Untitled Document
April 15, 2025 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!
[Tuesday 2025-04-15 05:00]

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அலுவலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பௌத்த, சிங்களப் பேரினவாதத்தை நிறுவனமயப்படுத்தியது ஜேவிபியே!
[Tuesday 2025-04-15 05:00]

தென்னிலங்கை அரசியலும் பௌத்தமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தென்னிலங்கை அரசியலில் பௌத்த, சிங்களப் பேரினவாதம் கோலோச்சி வந்துள்ளது. ஆனால், அதனை நிறுவனமயப்படுத்தி பிக்குகளுக்கென்று தனியானதொரு அணியை உருவாக்கியது ஜே.வி.பி. மாத்திரமே. ஜே.வி.பியின் முன்னணி அமைப்புகளில் மகளிர் அணி, உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அணிகளுடன் மூன்றாவதாக பிக்குகளுக்கென்று தனியானதொரு அணியும் உருவாக்கப்பட்டது.



முல்லைத்தீவில் தடம் புரண்ட தூக்குக் காவடி- நேர்த்திக்கடன் செலுத்த முயன்ற இளைஞர்கள் காயம்!
[Tuesday 2025-04-15 05:00]

முல்லைத்தீவு- குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கலுக்கு நேர்த்திக்கடனுக்காக சென்ற தூக்குகாவடி கட்டப்பட்ட உழவுஇயந்திரபெட்டி தடம்புரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



நீச்சல் தடாகத்தில் குளித்த இளைஞன் நீரில் மூழ்கி மரணம்!
[Tuesday 2025-04-15 05:00]

வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது.



இன்று முதல் 3 நாட்களுக்கு நண்பகல் வரை மட்டுமே கடவுச்சீட்டு விநியோகம்!
[Tuesday 2025-04-15 05:00]

ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் வழக்கமான கடவுசீட்டு சேவைகளுக்கான டோக்கன்கள் வழங்குவது கட்டுப்படுத்தப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த நாட்களில் நண்பகல் 12 மணி வரை மட்டுமே சேவைகள் வழங்கப்படும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



கொளுத்தும் வெயில் - சூடு பிடித்துள்ள வெள்ளரிப்பழ வியாபாரம்!
[Tuesday 2025-04-15 05:00]

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, கரையோரப் பகுதிகளில் உள்ள பிரதான வீதியோரங்களில் வெள்ளரிப்பழம் உள்ளிட்ட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.



சிறுவர்கள் துஸ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருக்கு விளக்கமறியல்!
[Tuesday 2025-04-15 05:00]

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விளையாட்டு உத்தியோத்தர் நீதிமன்றத்தில் முட்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



ஊர் திரும்பியவர்களுக்கான விசேட ரயில் சேவை!
[Tuesday 2025-04-15 05:00]

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக விசேட ரயில் சேவை ஒன்றை செயல்படுத்தியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.



நிலாவெளியில் வீடு தீக்கிரை!
[Tuesday 2025-04-15 05:00]

திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இக்பால் நகர் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபரொருவர் தீ வைத்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் நிலாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை (14) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.



சுமந்திரனின் சதியால் தான் தமிழரசு கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன்!
[Tuesday 2025-04-15 05:00]

தமிழரசு கட்சியின் தற்போதைய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் சுமந்திரனின் சதி முயற்சியால் தான் தமிழரசு கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டதாக கரைச்சு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசாவின் தெரிவித்தார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம்! - எப்.பி.ஐ. அறிக்கை
[Monday 2025-04-14 18:00]

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.



தமிழரசுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும்- கைவிசேடம் கொடுத்து சுமந்திரன் கோரிக்கை!
[Monday 2025-04-14 18:00]

யாழ்ப்பாணத் தமிழர்களின் ஆதரவு கூட தமிழ்க் கட்சிகளுக்கு கிடையாது, தேசிய மக்கள் சக்திக்கு தான் அந்த ஆணை கொடுக்கப்பட்டிருக்கிறது என அராசாங்கம் சொல்ல தலைப்படுகின்றது. இது ஒரு தவறான விம்பம். எனவே உள்ளுராட்சி மக்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



சுற்றுலா வருமானம் ஒரு பில்லியனை தாண்டியது!
[Monday 2025-04-14 18:00]

2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கையின் மொத்த சுற்றுலா வருமானம் 1,122.3 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.



ஜிஎஸ்பி பிளஸ் சலுகையைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பை வழங்கும்!
[Monday 2025-04-14 18:00]

ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையைப் பாதுகாக்க எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.



பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எதிர்காலத்தில் ஒழிக்கப்படும்!
[Monday 2025-04-14 18:00]

"ஒரு வளமான நாடு மற்றும் ஒரு அழகான வாழ்க்கையை" நோக்கமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) எதிர்காலத்தில் ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.



பிஸ்கட், சிப்ஸ் பொதிகளில் குஷ், ஹஷிஷ்!
[Monday 2025-04-14 18:00]

பிஸ்கட் மற்றும் சிப்ஸ் பைகளில் மறைத்து குஷ் மற்றும் ஹஷிஷ் ஆகியவற்றை நாட்டிற்குள் கடத்த முயன்ற மூன்று இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டதாக சுங்க மேலதிக இயக்குநரும் ஊடகத் தொடர்பாளருமான சிவலி அருகோட தெரிவித்தார்.



இராணுவ வாகனம் மோதி பேருந்து ஓட்டுநர் பலி!
[Monday 2025-04-14 18:00]

அக்பர்புர பகுதியில் பேருந்தும் ராணுவ லொரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்ததாக அக்பர்புர பொலிஸார் தெரிவித்தனர். மாவனெல்லையில் இருந்து வந்த பேருந்து, மற்றொரு வாகனத்தை முந்திச் சென்று, எதிர் திசையில் இருந்து வந்த இராணுவ லொரி மீது மோதியதாக அவர்கள் தெரிவித்தனர். இதில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



பத்தாண்டு கொண்டாடியவர் யானை தாக்கி மரணம்!
[Monday 2025-04-14 18:00]

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமத்தில், தமிழ் புத்தாண்டு தினமான இன்று (14) அதிகாலை, காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது.



டீசல் மின்சார உற்பத்தி மாபியாவுக்குள் சிக்கியுள்ள அரசாங்கம்!
[Monday 2025-04-14 18:00]

அரசாங்கம் டீசல் மின்சார உற்பத்தி மாபியாவுக்குள் சிக்குண்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்குக் கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



4 நாட்களில் இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 மில்லியன் ரூபா வருமானம்!
[Monday 2025-04-14 18:00]

பண்டிகைக் காலத்தையொட்டி அதிகளவான பஸ்கள் சேவையில் ஈடுபட்டமையினால் கடந்த 4 நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை, 600 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
Latika-Gold-House-2025
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா