Untitled Document
December 20, 2024 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



எட்காவில் கையெழுத்திட விடமாட்டோம்!
[Friday 2024-12-20 05:00]

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. தேசபற்றுள்ளவர்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தில் நேற்றும் 11 பேருக்கு எலிக்காய்ச்சல்!
[Friday 2024-12-20 05:00]

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.



துணைவேந்தர் காணாமல் ஆக்கப்பட்டது குறித்து கருணாவிடம் விசாரணை!
[Friday 2024-12-20 05:00]

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.



ஆய்வுக் கப்பல்கள் குறித்து ஆராய்ந்தே நடவடிக்கை!
[Friday 2024-12-20 05:00]

இந்தியா, சீனா உட்பட எந்த நாட்டிலிருந்து ஆய்வுக் கப்பல்கள் வருகை தந்தாலும், அவை தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளுக்கமையவே அனுமதி குறித்த தீர்மானம் எடுக்கப்படும். இவ்விடயத்தை நீண்ட கால இராஜதந்திர போக்குடனேயே அணுகுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.



என்பிபி அரசாங்கம் நீதியை நிலைநாட்டும்!
[Friday 2024-12-20 05:00]

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையை வெளிக்கொணர்வதன் மூலம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.



அமைச்சரின் பதவிக்கும் ஆப்பு?
[Friday 2024-12-20 05:00]

மற்றுமொருவரின் எம்.பி பதவியை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு- இரகசிய அறிக்கை சமர்ப்பிப்பு!
[Friday 2024-12-20 05:00]

ஐந்தம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் பகுதி I வினாத்தாளில் மூன்று கேள்விகள் கசியவிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் விரிவான தகவல்கள் அடங்கிய இரகசிய அறிக்கையை குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் உயர் நீதிமன்றில் வியாழக்கிழமை கையளித்துள்ளார்.



இலங்கையில் இஸ்ரேலிய போர்க்குற்றவாளி- கைது செய்யுமாறு கோரிக்கை!
[Friday 2024-12-20 05:00]

பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டமைக்கும், உயிரிழந்தோரின் சடலங்கள் அவமரியாதை செய்யப்பட்டமைக்கும் பொறுப்புக்கூற வேண்டிய இஸ்ரேலிய இராணுவ வீரரான கல் ஃபெரென்புக் என்பவர் கொழும்பில் இருப்பதாகவும், அவரைக் கைது செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 'தி ஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்' வலியுறுத்தியுள்ளது.



உகண்டா பணம் இலங்கைக்கு வருமா?- ஆளும்கட்சி எம்.பியிடம் முகமூடிப் பெண் கேள்வி.
[Friday 2024-12-20 05:00]

முகமூடி அணிந்த பெண் ஒருவர் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியிடம் உகாண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படும் திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு அவர்களின் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



காலி சிறைக்குள் மோதிக் கொண்ட கைதிகள்- 4 பேர் காயம்!
[Friday 2024-12-20 05:00]

காலி சிறைச்சாலையில் நேற்றுக் காலை இரு கைதிகள் குழுக்கள் இடையில் இடம்பெற்ற மோதலின் போது கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கிடையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது.



இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் சிறீதரன் கோரிக்கை! Top News
[Thursday 2024-12-19 16:00]

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, குற்றவியல் பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விதத்தில் அடுத்த தீர்மானத்தில் தகுந்த தரமுயர்த்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எமது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானங்களைப் பிரேரிக்கும் மையக் குழு நாடுகளிடம் இந்தத் தரமுயர்த்தலை வேண்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.



103 மியான்மார் அகதிகளுடன் படகு முல்லைத்தீவில் கரையொதுங்கியது! Top News
[Thursday 2024-12-19 16:00]

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் இன்று103 மியான்மார் அகதிகளுடன் படகொன்று கரை ஒதுங்கியுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. குறித்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.



ஞானசார தேரருக்கு பிடியாணை!
[Thursday 2024-12-19 16:00]

மத அவமதிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாததால் அவரை கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.



மாவையின் பதவி விலகல் கடிதத்தை ஏற்கக் கூடாது என நீதிமன்றில் வழக்கு!
[Thursday 2024-12-19 16:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து மாவை சேனாதிராஜா அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் நிலையில், அந்தக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



மின்சக்தி மற்றும் வலுசக்தி துறைகள் இந்தியாவிடம் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது!
[Thursday 2024-12-19 16:00]

இந்திய ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்த ரோஹண விஜேவீரவின் கொள்கையைப் பின்பற்றும் கட்சியின் தலைவரது ஆட்சியில் இலங்கையின் மின்சக்தி மற்றும் வலுசக்தி துறைகள் அந்நாட்டிடம் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.



யாப்பை மீறி செயலாளர் செயற்பட முடியாது!
[Thursday 2024-12-19 16:00]

தமிழரசுக்கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது என்பதனால் செயலாளர் மத்திய குழுவில் இருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை.இதற்கான நீதியை பெறவே யாழ் நீதிமன்றத்தில் நேற்று (18.12.2024) வழக்கொன்றை தாக்கல் செய்தேன் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் சி. சிவமோகன் தெரிவித்தார்.



சஜித்தின் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படவில்லை!
[Thursday 2024-12-19 16:00]

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்விச் சான்றிதழ்களை நேற்று பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாகக் கூறிய போதிலும், அவர் இதுவரையில் அதனை பாராளுமன்றத்தின் ஹன்சார்ட் திணைக்களத்தில் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



மணல் கடத்திய டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு!
[Thursday 2024-12-19 16:00]

மணல் கடத்திய டிப்பர் வாகனம் ஒன்றைப் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர்.



உப்புக்கும் தட்டுப்பாடு- இறக்குமதிக்கு அனுமதி!
[Thursday 2024-12-19 16:00]

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 30,000 மெற்றிக் தொன்கள் வரை பதப்படுத்தப்படாத உப்பை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



இந்தியாவுடன் எந்த உடன்பாட்டிலும் கையெழுத்திடவில்லை!
[Thursday 2024-12-19 05:00]

நாட்டுக்கு அச்சுறுத்தலான எந்தவொரு உடன்படிக்கையையும் இந்தியாவுடன் தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திடவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா