Untitled Document
April 3, 2025 [GMT]
ரஷியாவில் பரவி வரும் மர்ம வைரஸால் மக்கள் பீதி!
[Wednesday 2025-04-02 18:00]

 ரஷியா முழுவதும் பரவி வரும் மர்ம வைரஸால் ரஷிய மருத்துவ நிபுணர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதன் அறிகுறிகள் அதிக காய்ச்சல் மற்றும் ரத்தம் கலந்த இருமல் ஆகும். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 10 நாட்களுக்கு மேல் படுக்கையில் முடங்கி விடுகின்றனர். இதனால் மர்ம வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

ரஷியா முழுவதும் பரவி வரும் மர்ம வைரஸால் ரஷிய மருத்துவ நிபுணர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதன் அறிகுறிகள் அதிக காய்ச்சல் மற்றும் ரத்தம் கலந்த இருமல் ஆகும். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 10 நாட்களுக்கு மேல் படுக்கையில் முடங்கி விடுகின்றனர். இதனால் மர்ம வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

  

இந்நிலையில், இதனை மறுத்துள்ள ரஷிய அதிகாரிகள் புதிய நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா உள்ளிட்ட பொதுவான சுவாச நோய்த்தொற்றுகள் தான் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மருத்துவர்கள் இந்த மர்ம வைரஸ் தொடர்பாக, இது சுவாசக்குழாய் தொற்று என்றும் அறிகுறிகள் மோசமடைந்தால் அவசர சிகிச்சை பெறுமாறும் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் சமூக வலைத்தளங்களில் மர்ம வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் ஒரே மாதிரியான அறிகுறிகளை கூறி தங்களது அனுபங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதேவேளை உலகை முடக்கிய கொரோனா தொற்றுக்கு பிறகு மக்களிடையே புதுவிதமான தொற்றுநோய்கள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேறும் எலான் மஸ்க்!
[Thursday 2025-04-03 19:00]

ஜனாதிபதி டிரம்ப் தலமையிலான அமெரிக்க அரசின் சிறந்த நிர்வாகத்துக்கான துறையின் தலைவர் பதவியிலிருந்து, தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் விலகுவார், என டிரம்ப் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நெருக்கமான நண்பர் எலான் மஸ்க். உலகின் நம்பர் ஒன் பணக்காரர். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதளம் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.



மியான்மார் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!
[Thursday 2025-04-03 19:00]

மியான்மார் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று (3) 3,085 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிகின்றன. நிலச்சரிவில் சிக்கி 4,715 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 341 பேர் காணாமல் போயுள்ளதாக மியான்மார் இராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம், காலரா மற்றும் பிற நோய்களால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளான மண்டலே, சாகிங் மற்றும் நய்பிடாவ் தலைநகர் போன்ற இடங்களில் அதிகரித்து வரும் அபாயத்தைக் குறிப்பிட்டது.



ஆளே இல்லாத தீவுக்கு வரி விதித்த டிரம்ப்!
[Thursday 2025-04-03 19:00]

ஒவ்வாரு நாடுகளுக்கும் பரஸ்பரமாக வரியை விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.இதனால் வர்த்தக போர் தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம், மனிதர்களே வசிக்காத வெறும் பென்குயின்கள் மட்டும் வசிக்கும் தீவுக்கு அவர் வரி வித்திருப்பது பேசு பொருளாகியுள்ளது.



அமெரிக்க இறக்குமதியில் அதிரடி வரி உயர்வு!
[Thursday 2025-04-03 06:00]

அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் புதிய வரி வரம்பினை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். விடுதலை நாள்(Liberation Day) என்று அவர் பெயரிட்ட இந்த நாளில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் உலகளாவிய 10% அடிப்படை வரியை (Universal 10% "baseline" tariff) அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை, சர்வதேச வர்த்தகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நியூசிலாந்தில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய தம்பதியினர்!
[Thursday 2025-04-03 06:00]

நியூசிலாந்தில் பிரித்தானிய தம்பதி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஸ்னெத் புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணங்கள் கொலை-உயிரை மாய்த்துக் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வெலிங்டன் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



காசாவின் பெரும் பகுதியை கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்!
[Thursday 2025-04-03 06:00]

காசாவில் பெரிய அளவிலான நிலப்பரப்பை கைப்பற்ற போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கணிசமான அளவு நிலப்பரப்பை கைப்பற்றப் போவதாக அறிவித்துள்ளார். இது காசா பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.



வெள்ளை மாளிகையிலிருந்து வெளியான தகவல்: சிக்கி தவிக்கபோகும் பல நாடுகள்!
[Wednesday 2025-04-02 18:00]

அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக மற்ற நாடுகள் மீது வரி விதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகள் விதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய டிரம்ப், அதே அளவுக்கு அந்தந்த நாடுகள் மீது ஏப்ரல் 2ம் திகதி முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.



"ஆக்கிரமிக்கும் ஏ ஐ வளர்ச்சி, மனிதர்களுக்கு இரு நாட்கள் மட்டுமே வேலை" - பில் கேட்ஸ் கணிப்பு!
[Wednesday 2025-04-02 18:00]

செயற்கை நுண்ணறிவு(ஏ ஐ) தொழில்நுட்பத்தின் மெகா வளர்ச்சி காணமாக வாரத்திற்கு இரு வேலை நாட்கள் என்கிற நடைமுறை 10 ஆண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் கணித்துள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகக்கூடும் என்றும், இதன் காரணமாக வேலைநாட்களும் குறையும் என்றும் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.



எலான் மஸ்க்கையே கழுவி ஊற்றிய Grok AI!
[Wednesday 2025-04-02 18:00]

எக்ஸ் தளத்தில் செயல்பட்டு வரும் Grok AI தனது எஜமானர் எலான் மஸ்க்கையே கழுவி ஊற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட பலவற்றை நிர்வகித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரை விலைக்கு வாங்கிய அவர் அதன் பெயரை ‘எக்ஸ்’ என மாற்றினார். தற்போது எக்ஸில் Grok என்ற ஏஐ மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



தேம்ஸ் நதிக்கரையில் காணாமல் போன 11 வயது சிறுமி!
[Wednesday 2025-04-02 06:00]

பிரித்தானியாவின் நதிக்கரையில் காணாமல் போன 11 வயது சிறுமிக்கான தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. கிழக்கு லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் திங்கட்கிழமை மதியம் 11 வயது சிறுமி காலியா கோவா(Kaliyah Coa) காணாமல் போனார். அவர் பள்ளி விடுமுறை நாளில் காலியா நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீரில் இறங்கியதாக கூறப்படுகிறது.



2 பில்லியன் டொலர் ஒப்பந்தம்: அமெரிக்கா-போலந்தின் புதிய மூலோபாய கூட்டணி!
[Wednesday 2025-04-02 06:00]

தொழில்நுட்ப உதவிகளுக்காக அமெரிக்காவுடன் போலந்து 2 பில்லியன் டொலர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நாட்டிற்கான மூலோபாய உதவிகளைப் பெற போலந்து அரசாங்கம் அமெரிக்காவுடன் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக போலந்து நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும், நேட்டோவின் கிழக்கு எல்லையில் முக்கிய பங்கு வகிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.



தைவானை சுற்றி வளைத்த சீன ராணுவம்!
[Wednesday 2025-04-02 06:00]

தைவான் எல்லைப் பகுதியில் சீனா இராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளது. பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக தைவானை சுற்றி வளைத்து இராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருவதாக சீனா அறிவித்துள்ளது. மேலும் இது தைவான் ஜனாதிபதிக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்றும் சீனா கூறியுள்ளது.



அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனேடிய மக்கள்!
[Tuesday 2025-04-01 19:00]

டிரம்பிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா மக்கள், அமெரிக்க பொருட்களை வாங்குவதை தவிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் கனடாவில் உள்ள பல கடைகளில், கனடா தயாரிபு மது பானங்கள் காலியாகி வரும் அதேவேளை அமெரிக்க மதுபான வகைகள் விற்பனையாகாமல் அப்படியே இருக்கிறது.



குத்துச்சண்டை போட்டியில் திடீரென உயிரிழந்த வீரர்!
[Tuesday 2025-04-01 19:00]

ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின்போது, திடீரென வலிப்பு வந்து நைஜீரிய வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கானா தலைநகர் அக்ராவில் நடைபெற்ற போட்டியில் நைஜீரிய வீரர் கேப்ரியல், கானா வீரர் ஜான் ம்பங்கு என்பவரை எதிர்கொண்டார்.



சுவிஸில் திருட முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!
[Tuesday 2025-04-01 19:00]

சுவிட்சர்லாந்தின் வோ மாகாணத்திலுள்ள வேவே நகரத்தில் கடை ஒன்றில் திருட முயன்ற 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அந்தக் கடை பூட்டியிருந்த நிலையில், சிறுவன் உள்ளே நுழைய முயன்றபோது sliding door கதவில் அவனது தலை சிக்கிக்கொண்டது. கடந்த சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பொலிசார் அவனை கண்டுபிடித்தனர்.



நாளை முதல் கனடாவில் இந்த பொருட்கள் விலை உயரும்!
[Tuesday 2025-04-01 19:00]

ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டல், வெறும் மிரட்டலாக இல்லாமல், நாளை முதல் கனேடிய மக்கள் மீது உண்மையாகவே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, ட்ரம்பின் வரி விதிப்பால், உடனடியாக எந்தெந்த பொருட்கள் விலை உயரக்கூடும் என்று பார்க்கலாம்.



இந்த குற்றங்களுக்காக ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும்: ஜெலென்ஸ்கி!
[Tuesday 2025-04-01 06:00]

ரஷ்யாவின் 2022 படையெடுப்பிலிருந்து உக்ரைனால் ஆவணப்படுத்தப்பட்ட 183,000 க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்களுக்கு ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். தீமை பெருகுவதைத் தடுக்க நீதி தேவைப்படுவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவின் வடமேற்கில் உள்ள புச்சாவில் நடந்த ஐரோப்பிய அதிகாரிகளின் உச்சி மாநாட்டிலேயே ஜெலென்ஸ்கி தனது கருத்துக்களை தெரிவித்தார்.



பிரதமர் ஸ்டார்மரின் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்த ட்ரம்ப்!
[Tuesday 2025-04-01 06:00]

புதிய அமெரிக்க வரிகளிலிருந்து பிரித்தானியாவுக்கு விலக்கு வேண்டும் என்ற பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கோரிக்கையை டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். புதிய ஏற்றுமதி வரிகளை மாற்றும் புதிய வரையறுக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த ஜூன் மாதம் பிரித்தானியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் ஸ்டார்மர் அமெரிக்க ஜனாதிபதியை அழைத்திருந்தார்.



ஐரோப்பா முழுவதும் தீயாக பரவும் டெஸ்லா எதிர்ப்பலை: மிரட்டல் விடுத்த ட்ரம்ப்!
[Tuesday 2025-04-01 06:00]

இத்தாலியில் உள்ள எலோன் மஸ்க்கின் முதன்மையான டீலர்ஷிப்களில் ஒன்றில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் ஒரு டசினுக்கும் மேற்பட்ட டெஸ்லா கார்கள் எரிந்து சேதமாகியுள்ளது. ரோமில் 17 டெஸ்லா கார்கள் தீக்கிரையாக்கிய சம்பவத்தை அடுத்து, இதுவரை அமெரிக்காவில் மட்டுமே டெஸ்லா டீலர்ஷிப்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்கள் தற்போது ஐரோப்பாவிலும் பரவியுள்ளது. ரோமில் மொத்தமாக 17 டெஸ்லா கார்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ரோமின் தீயணைப்பு சேவை தெரிவிக்கையில், சாத்தியமான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருவதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் கூறியது.



கனடாவில் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு!
[Monday 2025-03-31 18:00]

கனடாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் கனடா (Elections Canada) இரண்டு லட்சம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்கப்பட உள்ளது. இப்பதவிகளுக்கான குறைந்தபட்ச ஊதியம் மணித்தியாலம் ஒன்றுக்கு 20 டொலர்களாகும். தற்போதைய கடினமான வேலை சந்தையில், இந்த வாய்ப்புகள் பொருளாதார நிலைமையை மேம்படுத்த விரும்பும் நபர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா