Untitled Document
November 29, 2026 [GMT]
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த ஐ.நா. உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
[Sunday 2026-11-29 20:00]


நாட்டில் உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாத நிலை தொடர்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது.

நாட்டில் உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாத நிலை தொடர்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது.

  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, நாட்டில் பல தசாப்தங்களாக நீடிக்கும் தண்டனையிலிருந்து விலக்களிக்கும் போக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பணிப்பாளர் ஸ்மிருதி சிங், நாட்டில் சர்வதேச சட்டங்களின் கீழான குற்றங்களுக்கு தீர்வு காண்பதில் முன்னேற்றம் இல்லாததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகள் இன்னும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் விருப்பமின்றிச் செயற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சிறுவர்கள் உட்பட 583க்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்ட செம்மணி போன்ற இடங்களில் மனிதப் புதைகுழிகள் தொடர்ந்து அடையாளம் காணப்படுகின்றமை, குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை நீடிப்பது குறித்த கவலையை அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொறுப்புக்கூறல் இல்லாமையும், தொடர்ச்சியான தண்டனை விலக்கும் ஏனைய நாடுகளில் சர்வதேச சட்டங்களை மீறுவோருக்கு ஊக்கமளிக்கக்கூடும் எனவும், இதனைத் தடுப்பதற்கு தொடர்ச்சியான சர்வதேச கண்காணிப்பு அவசியம் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கைக்கான பொறுப்புக்கூறல் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதுடன், சர்வதேச நியாயாதிக்கக் கோட்பாடுகள் உள்ளிட்ட வழிமுறைகள் மூலம் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த ஐ.நா. உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



அரச சேவையின் அனைத்து ஊழியர்களும் நாளைய தினம் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
[Sunday 2026-11-29 20:00]

அரச மற்றும் மாகாண அரச சேவையின் அனைத்து ஊழியர்களும் நாளைய தினம் சுகயீன விடுமுறைப் போராட்ட தொழிற்சங்க நடவடிக்கையில் இணையவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.



4 பில்லியன் ரூபா ஐஸ் சிக்கியது!
[Sunday 2026-11-29 20:00]

மாத்தறை, மிரிஸ்ஸ தல்அரம்ப கடற்கரைப் பகுதியில் நேற்று கண்டெடுக்கப்பட்ட 17 உறைகளில் இருந்த 340 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 346 கிலோகிராம் மற்றும் 184 கிராம் நிறையுடைய 'ஐஸ்' போதைப்பொருள் தொகை என்பது, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் நிபுணத்துவ உதவியுடன் இன்று (29) மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



புலனாய்வுத் தகவல்கள் எனக்கு அறிவிக்கப்படவில்லை!
[Sunday 2026-11-29 20:00]

2019 உயிர்த்த ஞாயிறு தினத் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னர் தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அவை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.



நாளை பாடசாலைகள் இயங்கும்- என்கிறார் கல்வி அமைச்சின் செயலாளர்.
[Sunday 2026-11-29 20:00]

நாளை (நவம்பர் 30) வழமையான பாடசாலை நாளாக இயங்கும் எனத் தெரிவித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ, திட்டமிடப்பட்ட அனைத்துக் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளையும் எவ்வித இடையூறுமின்றி எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு சகல பாடசாலைகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.



அடுத்த ஆண்டு மழை வீழ்ச்சி குறையும்!
[Sunday 2026-11-29 20:00]

கடந்த சில மாதங்களாக இலங்கையின் வானிலையில் ‘எல் நினோ’ வானிலை நிகழ்வு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் காரணமாக முன்னைய ஆண்டுகளை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலையாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் பலி!
[Sunday 2026-11-29 20:00]

மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் உள்ள வீட்டின் மேல் மாடியின் கூரைப்பகுதியில் திருத்தவேலைகளில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.



இராணுவத்தின் முன்னாள் லெப்.கேணல் சுட்டுக் கொலை- மூவர் கைது!
[Sunday 2026-11-29 20:00]

ரத்கம, மாலியதுவ சீனப் பிட்டனிய பகுதியில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் கேணல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.



தடை செய்யப்பட்ட சின்னங்களை பயன்படுத்தியவர்கள் கைது!
[Sunday 2026-11-29 06:00]

வடக்கில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வுகள் தொடர்பில் பொலிஸார் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர். இதன்போது விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் சின்னங்கள் மற்றும் அடையாளங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட விடயங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தொடர்பில் சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.



தமிழீழ காவல்துறையை வியந்த பாராட்டிய ரவிகரன்!
[Sunday 2026-11-29 06:00]

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வடகிழக்கில் தமிழீழ காவல் துறையினர் நிலைகொண்டிருந்தனர். அவர்கள் நீலவண்ண ஆடைகளில் பணியாற்றியவர்கள். மிகுந்த ஒழுக்க சீலர்கள். குடிபோதையை முற்றுந் துறந்தவர்கள். வீதிப்போக்குவரத்திலும் சட்டம் ஒழுங்கிலும் மிகுந்த கரிசனையோடு செயற்பட்டவர்கள். அவர்களின் காலத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட எங்களுக்கு தற்போதைய பொலிஸாரின் அணுகுமுறை மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக தெரிகின்றது என வன்னிமாவட்ட எம்.பி துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.



வடக்கில் இராணுவத்தைக் குறைத்து நிலங்களை ஒப்படைத்தால் அரசுக்கு நன்மதிப்பு கிட்டும்!
[Sunday 2026-11-29 06:00]

வடக்கில் இராணுவத்தை குறைத்து, பொதுமக்களின் காணிகளை மீளக் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் அந்த மக்களின் மனங்களில் நல்ல இடத்தை பிடித்துக்கொள்ளும் வாய்ப்பு இந்த அரசாங்கத்திற்கு கிடைக்கும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட எம்.பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



பாதுகாப்பு அமைச்சின் செலவினங்களுக்கு ஒப்புதல்!
[Sunday 2026-11-29 06:00]

2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் (ஒதுக்கீட்டுச் சட்டமூலம்) குழுநிலை விவாதத்தின் ஆறாவது நாளான நேற்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் செலவினத் தலைப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.



முப்படையினரை பலப்படுத்த 2030ல் மறுசீரமைப்புத் திட்டம்!
[Sunday 2026-11-29 06:00]

அரசாங்கம் என்றவகையில் தேசிய பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமே தவிர, பலவீனப்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. அதனால் எதிர்காலத்தில் நாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் அழுத்தங்களுக்கு முகம்கொடுப்பதற்கும் அடக்குவதற்கும் தேவையான முறையில் முப்படையினரை பலப்படுத்த, 2030ல் மறுசீரமைக்கும் திட்டம் ஒன்று எமக்கு இருக்கிறது. அதற்காக ஓய்வுபெற்ற ராணுவ தளபதிகளைக்கொண்ட குழுவொன்றை நியமிக்க இருக்கிறோம் என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.



படகில் இருந்து வாகனத்தில் ஏற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகள் மீட்பு!
[Sunday 2026-11-29 06:00]

மிரிஸ்ஸ, தல்அரம்ப பகுதியில் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினரும், இலங்கை கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ​​போதைப்பொருள் அடங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 16 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.



கிழக்கில் காணிகள் விடுவிப்பில் திருப்தியில்லை!
[Sunday 2026-11-29 06:00]

மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவ முகாம்கள் இருக்கும் தனியார் காணிகளின் விடுவிப்பு தொடர்பில் இதுவரையில் திருப்தியடையும் அளவுக்கு தீர்வு கிடைக்கவில்லை. பலாலி, வசாவிளான், மயிலிட்டி, கேப்பாபிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக வீதியில் போராடுகின்றனர். அந்த காணிகளை விரைவாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசுக்கட்சி உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.



நாளை ரயில்கள் வழமை போல இயங்கும்!
[Sunday 2026-11-29 06:00]

எதிர்வரும் 30ஆம் திகதி அனைத்து ரயில்களும் வழமை போன்று சேவையில் ஈடுபடும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.



மோடியைச் சந்தித்தார் விஜித ஹேரத்!
[Sunday 2026-11-29 06:00]

இந்து சமுத்திர விளிம்பு நாடுகளின் சங்கத்தின் 25ஆவது அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடெல்லி சென்றுள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார்.



திருகோணமலை துறைமுகத்தில் எண்ணெய் கசிவு!
[Sunday 2026-11-29 06:00]

திருகோணமலைத் துறைமுகத்தின் 'பூம் கோவ்' (Boom Cove) பகுதியில் நேற்று முற்பகல் 7.30 மணியளவில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவினால் உருவான எண்ணெய்ப் படலத்தை அகற்றும் நடவடிக்கைகளை இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.



வடக்கு ,கிழக்கில் காணிகளைக் கைப்பற்றவில்லையாம்!
[Saturday 2026-11-28 16:00]

வடக்கு கிழக்கு மாகாணங்களில் எங்கும் காணிகளைக் கைப்பற்றவில்லை என்றும், மாறாகத் தேசிய பாதுகாப்புக் கருதி அவற்றைப் பயன்படுத்தி வருவதாகவும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர சபையில் தெரிவித்தார்.



ஊழல் ஒழிப்பைத் தவிர அரசாங்கத்திடம் வேறு கொள்கை இல்லை!
[Saturday 2026-11-28 16:00]

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைப் பாராட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அத்திட்டத்தைத் தவிர அரசாங்கத்திடம் வேறு எந்தக் கொள்கையும் இல்லை எனவும், மற்றொரு வர்க்கத்திற்கு எதிராக வர்க்க வெறுப்பைத் தூண்டி வருவதை அவர்கள் இன்னும் சரிசெய்து கொள்ளவில்லை எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.



பஸ் மீது உருண்டு விழுந்த கற்பாறை- ஒருவர் பலி!
[Saturday 2026-11-28 16:00]

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மீது மலையிலிருந்து உருண்டு விழுந்த பாரிய கற்பாறை மோதியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா