Untitled Document
November 1, 2024 [GMT]
ஜோர்ஜ் ஃபிலாய்டு கொலை சம்பவம்: கனடாவில் நீதி கோரும் போராட்டம் மோதலில் முடிந்தது!
[Monday 2020-06-01 17:00]

நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரும் போராட்டம், கனடாவிலும் இடம்பெற்றுள்ளது. மொன்றியலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இப்போராட்டம், மோதலுடன் முடிவுக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொன்றியல் நகரத்தின் வழியாக பதுங்கியிருந்த போராட்டக்காரர்கள் இரவு வேளையிலும் அதே இடத்தில் இருந்ததாலேயே போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் மோதல் வெடித்தது.

நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரும் போராட்டம், கனடாவிலும் இடம்பெற்றுள்ளது. மொன்றியலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இப்போராட்டம், மோதலுடன் முடிவுக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொன்றியல் நகரத்தின் வழியாக பதுங்கியிருந்த போராட்டக்காரர்கள் இரவு வேளையிலும் அதே இடத்தில் இருந்ததாலேயே போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் மோதல் வெடித்தது.

  

மொன்றியல் பொலிஸார் கூட்டத்தை சட்டவிரோதமாக அறிவித்த மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, அவர்கள் அங்கு இருந்தால் மிளகு தெளிப்பு மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை அகற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 46 வயதான ஜோர்ஜ் ஃபிலாய்ட் என்பவர், கடந்த திங்கட்கிழமை நான்கு மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகளின் தாக்குதலால் கொல்லப்பட்டார். இந்தநிலையில், இதற்கு நீதிக் கோரியும், பொலிஸ் அதிகாரிகள் தண்டிக்கபட வேண்டுமெனவும் நியூஸிலாந்து, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

  
   Bookmark and Share Seithy.com



கனடாவில் சர்வதேச மாணவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு!
[Thursday 2024-10-31 17:00]

கனடாவில் சர்வதேச மாணவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரம்டன் நகர நிர்வாகம், மத்திய அரசாங்கத்திடம் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளது. பிரம்டனில் சர்வதேச மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாகவும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.



ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் அடுத்தடுத்து உயிரிழந்த நான்கு புலம்பெயர்ந்தோர்!
[Thursday 2024-10-31 17:00]

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நேற்று ஒருவர் உயிரிழக்க, அடுத்தடுத்து வெவ்வேறு கடற்கரைகளில் மேலும் மூன்று புலம்பெயர்ந்தோரின் உயிரற்ற உடல்கள் ஒதுங்கின. பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற ஒருவர், நேற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.



கனடா ஹாலோவீன் பண்டிகையில் இடம்பிடித்துள்ள ஒரு இந்திய திரைப்படம்!
[Thursday 2024-10-31 17:00]

ஷாரூக்கான் திரைப்படத்தையே பின்னுக்குத் தள்ளிய பாலிவுட் கதாநாயகியின் திரைப்படம் என்னும் தலைப்பில் ஒரு செய்தியை கேள்விப்பட்டிருக்கலாம். ஷ்ரத்தா கபூர் என்னும் நடிகை நடித்த ஸ்த்ரீ 2 என்னும் அந்த திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் ஷாரூக்கானின் பதான் திரைப்படத்தை வசூலில் மிஞ்சியுள்ளது. தற்போது, கனடாவில் ஹாலோவீன் பண்டிகையிலும் அந்த திரைப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.



இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதலில் எதிர்பாராத திருப்பம்: புதிய தலைவர் ஒப்பந்தத்துக்கு தயார்!
[Thursday 2024-10-31 17:00]

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதலில் எதிர்பாராத திடீர் திருப்பமாக, ஒப்பந்தத்துக்கு தயார் என்று ஹிஸ்புல்லாவின் புதிய தலைவர் கூறியுள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹஸன் நஸ்ரல்லா கடந்த மாதம் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நைம் கஸ்ஸம் என்பவர் ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.



இணையமூடாக பொறி வைக்கும் இந்தியா: கனேடிய உளவுத்துறை எச்சரிக்கை!
[Thursday 2024-10-31 06:00]

வெளிநாடுகளில் உள்ள பிரிவினைவாதிகளை சிக்க வைக்க இந்தியா சைபர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக கனேடிய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வான்கூவரில் சீக்கிய ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்டது உட்பட அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்களுக்கு இந்திய உயர் அதிகாரி ஒருவர் ஆதரவு அளித்து வருவதாக கனேடிய அரசாங்கம் வெளிப்படையாக பெயர் குறிப்பிட்டு குற்றம் சாட்டியதன் அடுத்த நாள், உளவுத்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.



நெதன்யாகுவுக்கு மிரட்டல் விடுத்த ஹிஸ்புல்லாவின் புதிய தலைவர்!
[Thursday 2024-10-31 06:00]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொலை செய்யப் போவதாக ஹிஸ்புல்லா படைகளின் புதிய தலைவர் தமது முதல் உரையில் மிரட்டல் விடுத்துள்ளார். ஹிஸ்புல்லா தலைவர் பொறுப்பு என்பது வெறும் தற்காலிகமானது மட்டுமே என இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டிருந்த நிலையில், அதன் தலைவர் Naim Qassem விவகாரமான பதிலடி அளித்துள்ளார்.



இரண்டு பிள்ளைகளுடன் நயாகரா அருவியில் குதித்த தாயார்!
[Thursday 2024-10-31 06:00]

திங்கட்கிழமை இரவு நயாகரா அருவியில் குதித்த தாயாரும் அவரது இரண்டு பிள்ளைகளும் மரணமடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூயார்க் மாகாண பொலிசார் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 33 வயதான Chaianti Means அவரது 9 வயது மற்றும் பிறந்து 5 மாதங்களேயான பிள்ளைகளுடன் நயாகரா அருவியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.



நியூயார்க் நகர வரலாற்றில் முதன்முறையாக தீபாவளிக்கு விடுமுறை!
[Wednesday 2024-10-30 18:00]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பர் முதலாம் திகதி விடுமுறை அளிக்கப்படுகிறது. இதுபற்றி சர்வதேச விவகாரங்களுக்கான மேயர் அலுவலக துணை ஆணையாளர் திலீப் சவுகான் கூறுகையில், இந்த வருட தீபாவளி சிறப்பானது. நியூயார்க் நகர வரலாற்றில் முதன்முறையாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரவிருக்கின்ற வெள்ளி கிழமையன்று பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். நியூயார்க் நகரில் 11 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.



பிரித்தானியாவில் குறைந்தபட்ச ஊதியம் 6.7 சதவீதம் உயர்வு!
[Wednesday 2024-10-30 18:00]

பிரித்தானியாவில் குறைந்தபட்ச ஊதியம் அடுத்த வருடம் 6.7% அதிகரிக்கவுள்ளது. இது பணவீக்கத்தை விட அதிகமான உயர்வாகும். இது பிரித்தானிய பொருளாதார அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸுக்கு தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுகின்றனர் என்பதை வலியுறுத்த உதவுகிறது. ஆனால், இது Bank of England-ன் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு சவாலாக அமையக்கூடும்.



ஹிஸ்புல்லாவின் புதிய தலைவருக்கு இஸ்ரேல் சில்லிடவைக்கும் எச்சரிக்கை!
[Wednesday 2024-10-30 18:00]

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருக்கு, இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் சமூக ஊடகமான எக்ஸில் சில்லிடவைக்கும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹிஸ்புல்லாவின் தலைவரான ஹஸன் நஸ்ரல்லா கடந்த மாதம் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.



கனடாவில் 2 மில்லியன் டொலர்கள் சேதத்தை ஏற்படுத்திய பதின்மவயதுப் பெண்கள்!
[Wednesday 2024-10-30 18:00]

கனடாவின் ஒன்ராறியோவில், நான்கு பதின்மவயதுப் பெண்கள் செய்த குறும்பு ஒன்று, 2 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஒன்ராறியோவிலுள்ள Oshawa என்னுமிடத்திலுள்ள ஒரு வீட்டின் மீது முட்டைகளையும் கற்களையும் வீசிய நான்கு பதின்மவயதுப் பெண்கள், பின்னர் அந்த வீட்டுக்குத் தீவைத்துள்ளார்கள். தீ மளமளவென பரவி, பல வீடுகளுக்குப் பரவியுள்ளது.



சீனாவின் கனவு திட்டம் நிராகரிப்பு: பிரபல நாடு எடுத்துள்ள அதிரடி முடிவு!
[Wednesday 2024-10-30 06:00]

இந்தியாவை தொடர்ந்து சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தை பிரேசில் நிராகரித்துள்ளது. பிரேசில், சீனாவின் மிகப்பெரிய பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தை (BRI) நிராகரித்துள்ளது. இந்தியாவின் முந்தைய நிராகரிப்பை தொடர்ந்து, சீனாவின் உலகளாவிய கட்டமைப்பு ஆசைகளுக்கு இது ஒரு பெரிய தோல்வியாகும். பிரேசிலின் சிறப்பு ஜனாதிபதி சர்வதேச ஆலோசகர் செல்சோ அமோரிம்(Celso Amorim) இது தொடர்பாக கூறுகையில், சீன முதலீட்டாளர்களுடன் ஒத்துழைக்க மாற்று வழிகளை நாடுவதாக தெரிவித்தார்.



பிரித்தானியாவை உலுக்கிய 3 சிறுவர்கள் கொலை வழக்கு: குற்றவாளி வீட்டில் கிடைத்த திடுக்கிடும் பொருள்!
[Wednesday 2024-10-30 06:00]

பிரித்தானியாவை உலுக்கிய 3 சிறுவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் மீது பயங்கரவாத தொடர்பு இருப்பதற்கான சந்தேகங்கள் எழுந்துள்ளன. சவுத் போர்ட்டில் ஜூலை மாதம் நடைபெற்ற டெய்லர் ஸ்விஃப்ட் நடன நிகழ்ச்சியில் நடந்த பயங்கர தாக்குதலில் எல்சி டாட் ஸ்டான்காம்ப், ஆலிஸ் டா சில்வா அகுயார் மற்றும் பெபே கிங் ஆகிய 3 பள்ளி சிறுவர்கள் கொலை செய்யப்பட்டனர்.



கொல்லப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்: வடக்கு காசா மீது இஸ்ரேல் சரமாரி ராக்கெட் தாக்குதல்!
[Wednesday 2024-10-30 06:00]

வடக்கு காசா மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரமான ஏவுகணை தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானின் ஈரான் ஆதரவு படையான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை தொடர்ந்து, அதன் புதிய தலைவராக நைம் காசிமை ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. இந்நிலையில் வடக்கு காசாவின் பெய்ட் லஹியா (Beit Lahiya) பகுதி மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது.



வெள்ளை மாளிகையில் சிறப்பாக இடம்பெற்ற தீபாவளி கொண்டாட்டம்!
[Tuesday 2024-10-29 18:00]

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இன்றையதினம் (29-10-2024) கோலாகலமாக நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்று சிறப்பித்துள்ளார். இந்து மத பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் நாளை மறுதினம் (31ம் திகதி) கொண்டாடப்பட உள்ளது.



18 நாடுகளுக்கு அவசர பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா!
[Tuesday 2024-10-29 18:00]

பிரித்தானியா 18 நாடுகளுக்கான அவசர பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. அது தொடர்பான விவரங்களைஇந்த செய்தியில் காணலாம். பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO), அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பிராந்திய மோதலுக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக 18 நாடுகளுக்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. மொராக்கோ, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், சைப்ரஸ் மற்றும் துருக்கி போன்ற விடுமுறைக்கு பிரபலமான இடங்களும், பாதுகாப்பு கவலைகளை உருவாக்கியுள்ள பிற மத்திய கிழக்கு நாடுகளும் இந்த பயண ஆலோசனையில் அடங்கும்.



கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர்: புதிய தலைவராக நைம் காசிம் நியமனம்!
[Tuesday 2024-10-29 18:00]

ஹிஸ்புல்லா படைகளின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், புதிய தலைவாரக நைம் காசிம் (Naim Qassem) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொறிமுறையின்படி ஷூரா கவுன்சில் 71 வயதான காசிமைத் தேர்ந்தெடுத்ததாக லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.



சர்வதேச மாணவர்களுக்கு உணவு கிடையாது: கனேடிய உணவு வங்கியின் முடிவால் சர்ச்சை!
[Tuesday 2024-10-29 18:00]

கனேடிய உணவு வங்கி ஒன்று, கனடாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உணவு கொடுக்கமுடியாது என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பியுள்ளது. அந்த உணவு வங்கியின் செயல், சர்ச்சையை உருவாக்கியுள்ளது. வான்கூவரிலுள்ள உணவு வங்கி ஒன்று, உணவு வாங்க வந்த சர்வதேச மாணவர்களில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உணவு கொடுக்கமுடியாது என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பியுள்ளது.



ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பு: தமிழக மாணவி அடைந்த ஏமாற்றம்!
[Tuesday 2024-10-29 06:00]

தமிழ்நாட்டை சேர்ந்த லட்சுமி பாலகிருஷ்ணன் என்ற மாணவி ரூ.1 கோடி வரை செலவு செய்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் PhD படித்து வந்த நிலையில், அவர் PhD படிப்பிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக பார்க்கப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது.



இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவோம்: ஈரான் சூளுரை!
[Tuesday 2024-10-29 06:00]

இஸ்ரேலுக்கு பதிலடி வழங்க தங்களிடம் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்துவது திட்டமிட்டு வருவதாக ஈரான் அறிவித்துள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொலை செய்யப்பட்டதை பழி வாங்கும் விதமாக கடந்த அக்டோபர் 1ம் திகதி இஸ்ரேலை குறிவைத்து ஈரான் 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இவற்றில் அதிகப்படியான ராக்கெட்டுகளை இஸ்ரேலின் வான் தடுப்பு அம்சங்கள் தடுத்து நிறுத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா