Untitled Document
November 20, 2026 [GMT]
ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதிக்க முன்னரே பயங்கரவாத தடைச்சட்டம் ரத்துச் செய்யப்படும்!
[Friday 2026-11-20 08:00]

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது  தொடர்பில்  ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மையப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதிப்பதற்கு முன்னரே அந்த சட்டத்தை இரத்துச் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  பயங்கரவாதத்தில் இருந்து  அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தில்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் அம்சங்கள் உள்ளடக்கப்படவில்லை. ஜனநாயகம்,மனித உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு பூகோள பயங்கரவாத சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில்  பயங்ககரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள திருத்தங்களை செயற்படுத்துவோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மையப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதிப்பதற்கு முன்னரே அந்த சட்டத்தை இரத்துச் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் அம்சங்கள் உள்ளடக்கப்படவில்லை. ஜனநாயகம்,மனித உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு பூகோள பயங்கரவாத சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் பயங்ககரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள திருத்தங்களை செயற்படுத்துவோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

  

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

2022 ஆம் ஆண்டு பொருளாதார பாதிப்பை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, 2048ஆம் ஆண்டு வரையில் பொருளாதாரத்தை சீரமைக்க முடியாது. 2048 இற்கு பின்னரே நாட்டின் பொருளாதாரம் தலைதூக்கும். அது வரையில் அரச சேவையாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க முடியாது. வீதிகளை நிர்மாணிக்க பணம் இல்லை. தேர்தலை நடத்த பணம் இல்லை என்றெல்லாம் குறிப்பிட்டார். பொருளாதார ரீதியில் மட்டுமன்றி அரசியல் ரீதியிலும் வங்குரோத்தடைந்த நாடாகவே இருந்தது. அவ்வாறான நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். நாட்டை பொறுப்பேற்று குறுகிய காலத்திற்குள் மாற்றங்களை ஏற்படுத்தி பயணிக்கின்றோம்.

இதுவரையில் மூன்று வரவு செலவுத் திட்டங்களை முன்வைத்துள்ளோம். அவற்றை பார்த்தால் எமது கொள்கைத் திட்டம், எமது இலக்கு போன்றவை தெளிவாக இருக்கும். வங்குரோத்தடைந்திருந்த நாட்டை கட்டம் கட்டமாக எவ்வாறு கட்டியெழுப்புவது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் சில இணக்கப்பாட்டுக்கு செல்ல நேரிட்டது. கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டுள்ளோம். முதற் தடவையாக இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக 2024 டிசம்பரில் முழு உலகமும் ஏற்றுக்கொண்டது. எமது பொருளாதாரம் தொடர்பில் உலகம் முழுவதும் நம்பிக்கை ஏற்பட்டது. எமக்கு மீண்டும் கடன் வழங்க பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் முன்வந்தன. எமது வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றன எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எங்களுடன் கைகோர்த்துள்ளது. எங்களுக்கு இன்னும் முன்னால் போக வேண்டியுள்ளது. அதற்கு ஏற்ற வரவு செலவுத் திட்டமே இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது.இலங்கை செய்திகள்

நாட்டில் வரி வறுமானத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தது. சர்வதேச நாணய நிதியம் வழங்கிய இலக்கானது 3275 பில்லியன் ரூபாவாக இருந்தது. அந்த இலக்கை அடையமாட்டோம் என்றே சர்வதேச நாணய நிதியம் நினைத்தது. ஆனால் அதனை 4252 பில்லியன் ரூபா வரையில் அதிகரித்துள்ளோம். இந்த வருடத்தில் முதல் 9 மாதங்களில் எமது அரச வருமானத்தை 20.1 வீதத்தால் அதிகரித்துள்ளோம். அரச நிதி முகாமைத்துவம், வீண் செலவுகளை கட்டுப்படுத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஊடாகவே அதனை செய்ய முடிந்தது.

சுங்கத் திணைக்களம்,இறைவரித் திணைக்களம், வருமான வரித் திணைக்களம் என்பன பொருளாதாரத்தில் இதயமாகும். இந்த இதயம் காலங்களில் இயங்கவில்லை. இரத்த ஓட்டம் இருக்கவில்லை. ஆனால் நாங்கள் வந்து குறுகிய காலத்தில் அந்த இதயத்தை இயங்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். இதன்மூலமே அரச வருமானம் அதிகரித்துள்ளது. இந்த மாற்றங்கள் மூலமே நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து சில வரிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுற்றுலாத்துறையில் சில வரிகளில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களே நாட்டுக்கு அதிகளவில் பணம் அனுப்புகின்றனர். கடந்த வருடத்தில் 8.1 பில்லியன் டொலர் அனுப்பியுள்ளனர். இதுவே அதிகளவில் அனுப்பப்பட்ட தொகையாகும். இந்த வருடத்தில் அந்த இலக்கு 9 பில்லியன் டொலராக வரும். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே அதிகளவில் பணம் அனுப்புகின்றனர். இவர்களுக்கு தேவையான நிவாரணங்களை நாங்கள் வழங்குகின்றோம். பொருளாரத்தில் பலமடையும் போது அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கின்றோம். அதுவே எங்களின் இலக்காக உள்ளது. அஸ்வெசும போன்ற விடயங்கள் வழங்கப்படுகின்றது. குறுகிய காலத்தில் நாங்கள் பெற்ற வெற்றிகளை நாட்டு மக்கள் அனுபவிக்கவே வழங்குவோம்.

ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதம் முடிவடைந்த இருந்த நிலையில் அது நீடிக்கப்பட்டுள்ளது. 2017இல் இது தொடர்பில் நிபந்தனையொன்று விதிக்கப்பட்டிருந்தது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் இருந்தது. ஆனால் நாங்கள் ஏற்கனவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய அந்த சட்டத்தை நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னர் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இதனால் பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்காமல் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டியிருந்தது. பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்ள விடயங்கள் புதிய சட்டத்தில் கிடையாது. நாங்கள் கூறியதை செய்கின்றோம். ஒடுக்குமுறை சட்டத்தின் மூலம் அரசாங்கம் செயற்படக்கூடாது. என்றாவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதன்போது நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையிலேயே சட்டத்தை கொண்டு வருகின்றோம்.

அதேபோன்று பாதாள குழுக்கள் மற்றும் போதைப் பொருளை இல்லாமல் செய்யும் வகையிலேயே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஜீ.எஸ்.பி பிளஸ் நீங்குவதால் இல்லாமல் போகும் பொருளாரத்தை விடவும் போதைப் பொருளால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் ஏற்படும். இதனால் நாங்கள் முறையான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்படுகின்றது என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



97 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்!
[Friday 2026-11-20 19:00]

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, பாராளுமன்றத்தில் 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.​



சாந்தபுரம் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு நீதி கோரிய போராட்டத்தை பொலிஸ் தடுத்தது ஏன்?
[Friday 2026-11-20 19:00]

கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் 7 பேரால் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கோரியும், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பொலிஸார் அதற்கு இடையூறு ஏற்படுத்தி, நியாயம் கோரிய மக்களின் போராட்டத்தைத் தடுத்ததன் நோக்கம் என்னவென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.



எதிர்த்து வாக்களிக்க தமிழரசு முடிவு செய்தது ஏன்?
[Friday 2026-11-20 19:00]

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.



இந்த மாதம் பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டும்!
[Friday 2026-11-20 19:00]

இந்த மாத இறுதிக்குள் முதன்மைப் பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டக்கூடும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.



காற்றின் தரம் மோசம்- முக கவசம் அணிய பரிந்துரை!
[Friday 2026-11-20 19:00]

நாட்டின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.



கடினமான போராட்டங்களில் சிவாஜிலிங்கத்தின் அனுபவங்கள் ஒரு வழிகாட்டும் ஒளியாகத் தொடரும்!
[Friday 2026-11-20 19:00]

தமிழ் மக்களின் விடுதலை அபிலாசைகளை நனவாக்கும் முயற்சிகளில், தெற்கின் ஜனநாயக சக்திகள் மற்றும் உழைக்கும் வர்க்க இயக்கங்களுடன் இணைந்து தொடர்ந்து செயற்பட்ட வடக்கின் சிறந்த பிரதிநிதியாக எம்.கே. சிவாஜிலிங்கம் திகழ்ந்தார் என நவ சம சமாஜக் கட்சி (NSSP) மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி (USP) ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளன.



இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை 7000 ரூபாவினால் சரிவு!
[Friday 2026-11-20 19:00]

இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று 7,000 ரூபாயினால் குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு செட்டியார்த் தெருவின் இன்று (20) முற்பகல் 10.00 மணிக்குப் வௌியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 345,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 317,400 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.



உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு கிடைத்தது!
[Friday 2026-11-20 19:00]

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட வியாக்கியானம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.



20 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள்!
[Friday 2026-11-20 19:00]

இந்த ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 20 இலட்சமாவது சுற்றுலாப் பயணி இன்று நாட்டை வந்தடைந்துள்ளார்.



சாமர சம்பத்தின் பிணை மனு நிராகரிப்பு!
[Friday 2026-11-20 19:00]

இராஜாங்க அமைச்சராகக் கடமையாற்றிய காலப்பகுதியில், மூன்று நிறுவனங்களுக்குப் பொஸ்பேட் இறக்குமதி செய்வதற்காக உரிய நடைமுறைகளைப் பின்பற்றாது அனுமதிப்பத்திரங்களை வழங்கி, 84 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணைக் கோரிக்கையை நிராகரித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, சந்தேகநபரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிட்டார்.



செம்மணிப் புதைகுழி குறித்து அருட்தந்தை பேனாட்டிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு!
[Friday 2026-11-20 08:00]

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வுப்பிரிவினருக்கு வழங்குமாறு கனடாவில் வசித்துவரும் கத்தோலிக்க மதகுரு அருட்தந்தை அல்போன்சஸ் ஐ.பேர்னாட்டுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



கொள்கை வட்டிவீதத்தை உயர்த்தியது மத்திய வங்கி!
[Friday 2026-11-20 08:00]

நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.



இரண்டாம் வாசிப்பு மீது இன்று வாக்கெடுப்பு!
[Friday 2026-11-20 08:00]

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.



3 சட்டமூலங்களை முழுமையாக மீளப்பெறக் கோரி கூட்டுப் பிரகடனம்!
[Friday 2026-11-20 08:00]

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம், பயங்கரவாதத் தடைச் சட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றைத் திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும், அவற்றை முழுமையாக மீளப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கூட்டு பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.



அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தம்!
[Friday 2026-11-20 08:00]

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 2027 வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்காததன் காரணமாக, இன்று (20) நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு தீர்மானித்துள்ளது.



பிரகீத் எக்னெலிகொட வழக்கு - சாட்சி விசாரணைகளை நிறைவு செய்ய மேல் நீதிமன்றம் உத்தரவு!
[Friday 2026-11-20 08:00]

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகளை முழுமையாக நிறைவு செய்வதற்கு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.



சொரணதோட்ட பிரதேச சபையிலும் என்பிபி வரவுசெலவுத் திட்டம் தோல்வி!
[Friday 2026-11-20 08:00]

தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின் கீழுள்ள சொரணாதோட்ட பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 4 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.



சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பம்!
[Friday 2026-11-20 08:00]

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.



மேல் மாகாணத்தில் இந்த ஆண்டு 371 தீவிபத்துகளில் 26 பேர் பலி!
[Friday 2026-11-20 08:00]

மேல் மாகாணத்தில் மட்டும் இந்த ஆண்டு 371 தீப்பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தீயணைப்புச் சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



ஒருவரைக் கடத்தி கொலை செய்த ஈபிடிபி உறுப்பினர்கள் 8 பேருக்கு மரண தண்டனை!
[Thursday 2026-11-19 18:00]

மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் சுரேஸ்குமார் என்பவரைக் கடந்த 2008ஆம் ஆண்டு வானில் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஈபிடிபி உறுப்பினர்களான 8 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன், மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா