Untitled Document
November 17, 2024 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



உரத்தோடும் உறுதியோடும் தமிழ்த் தேசியப் பயணம் தொடரும்!
[Sunday 2024-11-17 05:00]

வலிமை மிகு வாக்குகளால் எனக்கு ஆணை வழங்கிய மக்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி. உரத்தோடும் உறுதியோடும் எனது தமிழ்த் தேசியப் பயணம் தொடரும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் இருந்து மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.



இனி ஜெனிவாவில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது!
[Sunday 2024-11-17 05:00]

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். அரசியல் கட்டமைப்பில் இருந்து தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ஜெனிவாவில் இனி கேள்வியெழுப்ப முடியாது என சட்டத்தரணி பிரதீபா மஹாநாம தெரிவித்தார்.



புதிய சபாநாயகராக பிமல் ரத்நாயக்க?
[Sunday 2024-11-17 05:00]

பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.



தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கேட்கிறார் நடராஜ்!
[Sunday 2024-11-17 05:00]

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை வடக்கில் வாழ்கின்ற மலையக மக்கள் சார்பாக தனக்கு தந்து உதவுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.பி நடராஜ் அந்த கட்சியின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.



வடக்கு, கிழக்கில் ஏழரை இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை!
[Sunday 2024-11-17 05:00]

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் 22,20,311 வாக்காளர்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 14,70,549 பேர் வாக்களித்த நிலையில் 7,49,762 பேர் வாக்களிக்காததுடன் 94,489 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.



அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை!
[Sunday 2024-11-17 05:00]

வெற்றிக்கான போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளார்.



தேசியப் பட்டியல் ஆசனம் யாருக்கு?- தமிழரசின் முடிவு இன்று.
[Sunday 2024-11-17 05:00]

2024 பொதுத் தேர்தலில், ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கப்பெற்றுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான, குறித்த அரசியல் கட்சிகளால் பரிந்துரைக்கப்படும் பெயர் பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு பெற்றுத்தருமாறு அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



ஒன்றரை இலட்சம் வாக்குகளை இழந்த சஜித்!
[Sunday 2024-11-17 05:00]

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கடந்த பாராளுமன்ற தேர்தலை விட கணிசமாக குறைந்துள்ளது.2020 பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 305,744 வாக்குகளை பெற்றிருந்தார். எனினும், இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அவரால் 145,611 வாக்குகளையே பெற முடிந்தது.



196 எம்.பிக்களின் பெயர்களுடன் வெளியானது விசேட வர்த்தமானி!
[Sunday 2024-11-17 05:00]

10 ஆவது பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 196 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.



செலவுக்கணக்கு வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை! - எச்சரிக்கிறது ஆணைக்குழு.
[Sunday 2024-11-17 05:00]

தேர்தல் முடிவுகள் வெளியாகி 21 நாட்களுக்குள் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு அறிக்கையை தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



ஒற்றையாட்சிக்கு எதிராகவே தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்!
[Saturday 2024-11-16 17:00]

ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80 ஆயிரம் வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. ஈபிடிபி மற்றும் அங்கஜன் போன்றோரின் வாக்குகளே தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது. அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.



தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்!
[Saturday 2024-11-16 17:00]

கடந்த எழுபது ஆண்டு கால அரசியல் உரிமைக்கான ஜனநாயக மற்றும் ஆயுதப் போராட்டங்களை எதிர்கொண்ட தமிழினம் பல்வேறு விதமான இழப்புகளையும், நெருக்கடிகளையும், வலிகளையும், வாழ்வியல் சுமைகளையும் எதிர்கொண்டு வருகிறது. எனவே தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.



திங்கட்கிழமை புதிய அமைச்சரவை!
[Saturday 2024-11-16 17:00]

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை, எதிர்வரும் திங்கட்கிழமை நியமிக்கப்படும் என, தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன்படி 25 பேருக்கும் குறைவான அமைச்சரவையொன்று நியமிக்கப்படும் என, தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.



பின்கதவு வழியாக நாமலும் நாடாளுமன்றம் நுழைகிறார்!
[Saturday 2024-11-16 17:00]

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு, கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார். இன்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார்.



நாடாளுமன்றில் ஒரே அணியாக இணைந்து செயற்பட நடவடிக்கை!
[Saturday 2024-11-16 17:00]

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சினைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.



சுமந்திரன் வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்!
[Saturday 2024-11-16 17:00]

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதியை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென சுயேச்சைக் குழு 14 இல் போட்டியிட்ட, சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்றம் செல்லும் 12 பெண்கள்!
[Saturday 2024-11-16 17:00]

நடைபெற்று முடிந்துள்ள 10 ஆவது பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக 12 பெண்கள் பாராளுமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள். தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட மேற்படி வேட்பாளர்களில் நான்கு தமிழ் பெண்கள் தெரிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.



கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது!
[Saturday 2024-11-16 16:00]

கொழும்பில் பாராளுமன்றத்திற்கான தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.



17 முஸ்லிம் எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு!
[Saturday 2024-11-16 16:00]

2024 பொதுத் தேர்தலில் 17 முஸ்லிம் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ளனர்.



புதிய எம்.பிக்களுக்கு செயலமர்வு!
[Saturday 2024-11-16 16:00]

10 வது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக, பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.


Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா