Untitled Document
May 29, 2024 [GMT]
கடையிலிருந்து குழந்தையை தூக்கி வீசிய தந்தை! Top News
[Tuesday 2019-04-02 09:00]

உக்ரைனில் சேட்டை செய்த குழந்தையை கடையில் இருந்து வெளியே வீசிய தந்தையை போலீசார் கைது செய்தனர். தலைநகர் கிவ்வில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஆர்டம் ((Artem)) என்பவர் தனது 6 வயது மகளுடன் கடைக்குச் சென்றிருந்தார். அப்போது அந்தச் சிறுமி அதிக சுட்டித்தனத்துடன் சேட்டை செய்தார். மேலும் தான் விரும்பிய பொருளை வாங்கித்தரக் கேட்டு தந்தையிடம் அடம் பிடித்தார்.

உக்ரைனில் சேட்டை செய்த குழந்தையை கடையில் இருந்து வெளியே வீசிய தந்தையை போலீசார் கைது செய்தனர். தலைநகர் கிவ்வில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஆர்டம் ((Artem)) என்பவர் தனது 6 வயது மகளுடன் கடைக்குச் சென்றிருந்தார். அப்போது அந்தச் சிறுமி அதிக சுட்டித்தனத்துடன் சேட்டை செய்தார். மேலும் தான் விரும்பிய பொருளை வாங்கித்தரக் கேட்டு தந்தையிடம் அடம் பிடித்தார்.

  

இதனால் ஆத்திரமடைந்த ஆர்டம் சிறுமியை இழுத்துச் சென்று வணிக வளாகத்தின் வெளியே படிக்கட்டில் தூக்கி வீசினார். இந்தக் காட்சி அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த கிவ் நகர காவல்துறை ஆர்டமை கைது செய்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



பிரித்தானியாவில் மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் மீது பாய்ந்த வழக்கு!
[Wednesday 2024-05-29 06:00]

பிரித்தானியாவில் NHS மருத்துவமனையில் 6 பெண் ஊழியர்களை துஸ்பிரயோகம் செய்த விவகாரத்தில் மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தொடர்புடைய விவகாரத்தில் 54 வயதான அமல் போஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு பிளாக்பூல் விக்டோரியா மருத்துவமனையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.



நண்பனுக்காக ரஷ்யாவை பழிவாங்க 8 நாட்கள் நடந்து உக்ரைனில் போரிட சென்ற பிரித்தானியர்!
[Wednesday 2024-05-29 06:00]

ரஷ்ய - உக்ரைன் போரில் நெருங்கிய நண்பரை இழந்த பிரித்தானியர், ரஷ்யாவை பழிவாங்க 300 km நடந்து உக்ரைனுக்கு சென்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் தங்கியிருந்து ஸ்பானிய மொழி கற்று வந்துள்ளார் 32 வயதான Marcus Smith. அப்போது தான் ட்ரோன் தாக்குதலில் தமது நெருங்கிய நண்பர் கொல்லப்பட்டார் என்ற துயரச் செய்தி அவருக்குக் கிடைத்தது.



ரஃபா தாக்குதலுக்கு கடும் கண்டனம்: பாரிஸ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்!
[Wednesday 2024-05-29 06:00]

காஸா நகரமான ரஃபா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாரிஸ் நகரில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு சுமார் 10,000 பேர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேல் தூதரகத்தில் இர்ந்து சில நூறு மீற்றர்கள் தொலைவில் தொடர்புடைய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் காஸா பிள்ளைகளே, காஸாவை விடுவியுங்கள் உள்ளிட்ட முழக்கங்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் எழுப்பியுள்ளனர்.



மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கும்: சீனா உருவாக்கிய புதிய வைரஸ்!
[Tuesday 2024-05-28 18:00]

சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலை விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை உருவாக்கியுள்ளதாகவும், இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும் எனவும் கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இஸ்ரேலை கைவிடும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்!
[Tuesday 2024-05-28 18:00]

மூன்று நாடுகள் பாலஸ்தீனத்தை முறைப்படி தனிநாடாக அங்கீகரித்துள்ளதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பிளவு பெரிதாகிக்கொண்டே செல்வது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஸ்பெயின், நார்வே மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள், இன்று, அதாவது, 2024, மே மாதம் 28ஆம் திகதி, செவ்வாய்க்கிழமையன்று, பாலஸ்தீனத்தை முறைப்படி தனிநாடாக அங்கீகரித்துள்ளன. ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் கொடுத்துவரும் பயங்கர பதிலடியைக் குறைக்கும் வகையில், அதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த மூன்று ஐரோப்பிய நாடுகளும் இந்த முடிவை எடுத்துள்ளன.



தாலிபான்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ரஷ்யா!
[Tuesday 2024-05-28 18:00]

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தாலிபான்களை நீக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. ரஷ்யாவின் அரச செய்தி நிறுவனமான RIA Novosti இத்தகவலைத் தெரிவித்துள்ளது. தாலிபான்கள் தொடர்பாக கஜகஸ்தான் சமீபத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், நாமும் விரைவில் அதை அமுல்படுத்துவோம் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov) தெரிவித்துள்ளார்.



நடுவானில் வெடித்து சிதறிய வடகொரியா செயற்கைக்கோள்!
[Tuesday 2024-05-28 18:00]

வடகொரியா உளவு செயற்கைக்கோள் நடுவானில் வெடித்து சிதறியதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த நவம்பரில் வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது.



கனடாவில் பாரிய மோசடியில் ஈடுபட்ட பெண் மருத்துவர்!
[Tuesday 2024-05-28 06:00]

கனடாவில் அழகான பெண் மருத்துவர் ஒருவர் சக மருத்துவரிடம் பெருந்தொகையை ஏமாற்றியதுடன், போலியான ஆவணங்களால் தற்போது மருத்துவராக பணியாற்றவும் தடை செய்யப்பட்டுள்ளார். குறித்த மருத்துவர் மொத்தமாக 160,000 டொலர் தொகையை ஏமாற்றிவிட்டு மாயமாகியுள்ளதாகவே கூறப்படுகிறது. Monica Kehar என்பவர் தமக்கு மார்ப புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக குறிப்பிட்டு தமது சக மருத்துவர் Meaghan Labine என்பவரிடம் இருந்தே பெருந்தொகை ஏமாற்றியுள்ளார்.



பிரான்சில் ஆசிரியரின் முகத்தில் கத்தியால் தாக்கிய மாணவனால் பரபரப்பு!
[Tuesday 2024-05-28 06:00]

தனது ஆங்கில ஆசிரியரின் முகத்தில் கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய மாணவர் ஒருவர் மேற்கு பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு பிரான்சில் Chemille-en-Anjou பகுதியை சேர்ந்த அந்த ஆசிரியர் காயங்களுடன் தப்பியுள்ளார் என்றே கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், 18 வயதான அந்த மாணவர், தாம் மகிழ்ச்சியாக இல்லை என கூறி வந்ததாக தெரிய வந்துள்ளது.



36,000 கடந்த இறப்பு எண்ணிக்கை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66 பேர் பலி!
[Tuesday 2024-05-28 06:00]

கடந்த 7 மாதங்களாக நீடிக்கும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் போரினால் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 36,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை காஸா சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் தாக்குதலுக்கு 66 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஒட்டு மொத்தமாக இதுவரை 36,050 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆண்டுக்கு நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் உலகின் மிகவும் குளிர்ச்சியான நகரம்!
[Monday 2024-05-27 19:00]

உலகின் குளிர்ச்சியான நகரம் என அழைக்கப்படும் Yakutsk நகரம், சைபீரியாவில் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் வாழும் மக்களின் அன்றாட வாழ்வைக் குறித்த சில விடயங்களைத் தெரிந்துகொள்ளலாம். உலகின் குளிர்ச்சியான நகரம் என அழைக்கப்படும் Yakutsk நகரத்தில், குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 64.4 டிகிரி செல்சியஷுக்கும் கீழே செல்கிறது. வெயில் காலத்தில் நிலவும் வெப்பநிலை, 20 டிகிரி செல்சியஷ்.



பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் உயிரிழப்பு!
[Monday 2024-05-27 19:00]

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் பிரித்தானியா திரும்பலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தும், உள்துறைச் செயலகம் ஏற்படுத்திய தாமதம் காரணமாக அவர் பிரித்தானியா திரும்பாமலே உயிரிழந்துவிட்டதால், அவரது மனைவி பிள்ளைகளும், குடும்பத்தினரும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.



ஒன்ராறியோவில் புதிய தங்கச் சுரங்கம் ஒன்று திறப்பு!
[Monday 2024-05-27 19:00]

கனடாவின் ஒன்ராறியோவில் புதிய தங்கச் சுரங்கம் ஒன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், அது கனடாவின் மிகப்பெரிய சுரங்கம் என்னும் பெருமையைப் பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒன்ராறியோவின் Timmins மற்றும் Sudbury நகரங்களுக்கிடையே இந்த புதிய தங்கச் சுரங்கம் திறக்கப்பட்டுள்ளது.



ஆன்லைனில் 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் சுரண்டல்!
[Monday 2024-05-27 19:00]

ஒரு வருட காலத்தில் உலக அளவில் 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஆன்லைனில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாவதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கடந்த 12 மாதங்களில் உலகில் உள்ள குழந்தைகளில் எட்டில் ஒருவர் ஆன்லைன் மூலம் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.



நடுவானில் வாழ்க்கையை புரட்டிப் போட்ட அந்த சம்பவம்: பிரித்தானிய விமான ஊழியரின் திகில் அனுபவம்!
[Monday 2024-05-27 06:00]

நடுவானில் மிக மோசமாக குலுங்கிய விமானத்தால், பணிப்பெண் ஒருவரின் கால் ஏழாக உடைய, தனது கனவு வேலையை தொலைத்த நிலையில் தற்போது பெருந்தொகை இழப்பீட்டு பெற்றுள்ளார். பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த 31 வயது Eden Garrity என்பவரே தாம் எதிர்கொண்ட அந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ஒவ்வொரு பயணிகளுக்கும் உணவளித்து வந்த வேளையில், அவர் பணியாற்றிய அந்த விமானம் அட்லாண்டிக் மீது வெப்பமண்டல ஆலங்கட்டி மழையில் சிக்கியுள்ளது.



மேகன் மெர்க்கலை கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி ஒருவரின் மனைவி!
[Monday 2024-05-27 06:00]

நைஜீரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேகன் மெர்க்கலின் உடைகள் தொடர்பான தெரிவை மிக மோசமாக விமர்சித்துள்ளார் அந்த நாட்டு ஜனாதிபதியின் மனைவி. நைஜீரியாவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவைக் கொண்டாடி வருகிறார் Bola Tinubu. இந்த நிலையில், பெண்மையை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி போலா டினுபுவின் மனைவி செனட்டர் Oluremi Tinubumade தமது உரையின் போது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.



கட்டாய இராணுவ சேவையை மறுத்தால் என்னவாகும்? பிரித்தானிய அமைச்சர் விளக்கம்!
[Monday 2024-05-27 06:00]

பிரித்தானியாவில் மீண்டும் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைந்தால் கட்டாய இராணுவ சேவை அமுலுக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், உள்விவகார அமைச்சர் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைந்தால் கட்டாய இராணுவ சேவை கொண்டுவரப்படும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். ஆனால் இராணுவ சேவைக்கு மறுப்பு தெரிவிக்கும் எவரும் சிறைக்கு அனுப்ப வாய்ப்பில்லை என்றே உள்விவகார செயலர் James Cleverly தெரிவித்துள்ளார்.



ஆப்கானில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: ஐ.நா கடும் எச்சரிக்கை!
[Sunday 2024-05-26 18:00]

ஆப்கான் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் குழந்தை திருமணங்களை 25% அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. தலிபான்களால் ஆப்கான் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளின் தாக்கம் குறித்து ஐக்கிய நாடுகள் (UN) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு, பன்னாட்டு குடிபெயர்வு நிறுவனம் (IOM), மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகள் உதவித் திட்டம் (UNAMA) ஆகியோரால் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் குழந்தை திருமணங்கள் 25% அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



வெளிநாடொன்றில் 19-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த கேரள இளம்பெண்!
[Sunday 2024-05-26 18:00]

ஐக்கிய அரபு எமிரேட்சில் தனது கணவடனுடன் வாழ்ந்து வந்த கேரள இளம் பெண் அடிக்குமாடி குடியிருப்பின் 19வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 37 வயதான ஷனிபா பாபு இவரது கணவர் சனுஜ் பஷீர் கோயா மற்றும் 2 மகள்களுடன் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள புஜைரா பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.



அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை!
[Sunday 2024-05-26 18:00]

அமெரிக்காவில் கருக்கலைப்பை தூண்டும் மைபெப்ரிஸ்டோன் மற்றும் மிசோப்ரோஸ்டால் ஆகிய மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறித்த மாத்திரைகளால் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்பட்டதால் இவ்வாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன.


Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா