Untitled Document
June 1, 2024 [GMT]
மலேசியாவில் கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்களை மோதி தள்ளிய கார்: - 3 பேர் பலி
[Sunday 2016-01-24 16:00]

மலேசியாவில்  புகழ் பெற்ற பத்துமலை முருகன் கோவில் உள்ளது. இங்குள்ள பிரமாண்ட முருகன் சிலை உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. தைப்பூச திருவிழாவையொட்டி செனாவாங்கிலிருந்து மலேசிய வாழ் தமிழர்கள் காவடி எடுத்தும், பாதயாத்திரையாகவும் சென்று கொண்டிருந்தனர்.செரிபெட்டாலிங் பகுதியில் வடக்கு, தெற்கு நெடுஞ்சாலை பகுதியில் பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் ஒரு கார் புகுந்து மோதியது.அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் கெபங்சான் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

மலேசியாவில் புகழ் பெற்ற பத்துமலை முருகன் கோவில் உள்ளது. இங்குள்ள பிரமாண்ட முருகன் சிலை உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. தைப்பூச திருவிழாவையொட்டி செனாவாங்கிலிருந்து மலேசிய வாழ் தமிழர்கள் காவடி எடுத்தும், பாதயாத்திரையாகவும் சென்று கொண்டிருந்தனர்.செரிபெட்டாலிங் பகுதியில் வடக்கு, தெற்கு நெடுஞ்சாலை பகுதியில் பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் ஒரு கார் புகுந்து மோதியது.அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் கெபங்சான் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com



ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மதிய இடைவேளை அறிவிப்பு!
[Saturday 2024-06-01 08:00]

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு கட்டாய மதிய இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஜூன் 15, சனிக்கிழமை முதல் வெளிப்புற வேலையாட்களுக்கான கட்டாய மதிய இடைவேளையை அறிவித்தது. அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) வெளியிட்டுள்ள உத்தரவின்படி, நேரடி சூரிய ஒளியில் வேலை செய்வது மதியம் 12:30 முதல் 3 மணி வரை அனுமதிக்கப்படாது மற்றும் செப்டம்பர் 15 வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கனேடிய பொருளாதாரத்தில் புலம்பெயர்ந்தோரின் பெரும் பங்களிப்பு!
[Saturday 2024-06-01 08:00]

கனடா புலம்பெயர்ந்தோரின் வருகையை கட்டுப்படுத்த முயற்சிக்கும் நேரத்தில், கனேடிய பொருளாதாரத்திற்கு புலம்பெயர்ந்தோரின் பெரும் பங்களிப்பை ஒரு அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கனடாவின் வணிக உரிமையாளர்களில் மூன்றில் ஒரு பங்காக புலம்பெயர்ந்த மக்கள் தான் உள்ளனர். அதாவது, வணிக உரிமையாளர்களில் 33 சதவீதம் அவர்கள் தான்.



பிரான்சில் ஆயுத கண்காட்சியில் பங்கேற்க இஸ்ரேலுக்கு தடை!
[Saturday 2024-06-01 08:00]

ஆயுத கண்காட்சியில் பங்கேற்க இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது. அடுத்த மாதம் பாரிஸுக்கு அருகிலுள்ள Villepinte-யில் நடைபெறும் வருடாந்திர Eurosatory ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில் கண்காட்சியில் இஸ்ரேலிய நிறுவனங்கள் பங்கேற்க பிரான்ஸ் தடை விதித்துள்ளது. காசாவில் Rafah மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு பிரான்சின் எதிர்ப்பை மேலும் வலுவாக தெரிவித்ததாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.



ரொறன்ரோவை விட்டு வெளியேறும் மக்கள்!
[Friday 2024-05-31 18:00]

கனடாவின் ரொறன்ரோ நகரை விட்டு பலர் வெளியேற முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வாழும் மக்கள் அங்கு வீடு கொள்வனவு செய்வதில் நிலவி வரும் சிரமங்கள் காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கருத்து கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.



போர் நிறுத்த உடன்பாட்டிற்குத் தயார்: ஹமாஸ் திடீர் அறிவிப்பு!
[Friday 2024-05-31 18:00]

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த போரை இஸ்ரேல் நிறுத்தினால் பணயக் கைதிகளை விடுவிப்பது முதல் முழுமையான போர் நிறுத்த உடன்பாட்டிற்குத் தயாராக உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளமை உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது. அதாவது காஸாவில் உள்ள மக்களுக்கு எதிரான போரையும் ஆக்கிரமிப்பையும் இஸ்ரேல் நிறுத்தினால், முழுமையான உடன்படிக்கைக்குத் தயாராக இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.



ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது கனடா: இலங்கை கண்டனம்!
[Friday 2024-05-31 18:00]

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கனடா மீண்டும் சுமத்தக்கூடாது என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. கனடாவின் சர்வதேச அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் கிறிஸ்டபர்மக்லெனனை சந்தித்தவேளை இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அருணிவிஜயவர்த்தன இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.



அமெரிக்க வரலாற்றில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முதல் முன்னாள் ஜனதிபதி!
[Friday 2024-05-31 18:00]

அமெரிக்க வரலாற்றில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முதல் முன்னாள் ஜனதிபதி என்ற மோசமான பெயரை டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார். டிரம்பிற்கு எதிரான 34 குற்றச்சாட்டுகளும் உண்மை என, அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது. வழக்கில் ஜுலை 11ம் திகதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க வரலாற்றில் குற்றவியல் தண்டனை பெற்ற முதல் முன்னாள் அமெரிக்க ஜனதிபதி என்ற மோசமான வரலாற்றில் டிரம்ப் இடம்பெற்றுள்ளார்.



ரஷ்யாவின் மிரட்டல்களை மீறி உக்ரைனுக்கு சாதகமாக பிரான்ஸ் எடுக்கவுள்ள முடிவு!
[Friday 2024-05-31 06:00]

உக்ரைனுக்கு ராணுவப் பயிற்சியாளர்களை அனுப்புவது குறித்து பிரான்ஸ் விரைவில் அறிவிக்கலாம் என இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். சில நட்பு நாடுகள் கவலை தெரிவித்தாலும், ரஷ்யாவிடமிருந்து எதிர்ப்பு இருக்கும்போதிலும், பிரான்ஸ் விரைவில் உக்ரைனுக்கு இராணுவ பயிற்சியாளர்களை அனுப்பக்கூடும் , மேலும் உக்ரைன் ஜனாதிபதியின் விஜயத்தின் போது அடுத்த வாரம் தனது முடிவை அறிவிக்கலாம் என்று மூன்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.



கனடாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திய மாணவர்கள்!
[Friday 2024-05-31 06:00]

கனடாவில் இந்திய மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனடாவில் Prince Edward Island அரசு (PEI) நிரந்தர குடியிருப்பு (permanent residency/PR) தொடர்பாக கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு எதிராக இந்திய மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.



அமெரிக்காவில் சகோதரியை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற அண்ணன்: சொன்ன அதிர்ச்சி காரணம்!
[Friday 2024-05-31 06:00]

அறியாச்சிறுமி என எண்ணிக்கொண்டிருந்த தன் சகோதரி கர்ப்பமுற்றதால், ஆத்திரத்தில் நான்கு மாத கர்ப்பிணி என்றும் பார்க்காமல் அவரை, துண்டு துண்டாக வெட்டி வீசினார் ஒரு அமெரிக்கர். வேடிக்கை என்னவென்றால், அவர் அறியாச்சிறுமி என எண்ணிக்கொண்டிருந்த சகோதரிக்கு வயது30!



கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!
[Thursday 2024-05-30 18:00]

கனடாவில் நிசான் ரக வாகனங்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிசான் கனடா நிறுவனம் இந்த எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நிசான் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில வாகனங்களை மீள பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.



உலகின் முதல் மர செயற்கைக்கோளை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள்!
[Thursday 2024-05-30 18:00]

உலகின் முதல் மர செயற்கைக்கோளை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் சுமிட்டோமோ பாரெஸ்ட்ரி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர்.



இப்ராஹிம் ரைசிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை புறக்கணிக்கும் முன்னணி நாடுகள்!
[Thursday 2024-05-30 18:00]

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வை அவுஸ்திரேலியா புறக்கணிக்கவுள்ளது. இந்நிலையில் ஈரான் ஜனாதிபதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை அமெரிக்கா புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையிலேயே அவுஸ்திரேலியாவும் புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



700 இந்திய மாணவர்களை ஏமாற்றி கனடாவுக்கு அனுப்பிய நபர்!
[Thursday 2024-05-30 18:00]

சுமார் 700 இந்திய மாணவர்களுக்கு போலி அனுமதி ஆஃபர் கடிதங்களைக் கொடுத்து கனடாவுக்கு அனுப்பிய நபர், தன் தவறுக்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, ப்ரிஜேஷ் மிஸ்ரா (Brijesh Mishra, 37) என்பவர் நடத்தும் Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக, கல்வி விசாவுக்கு விண்ணப்பித்தார்கள் 700 மாணவர்கள்.



லண்டன் நகர மக்களை உலுக்கிய சம்பவம்!
[Thursday 2024-05-30 06:00]

வடகிழக்கு லண்டனின் Dalston பகுதியில் உணவகத்தின் வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிக்கி குழந்தை ஒன்று ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மேலும் மூன்று பெரியவர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இரவு 9.20 மணிக்கு சம்பவயிடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டனர்.



அமெரிக்க விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட கருப்பின பயணிகள்!
[Thursday 2024-05-30 06:00]

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் திடீரென்று பரவிய வாசனையை அடுத்து, அதற்கு காரணம் கறுப்பினப் பயணிகள் என குறிப்பிட்டு விமான ஊழியர்களால் 8 பேர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பயணிகள் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அந்த 8 கறுப்பினப் பயணிகளும் முன் அறிமுகம் இல்லாதவர்கள் என்றே கூறப்படுகிறது.



இந்த நகரங்களுக்கு இடம்பெயர விரும்பும் கனேடிய மக்கள்!
[Thursday 2024-05-30 06:00]

குடியிருப்புகளுக்கான விலை அதிகரித்து வருவதால், நாட்டின் பெரு நகரங்களில் வசிக்கும் சரிபாதி கனேடியர்கள் இடம்பெயர தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொறன்ரோ, மாண்ட்ரீல் மற்றும் வான்கூவர் போன்ற பெரிய பிராந்தியங்களில் வசிப்பவர்களில் ஐம்பது சதவீதம் பேர், தங்களுக்கு வேலை கிடைத்தால், விலை மலிவான நகரங்களில் வீடு வாங்குவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர்.



பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த நாடுகள்!
[Wednesday 2024-05-29 18:00]

பலஸ்தீனத்தை தனி நாடாக , ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் கூட்டாக அங்கீகரித்துள்ளன. இந்நிலையில் பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதில் தமக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை என பிரான்ஸும் அறிவித்துள்ளது. அதன்படி, தகுந்த நேரத்தில், பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிக்க தான் தயாராக இருப்பதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன், தெரிவித்துள்ளார்.



உலகை அதிரவைத்த சம்பவம்: வைரலாகும் ஹேஸ்டேக்!
[Wednesday 2024-05-29 18:00]

பாலஸ்தீனத்தில் மக்கள் அதிகம் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது கடந்த மே 26 ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் எச்சரித்திருந்தும் இஸ்ரேல் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.



தென்கொரியாவுக்கு ராட்சத பலூன்களில் குப்பைகளை அனுப்பிய வடகொரியா!
[Wednesday 2024-05-29 18:00]

ராட்சத பலூன்கள் மூலம் தென்கொரியாவுக்கு , வடகொரியா குப்பைகளை அனுப்பிவைத்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராட்சத பலூன் பையில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், பேட்டரிகள், ஷூ பகுதிகள், சாணம் இருந்தாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளது.


Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா