Untitled Document
September 25, 2024 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



யாழ்ப்பாணத்தில் 6 ஆக குறையும் எம்.பிக்கள்! - வன்னியில் 6 ஆக அதிகரிப்பு.
[Wednesday 2024-09-25 18:00]

2024 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு இலங்கை தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.



மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!
[Wednesday 2024-09-25 18:00]

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படட்டுள்ளனர்.



அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள்!
[Wednesday 2024-09-25 18:00]

மிகநீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்து உங்கள் நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.



குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
[Wednesday 2024-09-25 18:00]

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை மாலை நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் வரை உயர் நீதிமன்ற வளாகத்தினுள் விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி அனுர!
[Wednesday 2024-09-25 18:00]

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். இந்த விசேட உரையானது இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.



மீள் பரீட்சையா?- இந்த வாரம் தீர்மானம்!
[Wednesday 2024-09-25 18:00]

புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாள் கசிந்த நிலையில், குறித்த பரீட்சையை மீண்டும் நடத்துவதா இல்லையா என்பது குறித்து இந்த வாரத்திற்குள் தீர்மானம் எடுக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.



மன்னாரில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[Wednesday 2024-09-25 18:00]

மன்னார், தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் உளவுப் பிரிவினருடன் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 12 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



ரணில் ஆட்சியில் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிகள் ரத்து!
[Wednesday 2024-09-25 18:00]

ரணில் ஆட்சியின் இறுதிக்காலகட்டத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை லைசன்களை (அனுமதிபத்திரம்) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்ய ஜனாதிபதி அனுர உத்தரவிட்டுள்ளார்.



தபால் மூல வாக்களிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
[Wednesday 2024-09-25 18:00]

பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



பிரசார செலவுப் பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவு!
[Wednesday 2024-09-25 17:00]

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும், எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர், தேர்தல் ஆணைக்குழுவிடம் தமது பிரசார செலவுப் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



பாராளுமன்றம் கலைப்பு - நவம்பர் 14இல் தேர்தல்!
[Wednesday 2024-09-25 06:00]

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்கவின் கையெழுத்துடனான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.



வடக்கு ஆளுநராக வேதநாயகன் நியமனம்! - இன்று பதவியேற்கிறார்.
[Wednesday 2024-09-25 06:00]

வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் அவர் இன்று ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.



தமிழ் தேசியத்தை நேசித்து அரியநேத்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றி!
[Wednesday 2024-09-25 06:00]

பொதுக்கட்டமைப்பின் அழைப்பை ஏற்று மிகவும் குறுகிய ஒரு காலப்பகுதியில் எந்தவிதமான முன்னாயத்தங்களும் இல்லாமல் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கும், தமிழ் தேசியத்தை நேசித்து அதனை பலப்படுத்தும் வகையில் அரியநேத்திரனுக்கு வாக்களித்த அத்தனை தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.



பொருளாதார பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்றால் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்!
[Wednesday 2024-09-25 06:00]

நாட்டின் பொருளாதார பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்றால் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்களின் எண்ணக்கிடக்கை ஐனாதிபதிக்கும் வெளியுலகிற்கும் புரிந்துகொள்ளக் கூடியது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமசந்திரன் தெரிவித்துள்ளார்.



வினாத்தாள் கசிந்த முறைகேடு -மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது!
[Wednesday 2024-09-25 06:00]

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முறைகேடு தொடர்பில் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.



களுதாவளையில் மனைவி கொலை? - கணவனை தேடுகிறது பொலிஸ்.
[Wednesday 2024-09-25 06:00]

மட்டக்களப்பு - களுதாவளை 4 ஆம் பிரிவு பாலர் பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக செவ்வாய்க்கிழமைமாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.



ஜனாதிபதி முறையை ஒழிக்க ஆதரவு வழங்கத் தயார்!
[Wednesday 2024-09-25 06:00]

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கும், தேர்தல் முறையை மாற்றுவதற்கும் தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்தால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது பூரண ஆதரவை வழங்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



15 அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம் - ஒருவர் தமிழர்!
[Wednesday 2024-09-25 06:00]

பிரதமரின் செயலாளர் மற்றும் அமைச்சரவை செயலாளர் போன்ற முக்கிய பதவிகளை வகிக்கும் 15 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



14 வயது மாணவன் துஷ்பிரயோகம் - பெண் ஆசிரியர் கைது!
[Wednesday 2024-09-25 06:00]

வவுனியாவில் 14 வயது மாணவன் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பயிலுனர் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



மாமன்- மருமகன் போதையில் மோதல்! - மருமகன் படுகாயம்.
[Wednesday 2024-09-25 06:00]

கிளிநொச்சி - பெரியகுளம் பகுதியில் மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மருமகன், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா