Untitled Document
May 8, 2024 [GMT]
நல்லாட்சியின் நரித்தனங்கள் !!
[Friday 2016-01-22 19:00]

சிறிலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை 'நல்லாட்சி' என பிரகடனப்படுத்திய சிங்கள தேசத்தின் புதிய ஆட்சியாளர்கள், அதன் ஓராண்டு நிறைவினை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். நல்லாட்சியின் நாயகனாக சிறிலங்காவின் அரசுத் தலைவர் மைத்திரி சித்திரிக்கப்படுகின்றார். ஆட்ட நாயகனாக ரணில் விக்கரமசிங்கே இருக்கின்றார்.
போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தனது பிரசன்னத்தினை உறுதிப்படுத்த இனநல்லிணக்கம், பொறுப்புகூறல் என்ற பெயர்களில் ஜெனீவாவில் களத்தினை திறந்த மேற்குலகம், கொழும்பு நோக்கி படையெடுத்தது ஜெனீவாக் களமுனையின் இறுக்கம், அனைத்துலக அரங்கில் இருந்து சிறிலங்கா தனிமைப்படுத்தப்படுகின்ற நிலை தோன்ற விழித்துக் கொண்டது சிங்கள அரசு.

சிறிலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை 'நல்லாட்சி' என பிரகடனப்படுத்திய சிங்கள தேசத்தின் புதிய ஆட்சியாளர்கள், அதன் ஓராண்டு நிறைவினை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். நல்லாட்சியின் நாயகனாக சிறிலங்காவின் அரசுத் தலைவர் மைத்திரி சித்திரிக்கப்படுகின்றார். ஆட்ட நாயகனாக ரணில் விக்கரமசிங்கே இருக்கின்றார். போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தனது பிரசன்னத்தினை உறுதிப்படுத்த இனநல்லிணக்கம், பொறுப்புகூறல் என்ற பெயர்களில் ஜெனீவாவில் களத்தினை திறந்த மேற்குலகம், கொழும்பு நோக்கி படையெடுத்தது ஜெனீவாக் களமுனையின் இறுக்கம், அனைத்துலக அரங்கில் இருந்து சிறிலங்கா தனிமைப்படுத்தப்படுகின்ற நிலை தோன்ற விழித்துக் கொண்டது சிங்கள அரசு.

  

ஆட்சிமாற்றம் கடந்தாண்டு சனவரில் 8ல் நிகழ்ந்தது !

சிறிலங்காவை நோக்கிய மேற்குலகத்தின் இறுக்கங்கள் மெதுவாக விலகின. ஜெனீவாக் களமுனையில் மலர்கள் சொரிந்தன. நல்லாட்சியென புகழாரம் பொழிந்தன! இன்று நல்லாட்சியின் ஓராண்டு நிறைவினை சிறிலங்காவின் புதிய ஆட்சியாளர்கள் கொண்டாடுகின்றனர். ஐ.நாவின் பொதுச்செயலர் பான் கீ மூன் வரை வாழ்த்து மழையில் நனைகின்றனர்.

ஜெனீவாவின் பிடியில் இருந்து தப்பித்து விட்டோம் என்ற சிறிலங்கா அமைச்சர்களின் பெருமிதங்களும், போர் குற்றச்சாட்டுக்களில் இருந்து படையினரைப் பாதுகாப்போம் என்ற கூற்றுக்களும் இந்த நல்லாட்சியின் பின்னால் உள்ள சிங்கள தேசத்தின் நலன்கள் எவை என்பதனை தெளிவாக காட்டுகின்றது.

உண்மையில் தமிழர்களுக்கு இது நல்லாட்சியா ?

அனைத்துலக சக்திகளின் ஆதரவுடன் தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரிப்பு போரில் அடைந்த அடைந்த இராணுவ வெற்றியினை, இன்று அதே அனைத்துலக சக்திகளின் ஆதரவுடன் நல்லாட்சியின் பெயரால் அரசியல் வெற்றியாக்க சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்கள் முனைகின்றனர்.

ஆட்சி புதிதெனினும், இதில் வீற்றிருப்பவர்கள் புதியவர்கள் அல்ல. தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பில் இவர்களுக்கு பெரும் பங்குண்டு. இலங்கைத்தீவு முழுவதுமே சிங்களவர்களுக்கு என்ற அடிப்படை பௌத்த பேரினவாத கருத்தியல் தளத்தில் உறுதியாக இருப்பதோடு, அதனை பேணுவதற்கும் தக்கவைப்பதற்கும் எந்த விலையினையையும் கொடுக்க தயங்காதவர்கள்.

அனைத்துலக சட்ட நியமங்களுக்கு மாறாக பெரும் இனவழிப்பு போர் ஒன்றின் ஊடாக தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்திருந்தமை இதற்கு நல்ல உதாரணம்.

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தேசத்தில் மூன்று விடயங்களில் சிங்கள அரசு உறுதியாகவும், நிரந்தரமாக்குவதிலும் உறுதியாக இருக்கின்றது.

1) இராணுவ மயமாக்கல் 2) பௌத்த மயமாக்கல் 3) சிங்கள மயமாக்கல்

இம்மூன்று விடயத்திலும் எந்தவித விட்டுகொடுப்புக்கும் இடமில்லாதவாறே இந்ந இந்த ஆட்சியாளர்களும் உள்ளனர். தங்களுடைய நலன்களை தக்கவைப்பதில் பிராந்திய - அனைத்துலக சகத்திகளை கெட்டித்தனமாக சிங்களத்தின் இராஜதந்(நரித்தந்)திரம் காலத்துக்கு காலம் கையாண்டு வந்துள்ளது.

ஜெனீவா விவாகரத்தில் இழந்த நற்பெயரை மீட்டெடுக்கவும், அழுத்தங்களை தணிப்பதற்கும் நரித்தந்திரத்துக்கு இட்டுக்கொண்ட பெயரே 'நல்லாட்சி'

மனிதாபிமானப் போர் என்றும், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்றும், மக்களை மீட்கும் போர் என்றும் கடந்த காலங்களில் தமிழினத்து எதிரான இனவழிப்பு போரினை பல்வேறு பெயர்களில் சிங்கள அரசு மேற்கொண்டிருந்ததை நாம் அறிவோம். இப்போது நல்லாட்சி என்ற பெயரில், தனது இராணுவ வெற்றியினை அரசியல் வெற்றியாக்க சிங்கள தேசம் நரித்தனமாக முனைகின்றது. இந்த நரித்தனங்களின் ஒரு பகுதியாகவே,

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தேசத்திலும், இலங்கையின் தமிழ் சமூகத்தின் மத்தியிலும், தமிழ் ஊடகங்களின் கருத்தியல் வெளி, சமூக அரசியல் கருத்துப் பரிமாற்றத்துக்கான பொதுவெளி, தமிழர்களது காணித் துண்டுகள் விடுவிப்பு, ஒருசில தமிழ் போர்கைதிகள் விடுவிப்பு, தமிழர் தரப்பிற்கு எதிர்கட்சி தலைவர் பொறுப்பு, புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் சிறிலங்காவில் இயங்குதவற்கான நிலை, ஊடகங்கள் மீதான தடைத்தளர்வு ஆகியன உள்ளன.

நல்லாட்சியின் இத்தந்திரங்களை உணர்ந்து ஒப்பீட்டளவில் கிடைத்துள்ள இந்த வெளியினை தமிழர்கள் தமது உரிமைக்கும் நீதிக்குமாக மாற்றிக் கொள்வதே இராஜதந்திரமாக இருக்கும். இருக்க வேண்டும் !!

- சுதன்ராஜ் -

  
   Bookmark and Share Seithy.com



டயானாவின் எம்.பி பதவியைப் பறித்தது உயர்நீதிமன்றம்!
[Wednesday 2024-05-08 19:00]

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.



நாகதம்பிரான் வழிபாட்டை தடுத்து சப்த நாக விகாரையாக மாற்றம்! Top News
[Wednesday 2024-05-08 19:00]

குலதெய்வமாக வழிபடப்பட்டுவந்த நாகதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக மாற்றி தமது வழிபாட்டை தடை செய்துள்ளதாக திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர்.



மகாவலி அபிவிருத்தியின் பெயரால் நில ஆக்கிரமிப்பு! - மணலாறு மக்கள் போராட்டம். Top News
[Wednesday 2024-05-08 19:00]

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று காலை 10 மணியளவில் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.



ஜூனுக்குள் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு!
[Wednesday 2024-05-08 19:00]

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஜூன் மாதத்துக்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், முழுமையான கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அரச தலைவர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.



நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூகுள், யூடியூப் மீது வழக்குகளை தாக்கல் செய்தார் இராணுவத் தளபதி!
[Wednesday 2024-05-08 19:00]

தமக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான காணொளிகளைப் பகிர்ந்தமைக்காக தனிநபர் ஒருவருக்கும் இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கும் எதிராக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.



மன்னாரில் காற்றாலை மின்திட்டத்துக்கு அனுமதி - பிரஜைகள் குழு எதிர்ப்பு.
[Wednesday 2024-05-08 19:00]

மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 52 காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.



உக்ரைன்- ரஷ்ய போர்முனைக்கு கூலிப்படைகளாக செல்லாதீர்கள்! - சவேந்திர சில்வா கோரிக்கை.
[Wednesday 2024-05-08 19:00]

வெளிநாடுகளில் கூலிப்படையாக இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்களில் இருந்து விலகியிருக்குமாறு இலங்கை படை வீரர்களிடம் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.



டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான்!
[Wednesday 2024-05-08 19:00]

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.இந்த முன்மொழிவு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பில் 3 இலட்சம் ரூபா கப்பம் கேட்ட இராணுவ மேஜர்!
[Wednesday 2024-05-08 19:00]

மட்டக்களப்பில் ஒருவரிடம் கல்முனை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ மேஜர் ஒருவர் 3 இலட்சம் ரூபா கப்பமாக தருமாறும் இல்லாவிடில் போதை பொருள் வைத்து மனைவியையும் தன்னையும் தூக்கி சென்று இல்லாமல் செய்ய போவதாக அச்சுறுத்தி மிரட்டிவருவதாக பாதிக்கப்பட்டவர் 6 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.



2100 கிராம உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம்!
[Wednesday 2024-05-08 19:00]

2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில், இன்று நடைபெற்றது.



உள்ளக பொறிமுறை மூலம் நீதி கிடைக்காது! - சுமந்திரன் கூறுகிறார்.
[Wednesday 2024-05-08 05:00]

யுத்த அத்துமீறல் குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளக பொறிமுறை மூலமாக சரியான நீதி கிடைக்காது என்பதற்கு யுத்தம் முடிவடைந்த இந்த 15 வருட காலமாக எதுவுமே நடக்காமல் இருப்பதே சான்றாக உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



வெளிநாடுகளுக்கு வளங்களை கொடுத்திருந்தால் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டிருக்காது!
[Wednesday 2024-05-08 05:00]

தாயக வளங்களை வெளிநாடுகளுக்கு கொடுத்திருந்தால் புலிகள் இயக்கம் 2009 இல் அழிக்கப்பட்டிருக்காது என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.



வடக்கு கிழக்கில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு - அடுத்தவாரம் சூடு தணியும்!
[Wednesday 2024-05-08 05:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது நிலவும் அதிகமான வெப்பநிலை தற்காலிகமாக எதிர்வரும் வாரம் சற்று குறைவாக இருக்கும் என, யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் அங்கீகரிக்கப்பட்ட வானியலாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



மோசடியை அம்பலப்படுத்திய இளைஞனுக்கு நெருக்கடி கொடுத்தால் சிக்கல் வரும்!
[Wednesday 2024-05-08 05:00]

விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை தனி ஒருவனாக இளைஞர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். எனவே தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கேட்டுக்கொண்டார்.



ஏமாந்து விடாதீர்கள் - படையினருக்கு கமல் குணரத்ன வேண்டுகோள்!
[Wednesday 2024-05-08 05:00]

ரஷ்ய - உக்ரைன் போர் நடவடிக்கையில் பணியாற்றுவதற்கு ஆட்களை சேர்க்கும் மனித கடத்தல்காரர்களுக்கு பலியாக வேண்டாம் என இலங்கை படையினருக்கு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.



சீனாவின் உதவியுடன் டிஜிட்டல் மயமாக்கப்படும் கல்வி!
[Wednesday 2024-05-08 05:00]

இலங்கையில் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கல்வியின் டிஜிட்டல் மாற்றம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட முன்மொழிவுக்கு சீன அரசாங்கம் ஆதரவை வழங்க இணங்கியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.



இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மட்டும் தான்! - வேறெதுவும் நடக்காது என்கிறார் பிரசன்ன ரணதுங்க.
[Wednesday 2024-05-08 05:00]

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது என ஆளுநர் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



மோடியின் நண்பனின் நிறுவனத்துக்கே விசா வழங்கும் அனுமதி!
[Wednesday 2024-05-08 05:00]

இலங்கை சட்டத்தின் பிரகாரம் விசா வழங்குவதற்கு முழுமையான அதிகாரம் குடிவரவுத் திணைக்களத்திற்கே உள்ள நிலையில், 'ரணில் - ராஜபக்ச' அரசாங்கம் வருகை விசா மற்றும் இணைய விசா வழங்குவதற்கான அனுமதியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கி நண்பரான சுபின் கர்கரியாவுக்கு சொந்தமான விஎவ்எஸ் குளோபல் (VFS Global) நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.



இது பொலிஸ் ராஜ்யமல்ல - சஜித் எச்சரிக்கை!
[Wednesday 2024-05-08 05:00]

கருத்து தெரிவித்தமைக்காக விசாரணைக்கு அழைப்பதற்கு இலங்கை பொலிஸ் இராஜ்ஜியமல்ல .இலங்கை ஜனநாயக நாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



உள்ளூராட்சி சபைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க சதி! - தயாசிறி குற்றச்சாட்டு.
[Wednesday 2024-05-08 05:00]

தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில், கலைந்துள்ள உள்ளூராட்சி சபைகளை மீள செயற்படும் வகையில் அரசாங்கம் திட்டங்களை முன்னெடுப்பதாக சுயாதீன எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா