Untitled Document
April 18, 2025 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



பாதுகாப்பு ஒப்பந்த உள்ளடக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்!
[Friday 2025-04-18 07:00]

இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த வேண்டுமென அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.



ஒன்ராறியோ 300,000 கூடுதல் குடியிருப்பாளர்களுக்கு முதன்மை பராமரிப்பு அணுகலை விரிவுபடுத்துகிறது!
[Friday 2025-04-18 07:00]

ஒன்ராறியோ அரசு 328,000 பேரை முதன்மை பராமரிப்பு குழுக்களுடன் இணைப்பதற்காக $110 மில்லியனுக்கும் மேல் முதலீடு செய்கிறது. இதன் மூலம் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் குடும்ப மருத்துவர் அல்லது முதன்மை பராமரிப்பு வழங்குநர் கிடைப்பதை உறுதி செய்யும் இலக்கை நெருங்குகிறது.



பிள்ளையான் கைது - ரணில், கம்மன்பில கலங்குவது ஏன்?
[Friday 2025-04-18 07:00]

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்தவுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஏன் கலக்கமடைய வேண்டும். பல குற்றங்களின் பின்னணியில் அரசியல் உள்ளது. உதய கம்மன்பிலவின் சிங்கள, பௌத்தவாதம் தற்போது காணாமல் போயுள்ளதென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.



8 இலட்சத்தை தாண்டிய சுற்றுலாப் பயணிகள்!
[Friday 2025-04-18 07:00]

2025 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 816,191 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.



யாழ். மாவட்டத்தில் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை!
[Friday 2025-04-18 07:00]

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது தற்போதைய நாட்களில் எச்சரிக்கை மட்டத்துக்கு அதிகரித்து வருகின்றமையால் அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் T.N.சூரியராஜா அறிவுறுத்தியுள்ளார்.



குளத்தில் மூழ்கி இளைஞன் மரணம் - தகவல் அறிந்து உயிர்மாய்த்த காதலி!
[Friday 2025-04-18 07:00]

யாழ். வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன் (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



ஜனாதிபதியின் கருத்துக்கு சஜித் கண்டனம்!
[Friday 2025-04-18 07:00]

உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, எந்தக் கட்சி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது என்பதைப் பொறுத்தது என்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் சமீபத்திய கருத்துக்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்.



பாடசாலைக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு!
[Friday 2025-04-18 07:00]

அஹுங்கல்லவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



ஜனாதிபதி தலைமையில் இன்று தொடங்குகிறது தலதா மாளிகை கொண்டாட்டம்!
[Friday 2025-04-18 07:00]

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல் ஆரம்பம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” இன்றுஆரம்பமாகவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு, இன்று (18) பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொள்ள உள்ளார்.



ஈஸ்டர் ஞாயிறில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு!
[Friday 2025-04-18 07:00]

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா முப்படைத் தளபதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.



தபால் வாக்குப் பதிவு திகதிகளில் மாற்றம்!
[Thursday 2025-04-17 17:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவுக்கான திருத்தப்பட்ட திகதிகளை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 22, 23, 24, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தபால் வாக்குப்பதிவு நடைபெறும் என்று முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. அத் திகதி திருத்தப்பட்டு ஏப்ரல் மாதம் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தபால் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



சூத்திரதாரிகளை வெளிப்படுத்துங்கள்!
[Thursday 2025-04-17 17:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் மற்றும் அந்த கொடூரமான செயலிற்கு உதவியவர்கள் யார் என்பதை கண்டறிவது அவசரமான விடயம் என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குறித்த தனது விசேட செய்தியில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை இதனை தெரிவித்துள்ளது.



பிள்ளையானுக்காக வாதாடப் போகும் கம்மன்பில- பின்னணி என்ன?
[Thursday 2025-04-17 17:00]

சட்டத்தரணி என்ற போர்வையில் ஒரு அரசியல்வாதியாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையானை) உதய கம்மன்பில சிறையில் வைத்து சந்தித்துள்ளார் என சுகாதார, வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



உச்சத்தை தொட்ட தங்கம்!
[Thursday 2025-04-17 17:00]

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஏற்ப, இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று சாதனை அளவை எட்டியுள்ளது. இலங்கையில் தினசரி தங்க விலை குறித்த நம்பகமான தகவல்களை வெளியிடும் GOLDCeylon Gold News Network,இன் தகவல்களின்படி, இன்று செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 242,000 ரூபாவாகவும் 24 கெரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை 262,000 ரூபாவாகவும் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.



ஜனாதிபதியின் மிரட்டல் - செயலாளருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்!
[Thursday 2025-04-17 17:00]

தேர்தல் சட்டங்களை மீறும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அளித்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.



மன்னார் - இராமேஸ்வரம் இடையே படகு சேவைக்கு விரைவில் நடவடிக்கை!
[Thursday 2025-04-17 17:00]

மன்னார் - இராமேஸ்வரம் இடையே படகு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.



உள்ளூரில் உற்பத்தி செய்த பால், யோகட்டுக்கு வற் வரி விலக்கு!
[Thursday 2025-04-17 16:00]

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலத்தின்படி, உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் யோகட் ஆகியவை வற் ( VAT) வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.இந்த மாதம் 11 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திரவ பால் மற்றும் யோகட் மீதான வற் (VAT) வரி நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



காரைநகரில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட என்பிபி வேட்பாளர் கைது!
[Thursday 2025-04-17 16:00]

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தியின் காரைநகர் பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவர் நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் மணல் ஏற்றிய வாகனம் பொலிஸ் நிலையத்திலேயே உள்ளது.



மன்னாரில் 18 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது!
[Thursday 2025-04-17 16:00]

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள வெட்டயமுறிப்பு பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, 18 கிலோ 200 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.



யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் நிதானம் தேவை!
[Thursday 2025-04-17 16:00]

தமிழ்க் கட்சிகள் எல்லாமே உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுவருகின்றன. ஜே.வி.பியை மாத்திரம் அல்ல; தென்னிலங்கைக் கட்சிகள் எதையுமே நாம் ஆதரிக்க முடியாது. தென்னிலங்கைக் கட்சிகளை நிராகரிக்கும் அதேசமயம் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்பதிலும் எமக்கு நிதானம் தேவை. தமிழ்த் தேசிய அரசியலை வியாபாரப் பண்டமாக்கி மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ் அரசியற் கட்சிகளையும் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Latika-Gold-House-2025
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா