Untitled Document
May 22, 2024 [GMT]
வீரமரணமடைந்த அதிகாரியை பேஸ்புக்கில் இழிவுபடுத்திய வாலிபர்: - தேசத்துரோக வழக்கில் கைது
[Wednesday 2016-01-06 19:00]

பதான்கோட் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தேசிய பாதுகாப்பு படை அதிகாரியை பேஸ்புக்கில் இழிவுபடுத்திய கேரள வாலிபர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் மரணமடைந்துள்ளனர்.
அவர்களில் ஒருவரான தேசிய பாதுகாப்பு படை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் குமார், தாக்குதல் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒருவனின் உடலில் இருந்த வெடிகுண்டை செயல் இழக்க முயன்றபோது, அது வெடித்ததில் நிரஞ்சன் குமார் பலியாகியுள்ளார்.

பதான்கோட் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தேசிய பாதுகாப்பு படை அதிகாரியை பேஸ்புக்கில் இழிவுபடுத்திய கேரள வாலிபர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரான தேசிய பாதுகாப்பு படை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் குமார், தாக்குதல் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒருவனின் உடலில் இருந்த வெடிகுண்டை செயல் இழக்க முயன்றபோது, அது வெடித்ததில் நிரஞ்சன் குமார் பலியாகியுள்ளார்.

  

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இவர் பெங்களூரில் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ராதிகா பெங்களூரில் மருத்துவராக பணிபுரிந்து வரும் நிலையில், இந்த தம்பதிக்கு 2 வயதில் விஸ்மயா என்ற பெண் குழந்தை உள்ளது. வீரமரணம் அடைந்த நிரஞ்சன்குமாரின் உடல் பெங்களூரில் நேற்று இறுதி அஞ்சலி முடிந்த பிறகு ஹெலிகாப்டர் மூலம் பாலக்காட்டில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு ராணுவ மரியாதையுடன் இன்று காலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த அன்வர் (24) என்ற இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் அவரை இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். அன்வர் பேஸ்புக்கில், ஒரு தொல்லை ஒழிந்தது, இனி அவரது மனைவிக்கு உதவியும் வேலையும் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, கேரள பொலிசார் அன்வரை தேசத்துரோக வழக்கில் கைது செய்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



மீண்டும் அசத்திய மாரியப்பன் தங்கவேலு!
[Wednesday 2024-05-22 06:00]

ஜப்பானில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இப்போ போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் தங்கவேலு மாரியப்பன் 1.88 மீட்டர் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.



எட்டு முறை பாஜகவிற்கு ஓட்டு போட்ட சிறுவன்: வெளியான அதிர்ச்சி வீடியோ!
[Wednesday 2024-05-22 06:00]

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம் மற்றும் ஐந்தாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதே சமயம் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25 ஆம் தேதியும், இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதியும் நடைபெற உள்ளன. மேலும் இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.



ஒரிசா டூ தேனி: குடியாத்தத்தில் சிக்கிய கஞ்சா!
[Wednesday 2024-05-22 06:00]

ஒரிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பொட்டலங்களுடன் குடியாத்தத்தில் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகர போலீசார் குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



வெறும் கையால் மனிதக்கழிவை அகற்றும் பணியாளர்: சர்ச்சையில் சிக்கிய மதுரை மாநகராட்சி!
[Tuesday 2024-05-21 18:00]

மதுரையில் மனிதக் கழிவுகளை ஒப்பந்த பணியாளர் வெறும் கைகளாலே சுத்தம் செய்யும் காட்சிகள் இணையத்தில்வைரலாகி வருகிறது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்திருக்கின்றது. பாதாள சாக்கடைக்கு உள்ளே இறங்கி மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என மாநில அரசு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஆனால் இதனைப் பொருட்படுத்தாமல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் அரங்கேறி வருகிறது.



தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
[Tuesday 2024-05-21 18:00]

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது.



“தமிழர்கள் மீது மோடிக்கு வெறுப்பு ஏன்?” - முதல்வர் ஸ்டாலின்!
[Tuesday 2024-05-21 18:00]

ஒடிசாவில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி நேற்று (20.05.2024) கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நமது வீடுகளின் சாவிகள் தொலைந்து போனால், ஜெகநாதரைப் பிரார்த்தனை செய்து, இறைவனின் ஆசீர்வாதத்துடன் ஓரிரு மணி நேரத்தில் அவற்றைக் கண்டுபிடித்து விடுவோம். ஆனால் பகவான் ஜகந்நாத ரத்ன பண்டரின் சாவிகள் காணாமல் போய் ஆறு வருடங்கள் ஆகிவிட்டது.



இர்ஃபான் மீது பாய்ந்தது தமிழக அரசின் நடவடிக்கை!
[Tuesday 2024-05-21 18:00]

யூடியூபர் இர்ஃபான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது தமிழக மருத்துவத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பிரபல யூடியூபர் இர்ஃபான், திருமணம் செய்து கொண்டு பல்வேறு வீடியோக்களை மனைவியுடன் இணைந்து வெளியிடுவார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.



ராகுல் காந்தியால் ஆக முடியுமா? - அமித்ஷா விமர்சனம்!
[Tuesday 2024-05-21 06:00]

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் நான்கு கட்டமாக 381 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் ஐந்தாம் கட்டமாக வாக்குப்பதிவு இன்று (20-05-24) மாலை நடந்து முடிந்தது.



‘7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் எச்சரிக்கை!
[Tuesday 2024-05-21 06:00]

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் மேற்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் (22.05.2024) குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது.



“சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசியதில்லை” - பிரதமர் மோடி!
[Tuesday 2024-05-21 06:00]

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தகட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.



இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்கள் கைது!
[Monday 2024-05-20 18:00]

இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சில நாட்களுக்குப் பிறகு, ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் இலங்கையர்கள் எனவும் அவர்கள் இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர்கள் என்றும் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.



மக்களுக்கு உதவுவதற்காக 'த.வெ.க’ தலைவர் விஜய் எடுத்த அடுத்த முடிவு!
[Monday 2024-05-20 18:00]

'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை நடத்தி வரும் நடிகர் விஜய் மக்களுக்காக புதிய விடயம் ஒன்றை செய்யவுள்ளார். நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.



வங்கி கணக்கில் திடீரென வந்த ரூ.9900 கோடி: குழப்பத்தில் விவசாயி எடுத்த முடிவு!
[Monday 2024-05-20 18:00]

விவசாயி ஒருவரின் வங்கி கணக்கிற்கு திடீரென ரூ.9900 கோடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பதோஹி மாவட்டத்தில் வசிக்கும் விவசாயி பானுபிரகாஷ். இவர், பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda) வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவர் தனது வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை சோதித்து பார்த்துள்ளார். அப்போது தான் இவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.



சீமானின் வீடியோவை வெளியிடப்போவதாக பரபரப்பை கிளப்பும் விஜயலட்சுமி!
[Monday 2024-05-20 18:00]

நாம் தமிழர் கட்சி சீமான் ஆட்டம் போட்ட அனைத்து வீடியோக்களையும் வெளியிடப்போவதாக நடிகை விஜயலட்சுமி பரபரப்பை கிளப்பியுள்ளார். சீமான் தன்னை திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதாக புகார் கொடுத்த விஜயலட்சுமி, புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டு பெங்களூருக்கே திரும்பிச் சென்றார்.



தங்கையை அழைத்துவரச் சொன்ன நண்பன்: படுகொலை செய்த அண்ணன்!
[Monday 2024-05-20 06:00]

சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் ரஞ்சித் குமார். இவருக்குச் சரவணன் என்ற நண்பர் இருந்துள்ளார். இந்த நிலையில் ரஞ்சித் சரவணன் வீட்டில் மது அருந்தியுள்ளார். அப்போது ரஞ்சித் குமாரிடம் சரவணன் உனது தங்கையை அழைத்துவா என்று தவறான நோக்கத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.



கட்டுக்கடங்காத கூட்டம்: பாதியில் திரும்பிச் சென்ற ராகுல் - அகிலேஷ்!
[Monday 2024-05-20 06:00]

நாட்டின் 18 வது மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 4 கட்ட வாக்குப்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 14 தொகுதிகளுக்கும் வரும் 20 ஆம் தேதி 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.



தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது ஆசிட் வீச்சு: சென்னையில் பரபரப்பு!
[Monday 2024-05-20 06:00]

சென்னையில் பொதுமக்கள் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கக்கூடிய பொதுமக்கள் படுத்து உறங்கிகொண்டிருப்பது வழக்கம். அந்த வகையில் இன்று இரவும் சாலையோரம் வசிக்கக்கூடிய மக்கள் இரவு தூங்கிக்கொண்டிருந்த போது சுமார் 9 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மீது ஆய்வகத்தில் பயன்படுத்தக்கூடிய ஆசிட் பாட்டிலை வீசியுள்ளார். பின்பு அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.



பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!
[Sunday 2024-05-19 19:00]

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தகட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.



பட்டாக்கத்தியுடன் குத்தாட்டம்: காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்த குற்றவாளிகள்!
[Sunday 2024-05-19 19:00]

திருவண்ணாமலை நகரம் சாரோன் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ், வேங்கிகால் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, ஜெய் பீம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவர்கள் மூவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. சிறைக்கு போய்வந்தும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.



‘தென்மேற்கு பருவமழை தொடங்கியது’ - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
[Sunday 2024-05-19 19:00]

தமிழகத்தில் கோடை காலம் காரணமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில நாட்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (19.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கியுள்ளது. வழக்கத்தை விட 3 நாட்களுக்கு முன்னதாக அந்தமானில் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா