Untitled Document
April 16, 2025 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



மக்கள் போராட்டங்களை கையாள என்பிபிக்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவைப்படுகிறது!
[Wednesday 2025-04-16 07:00]

தமக்கு எதிரான மக்கள் போராட்டங்களை கையாள பயங்கரவாத தடைச்சட்டம் என்.பி.பி எனப்படுகிறது ஜே.வி.பி க்கு தேவையாக இருக்கின்றது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



கம்பஹா நகரில் துப்பாக்கிச் சூடு!
[Wednesday 2025-04-16 07:00]

கம்பஹா நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள், சிறிய லொரி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



அதிகளவில் தண்ணீரை பருகுமாறும் அறிவிப்பு!
[Wednesday 2025-04-16 07:00]

நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம் நிலவும் என்பதால், கவனம் செலுத்துமாறும் அதிகளவில் தண்ணீரை பருகுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.



தப்பிச் செல்ல முயன்ற துப்பாக்கிதாரி கட்டுநாயக்கவில் கைது!
[Wednesday 2025-04-16 07:00]

பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளரின் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.



போலி செய்திகள் குறித்து பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
[Wednesday 2025-04-16 07:00]

சமூக ஊடகங்களில் தன்னை குறிவைத்து பரவும் தொடர்ச்சியான போலி செய்திகள் குறித்து துணை அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். தவறான தகவல் பிரச்சாரம் வேண்டுமென்றே இட்டுக்கட்டப்பட்ட உள்ளடக்கத்தை உள்ளடக்கியது என்று பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.



சூரிய படல மின் உற்பத்தியாளருக்கு அவசர அறிவித்தல்!
[Wednesday 2025-04-16 07:00]

மின் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மின்சார சபை வெளியிடும் குறுஞ்செய்தி கிடைக்கப்பெறும் பட்சத்தில் வீட்டின் கூரைகளில் உள்ள சூரிய மின்படலங்களை செயலிலிருந்து நீக்குமாறு மின்சார சபை கோரியுள்ளது.



பிள்ளையானை சந்திக்க முயன்ற ரணில் - சிஐடி மறுப்பு!
[Tuesday 2025-04-15 16:00]

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஊடகம் தெரிவித்துள்ளார்.



இனப்படுகொலையை மூடி மறைக்கவே மனித புதைகுழி அகழ்வுக்கு தயக்கம் காட்டுகிறது!
[Tuesday 2025-04-15 16:00]

தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மூடிமறைக்கும் முயற்சியாகவே, செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டுகிறார்.



நிராகரிப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்றவர்களை தொடர்பு கொள்ளுமாறு கோருகிறது ஆணைக்குழு!
[Tuesday 2025-04-15 16:00]

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.



மோட்டார் சைக்கிள் மோதி வீதியோரத்தில் நின்றவர் பலி!
[Tuesday 2025-04-15 16:00]

வீதியோரமாக நின்று கதைத்துக் கொண்டிருந்தவர் மீது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த இரட்ணவடிவேல் இரவீந்திரன் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



யானை மீது மோதிய மோட்டார் சைக்கிள் - இளைஞன் பலி!
[Tuesday 2025-04-15 16:00]

திருகோணமலை - ஹொரவபொத்தானை பிரதான வீதியில் கன்னியா பகுதியில் யானை மீது மோதி மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.அவரது நண்பன் படுகாயமடைந்துள்ளார்.



அடைத்து வைக்கப்பட்ட சிறுவன் மாடியில் இருந்து குதித்து காயம்!
[Tuesday 2025-04-15 16:00]

இரண்டு மாடி வீட்டில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 12 வயது சிறுவன், அறையில் இருந்த ஜன்னலைத் திறந்து வெளியே குதித்ததால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்



வெப்பமான வானிலை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்!
[Tuesday 2025-04-15 16:00]

தற்போது நிலவும் வெப்பமான வானிலை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று உடலியல் நிபுணர் வைத்தியர் நந்தன திக்மதுகொட கூறுகிறார்.



ரிஷாத் - அதாவுல்லா கட்சியினர் மோதல் - பலர் வைத்தியசாலையில்!
[Tuesday 2025-04-15 16:00]

அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார்!
[Tuesday 2025-04-15 16:00]

தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



தென்னையில் இருந்து தவறி விழுந்தவர் மரணம்!
[Tuesday 2025-04-15 16:00]

கள் இறக்குவதற்காக தென்னை மீது ஏறியவர், தவறி வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்தார். நேற்றுக் காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கல்வியங்காட்டைச் சேர்ந்த சின்னத்துரை ரவி (வயது 44) என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தார்.



கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!
[Tuesday 2025-04-15 05:00]

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அலுவலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பௌத்த, சிங்களப் பேரினவாதத்தை நிறுவனமயப்படுத்தியது ஜேவிபியே!
[Tuesday 2025-04-15 05:00]

தென்னிலங்கை அரசியலும் பௌத்தமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தென்னிலங்கை அரசியலில் பௌத்த, சிங்களப் பேரினவாதம் கோலோச்சி வந்துள்ளது. ஆனால், அதனை நிறுவனமயப்படுத்தி பிக்குகளுக்கென்று தனியானதொரு அணியை உருவாக்கியது ஜே.வி.பி. மாத்திரமே. ஜே.வி.பியின் முன்னணி அமைப்புகளில் மகளிர் அணி, உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அணிகளுடன் மூன்றாவதாக பிக்குகளுக்கென்று தனியானதொரு அணியும் உருவாக்கப்பட்டது.



முல்லைத்தீவில் தடம் புரண்ட தூக்குக் காவடி- நேர்த்திக்கடன் செலுத்த முயன்ற இளைஞர்கள் காயம்!
[Tuesday 2025-04-15 05:00]

முல்லைத்தீவு- குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கலுக்கு நேர்த்திக்கடனுக்காக சென்ற தூக்குகாவடி கட்டப்பட்ட உழவுஇயந்திரபெட்டி தடம்புரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



நீச்சல் தடாகத்தில் குளித்த இளைஞன் நீரில் மூழ்கி மரணம்!
[Tuesday 2025-04-15 05:00]

வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது.


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா