Untitled Document
December 30, 2024 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா!- வவுனியாவில் போராட்டம்.
[Monday 2024-12-30 16:00]

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா” என கோஷம் எழுப்பி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது. வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.



2025ம் ஆண்டு தமிழர்களுக்கான புதிய பாதைகளை திறந்து விடும்!
[Monday 2024-12-30 16:00]

2025ம் ஆண்டு மாற்றங்கள் நிறைந்த தமிழர்களுக்கான புதிய பாதைகளை திறந்து விடும் ஆண்டாக மலரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.



இராணுவம், கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்!
[Monday 2024-12-30 16:00]

இராணுவம், கடற்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் சேவை நீடிப்பு நிறைவடைந்துள்ளதோடு, விமானப்படை தளபதியின் சேவை நீடிப்பு அடுத்த மாதம் நிறைவடையவுள்ளது.



அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம்!
[Monday 2024-12-30 16:00]

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம் இன்று நடைபெற்றது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தின் முன்பாக கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது.



காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம்!
[Monday 2024-12-30 16:00]

இலங்கையில் உள் நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வாழும் உறவுகள் இன்றையதினம் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.



ஜனவரி 2இல் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பம்!
[Monday 2024-12-30 16:00]

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன் துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை நாற்பது ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.



பரம்பரைப் பதவிகளை ஒழிக்க வேண்டும்!
[Monday 2024-12-30 16:00]

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் தொழில் வல்லுநர்களுக்கு பாராளுமன்ற அணுகல் பொதுவானதாக இருப்பது போல், இலங்கையின் பௌத்த ஆலய அமைப்பில் திவடன நிலமே மற்றும் பஸ்நாயக்க நிலமே பதவிகளும் எந்தவொரு குடிமகனுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என ஜாதிக பரிபோகிக பெரமுன (ஜேபிபி) தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.



ஊடகவியலாளரை தாக்கியதாக கைதானவர்களுக்கு பிணை!
[Monday 2024-12-30 16:00]

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வனை கடந்த 26ஆம் திகதி தாக்கி கடத்த முற்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (30) ஆள் அடையாள அணிவகுப்புக்கு முற்படுத்தப்பட்டனர். இதன்போது ஊடகவியலாளரால் சந்தேக நபர்கள் இருவரும் சரியாக அடையாளம் காட்டப்பட்டனர்.



1ஆம் திகதி முதல் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
[Monday 2024-12-30 16:00]

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.



மகிந்தவின் பேச்சாளராக மனோஜ் கமகே நியமனம்!
[Monday 2024-12-30 16:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளாக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகேவை நியமித்துள்ளார். கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இன்று ரவீந்திர மனோஜ் கமகே தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.



2025 நடுப்பகுதியில் மாகாணசபைத் தேர்தல்!
[Monday 2024-12-30 05:00]

1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தை இரத்து செய்வதன் மூலம் நீண்ட காலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



மின்சாரம் தாக்கி மூவர் பலி!
[Monday 2024-12-30 05:00]

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தை அண்மித்த பகுதியில் கட்டடமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.



ஏர் கனடா விமானம் தீப்பற்றியது!
[Monday 2024-12-30 05:00]

ஏர்-கனடா (Air Canada) விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கனடாவின் சென். ஜான்ஸில் இருந்து ஹலிஃபாக்ஸுக்கு 80 பயணிகளுடன் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.



மூத்த படைப்பாளி ஊடகவியலாளர் நா.யோகேந்திரநாதனுக்கு பெருமளவானோர் அஞ்சலி!
[Monday 2024-12-30 05:00]

ஈழத்தின் மூத்த படைப்பாளியும் ஊடகவியலாளருமான நா.யோகேந்திரநாதன் (வயது 80) நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.



மட்டக்களப்பில் 16 அடி நீள முதலை சிக்கியது!
[Monday 2024-12-30 05:00]

மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று நேற்றுபொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு பிரதேச ஆற்றில் தென்பட்ட இந்த முதலை நேற்று மாலை கரைக்கு வந்தபோதே, பொதுமக்கள் முதலையைப் பிடித்தனர்.



பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பயணித்த மினிபஸ் வழித்தட அனுமதி இடைநிறுத்தம்!
[Monday 2024-12-30 05:00]

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 750 வழித்தடத்தில் நேற்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேநாயகத்திற்கு அறிவித்துள்ளார்.



வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் குறித்த பொலிஸ் விசாரணைகள் நிறைவு!
[Monday 2024-12-30 05:00]

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வரவு செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.



2025இல் 181 பாடசாலை நாட்களே!
[Monday 2024-12-30 05:00]

வருடத்தில் 210 நாட்கள் பாடசாலை நாட்களாக காணப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களை 181 நாட்களாக குறைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.



நேபாளம் சென்றார் ரணில்!
[Monday 2024-12-30 05:00]

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட விஜயமாக அவர் காத்மண்டு ட்ரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக நேபாள வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார்.



தமிழரசுக் கட்சிக்குள் கோமாளிகள் - ஒப்புக்கொள்கிறார் சாணக்கியன்!
[Monday 2024-12-30 05:00]

இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் ஒரு சில கோமாளிகள் ஊடகங்களை வைத்து கட்சிக்குள் பிரச்சினைகள் இருப்பது போன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்த முனைவதாக தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா