Untitled Document
March 25, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பதவியை ராஜினாமா செய்ய தயார்: - சிரியா ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
[Monday 2017-01-09 18:00]

உள்நாட்டு யுத்தம் தொடர்பாக அமைதி பேச்சு வார்த்தை நடத்த முன் வந்தால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என சிரியா ஜனாதிபதி அதிரடியாக அறிவித்துள்ளார்.சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அரசாங்கத்திற்கும் உள்நாட்டு கிளிர்ச்சியாளர்களுக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்த யுத்தத்தை முடிவுக்கு க் ஒண்டு வர ஐ.நா சபை, அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் முயன்று வருகின்றன.பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தை தோல்வியை முடிவடைந்ததை தொடர்ந்து யுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உள்நாட்டு யுத்தம் தொடர்பாக அமைதி பேச்சு வார்த்தை நடத்த முன் வந்தால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என சிரியா ஜனாதிபதி அதிரடியாக அறிவித்துள்ளார்.சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அரசாங்கத்திற்கும் உள்நாட்டு கிளிர்ச்சியாளர்களுக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த யுத்தத்தை முடிவுக்கு க் ஒண்டு வர ஐ.நா சபை, அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் முயன்று வருகின்றன.பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தை தோல்வியை முடிவடைந்ததை தொடர்ந்து யுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  

சிரியா ஜனாதிபதியான அசாத் தனது பதவியை ராஜினாமா செய்தால் தான் இவ்விவகாரம் முடிவுக்கு வரும்’ என அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற ஒரு சூழலில் சிரியா ஜனாதிபதி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில், அடுத்த மாதம் கிளர்ச்சியாளர்களுடன் நடைபெறவுள்ள அமைதி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்தால் தனது பதவியை கூட ராஜினாமா செய்ய தயார் என அறிவித்துள்ளார்.எனினும், இது தொடர்பாக அரசியலமைப்பு தான் முடிவு செய்யும் எனவும் அசாத் தெரிவித்துள்ளார்.சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தில் இதுவரை சுமார் 4 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் ஆந்திரப் பெண் மகனுடன் கொலை:
[Saturday 2017-03-25 08:00]

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணும், அவரது ஆறு வயது மகனும் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர், நாரா அனுமந்தராவ். அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 9 ஆண்டுகளாக அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார்.



சிரியாவில் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு ஐ.நாவில் அழைப்பு..!
[Saturday 2017-03-25 08:00]

சிரியாவில் இடம்பெற்றுவரும் வன்முறைகளை ரஷ்யா, ஈரான், அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டுமென, ஜெனீவா பேரவையில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிரியதூதுவர் ஸ்டாப்பென் டீ மிஸ்டூர அழைப்புவிடுத்துள்ளார். ஐ.நாவின் கோரிக்கையை ஏற்று சிரிய வன்முறை நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்ப்பதாகவும், ஜெனீவாவில் பல்வேறு அரசியல் மட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம், சிரிய வன்முறைகளை குறைக்கும் பணிகளில் சர்வதேச பங்களிப்பை சிரிய தூதுவர் வேண்டுகோளாகவிடுத்துள்ளார்.



அகதிகளாக பயணித்த சுமார் 200 பேர் மத்திய தரைக்கடலில் மூழ்கி பலி..!
[Saturday 2017-03-25 08:00]

மத்திய தரைக்கடல் வழியாக பயணித்த சுமார் 200 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளிலிருந்து, ஐரோப்பாவிற்கு இரண்டு படகுகள் மூலம் அகதிகளாக பயணித்த சுமார் 200 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இத்தாலிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் படகு கவிழ்ந்த விடயம் கேள்வியுற்று விபத்து பகுதிக்கு வந்துள்ள இத்தாலிய கடலோர பாதுகாப்புப்படையினர் இதுவரை உயிரிழந்துள்ள 5 பேரின் உடல்களை மட்டுமே மீட்டுள்ளதாகவும், ஏனையவர்களை தேடும் பணிகள் இடம்பெறுவதாகவும் அறிவித்துள்ளனர்.



இந்திய குடிமகன் அந்தஸ்து பெற்ற ஆஸி வீரர், இந்திய அணியில் விளையாடு
[Saturday 2017-03-25 06:00]

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஷான் டெய்ட் இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன் அந்தஸ்தை பெற்றுள்ளார். இதனால் இவர் இந்திய அணியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷான் டெயிட் வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் (Overseas Citizen of India - OCI) என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இதனை அவரே தனது ட்விட்டரின் மூலம் உறுதி செய்துள்ளார். வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் அட்டையின் புகைப்படத்தை ஷான் டெயிட் சமீபத்தில் ட்விட்டரில் பதிவு செய்ததை தொடர்ந்து அவர் இந்திய அணியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.



பாகிஸ்தான் தேசிய தினத்தில் சீன, சவுதி படைகளின் சிறப்பு அணிவகுப்பு
[Friday 2017-03-24 21:00]

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தில் சீனா மற்றும் சவுதி படைகளின் சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது. முஸ்லிம்களுக்கு தனி நாடு கேட்டு 1940-ம் ஆண்டு லாகூரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை குறிக்கும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் 23-ந்தேதி தேசிய தினமாக பாகிஸ்தான் கொண்டாடுகிறது. அவ்வகையில் பாகிஸ்தானில் நேற்று தேசிய தினம் கொண்டாடப்பட்டது.. தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த தேசிய தின ராணுவ அணிவகுப்பில், முதல் முறையாக சீன ராணுவம் அதாவது சீனாவின் மக்கள் விடுதலைப் படை கலந்துகொண்டது. இதேபோல் சவுதி மற்றும் துருக்கி படைகளும் இந்த அணிவகுப்பில் இணைந்தது. இந்த அணி வகுப்பில் பாகிஸ்தான் ராணுவம் தனது ஆயுதங்களை காட்சிப்படுத்தியது.



எகிப்து முன்னாள் அதிபர் 6 ஆண்டுகளுக்கு பின் வீடு திரும்பினார்
[Friday 2017-03-24 21:00]

கைது செய்யப்பட்டு சிறைவாசத்துடன் ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக் ஆறாண்டுகளுக்கு பின்னர் இன்று வீடு திரும்பினார். அராபிய வசந்தம் என்ற பெயரில் வளைகுடா நாடுகளில் நிகழ்ந்த மக்கள் புரட்சி, அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எகிப்தில் அந்நாட்டின் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தெழுந்தபோது ராணுவம் கையாண்ட அடக்குமுறை நடவடிக்கையில் போராட்டக்காரர்களில் சுமார் 900 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் முபாரக்கிற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.



லண்டன் தாக்குதலுக்கு வடகொரியா இரங்கல்..!!
[Friday 2017-03-24 20:00]

லண்டன் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் தெரசா மேவுக்கு வடகொரியா இரங்கல் செய்தி அனுப்பியுள்ளது. பிரிட்டன் பாராளுமன்றம் அருகே நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், லண்டன் தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்து பிரிட்டனுக்கு வடகொரியா செய்தி அனுப்பியுள்ளது. வடகொரியா பிரதமர் பக் பாங்-ஜு, பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுக்கு இந்த இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார். இந்த செய்தியில், அனைத்துவிதமான தீவிரவாத செயல்பாடுகளையும் வடகொரியா அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.



ஆப்கானிஸ்தானில் சங்கின் மாவட்டம் தீவிரவாதிகள் வசம்..
[Friday 2017-03-24 20:00]

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுடன் கடும் சண்டையிட்டு வரும் தீவிரவாதிகள் முக்கிமான மாவட்டத்தை கைப்பற்றி உள்ளனர். தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் இருந்த ஆப்கானிஸ்தானை அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படைகள் மீட்டனர். தற்போது அங்கு ஜனநாயக ஆட்சி அமைக்கப்பட்டு மக்களாட்சி நடக்கிறது. தற்போது நேட்டோ படைகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் தலிபான் தீவரவாதிகள் கை ஓங்கியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் ராணுவத்துக்கும், தலிபான்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அதில் வெற்றி பெற்ற தீவிரவாதிகள் தென் ஹெல்மண்டில் உள்ள முக்கியமான மாவட்டமான சங்கின் மாவட்டத்தை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.



எந்த நேரத்திலும் அல் பாக்தாதி கொல்லப்படுவார்:அமெரிக்க மந்திரி ரெக்ஸ் டில்லர்சன்
[Friday 2017-03-24 07:00]

ஐ.எஸ். துணைத்தளபதிகள் அனைவரும் பலியான நிலையில் ‘எந்த நேரத்திலும் அல் பாக்தாதி கொல்லப்படுவார்’ என அமெரிக்க மந்திரி திட்டவட்டமாக கூறினார். உலகையே அச்சுறுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை முழுமையாக தோற்கடிப்பது குறித்த 68 உலக நாடுகள் கொண்ட கூட்டணி பேரவை கூட்டம், வாஷிங்டனில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் பேசும்போது, “ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் துணைத்தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். குறிப்பாக பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டவரும் சாகடிக்கப்பட்டு விட்டார். எந்த நேரத்திலும் அந்த அமைப்பின் தலைவனான அல் பாக்தாதி கொல்லப்பட்டு விடுவார்” என உறுதிபடகூறினார்.



அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பலி
[Friday 2017-03-24 06:00]

அமெரிக்காவில் அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலிஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலிஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வடக்கு பகுதியில் இருக்கும் விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள வங்கி ஒன்றில் நேற்று நுழைந்த மர்மநபர் ஒருவர் தான் கொண்டுவந்த கைத்துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சரமாரியாக சுட ஆரம்பித்தார்.



கனடாவின் பிரபல ஸ்டார்பக்ஸ் நிறுவனம் 1000 அகதிகளுக்கு வேலை வழங்க திட்டம்:
[Thursday 2017-03-23 21:00]

கனடாவின் பிரபல ஸ்டார்பக்ஸ் கோப்பி நிறுவனம், எதிர்வரும் ஐந்து வருடங்களில் சுமார் 1000 அகதிகளுக்கு வேலை வழங்க தீர்மானித்துள்ளது. மீள் குடியேற்ற முகவர் வலையமைப்புடன் இணைந்து செயற்படும் தேசிய அமைப்புக்கள், ஆகியனவற்றின் ஊடாக இந்த வேலை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.



பிரித்தானியாவிற்கு முழு ஒத்துழைப்பை நல்குவோம்: - அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
[Thursday 2017-03-23 21:00]

பிரித்தானியாவில் நான்கு பேரின் உயிரை காவுகொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத் தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்னிறுத்துவதற்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதலை அடுத்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-ஐ தொலைபேசியில் தொடர்புகொண்ட ட்ரம்ப் இவ்வாறு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். தீவிரவாத செயற்பாடுகள் எம்மை துயரில் ஆழ்த்தியுள்ளன. பிரித்தானிய மக்கள் இன்று அனுபவிக்கும் வேதனையை எம்மால் நன்கு உணர முடியும் என பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்ட் தெரிவித்துள்ளார்.



லண்டன் தாக்குதல் தொடர்பாக 7 பேர் கைது
[Thursday 2017-03-23 20:00]

பிரிட்டனில் பாராளுமன்ற வளாகம் அருகில் நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் லண்டன் போலீசார் 7 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து பாராளுமன்ற கூட்டம் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, பாராளுமன்ற வளாகம் அருகே உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில், ஒரு கார் அதிவேகத்தில் வந்து பொதுமக்கள் மீது மோதியது. இதில், 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து கீழே விழுந்தனர். ஒரு பெண் பலியானார். பீதியில், பொதுமக்கள் சுமார் 50 பேர், பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி ஓடினர்.



லண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு
[Thursday 2017-03-23 19:00]

லண்டன் பாராளுமன்றம் அருகே நேற்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாராளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதி ஒருவன் பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது காரை மோதிவிட்டு, போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி பாராளுமன்றத்திற்குள் நுழைய முயன்றான். அந்த தீவிரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.



தடைகளை கண்டு அஞ்சப் போவதில்லை: வடகொரியா அமெரிக்காவுக்கு பதில்!
[Thursday 2017-03-23 17:00]

வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை முடக்கும் வகையில் அமெரிக்காவினால் சுமத்தப்படும் எவ்வித பொருளாதார தடைகளுக்கும் அஞ்சப் போவதில்லை என பியோங்யாங் தூதுவர் ஒருவர் தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியா தொடர்ந்தும் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்நிலையில், வடகொரியா மீது புதிய கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்தே வடகொரியா தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



304 பேருடன் மூழ்கிய தென்கொரியக் கப்பலை அப்புறப்படுத்தும் முயற்சியில் மீட்புக் குழுவினர்:
[Thursday 2017-03-23 07:00]

மூன்று வருடங்களுக்கு முன் 304 பேருடன் மூழ்கிய தென்கொரியக் கப்பலை அப்புறப்படுத்தும் முயற்சியில் மீட்புக் குழுவினர் இறங்கியுள்ளனர். ‘செவோல்’ என்ற இந்தக் கப்பல் மூன்று வருடங்களுக்கு முன், நூற்றுக்கணக்கான உயர் வகுப்பு பாடசாலை மாணவர்களுடன் தென்மேற்குக் கடலில் மூழ்கியது. அளவுக்கதிகமானோரை ஏற்றியமையாலும், வேகமாகப் பயணித்தபடியே திரும்ப முயற்சித்ததாலுமே இந்த விபத்து நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது. இதில் 304 பேர் கொல்லப்பட்டதுடன் ஒன்பது பேர் காணாமல் போயினர்.



கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட் அவுட்கள் வைக்க அதிரடி தடை!
[Thursday 2017-03-23 07:00]

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட் அவுட்கள் வைக்க அதிரடி தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. கனடாவில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால், அவரின் கட் அவுட் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பிரம்மாண்டமாக வைக்கப்படும். இதற்கு கனடாவின் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இது குறித்து நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.



பிரித்தானிய பாராளுமன்ற வளாத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்: - ஒருவர் கொல்லப்பட்டு பலர் காயம் Top News
[Wednesday 2017-03-22 18:00]

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் சிலர் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் இதனை ஒரு பயங்கரவாத தாக்குதலாக கருதுவதாகவும் பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குலாளி ஒருவர் பிரித்தானிய பாராளுமன்ற வளாத்தில் வைத்து காவற்துறை அதிகாரியை கத்தியால் குத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து காவற்துறையினர் அவர்மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் காயமடைந்த தாக்குதலாளி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பதவியை ராஜினாமா செய்கிறாரா டொனால்ட் டிரம்ப்?
[Wednesday 2017-03-22 17:00]

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் விரைவில் தனது பதவியை அவரே ராஜினாமா செய்வார் என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தலைவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அந்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.நேற்று லாஸ் ஏஞ்சல்ஸில் இதுபோன்ற ஒரு போராட்டத்தில் ஜனநாயக கட்சி செனட் உறுப்பினரான Dianne Feinstein என்பவர் பங்கேற்றுள்ளார்.அப்போது, ‘ஒவ்வொரு நாளும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இதுபோன்ற நடவடிக்கைகளை எப்படி தடுப்பது?’ என போராட்டக்காரர் ஒருவர் செனட் உறுப்பினரிடம் கேட்டுள்ளார்.



சுவிஸில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்த தம்பதி: - நடந்தது என்ன?
[Wednesday 2017-03-22 17:00]

சுவிட்சர்லாந்து நாட்டில் தம்பதி இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Gansingen நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 59 மற்றும் 50 வயதான தம்பதி இருவர் வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் வீட்டில் வெடி விபத்து வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.


Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா