Untitled Document
January 2, 2025 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



பாலத்தின் அடியில் இருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!
[Thursday 2025-01-02 16:00]

கிளிநொச்சி, பரந்தன் -முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை 10ஆம் கட்டை பாலத்திற்கு அடியில் இருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.



பளையில் கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது!
[Thursday 2025-01-02 16:00]

கிளிநொச்சி , பளை - தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கதிரைக் சின்னத்தில் களமிறங்குகிறது சுதந்திரக் கட்சி!
[Thursday 2025-01-02 16:00]

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் உட்பட எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



முச்சக்கரவண்டியில் சாகசத்துடன் சண்டித்தனம் செய்தவர்கள் கைது!
[Thursday 2025-01-02 16:00]

யாழ். நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் புரிந்து, வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.



தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய நியமனம்!
[Thursday 2025-01-02 16:00]

மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய புலனாய்வுப் பிரிவின் (CNI) தலைவரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) ருவன் குலதுங்க டிசம்பர் 31, 2024 அன்று தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.



உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியாகிறது!
[Thursday 2025-01-02 16:00]

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.



பாடசாலை உபகரணங்களின் விலைகள் குறைப்பு!
[Thursday 2025-01-02 16:00]

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால் அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலை 20% குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.



வவுனியாவில் கத்திக்குத்து- ஒருவர் காயம்!
[Thursday 2025-01-02 16:00]

வவுனியா இலுப்பையடிசந்தியில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து முரன்பாடு மோதலாக மாறியதில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



கப்பல் சேவை இன்றும் இல்லை!
[Thursday 2025-01-02 16:00]

காங்கேசன்துறைக்கும் - நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று வியாழக்கிழமைஇடம்பெறாது என குறித்த கப்பல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



விபத்தில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவன் சிகிச்சை பலனின்றி மரணம்!
[Thursday 2025-01-02 15:00]

வவுனியா -குருமன்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



மீனவர் பிரச்சினை குறித்துஅரசியல் தலைவர்கள் மட்டத்தில் இனி பேச்சு நடத்தப்படாது!
[Thursday 2025-01-02 05:00]

ஜனாதிபதியின் இந்தியாவுக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் முடிவடைந்து 15 நாட்களுக்குள் இலங்கை கடற்பரப்பில் இந்திய படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து அரசியல் தலைவர்கள் மட்டத்தில் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.



குச்சவெளியில் தொல்லியல் திணைக்களத்தின் காணி அபகரிப்புக்கு எதிராக போராட்டம்!
[Thursday 2025-01-02 05:00]

தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக புதன்கிழமை (01) காலை மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.



புலமைப்பரிசில் பரீட்சை - 3 வினாக்களுக்கு இலவசப் புள்ளி!
[Thursday 2025-01-02 05:00]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கு 'இலவச மதிப்பெண்' வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



நோய்த்தொற்று ஆபத்தினாலேயே ஆணைக்குழு அதிகாரிகள் அனுமதிக்கப்படவில்லையாம்!
[Thursday 2025-01-02 05:00]

நாட்டை வந்தடைந்த ரோஹிங்கிய அகதிகளிடமிருந்து நோய்த்தொற்றுக்கள் பரவக்கூடிய சாத்தியம் காணப்பட்டமையினாலேயே அவர்களைப் பார்வையிடுவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை என குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தம்மிடம் விளக்கமளித்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்கழுவின் தவிசாளர் எல்.ரி.பி.தெஹிதெனிய தெரிவித்துள்ளார்.



வெளிநாட்டு சொத்துக் கையிருப்பு 6,462 மில்லியன் டொலர்களாக அதிகரிப்பு!
[Thursday 2025-01-02 05:00]

இலங்கையின் வெளிநாட்டு சொத்துக் கையிருப்பு நவம்பர் 2024 இறுதியில் 6,462 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.



மாத்தறை சிறைக்குள் அனர்த்தம்- ஒருவர் பலி, 10 பேர் காயம்!
[Thursday 2025-01-02 05:00]

மாத்தறை சிறைச்சாலை வளாகத்தினுள் இருந்த போ மரம் முறிந்து வீழ்ந்ததில் 10 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



நாமல் குமாரவுக்கு விளக்கமறியல்!
[Thursday 2025-01-02 05:00]

சமூக செயற்பாட்டாளரான நாமல் குமாரவை ஜனவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று பிற்பகல் நாமல் குமார கைது செய்யப்பட்டார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



கிளிநொச்சியில் கடையை உடைத்து திருட்டு!
[Thursday 2025-01-02 05:00]

கிளிநொச்சி கனகபுரம் வீதியில், புகையிரத கடவைக்கு அருகாமையில் இயங்கி வந்த கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் களவாடப்பட்டிருந்தன.



24 மணித்தியாலத்தில் போதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது!
[Thursday 2025-01-02 05:00]

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கிளீன் சிறிலங்கா போல இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும்!
[Wednesday 2025-01-01 16:00]

கிளீன் சிறிலங்கா போன்று இனப்பிரச்சனையையும் இந்த அரசாங்கம் கிளீன் செய்ய வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா