Untitled Document
December 24, 2024 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



இனப்படுகொலைக்கான நீதிக்கு ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்!
[Tuesday 2024-12-24 16:00]

தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச ரீதியில் நீதி தேடவேண்டிய தேவை இருப்பதால் அது தொடர்பில் ஈழத் தமிழ் புலம் பெயர் பிரமுகர்கள் ஒன்றுபட்டு கூட்டாக செயற்பட வேண்டிய தேவை இருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கனடாவில் தெரிவித்துள்ளார்.



வாக்குறுதிகளை சாத்தியமாக்குவது இலங்கை அரசாங்கத்துக்கு சவால்மிக்கது!
[Tuesday 2024-12-24 16:00]

பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் என்பன சார்ந்து வழங்கியிருக்கும் வாக்குறுதிகளை சாத்தியமாக்குவது இலங்கை அரசாங்கத்துக்கு சவால்மிக்கது என இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்த்தானிகர் யஷ்வர்தன் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.



தலைமன்னாரில் 17 இந்திய மீனவர்கள் கைது!
[Tuesday 2024-12-24 16:00]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்தோடு, மீனவர்களையும் படகுகளையும் தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்து விசாரணைகளுக்கு உற்படுத்தி வருகின்றனர்.



மதுபானக் கடைகளை மூடக் கோரி கிளிநொச்சியில் போராட்டம்!
[Tuesday 2024-12-24 16:00]

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் இன்று கிளிநொச்சியில் இடம் பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.



மாவை என்னை வளர்க்கவுமில்லை, அவரது மார்பில் நான் பாயவும் இல்லை!
[Tuesday 2024-12-24 16:00]

கடந்த 2015ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாவை சந்தித்தபோது அவர் தன்னைக் கட்சியில் சேர்க்க முடியாது என தெரிவித்ததாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.



மீண்டும் வெளிமாவட்டம் செல்ல வேண்டி வரும்! - யாழ். ஆசிரியர்களுக்கு ஆப்பு வைத்த ஆளுநர்.
[Tuesday 2024-12-24 16:00]

யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதால், வெளிமாவட்டங்களில் அவர்கள் மீண்டும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் மீண்டும் பணிபுரிய வேண்டிய நிலைமை ஏற்படலாம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தெரிவித்துள்ளார்.



இறக்குமதி செய்தும் அரிசி விநியோகத்தில் சிக்கல்- ஒப்புக் கொள்கிறது அரசாங்கம்!
[Tuesday 2024-12-24 16:00]

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியை விநியோகிக்கும் முறையில் சிக்கல்கள் இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. அதனை நிவர்த்தி செய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



மோடியின் மௌனத்துக்கு தமிழ் கட்சிகளின் அழுத்தம் இன்மையே காரணம்!
[Tuesday 2024-12-24 16:00]

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் கடந்தவாரம் புதுடில்லியில் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் தொடர்பில் மௌனம் சாதித்தமை இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளிடமிருந்தும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளிடமிருந்தும் நெருக்குதல்கள் இல்லாததன் விளைவு என்றுை இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் கூறியிருக்கிறார்.



மகிந்தவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை பாரதூரமானது!
[Tuesday 2024-12-24 16:00]

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை பாரதூரமானது எனவும், அரசாங்கமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



வாழைக்குலையுடன் சந்தைக்கு சென்றவர் மயங்கி விழுந்து மரணம்!
[Tuesday 2024-12-24 16:00]

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது 64) என்பவரே உயிரிழந்தவராவார்.



உள்ளூராட்சித் தேர்தல் சட்டத் திருத்தத்தை விரைவுபடுத்த உத்தரவு!
[Tuesday 2024-12-24 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்யாமல் உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் வாக்கெடுப்பு தினத்தை தீர்மானிப்பதில் சட்ட சிக்கல் காணப்படுகிறது. ஆகவே சட்டத்திருத்த பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளது.



மேலும் 13 தரமற்ற மருந்துகள் இறக்குமதி!
[Tuesday 2024-12-24 06:00]

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 13 வகை மருந்துகள் முறையான தரமின்மை காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்குள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.



கிளீன் சிறிலங்கா திட்டம் புத்தாண்டு தினத்தில் ஆரம்பம்!
[Tuesday 2024-12-24 06:00]

Clean Sri Lanka வேலைத்திட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 341 உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் குறிப்பிட்டார்.



பணவீக்கம் மேலும் குறைந்தது!
[Tuesday 2024-12-24 06:00]

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த ஆண்டுச் சராசரி முதன்மைப் பணவீக்கம் 2024 நவம்பரில் -1.7% ஆக மேலும் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.2024 ஒக்டோபரில் பணவீக்கம் -0.7% ஆக பதிவாகியிருந்ததாக மக்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



அரிசி இறக்குமதிக்கான அனுமதி நீடிப்பு!
[Tuesday 2024-12-24 06:00]

தொடரும் அரிசி தட்டுப்பாடு காரணமாக, ஜனவரி 10 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



தனியார் வகுப்புகளுக்கு தடைவிதிக்கும் உத்தரவு- இடைநிறுத்த ஆளுநர் பணிப்பு!
[Tuesday 2024-12-24 06:00]

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது சொந்த பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கட்டணத்துடன் பிரத்யேக வகுப்புகளை நடாத்துவதற்கு தடை விதித்து அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணத்தில் டெங்கு பரவல் அதிகரிப்பு!
[Tuesday 2024-12-24 06:00]

யாழ். மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.



சித்திரை புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சித் தேர்தல் சாத்தியமற்றது!
[Tuesday 2024-12-24 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நடத்துவது சாத்தியமற்றது. மார்ச் - ஏப்ரல் வரையான காலப்பகுதியில் சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ளதால் மே மாதமளவில் தான் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.



மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்!
[Tuesday 2024-12-24 06:00]

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து இதற்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதேச செயலகத்தின் முன்னாள் உத்தியோகத்தர்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சரணடைந்தார் ஞானசார- பிடியாணை ரத்து!
[Tuesday 2024-12-24 06:00]

இஸ்லாத்தை அவமதித்த மற்றும் மத நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலபட அத்தே ஞானசார தேரரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க திங்கட்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார்.


NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா