Untitled Document
May 16, 2024 [GMT]
2015இல் கொலைகள், குற்றங்கள் குறைவு! - என்கிறார் பொலிஸ் பேச்சாளர்
[Thursday 2016-01-07 07:00]

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கொலைகள், பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்கள் ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். தற்கொலை சம்பவங்களில் அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவித்த அவர் பெற்றோரின் தவறினாலே பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கொலைகள், பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்கள் ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். தற்கொலை சம்பவங்களில் அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவித்த அவர் பெற்றோரின் தவறினாலே பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

  

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,கொலைச் சம்பவங்களுடன் தொடர்புள்ள சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை 2015 இல் 88 வீதம் நிறைவு செய்யப்பட்டதாவும் கூறினார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 2014 ஆம் ஆண்டு 544 கொலைகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் கடந்த வருடத்தின் முதல் 11 மாதத்தில் 441 சம்பவங்கள் நடந்துள்ளன. ஊர்காவற்துறை மாணவியின் கொலை, கொடதெனியாவ கொலை, கஹவத்தை கொலை என பரபரப்பான கொலை சம்பவங்களாகும் .இவை கடந்த வருடத்தில் நடந்ததால் கடந்த காலத்தில் அதிக கொலைகள் நடந்ததாக கருதப்பட்டது.

2014 ஆம் ஆண்டில் 2008 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வருடத்தில் இது (நவம்பர் 30 வரை) 1854 ஆக காணப்பட்டது. இந்த சம்பவங்களில் 1501 சம்பவங்கள் 16 வயதுக்குக் குறைவான பதின்ம வயது பெண்கள் தொடர்புபட்டவையாகும். 80 வீதமான பாலியல் துஷ்பிரயோகங்கள் பெண்களின் விருப்பத்துடனே நடந்திருக்கின்றன. 16 வயதுக்குக் குறைவான பதின்ம வயது பெண்களே இவ்வாறு தமது காதல் தொடர்பு காரணமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். சட்டத்தின் பிரகாரம் 16 வயதுக்குக் கீழ் பட்டவர்கள் விரும்பி சென்றாலும் அது குற்றமாகும். இதற்கு இந்த சமூகமும் பெற்றோரும் பொறுப்பு கூற வேண்டும்.

பாரிய போதைப் பொருள் கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டதால் போதைப் பொருட்கள் கைது செய்யப்படுவது குறைவடைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில்312 கிலோ 908 கிராம் ஹெரோயின் பிடிபட்டது.இது தொடர்பில் 23 331 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 2915 இல் 46 கிலோ 51 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டது.

2014 ஆம் ஆண்டில் 19 644 கிலோ கஞ்சா பிடிபட்டதோடு2015 இல் 6569 கிலோ ஹெரோயின் பிடிபட்டது. 2014 இல் 43 ,683 பேரும் 2015 இல் 50 ஆயிரம் பேரும் கைது செய்யப்பட்டனர். வேறு வகை போதைப் பொருட்கள் 2014 ஆம் ஆண்டை விட அதிகளவு கைப்பற்றப்பட்டது. 2014 இல் 105 கிலோவும் 2015 இல் 230 கிலோவும் பிடிபட்டன.

இவ்வாண்டுகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2014 இல் 3144 தற்கொலைகள் இடம் பெற்றதோடு இது 2015 செப்டம்பர் வரை 2375 ஆக காணப்படுகிறது. 2014 இல் மாதாந்தம் 262 பேரும் 2015 இல் மாதந்தம் 263 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டில் 71 வயதுக்கு மேற்பட்ட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துள்ளதோடு 2015 இல் 17-_20 வயதுக்குற்பட்ட பெண்கள் அதிகம் தற்கொலை செய்துள்ளனர். என்றார்

  
   Bookmark and Share Seithy.com



வெருகலிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை! - இரவில் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தல்.
[Thursday 2024-05-16 15:00]

திருகோணமலை- வெருகல் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுக்க முயன்ற சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு இரவோடு இரவாக சென்று, நிகழ்வை தடுக்கும் வகையில் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.



ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகளை மூடுவேன்! - சஜித் அதிரடி அறிவிப்பு.
[Thursday 2024-05-16 15:00]

எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அரசாங்கம் அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுபானக் கடைகளை மூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார்.



அடுத்தவாரம் யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி! - பாதுகாப்பு தீவிரம்.
[Thursday 2024-05-16 15:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும், நினைவு நிகழ்வுகளும்! Top News
[Thursday 2024-05-16 15:00]

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் நேற்றிரவு 7மணியளவில் மாவிட்டபுரம் மற்றும் தெல்லிப்பழையில் ஆகிய இடங்களில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.



அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்!
[Thursday 2024-05-16 15:00]

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு எதிரான கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸ் நிலையம் ஆரம்பித்துள்ளது.



தாளையடியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் கைது!
[Thursday 2024-05-16 15:00]

யாழ்ப்பாணம் - தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.



இந்தோனேசியா செல்கிறார் ஜனாதிபதி!
[Thursday 2024-05-16 15:00]

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவில் நடைபெறும் 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்கத் திட்டம்!
[Thursday 2024-05-16 15:00]

2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.



ரஷ்யா செல்கிறது விசேட குழு!
[Thursday 2024-05-16 15:00]

ரஷ்யாவிற்கு கடத்தப்பட்ட இலங்கையர்களை நாடு திருப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளார்.



இந்திய- இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-05-16 15:00]

இந்தியா - இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.



சிறையில் ஒன்பது நாட்களாக உண்ணாவிரதம் - கண்டுகொள்ளாத அரசு நல்லிணக்கம் பேசுகிறது!
[Thursday 2024-05-16 05:00]

சிறையில் ஒன்பது நாட்களாக உணவொறுப்பில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது என குரலற்றவர்களின் குரல் அமைப்பு விமர்சனம் வெளியிட்டுள்ளது.



வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தற்போது சாத்தியமில்லை!
[Thursday 2024-05-16 05:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வது நடைமுறையில் தற்போது சாத்தியமற்றது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.



ரஷ்ய போரில் 16 படையினர் பலியானது உறுதி!
[Thursday 2024-05-16 05:00]

ரஷ்ய மற்றும் உக்ரைன் போரில் பங்கேற்ற 16 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இதுவரையில் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு இராணுவ கூலிப்படைக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.



மேய்ச்சல் தரை விவகாரத்தில் நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
[Thursday 2024-05-16 05:00]

மட்டக்களப்பு- மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது.



மனைவியைக் காப்பாற்ற கூலிப்படையாக சென்றவர் படுகாயத்துடன் திரும்பினார்!
[Thursday 2024-05-16 05:00]

ரஷ்ய மனித கடத்தலில் சிக்கி படுகாயமடைந்த ஒருவர் கடந்த 9ம் திகதி நாடு திரும்பியுள்ளார். குருநாகல் - கும்புக்கெட்ட பிரதேசத்தை சேர்ந்த எரந்த சிந்தக தென்னகோன், போர்க்களத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, கடந்த 9ம் திகதி நாடு திரும்பியுள்ளார்.



குமுதினிப் படுகொலை நினைவேந்தல்! Top News
[Thursday 2024-05-16 05:00]

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது.



நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் யூடியூப் சனலுக்கு எதிராக தடை உத்தரவு!
[Thursday 2024-05-16 05:00]

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு எதிராக யூடியூப் சனல் ஒன்று அவதூறான தகவல்களை வெளியிடுவதையும் தொடர்புகொள்வதையும் தடுக்கும் வகையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் புதிய நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இன்று நிபந்தனை உத்தரவு பிறப்பித்துள்ளது.



மே 18 ஐ தமிழ் தேசிய துக்க நாளாக கடைப்பிடிப்போம்!
[Thursday 2024-05-16 05:00]

தமிழ் மக்கள் மிக கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவுறுகின்ற வலி சுமந்த நாட்களை நினைவு கூருகின்ற இந்த தருணத்தில் தமிழராகிய எம் ஒட்டுமொத்த ஆன்மாவையும் பாதித்த மே 18 ஐ தமிழ் தேசிய துக்க நாளாக நாம் அனைவரும் கடைப்பிடிப்போம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு.அகத்தியர் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



தமிழர் வாக்கு தமிழருக்கே!
[Thursday 2024-05-16 05:00]

யார் பொது வேட்பாளர் என்ற கேள்வி பலர் மத்தியில் காணப்பட்டாலும் கூட தற்போது அதுபற்றி யாரும் பேசவில்லை. தற்போது பொது வேட்பாளர் என்ற கோட்பாட்டை அனைவரிடமும் கட்டி எழுப்பி அனைத்து தரப்பையும் ஒன்று சேர்த்து அதன் பின்னர் யார் பொது வேட்பாளர் என்பதை முடிவு எடுக்க தீர்மானித்துள்ளோம் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.



வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு!- விடுதி முகாமையாளரும் கைது.
[Thursday 2024-05-16 05:00]

வவுனியா- தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா