Untitled Document
November 19, 2024 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



கற்கோவளம் இராணுவ முகாமை அகற்ற உத்தரவு!
[Tuesday 2024-11-19 05:00]

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதத்தை புறக்கணித்துள்ளனர்!
[Tuesday 2024-11-19 05:00]

வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை புறக்கணித்து தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கியுள்ளனர். புதிய ஆணைக்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.



கொழும்பு வந்த மற்றொரு அமெரிக்க போர்க்கப்பல்!
[Tuesday 2024-11-19 05:00]

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மற்றுமொரு போர்க்கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சேவை மற்றும் வழங்கல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வருகை தந்த யு.எஸ்.எஸ். ஸ்புரூன்ஸ் கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்கப்பட்டது.



சர்வதேச நாணய நிதிய குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு!
[Tuesday 2024-11-19 05:00]

சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அமைச்சர்கள் குழுவை நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.



வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!- மனோ கணேசன்
[Tuesday 2024-11-19 05:00]

தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆட்சி அமைக்கும் அனுர குமார திசாநாயக்க அரசுக்கும் எனது வாழ்த்துக்கள்.



ரவி, நாமல்,சத்தியலிங்கம் பெயர்களுடன் வெளியானது வர்த்தமானி!
[Tuesday 2024-11-19 05:00]

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.



19 வைத்திய எம்.பிக்களில் நால்வர் தமிழர்கள்!
[Tuesday 2024-11-19 05:00]

2024 பாராளுமன்ற தேர்தலில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து 4 தமிழ் வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, இவ்வாண்டு 19 வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.



வெள்ளியன்று 3ஆம் தவணைக்கான முதல் கட்ட விடுமுறை!
[Tuesday 2024-11-19 05:00]

பாடசாலை மூன்றாம் தவணைக்கான முதல் கட்ட விடுமுறையை நவம்பர் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



150 முன்னாள் எம்.பிக்களை வெளியேற்றிய தேர்தல்!
[Tuesday 2024-11-19 05:00]

கடந்த காலங்களில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 150 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அரசியலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 92 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றுள்ளதுடன் 58 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை.



பேருந்து மிதிபலகையில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர் பலி!
[Tuesday 2024-11-19 05:00]

பயணித்துக் கொண்டிருந்த இ.போ.சபைக்குச் சொந்தமான பேருந்தின் மிதி பலகையில் இருந்த இருவர் தூக்கி வீசப்பட்டதில் நடத்துநர் உயிரிழந்தார். திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பதுளை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.



புதிய அமைச்சரவை பதவியேற்பு!
[Monday 2024-11-18 16:00]

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.



அதிகார வரம்புகளை அறிந்து பொறுப்போடு செயற்படுங்கள்! - அமைச்சர்களுக்கு அனுர அறிவுரை
[Monday 2024-11-18 16:00]

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அதிக அதிகாரங்கள் இருப்பதாகவும், அனைத்து அமைச்சர்களும் தமது அதிகார வரம்புகளை அறிந்து பொறுப்புணர்வோடு செயற்படுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தெரிவித்தார்.



ரவி செனவிரத்னவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்!
[Monday 2024-11-18 16:00]

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்னவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.



புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் தடை!
[Monday 2024-11-18 16:00]

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி இலங்கை உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. பெற்றோர் மற்றும் மாணவர்கள் குழு தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.



சிலிண்டர் கூட்டணியின் தேசியப் பட்டியலுக்கு ரவி!- ரணில் போர்க்கொடி.
[Monday 2024-11-18 16:00]

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



2 சுயேட்சைக் குழுக்களுக்கு வாக்குகளே இல்லை!
[Monday 2024-11-18 16:00]

2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலில் 284 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3357 வேட்பாளர்கள் போட்டியிட்டு 1.04 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டனர்.



டிசெம்பரில் இந்தியா செல்கிறார் அனுர!
[Monday 2024-11-18 16:00]

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க டிசம்பரில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



தள்ளாடும் சிறிலங்கன் எயர்லைன்ஸ்!
[Monday 2024-11-18 16:00]

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் சிலவற்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.



இளங்குமரனின் கூற்று கோமாளித்தனமானது!
[Monday 2024-11-18 16:00]

யாழ் மாவட்டத்தில் இருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் சலுகை தொடர்பான கூற்று கோமாளித்தனமானது என, சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.



நாளை வடக்கிற்கு செல்கிறார் சீனத் தூதுவர்!
[Monday 2024-11-18 16:00]

இலங்கைக்கான சீனத் தூதுவர் நாளை யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கின்றார். நாடாளுமன்றத் தேர்தலின் பின்பு முதலாவது இராஜதந்திரியாக நாளை யாழ்ப்பாணத்துக்கு சீனத் தூதுவர் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொள்கின்றார். இதம்போது அவர் பல தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் .


NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா