Untitled Document
November 27, 2026 [GMT]
சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல்! Top News
[Friday 2026-11-27 19:00]

மூதூர் கிழக்கு, சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.

மூதூர் கிழக்கு, சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.

  

திருகோணமலை மாவட்டம், மூதூர் கிழக்கு சம்பூர் – ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களை நினைவுகூர்ந்து ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று மாலை 6.05 மணியளவில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாவீரர் குடும்பத்தினர், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாவீரர்களின் நினைவாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அவர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர்களின் நினைவுகளைப் போற்றும் வகையிலும், அவர்களின் தியாகங்களை நினைவில் கொள்ளும் வகையிலும் சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

  
   Bookmark and Share Seithy.com



கண்ணீரால் நனைந்த கனகபுரம் துயிலுமில்லம்! Top News
[Friday 2026-11-27 19:00]

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாவீரர் நாள் பிரதான நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.



யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள்! Top News
[Friday 2026-11-27 19:00]

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்த நிகழ்வானது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது.



கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள்! Top News
[Friday 2026-11-27 19:00]

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாலை மாவீரர் நாளை முன்னிட்டு பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன் அதையடுத்து ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.



சுரேஷ் சாலேயின் ரிட் மனு தொடர்பான தீர்ப்பு இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைப்பு!
[Friday 2026-11-27 19:00]

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 2027 ஜனவரி 28ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.



பாடசாலைகள் டிசெம்பர் 4ஆம் திகதியுடன் மூடப்படும்!
[Friday 2026-11-27 19:00]

2026 ஆம் ஆண்டிற்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய வேண்டும் எனக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



லலித்- குகன் வழக்கு- கோட்டாவிடம் பெப்ரவரி 12இல் மீண்டும் விசாரணை!
[Friday 2026-11-27 19:00]

2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று நிர்ணயித்துள்ளது.



ஆழ ஊடுருவும் அணியினரால் படுகொலை செய்யப்பட்ட 8 பேரின் நினைவேந்தல்!
[Friday 2026-11-27 19:00]

துணுக்காய் – ஐயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி, இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரால் நோயாளர் காவு வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 19ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.



திங்கட்கிழமை வேலைநிறுத்தம் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் இணைகிறது!
[Friday 2026-11-27 19:00]

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நாடளாவிய ரீதியிலான தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்துகொள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தையடுத்து இன்று இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



மாவீரர் நாள் இன்று - நினைவேந்தலுக்கு தயாராகியுள்ள தமிழ் மக்கள்!
[Friday 2026-11-27 06:00]

தமிழ் இனத்தின் விடிவுக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும் போராடி சாவினைத் தழுவிய வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும். தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எங்கிலும் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்படவுள்ளன.



பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதையே எதிர்க்கும் உங்களால் இனப்பிரச்சினையை எப்படி தீர்க்க முடியும்?
[Friday 2026-11-27 06:00]

பாராளுமன்றத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்கே எதிர்ப்பு தெரிவிக்கும் உங்களால், இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்க முடியும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.



தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை ட்ரோனில் படம் பிடித்த இளைஞன் கைது!
[Friday 2026-11-27 06:00]

வல்வெட்டித்துறையில் வியாழக்கிழமை நடைபெற்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நிகழ்வின்போது, அனுமதியின்றி ட்ரோன் கமராவைப் பயன்படுத்திப் படம்பிடித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுப் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.



புதிய சட்டத்தால் ஜனநாயகம் மரணிக்கும்- சாணக்கியன் எச்சரிக்கை!
[Friday 2026-11-27 06:00]

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்ட அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் சட்டமானால் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மரணிக்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எச்சரிக்கை விடுத்தார்.



29ஆம் திகதி வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகக்கூடும்!
[Friday 2026-11-27 06:00]

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நவம்பர் 29 ஆம் திகதியளவில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



பெருமளவு போதைப்பொருளுடன் சிக்கியது மற்றொரு படகு!
[Friday 2026-11-27 06:00]

தேவேந்திரமுனைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ஹெரோயின் மற்றும் ஐஸ் என சந்தேகிக்கப்படும் பொருட்களை கடத்திச் சென்ற படகொன்றுடன் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



வடக்கு, கிழக்கில் புதிதாக காணிகளை ஆக்கிரமிக்கவில்லை!
[Friday 2026-11-27 06:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனஜீவராசிகள் திணைக்களம் புதிதாக காணிகளை ஆக்கிரமிக்கவில்லை. என சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி தெரிவித்தார்.



இன்றும் மழைக்கு வாய்ப்பு!
[Friday 2026-11-27 06:00]

நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (27) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.



ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் சட்டங்களை இயற்றமாட்டோம்!
[Friday 2026-11-27 06:00]

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கு பலமாக சட்டங்களை உருவாக்க வேண்டும். நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் வகையில் எச்சந்தர்ப்பத்திலும் சட்டமியற்ற போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.



ஒல்லாந்தர் எடுத்துச் சென்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கிறது நெதர்லாந்து!
[Friday 2026-11-27 06:00]

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராஜ்ஜியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கைக்கு உரித்தான இரண்டு துப்பாக்கிகளை மீண்டும் நாட்டிற்கே கையளிப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



வல்வெட்டித்துறையில் தலைவர் பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள்! Top News
[Thursday 2026-11-26 17:00]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்று வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு, அவரது பூர்வீக வீடு அமைந்திருந்த காணி சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.



இலங்கை அரசாங்கம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்!
[Thursday 2026-11-26 17:00]

ஆயுத மோதலின் போது மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முழுமையான இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா