்படுதல் உட்பட மூன்று நிபந்தனை முதற்கட்டமாக ஏற்றுச்செயற்படுவதற்கு தயார் என்று தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டிணைவதற்காக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முன்வைத்திருந்த ஆறு நிபந்தனைகளில் இணைந்த கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையாக, சுருக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தப்படுதல் உட்பட மூன்று நிபந்தனை முதற்கட்டமாக ஏற்றுச்செயற்படுவதற்கு தயார் என்று தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.

  

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் நா.இரத்தினலிங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் 'தங்களது 12-05-2026 ஆம் திகதிய கடிதத்துடன் இணைத்து அனுப்பப்பட்ட பரிந்துரைகள், எமது கட்சியின் 17-05-2026 ஆம் திகதிய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டு, முதல் மூன்று பரிந்துரைகளின் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கை வரைவு ஒன்றினை எமது பரிசீலனைக்காக வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கைத் தமிழரசுக்கட்சியுடன் கூட்டிணைவதாக இருந்தால் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது ஆறு பிரதான நிபந்தனைகளின் கீழ் அமைய வேண்டுமென்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் இரத்தினலிங்கத்தினால் 12-05-2026ஆம் திகதி கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இணைந்த கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையாக, சுருக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தப்படுதல்.

புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், பொதுவான மையக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுதல். அதாவது தற்போதுள்ள உயர் அங்கத்தை மேலும் வலுப்படுத்துதல்.

அவ்வுயர் அங்கம் தற்போது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொண்டுள்ளதைப் போலவோ அல்லது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தரப்பு பரிந்துரை செய்யும் ஒன்றாகவோ அமைதல்.

எதிர்காலத்தில் வேறு அமைப்புகளும் இணைந்து கொள்ளக்கூடிய வகையில் அவ்வுயர் அங்கம் அமைதல். இறுதி வடிவத்தை இருதரப்பும் பேசி முடிவு செய்தல்.

இணைந்த கட்டமைப்புக்கு ஒரு பொதுப்பெயர் சூட்டுதல். அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றோ அல்லது வேறொரு புதிய பெயராக இருக்கலாம்.

மேலே உள்ள விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இக் கட்டமைப்பை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தலும், பொதுச் சின்னம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளுதலும்.

இவை அனைத்தும் இருதரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், இரு தரப்பினதும் பிரதிநிதிகள் இணைந்து விரிவான ஒரு கட்டமைப்பு பற்றி முழுமையான ஒரு அறிக்கையை தயாரித்தல் ஆகிய விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



செம்மணிப் புதைகுழியில் எலும்புக்கூடுகள் 400ஐ தாண்டியது! Top News
[Sunday 2026-06-21 18:00]

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 11 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.



குற்றவாளிகளை பாதுகாக்க முனையும் அடிப்படைவாதிகள்!
[Sunday 2026-06-21 18:00]

குற்றவாளிகளை பாதுகாக்கக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்காக சில அடிப்படை வாதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.



ஹெய்டிக்கு 1089 படையினரை அனுப்புகிறது அரசாங்கம்!
[Sunday 2026-06-21 18:00]

வன்முறைக் கும்பல்களின் ஆதிக்கத்தினால் சீர்குலைந்துள்ள கரீபியன் நாடான ஹெய்டியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக, 900 இற்கும் மேற்பட்ட முப்படை வீரர்களையும், விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 189 பொலிஸ் அதிகாரிகளையும் கொண்ட விசேட பாதுகாப்புப் படையணியை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



உயர்தரப் பரீட்சையை பிற்போடும் தேவை இல்லை!
[Sunday 2026-06-21 18:00]

2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் பிற்போடுமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பாக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கங்களை அளித்துள்ளார்.



ஐ.நா உபகுழு சமர்ப்பிக்கவுள்ள இரகசிய அறிக்கை!
[Sunday 2026-06-21 18:00]

இலங்கைக்கு ஒன்பது நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சித்திரவதைத் தடுப்புக்கான உபகுழுவின் பிரதிநிதிகள் தமது கள ஆய்வுகளின் அடிப்படையிலான இரகசிய முதற்கட்ட அவதானிப்பு அறிக்கையை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.



அலரி மாளிகைக்குச் செல்ல வேண்டாம் என தடுத்தார் மைத்திரி!
[Sunday 2026-06-21 18:00]

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவத்தின் போது பாதுகாப்புத் துறையினரிடையே முறையான ஒருங்கிணைப்பு இருக்கவில்லை என்றும், அலரி மாளிகைக்குச் செல்ல வேண்டாம் என அதிகாரிகளுக்கு அன்றைய ஜனாதிபதியால் உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதுடன், குண்டுத்தாக்குதல் அரங்கேறிய உடனே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது கைபேசிக்கு நேரடியாக அழைத்து இரங்கல் தெரிவித்ததோடு, எப்.பி.ஐ புலனாய்வு அமைப்பின் ஒத்துழைப்பை பெற்றுக் கொடுத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



டீசல் விலை குறைந்தாலும் 6 மாதங்களுக்கு பஸ் கட்டணம் குறையாது!
[Sunday 2026-06-21 18:00]

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் எதிர்வரும் 6 மாதங்களுக்கு பஸ் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.



சீன ஆயுதக் களஞ்சியங்கள் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதியை விசாரிக்க வேண்டும்!
[Sunday 2026-06-21 18:00]

இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கு கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீன ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜகநாத் கொலம்பகேயை சர்வதேச பொறிமுறை ஊடாக விசாரணை செய்ய வேண்டுமென பொத்துவில் பொலிகண்டி ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் கோரிக்கை முன்வைத்தார்.



பொதுமன்னிப்பு வழங்கினால் உண்மைகளை வெளிப்படுத்துவதாக கூறுகிறார் சோமரத்ன ராஜபக்ஷ!
[Sunday 2026-06-21 08:00]

மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் நேரில் சென்று சந்தித்ததாகவும், அதன்போது தனக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினால் உண்மைகளை வெளிப்படுத்துவதாக சோமரத்ன ராஜபக்ஷ கூறியதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.



அடுத்த வாரம் வருகிறது ஐஎம்எவ் குழு!
[Sunday 2026-06-21 08:00]

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். அதன்படி, அவர்கள் எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் தங்கியிருந்து இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.



வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் நிர்வாகத்தை போராளிகளிடம் ஒப்படைக்க தயார்!
[Sunday 2026-06-21 08:00]

"நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து, வடக்கு - கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படைத்து, சிறந்ததொரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கும், அதற்காக முன்னின்று உழைப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன். இத்தகைய வரலாற்றுப் பணியைச் செய்ய எல்லோரும் தயாரா?" என போராளிகள் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது சிறீதரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.



QR குறியீட்டு முறையை நீக்குவது தொடர்பாகஇறுதி முடிவு எடுக்கவில்லை!
[Sunday 2026-06-21 08:00]

எரிபொருள் விநியோகத்திற்காக தற்பொழுது நடைமுறையிலுள்ள QR குறியீட்டு முறைய முழுமையாக நீக்குவது தொடர்பாக அரசாங்கமோ அல்லது கூட்டுத்தாபனமோ இதுவரை எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.



சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்பு போராட்டம் அர்த்தமற்றது!
[Sunday 2026-06-21 08:00]

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்பு போராட்டம் அர்த்தமற்றது. குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை அவருக்கு இல்லையென சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



கடற்படை வசமுள்ள வாடிகள் - விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
[Sunday 2026-06-21 08:00]

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்பிரிவில், இலுப்பைக்கடவை, படகுத்துறைப் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடலுணவுகளைக் கொள்வனவுசெய்யும் வாடிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, குறித்த வாடிகளின் உரிமையாளர்களால் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.



அனுமதியின்றி அமைக்கப்படும் அரச கட்டிடங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!
[Sunday 2026-06-21 08:00]

அரச திணைக்களங்கள் தான் அதிகளவில் உள்ளுராட்சிச் சட்டங்களை மீறுகின்றன. அரசினால் நிதி ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் கட்டிட நிர்மாணங்களில் 90 வீதமானவை உள்ளராட்சி மன்றங்களின் கட்டிட அனுமதியைப் பெற்றுக்கொள்வதில்லை. அவ்வாறான திணைக்களங்கள் தண்டத்துடன் உள்ளுராட்சிகளின் அனுமதியைப் பெற வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.



செப்ரெம்பருக்குப் பின்னரே எரிபொருள் விலை குறைப்பு தீர்மானிக்கப்படும்!
[Sunday 2026-06-21 08:00]

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின், எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமளவில் அதன் சலுகைகளை நாட்டு மக்களுக்கு வழங்க முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



11,790 மாணவர்களுக்கு 9A!
[Saturday 2026-06-20 17:00]

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.



நோர்வே அதிகாரிகளுடன் சாணக்கியன் கலந்துரையாடல்!
[Saturday 2026-06-20 17:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், நோர்வே நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டபோது, ஒஸ்லோவில், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவின் துணை இயக்குநர் பியேட் கப்ரியல்சன் மற்றும் அப்பிரிவின் அதிகாரிகளைச் சந்தித்து, யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.



சுரேஷ் சலேயை காப்பாற்ற முனைவது தவறான முன்னுதாரணம்!
[Saturday 2026-06-20 17:00]

புலிகளிடம் இருந்து நாட்டை காப்பற்றினார் என ஒரு பெரும் வீரனாக அவரை முன்னிறுத்தி, ஈஸ்டர் தாக்குதல் குற்றங்களில் இருந்து காப்பாற்ற முனைவது தவறான முன்னுதாரணம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.



செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி ஐ.நாவுக்கு கடிதம்!
[Saturday 2026-06-20 17:00]

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச கண்காணிப்புடனான சுயாதீன விசாரணை கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா