Untitled Document
November 10, 2026 [GMT]
பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகரும் நாடு!
[Monday 2026-11-09 17:00]


நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்லும் இத்தகைய சூழ்நிலையில், எதிர்வரும் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக இந்தப்  பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வேலைத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் என நாம் எதிர்பார்க்கிறோம் என பேராசிரியர் ஜீ எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்லும் இத்தகைய சூழ்நிலையில், எதிர்வரும் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வேலைத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் என நாம் எதிர்பார்க்கிறோம் என பேராசிரியர் ஜீ எல். பீரிஸ் தெரிவித்தார்.

  

மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவில் அரசியல் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதாரம் அபிவிருத்தியடைவதைவிட சுருங்கிக்கொண்டு செல்கிறது. 2025 ஆம் ஆண்டின் 2 ஆம் காலாண்டில் இருந்த 5.8வீத வளர்ச்சி, 2026 ஆம் ஆண்டின் 2 ஆம் காலாண்டாகும்போது 4.2 வீதமாகக் குறைந்துள்ளதுடன், 2008 ஆம் ஆண்டில் இருந்த பொருளாதார அளவை விட இன்று 2வீதம் குறைந்துள்ளதையும் காட்டுகிறது.

மேலும், மாதந்தோறும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்களின் சேமிக்கும் திறனும் பணத்தின் மதிப்பும் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஜூன் மாதத்தில் 6.3வீதமாக இருந்த பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 8வீதமாகவும், உணவுப் பணவீக்கம் 8.5வீதமாகவும் உயர்ந்துள்ளது. பணவீக்கத்தின் தீவிரத்தன்மை காரணமாக, 9 ஆண்டுகள் செல்லும்போது மக்களின் சொத்துக்களில் 50 வீதம் குறையக்கூடும்.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றபோது 2024 ஒக்டோபரில் 293ரூபாவாக இருந்த ஒரு டாெலரின் மதிப்பு இன்று 337ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், இது சுமார் 45ரூபா இன் வீழ்ச்சியாகும். இதனால் எரிபொருள், பருப்பு, வெங்காயம், சீனி, மா போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யும் போது ஒவ்வொரு டாெலருக்கும் கூடுதலாக 45ரூபா செலுத்த வேண்டியுள்ளது. அத்துடன், நாட்டின் வெளிநாட்டுக் கடனைக் கணக்கிடுவதிலும் இந்த அதிகரிப்பு கடுமையாகப் பாதிக்கிறது.

பொருளாதாரத்தின் சுருக்க நிலை, பணவீக்கம் மற்றும் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவது தடைப்பட்டுள்ளதுடன் இருக்கும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதும் கடினமாகியுள்ளது. படித்த இளம் தலைமுறையினர் மத்தியில் வேலையின்மை 43வீதமாக உயர்ந்துள்ளது.

இது ஆசியாவிலேயே மிகக் கூடிய இளையோர் வேலையின்மை விகிதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 10 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் 50 இலட்சம் பேர் உள்ளனர். வேலையற்ற பட்டதாரிகளில் 50வீதம் பேர் நாட்டை விட்டு வெளியேற விரும்பினாலும், மேற்கு நாடுகளின் குடியேற்றக் கட்டுப்பாடுகள் காரணமாக அதுவும் தற்போது முடங்கிப் போயுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டிற்கு பெரியளவிலான வெளிநாட்டு முதலீடுகள் எவையும் வரவில்லை. அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக் குறைவு, அடிக்கடி மாறக்கூடிய தெளிவற்ற கொள்கைகள் மற்றும் சாதகமற்ற வரிக்கொள்கைகள் காரணமாக இலங்கை முதலீடுகளுக்கு சாதகமற்ற சூழல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் இந்த ஆண்டின் நடுப்பகுதி வரை 16.7வீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத நிலவரப்படி 28 வீதம் அதாவது கால் பகுதி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

அதேபோல், 'தித்வா' பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாய் நிதியில் இதுவரை 8 வீதம் போன்ற சிறிய சதவீதமே செலவிடப்பட்டுள்ளது. இதற்குப் பிரதான காரணம் நிதிப் பற்றாக்குறையை விட, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயலற்ற தன்மையும் பலவீனமுமாகும்.

கிராம மட்டத்திலான 100 சிறிய திட்டங்களை அடையாளம் கண்டு மக்களின் சாதாரண வாழ்க்கைக்கு நேரடியாகப் பாதிப்புச் செலுத்தும் துறைகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்வதற்குப் பதிலாக, அரசாங்கம் நெடுஞ்சாலை மேம்பாட்டிற்காக 3 ஆண்டுகளில் 2 டிரில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது.டைல்ஸ், வாகனங்கள், சிமெந்தி போன்றவற்றுக்காக அதிக டாெலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன், இதனால் பொதுமக்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் கிடைக்கவில்லை. இதன் பலன்கள் சில பெருநிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.

உலக வங்கியின் அறிக்கைகளின்படி இலங்கையில் கடுமையான வறுமை 30வீதமாக உயர்ந்துள்ளதுடன், உலக உணவுத் திட்டத்தின்படி நாட்டின் 6 மில்லியன் மக்கள் தொகையினர் ஒரு வேளை சத்தான உணவைக் கூட பெற முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது. 18வீத வற் வரி போன்ற மறைமுக வரிகள் காரணமாக ஏழை, பணக்காரன் என்ற பாரபட்சமின்றி அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டு முதல் 2025 ஜனவரி வரை வாகன இறக்குமதி முழுமையாகத் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2025 ஆம் ஆண்டில் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் சுனாமி போல் மீண்டும் அது திறக்கப்பட்டது. உலகின் அதிஉயர் சொகுசு வாகனங்களான பிரித்தானிய மகாராணி பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் ரக வாகனங்கள் கூட எந்தத் தடையும் இன்றி நாட்டிற்குள் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டது.

அரசாங்கம் இதன் மூலம் பெரும் வரி வருமானத்தை எதிர்பார்த்தாலும், எதிர்பார்க்கப்பட்ட வாகனப் பதிவு இடம்பெறாததால் அரசாங்கத்திற்கு கடுமையான இழப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி நம்மிடமிருந்த பெருமளவிலான வெளிநாட்டுச் செலாவணி வெளிநாடுகளுக்குச் சென்றது. இதனால் நாட்டின் கையிருப்பில் இருந்த பெருமளவிலான அந்நியச் செலாவணியை நாம் இழந்தோம்.

2025 ஆம் ஆண்டில் இந்த வாகன இறக்குமதி மூலம் சுங்கத்திற்கு கிடைத்த வருமானம் 2551 பில்லியன்களாகும். ஆனால் 2026 செப்டம்பராகும்போது அது 2000 வரை குறைகிறது. வரும் ஆண்டில் அதைவிடவும் குறையும். ஏனெனில் புதிய வாகனப் பதிவுகள் 15வீதம் குறைந்துள்ளது.

எவ்வாறாயினும், நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்லும் இத்தகைய சூழ்நிலையில், எதிர்வரும் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக உணரக்கூடிய இந்த நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வேலைத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை திருத்துமாறு ஐ.நா நிபுணர்கள் வலியுறுத்தல்!
[Tuesday 2026-11-10 06:00]

இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு அமைவாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதில் திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளர்.



வடக்கிலும், திருகோணமலையிலும் அவ்வப்போது மழை பெய்யும்!
[Tuesday 2026-11-10 06:00]

வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை முன்வைத்த சட்டமா அதிபர்!
[Tuesday 2026-11-10 06:00]

உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரைத் தடுத்து வைக்கும் கால எல்லையை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைத்து சட்டமூலத்தில் திருத்தம் செய்யவுள்ளதாகச் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.



பொதுக் கடன் 2 டிரில்லியனால் அதிகரிப்பு!
[Tuesday 2026-11-10 06:00]

இந்த அரசாங்கம் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. பொறுப்பேற்றதைச் செய்து கொள்ள முடியவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செப்டம்பர் 21 ஆம் திகதி பொறுப்பளிக்கும் போது முழுமையான கடன் 31 டிரில்லியனாக இருந்தது.



விசாரணைகள் நிறைவு- வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படும்!
[Tuesday 2026-11-10 06:00]

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.



சர்வாதிகாரப் போக்கை நோக்கிச் செல்லும் அரசாங்கம்!
[Tuesday 2026-11-10 06:00]

அரசாங்கம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள சட்டங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறை சுதந்திரத்தையும் பாதிக்கும் வகையில் சர்வாதிகாரப் போக்கை நோக்கியே அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருண சாடியுள்ளார்.



ட்ரோன்கள் குறித்து நளின் பண்டார விளக்கம்!
[Tuesday 2026-11-10 06:00]

நாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 39 ட்ரோன் (Drone) கருவிகள் மற்றும் 16 மைக்ரோபோன்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.



ஞானசார தேரருக்கு காவியுடை - மகாநாயக்கர்கள் கோரிக்கை!
[Tuesday 2026-11-10 06:00]

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடை அணிவிப்பதற்காக, தாம் உள்ளிட்ட பத்து பிக்குகள் அடங்கிய சங்க சபைப் பிரதிநிதிகள் குழுவொன்று சிறைச்சாலைக்குச் செல்லத் தயாராக இருப்பதாக சியாம் மகா நிகாயவின் கோட்டே பிரிவின் மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய கலாநிதி இத்தேபான தம்மாலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.



சசீந்திர ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு - ஆட்சேபனைகளை நிராகரித்த நீதிமன்றம்!
[Tuesday 2026-11-10 06:00]

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை தள்ளுபடி செய்த கொழும்பு மேல் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் சசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி இடம்பெறும் என கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



கொழும்பில் இன்று கண்டனப் போராட்டம்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு!
[Tuesday 2026-11-10 06:00]

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கொழும்பில் கண்டனப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.



4 மில்லியன் இலங்கையர்கள் ரின் எண்ணைப் பெறவில்லை!
[Monday 2026-11-09 17:00]

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்துக் குடிமக்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்வது சட்டப்பூர்வமாகக் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும், சுமார் 4 மில்லியன் இலங்கையர்கள் இதுவரை தமது வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெறவில்லை எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



கோட்டா இரண்டு வாரங்களுக்குள் கைது- தூக்கு மேடைக்கு செல்லும் நிலையும் ஏற்படலாம்!
[Monday 2026-11-09 07:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் தற்போது வெளிவந்து கொண்டிருப்பதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சிறைக்குச் செல்வார் என்றும் தூக்குமேடைக்குச் செல்லும் நிலையும் ஏற்படலாம் என இலங்கைத் தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



கொழும்பு வடிகால்களைக் கூட சுத்திகரிக்க முடியாத அரசாங்கம்!
[Monday 2026-11-09 07:00]

ஆறு மாதங்களில் கொழும்பு நகரில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால், குறைந்தபட்சம் நகரின் வடிகால்களைக் கூட முறையாகச் சுத்திகரிக்க முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.



வங்காள விரிகுடாவில் 14ஆம் திகதி புதிய தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு!
[Monday 2026-11-09 07:00]

எதிர்வரும் 14.11.2026 அன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. இது ஆரம்பத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இலங்கையின் தென்கிழக்குப் பகுதியை அடைந்து அதன் பின்னர் வடக்கு நோக்கி இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையோரமாக நகர்ந்து தமிழகத்துக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் இன்றும் விசாரணை!
[Monday 2026-11-09 07:00]

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (09) உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.



வடக்கு, கிழக்கில் இன்று மழை!
[Monday 2026-11-09 07:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



நளின் பண்டார எடுத்து வந்த 39 ட்ரோன்கள் பறிமுதல்!
[Monday 2026-11-09 07:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவினால் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 39 ட்ரோன்கள் மற்றும் 16 ஒலிவாங்கிகளை, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்துள்ளனர்.



அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டம்!
[Monday 2026-11-09 07:00]

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



மான் தாக்கி கைதி மரணம்!
[Monday 2026-11-09 07:00]

வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வு பெற்றுவந்த கைதியொருவர் மான் ஒன்று தாக்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சிறைச்சாலை வளாகத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சுதந்திரமாகத் திரிந்த மான் ஒன்று அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



எண்ணெய் வரி அதிகரிப்பால் மக்கள் மீது அதிக சுமை!
[Monday 2026-11-09 07:00]

எண்ணெய் மீதான வரியை தற்போதைய வரி அளவைவிட அரசாங்கம் அதிகரித்துள்ளதால், அதன் சுமையை இறுதியில் பொதுமக்களே சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா