Untitled Document
October 25, 2026 [GMT]
தமிழர்களின் கோரிக்கையை கனடா ஆதரிக்கவேண்டும்!
[Sunday 2026-10-25 05:00]


செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், சுயாதீன நெறிமுறைகளுடன்கூடிய சர்வதேச கண்காணிப்பு வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை கனடா ஆதரிக்கவேண்டும். பெருமளவில் மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்ட இடங்களில் பணியாற்றிய சொந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, இதற்கான சர்வதேசக் கூட்டமைப்பொன்றை கனடாவினால் உருவாக்கமுடியும் என கலாநிதி மரியோ அருள்தாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், சுயாதீன நெறிமுறைகளுடன்கூடிய சர்வதேச கண்காணிப்பு வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை கனடா ஆதரிக்கவேண்டும். பெருமளவில் மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்ட இடங்களில் பணியாற்றிய சொந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, இதற்கான சர்வதேசக் கூட்டமைப்பொன்றை கனடாவினால் உருவாக்கமுடியும் என கலாநிதி மரியோ அருள்தாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

  

கனேடிய பாராளுமன்ற வளாகத்தில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அங்கு அவர் மேலும் பகிர்ந்துகொண்ட விடயங்கள் வருமாறு:

செம்மணி நிலப்பரப்பு எமக்கு எந்தவகையில் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வதற்கு நாம் 30 ஆண்டுகள் பின்நோக்கிச் சென்று, அப்படுகொலைகளுடன் தொடர்புடையவர்களின் கதைகளை அறியவேண்டும்.

1995 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அங்கு அவர்கள் முகாம்கள், சோதனைச்சாவடிகள் மற்றும் படைத்தளங்கள் உள்ளிட்ட ஒரு நெருக்கமான வலைப்பின்னலை உருவாக்கினர். இதனூடாக யாழ்ப்பாணத்தை உலகிலேயே அதிகளவில் இராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக மாற்றினர். இவை விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டவை என்று கூறப்பட்டாலும், உண்மையில் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் தமிழர்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை எவராலும் மறைக்க முடியாது.

இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணி நிலம் என்பது இனப்படுகொலையின் ஒரு குறியீடாகவும், அரச வன்முறையின் இன்னமும் தீர்வு காணப்படாத களமாகவும் திகழ்கிறது. இலங்கையில் இன்னமும் தொடரும் தண்டனையற்ற போக்குக்கு இதுவொரு சான்றாகும். மனிதப்புதைகுழிகள் என்பன போரின் தற்செயலான எச்சங்கள் அல்ல. மாறாக அவை அரசின் திட்டமிட்ட நோக்கத்தின் வெளிப்பாடுகளாகும். மனித உயிர்களை அழித்து, உண்மையை மண்ணுக்கு அடியில் புதைப்பதற்கான பௌதிக ரீதியான ஒரு முயற்சியையே இவை குறிக்கின்றன.

1996இல் கிருஷாந்தி குமாரசுவாமியும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்ட அதே ஆண்டில், யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயினர். அந்த ஆண்டில் மாத்திரம் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 700 க்கும் அதிகம் என்று கருதப்படுகிறது. ஒப்பீட்டளவில் சிறிய பரப்பளவு கொண்ட ஒரு பகுதியில் இத்தனை உயர் எண்ணிக்கையிலான மக்கள் காணாமல்போனமை மிகுந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்வாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணியில் அண்மையகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் பல நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதங்களிலும் அகழ்வாய்வு நடவடிக்கைகள் தொடரவுள்ளன. ஆனால் இந்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு அவசியமான நிபுணத்துவமோ அல்லது அரசியல் தன்முனைப்போ இலங்கை அரசிடம் இல்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்கும், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிவதற்காகக் காத்திருக்கும் உறவுகளுக்கு உரிய பதில்களைக் கூறுவதற்கும் இப்போது கண்டறியப்பட்டுள்ள எலும்புக்கூடுகளை அடிப்படையாகக்கொண்டு மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும். அத்தோடு இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

இருப்பினும் இலங்கை அரசின் நீண்டகால வரலாற்றில் தொடர்ந்து நிலவும் இந்தத் தண்டனையற்ற சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. இலங்கை அரச இயந்திரமானது அதன் எல்லைக்குள் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்துக்கு எதிராக இராணுவத்தினர் இழைத்த குற்றங்களை விசாரணைக்கும் திறனுடையதாகக் கட்டமைக்கப்படவில்லை.

வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு வழிகோலிய சட்டக் கட்டமைப்புக்கள் இன்றும் நீடிக்கும் நிலையில், செம்மணியை கடந்த காலத்தின் ஒரு எச்சம் என்று மாத்திரம் கூறிவிடமுடியாது. சுமார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பயங்கரவாதத்தடைச்சட்டம் எனும் மிகமோசமான சட்டமானது தன்னிச்சையான கைதுகள், விசாரணையற்ற நீண்டகாலத் தடுப்புக்காவல், திட்டமிட்ட சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள், சட்டவிரோத படுகொலைகள் என்பவற்றுக்கு ஓர் சட்டபூர்வ அடித்தளத்தை வழங்கியது. சர்வதேச அழுத்தம் காரணமாக இச்சட்டத்தை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்த போதிலும், தற்போது அதனைப் பதிலீடு செய்து புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கமையப் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலமானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தை விடவும் மிகமோசமானது என சட்ட வல்லுனர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர். எனவே செம்மணியில் மனிதப்புதைகுழிகளை உருவாக்கிய அரச இயந்திரம் இன்றும் அவ்வாறே நீடிக்கிறது.

இவ்வாறு இலங்கையில் தொடர் ஒடுக்குமுறையும், தண்டனையற்ற போக்கும் நிலவுவதனால் தான், இவ்விவகாரத்தில் கனடா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தமிழர்களுக்கான நீதியைப் பொறுத்தமட்டில், மிகமுக்கிய தருணங்களில் கனடா உண்மையானதும் துணிச்சலானதுமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. இலங்கையின் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் கனடா இதுவரை வெளிப்படுத்திய தலைமைத்துவத்தைத் தொடர்ந்து முன்கொண்டு செல்லவேண்டும்.

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், சுயாதீன நெறிமுறைகளுடன்கூடிய சர்வதேச கண்காணிப்பு வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை கனடா ஆதரிக்கவேண்டும். பெருமளவில் மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்ட இடங்களில் பணியாற்றிய சொந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, இதற்கான சர்வதேசக் கூட்டமைப்பொன்றை கனடாவினால் உருவாக்கமுடியும் எனச் சுட்டிக்காட்டினார்.

  
   Bookmark and Share Seithy.com



ஊழல் அரசியல்வாதிகள் நாட்டுக்குச் செய்த அழிவுகளை மக்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது!
[Sunday 2026-10-25 05:00]

ஊழல் அரசியல்வாதிகள் இந்த நாட்டுக்குச் செய்த அழிவுகளை மக்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. தற்போதைய அரசாங்கத்தில் சிறிய குறைபாடுகளைக் கண்டவுடன் மீண்டும் பழைய அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படக்கூடாது என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.



ஈரானியக் கப்பலில் இருந்த சிலர் காலி துறைமுகத்திற்கு வருகை!
[Sunday 2026-10-25 05:00]

ஈரானியக் கப்பலொன்றில் இருந்த சிலர் காலி துறைமுகத்திற்கு வருகை தந்தது தொடர்பாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி கருத்துத் தெரிவித்துள்ளார்.



மாத்தறையில் சிக்கியது 561 கிலோ போதைப்பொருள்-
[Sunday 2026-10-25 05:00]

மாத்தறை, தலல்ல, நாவோட்டுன்ன கடல் மற்றும் கடற்கரைப் பிரதேசத்தில் நேற்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களின் நிறை 561 கிலோகிராம் 705 கிராம்கள் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.



டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2026! Top News
[Sunday 2026-10-25 05:00]

டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2026, அக்டோபர் மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில், 90 Littles Road, Scarborough-வில் அமைந்துள்ள Malvern Family Resource Centreஇல், நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.



மன்னாரில் இராணுவ வாகனம் விபத்து- ஒருவர் பலி, 11 படையினர் காயம்!
[Sunday 2026-10-25 05:00]

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, கிளியன்குடியிருப்புப் பகுதியில் நேற்று மாலை இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.



கொக்குவில் இந்துக் கல்லூரி படுகொலையின் 39வது ஆண்டு நினைவேந்தல்!
[Sunday 2026-10-25 05:00]

யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று நடைபெற்றது.



நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார்!
[Sunday 2026-10-25 05:00]

எனக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நான் எவ்வித அச்சமும் கொள்ளவில்லை. மாறாக பாராளுமன்றத்தில் அது குறித்த உண்மைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதற்குக் கிடைத்த சிறந்த சந்தர்ப்பமாகவே அதைக் கருதுகின்றேன் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.



சம்பிக்க ரணவக்கவுக்கு அழைப்பாணை!
[Sunday 2026-10-25 05:00]

நிலக்கரி கொள்வனவு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி ஆஜராகுமாறு முன்னாள் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.



சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!
[Sunday 2026-10-25 05:00]

தனமல்வில, நிகவெவ பகுதியில் அமைந்துள்ள கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.



செம்மணி விவகாரத்தில் சர்வதேச சுயாதீன தடயவியல் விசாரணை!- கனடாவிடம் சிறிதரன் கோரிக்கை.
[Saturday 2026-10-24 17:00]

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் சுயாதீனமான தடயவியல் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆவணங்களைக் கையளித்துள்ளார்.



லண்டன் செல்வதற்கு இராமேஸ்வரம் சென்ற 3 இலங்கையர்கள் கைது!
[Saturday 2026-10-24 16:00]

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு சட்டவிரோதமாக பாம்பன் கடற்கரைக்கு படகில் வந்த இலங்கை நபர்கள் மூவர் உட்பட 4 பேரை க்யூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர். சட்டவிரோதப் பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்ட படகின் ஓட்டுநரான இராமேசுவரத்தைச் சேர்ந்த முத்துராஜா (44) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.



பேரினவாதத்தின் கைக்கூலியாகச் செயற்பட்டுள்ளார் பேராசிரியர் ராஜ் சோமதேவ!
[Saturday 2026-10-24 16:00]

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ வெளியிட்ட இடைக்கால அறிக்கை, இலங்கை அரசையும் இராணுவத்தையும் காப்பாற்றும் வகையில் அமைந்துள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி கனகரஞ்சனி குற்றம் சாட்டியுள்ளார்.



மாத்தறை கடற்கரையில் 475 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் மீட்பு!
[Saturday 2026-10-24 16:00]

மாத்தறை, தலல்ல, நாவோட்டுன்ன கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் இன்று (24) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, 475 கிலோ கிராமுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் தொகையைக் கைப்பற்றியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.



வங்காள விரிகுடாவில் உருவாகிறது சூறாவளி!
[Saturday 2026-10-24 16:00]

இலங்கைக்கு அருகில் உள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி தீவிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், வடக்கு அந்தமான் தீவுகளைச் சுற்றியுள்ள வங்காள விரிகுடா பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளதாகவும் அது, எதிர்வரும் திங்கட்கிழமை (26) காலை வேளைக்கு முன்னரே மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் சூறாவளியாக உருமாறுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.



விஹாரமகாதேவி பூங்காவில் தேரர்களுக்கும் மாநகர சபை அதிகாரிகளுக்கும் இடையில் பதற்றம்!
[Saturday 2026-10-24 16:00]

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களுக்கும் கொழும்பு மாநகர சபை அதிகாரிகளுக்கும் இடையில் சற்று முன் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.



சபாநாயகர் தனித்து தீர்மானம் எடுக்க முடியாது!
[Saturday 2026-10-24 16:00]

அரசாங்கமும் சபாநாயகரும் சவால் விடுத்ததன் அடிப்படையில் நாம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக 50 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நம்பிக்கையில்லா பிரேரணையைச் சமர்ப்பித்துள்ளோம். அதில் எந்தவித தொழில்நுட்பச் சிக்கல்களும் இருக்க முடியாது. தொழிநுட்ப சிக்கல் இருப்பதாக சபாநாயகரால் கூறவும் முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.



500 நாட்கள் கூடச் சிறையில் இருக்கத் தான் தயார்!
[Saturday 2026-10-24 16:00]

இன்றுடன் பூர்த்தியாகும் தனது சிறைவாசத்தின் 50 ஆவது நாளை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.



குவைத்தில் இலங்கை பெண்கள் இருவர் மர்மமாக மரணம்!
[Saturday 2026-10-24 16:00]

குவைத்தின் இரு வெவ்வேறு பகுதிகளில் இலங்கை பெண்கள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குவைத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



பிக்குமாரின் ஆடையை நீக்குவது தொடர்பான வழிமுறைகள்- வர்த்தமானி வெளியீடு!
[Saturday 2026-10-24 16:00]

பௌத்த பிக்கு ஒருவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அவர்களின் துறவற ஆடையை (காவி உடை) நீக்குவது தொடர்பாகப் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை உள்ளடக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.



செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இருந்து பேராசிரியர் ராஜ் சோமதேவ விலக வேண்டும்!
[Saturday 2026-10-24 05:00]

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ மீதான பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பகத்தன்மையை அவராகவே இல்லாமல் செய்திருக்கும் சூழ்நிலையில், இனிவருங்காலங்களில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு உள்ளடங்கலாக அதனுடன் தொடர்புடைய விவகாரங்களில் அவரது பங்கேற்பு உள்வாங்கப்படக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா