Untitled Document
February 25, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
நானும் ஸ்ரீதேவியும் நல்ல நண்பர்கள்: - கமல்ஹாசன்
[Monday 2017-01-09 18:00]

கமல்ஹாசன் இன்று முன்னணி ஆங்கில சேனல் ஒன்றில் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இதில் இவர் ஜல்லிக்கட்டு குறித்து ஒரு சில கருத்துக்களை கூறினார்.இதுமட்டுமின்றி தான் கடந்து வந்த பாதையை மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டார்.இதில் முக்கியமாக ‘நானும் ஸ்ரீதேவியும் நல்ல நண்பர்கள், என் குரு கே.பாலசந்தர் இல்லாத நேரத்தில் ஸ்ரீதேவியை சீண்டிக்கொண்டே இருப்பேன், எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும்ன்’ என கலகலப்பாக கூறினார்.

கமல்ஹாசன் இன்று முன்னணி ஆங்கில சேனல் ஒன்றில் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இதில் இவர் ஜல்லிக்கட்டு குறித்து ஒரு சில கருத்துக்களை கூறினார்.இதுமட்டுமின்றி தான் கடந்து வந்த பாதையை மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டார்.இதில் முக்கியமாக ‘நானும் ஸ்ரீதேவியும் நல்ல நண்பர்கள், என் குரு கே.பாலசந்தர் இல்லாத நேரத்தில் ஸ்ரீதேவியை சீண்டிக்கொண்டே இருப்பேன், எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும்ன்’ என கலகலப்பாக கூறினார்.

  
  
   Bookmark and Share Seithy.comகொடுப்பினை இல்லாத ஸ்ரீதேவி!
[Sunday 2018-02-25 16:00]

தயாரிப்பளார் போனி கபூரின் மூத்த மனைவி மோனாவும், இரண்டாவது மனைவியான ஸ்ரீதேவியும் இறந்ததில் ஒரு ஒற்றுமை உள்ளது. பாலிவுட் படங்களில் நடிக்க மும்பை சென்ற ஸ்ரீதேவி ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான தயாரிப்பாளர் போனி கபூர் மீது காதல் வயப்பட்டார். இதையடுத்து போனி தனது மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு ஸ்ரீதேவியை திருமணம் செய்தார்.படப்பிடிப்பு தளத்தில் கதறித் துடித்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்!
[Sunday 2018-02-25 16:00]

துபாயில் திடீரென மாரடைப்பால் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்த அவரது முதல் மகள் ஜான்வி கபூர் படப்பிடிப்புத் தளத்தில் கதறித் துடித்தார். துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகை ஸ்ரீதேவி இன்று அதிகாலை மாரடைப்பில் இறந்ததாக தகவல் வெளியானது. ஸ்ரீதேவியின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர், என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது தான் காரணமா?
[Sunday 2018-02-25 16:00]

உடல் நலம் மீது அதிக கவனம் செலுத்திய நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது காரணமாக இருக்கக்கூடுமோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது.சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி பாலிவுட் பக்கம் சென்று இந்தி திரையுலகின் பெண் சூப்பர் ஸ்டார் ஆனார். தனது காந்தக் கண்களால் ரசிகர்களை கவர்ந்தார்.திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற இடத்தில் ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.நடிகர் விஷாலுக்கு அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
[Sunday 2018-02-25 16:00]

தலைவலி, மூட்டுவலியால் அவதிப்பட்டு வரும் நடிகர் விஷால் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் தற்போது `இரும்புத்திரை', `சண்டக்கோழி-2' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.நடிகை சன்னி லியோனுக்கு வந்த திடீர் ஆசை!
[Sunday 2018-02-25 08:00]

கனடாவில் ஆபாச நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர் சன்னி லியோன். பிறகு இந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அது ஒர்க்அவுட் ஆனது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஏற்கனவே தமிழில், ‘வடகறி’ படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்டார். தற்போது அவர் ஹீரோயினாக நடிக்கும் படம், ‘வீரமாதேவி’ என்ற பெயரில் உருவாகிறது. இதில் ராணியாக நடிக்கிறார். இப்படத்துக்கு 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.வெளுத்து வாங்கும் த்ரிஷா!
[Saturday 2018-02-24 13:00]

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. சமீபகாலமாக வளர்ந்து வரும் நடிகைகளால் தமிழ் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து வருகிறார். குறைவான படங்களில் நடித்து வந்தாலும், சிம்ரனுக்கு பிறகு ரசிகர்களால் அதிகமாகக் கொண்டாடப்பட்ட ஒல்லி நடிகை இவர்தான். விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து சாமி ஸ்கொயர் படத்தில் நடிப்பதாக இருந்து பிறகு அதிலிருந்து விலகினார். இந்த விவகாரத்தால் தயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் உருவானதும் குறிப்பிடத்தக்கது.பெரியம்மாவான காஜல் அகர்வால்: - திருமணம் எப்போ எனக் கேட்கும் ரசிகர்கள்?
[Saturday 2018-02-24 13:00]

நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். விமல் ஹீரோவாக நடித்த இஷ்டம் என்ற படத்தில் இவர் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு படவாய்ப்புகள் இல்லாததால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கரண் வலேச்சா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் நிஷா அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை: - ரகுல் பிரீத் சிங்
[Saturday 2018-02-24 13:00]

சினிமாவில் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.வைர வியாபாரியுடனான தொடர்பை முறித்துக் கொண்ட பிரியங்கா சோப்ரா!
[Saturday 2018-02-24 13:00]

வைர வியாபாரி நிரவ்மோடி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவருடனான தொடர்பை பிரியங்கா சோப்ரா முறித்துக் கொண்டுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ்மோடி ரூ.11,500 கோடி மோசடி செய்தது குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இப்போது வருமான வரித்துறையினரும் இதில் தலையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நிரவ் மோடி தற்போது இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.அனுஷ்கா படத்துக்கு வழக்கு!
[Saturday 2018-02-24 13:00]

சமீபகாலமாக அனுஷ்கா நடித்த பல படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போதும் அவர் நடிப்பில் வெளியாகியுள்ள புதிய படத்திற்கும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அனுஷ்கா மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் இன்று வெளிவர உள்ள 'அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன்' திரைப்படத்திற்கு தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.எனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி: - பிரியா வாரியர்
[Friday 2018-02-23 18:00]

‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் கண்ணடித்தும், புருவத்தை உயர்த்தியும் பாடல் காட்சிக்கு நடித்திருந்தார் பிரியா வாரியர். இணைய தளத்தில் இந்த காட்சி பிரபலம் ஆனது. அதில் மகிழ்ச்சியில் திளைத்து நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார் பிரியா. அந்த மகிழ்ச்சியை சிதறடிக்கும் வகையில் பிரியா மீது ஐதராபாத், மும்பை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் மனம் புண்படும்படியான பாடல் காட்சியில் நடித்திருக்கும் பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டது.கதாநாயகிக்கு கைகுலுக்கி தாத்தா நடிகர் சேட்டை!
[Friday 2018-02-23 18:00]

கோலிவுட்டில் ஹீரோக்கள் சிலர் வயசானாலும் இளமை முறுக்குடன் உடற்கட்டை பராமரிக்கின்றனர். அதேசமயம் தலையும் தாடியும் நரைத்த மூத்த நடிகர்கள் தாத்தா வேடங்களில் நடிக்கின்றனர். அரசியல், காதல், ஆக்‌ஷன், காமெடி அம்சங்களுடன் உருவாகிறது ‘பதுங்கி பாயணும் தல’. இதன் ஆடியோ வெளியிடப்பட்டது. ஹீரோ மைக்கேல், ஹீரோயின் நைனிகா, வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம் புலி, சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் 70 வயது ராகுல் தாத்தாவுடன் நடிக்கிறார்.உதட்டை கவ்வி முத்தமிடும் பியா!
[Friday 2018-02-23 18:00]

கோ, கோவா, சட்டம் ஒரு இருட்டறை, கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பியா. நகரத்து பெண்ணாக பல படங்களில் நடித்திருந்தபோதும் பட வாய்ப்பு மிகக்குறைவாகவே வந்துகொண்டிருந்தது. நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன், முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று ஆரம்ப கட்டத்தில் நிபந்தனை விதித்துக்கொண்டிருந்தார். இதனால் சகஹீரோயின்களுடன் போட்டிபோட முடியாமல் திணறினார். இரண்டு அல்லது மூன்று நாயகிகளில் ஒருவராகவே நடிக்க வாய்ப்பு வந்தது. கடந்த 2 ஆண்டாக தமிழில் ஒரு படத்தில் கூட அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதில் சோர்ந்திருந்தவர் விளம்பர படங்களில் வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா!
[Friday 2018-02-23 18:00]

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, மகாநடி என்ற பெயரில் தெலுங்கிலும், நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும் படமாக உருவாகி வருகிறது. இதற்காக சாவித்திரியின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், அவருடன் இணைந்து நடித்தவர்கள் ஆகியோரிடம் தகவல்கள் திரட்டி நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பத்திரிகை நிருபராக சமந்தா நடிக்கிறார். திரையில் சாவித்திரியின் வாழ்க்கையை அவர் விவரித்துச் சொல்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.தொடர்ந்து நடிப்பேன்: - பாவனா
[Friday 2018-02-23 18:00]

கன்னடப் பட தயாரிப்பாளரும், தனது நீண்ட நாள் காதலனுமான நவீனை திருமணம் செய்துகொண்ட பாவனா, கன்னடத்தில் சிவராஜ் குமாருடன் இணைந்து நடித்துள்ள படம் விரைவில் ரிலீசாகிறது. இதையடுத்து தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ள அவர் கூறியதாவது: இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன். ஆனால், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பேன். ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே கிடைக்கிறது. அதுவரை என்னால் காத்திருக்க முடியாது.கெட்டவார்த்தையில் கேலி செய்தால் நேரடி தாக்குதல்: - நடிகைகள் துணிச்சல் முடிவு
[Wednesday 2018-02-21 17:00]

இணைய தளங்களில் நடிகைகளை கெட்ட வார்த்தையில் விமர்சித்தும், மிரட்டியும், அவர்களை மார்ஃபிங் செய்து ஆபாச படம் வெளியிட்டும் இழிவுபடுத்துகின்றனர். இதனால் பாதிக்கப்படும் நடிகைகள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை கோருகின்றனர். அதன்பேரில் ஒருசிலர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விமர்சனங்கள் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. ஒரு சில நடிகைகள் பதிலடியாக இணைய தளத்திலேயே அந்த நபர் எப்படி திட்டினாரோ அதேபாணியில் திட்டி தீர்க்கின்றனர்.தன்ஷிகா நடித்த குறும்படத்திற்கு எட்டு விருதுகள்!
[Wednesday 2018-02-21 17:00]

கபாலி படத்தின் மூலம் பிரபலமான தன்ஷிகா நடித்த சினம் என்ற குறும்படம் கொல்கத்தா திரைப்பட விழாவில் 8 பிரிவுகளில் விருது பெற்றுள்ளது. ஆனந்த மூர்த்தி இயக்கதியுள்ள சினம் குறும்படம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலாச்சார ரீதியில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக இப்படத்தை சினிமா விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து மேற்குவங்கத்துக்கு பிழைக்க சென்று அங்கு பாலியல் தொழிலாளியாக மாறிய ஒரு பெண்ணின் கதை.இளைய தளபதியின் நடன அசைவுகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது: - மேகா ஆகாஷ்
[Wednesday 2018-02-21 17:00]

வளர்ந்து வரும் இளம் நடிகை மேகா ஆகாஷ் தான் ஒரு தீவிர விஜய் ரசிகை என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் நடன அசைவுகள் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாகவும், ஜெயராம் மகன் காளிதாஸ், மற்றும் அதர்வாவுடனும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மேகா ஆகாஷ்.நெருக்கமாக நடிக்க ஹீரோவுக்கு தைரியம் கொடுத்த ரம்யா நம்பீஸன்!
[Wednesday 2018-02-21 17:00]

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கும் ரம்யா நம்பீஸன் கதைக்கு தேவைப்படும்போது நெருக்கமான காட்சிகள், முத்தக்காட்சிகளில் நடிக்கிறார். அவர் நடிக்கும் புதிய படம் ‘நட்புன்னா என்னென்னு தெரியுமா’. இதில் ரம்யாவுடன் காதல் காட்சியில் நெருக்கமாக நடிக்க பயந்தார் புதுமுக ஹீரோ கவின். இதுபற்றி பட இயக்குனர் சிவா அரவிந்தன் கூறியது: மூன்று நண்பர்களைபற்றிய கதையாக உருவாகிறது. கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் நண்பர்களாக நடிக்கின்றனர். ரம்யா நம்பீஸன் ஹீரோயின்.தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு நியாயமான முறையில் பதில் அளிக்கும் இஷா!
[Wednesday 2018-02-21 17:00]

ஃபேஸ்புக், டுவிட்டர். வாட்ஸ் அப் என இணைய தள பக்கங்களில் பல சினிமா நட்சத்திரங்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஹீரோயின்கள் சிலர், சமுதாயம், பெண்கள் அவமதிப்பு குறித்து துணிச்சலாக கருத்து சொல்கின்றனர். அதுபோன்ற சமயங்களில் சில விஷமிகள் குறிப்பிட்ட நடிகையை திட்டியும், இழிவாக விமர்சித்தும் கருத்து வெளியிடுகின்றனர். யார் இவன், துடக் துடக் துடியா படங்களில் நடித்தவர் இஷா குப்தா. அவரும் விஷமிகளின் விமர்சனத்துக்கு பலமுறை ஆளாகி வருகிறார். இதை தடுப்பது எப்படி என்பது தெரியாமல் தவித்து வந்தார். தற்போது அதற்கான வழியை காண முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.


Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா