Untitled Document
February 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இளம்பெண்ணை கும்பலாக கற்பழித்து சாலையோரம் வீசிச் சென்ற கொடூரம்: - 4 பேருக்கு போலீசார் வலை
[Tuesday 2017-01-10 17:00]

உத்தரப்பிரதேசம் மாநிலம் மைன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், தற்போது தனது தந்தையுடன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஜகத்புராவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று, அந்தப் பெண் ஆழ்வர் மாவட்டத்தில் தேர்வு ஒன்று எழுதிவிட்டு ரெயில் மூலமாக ஜெய்ப்பூருக்கு திரும்பியுள்ளார். இரவு 7.30 மணி அளவில் ஜெய்ப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து வீடு திரும்ப முயற்சிக்கும் போது, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வாகனத்தில் அப்பெண்ணை கடத்திச் சென்றனர்.மேலும், கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்து, ஜெய்பூரில் உள்ள மாளவியா தொழில்நுட்ப கல்லூரி அருகே நள்ளிரவு 11.30 மணி அளவில் அப்பெண்ணை வாகனத்திலிருந்து சாலையில் தள்ளிவிட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் மைன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், தற்போது தனது தந்தையுடன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஜகத்புராவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று, அந்தப் பெண் ஆழ்வர் மாவட்டத்தில் தேர்வு ஒன்று எழுதிவிட்டு ரெயில் மூலமாக ஜெய்ப்பூருக்கு திரும்பியுள்ளார். இரவு 7.30 மணி அளவில் ஜெய்ப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து வீடு திரும்ப முயற்சிக்கும் போது, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வாகனத்தில் அப்பெண்ணை கடத்திச் சென்றனர்.மேலும், கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்து, ஜெய்பூரில் உள்ள மாளவியா தொழில்நுட்ப கல்லூரி அருகே நள்ளிரவு 11.30 மணி அளவில் அப்பெண்ணை வாகனத்திலிருந்து சாலையில் தள்ளிவிட்டுள்ளனர்.

  

மயங்கிய நிலையில் சாலையின் ஓரத்தில் பரிதாபமாக கிடந்த அப்பெண், இன்று அதிகாலை 5 மணிக்கு சுயநினைவு வந்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பெண்ணை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான 4 பேரை வலை வீசித் தேடி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மூலம் சம்மந்தப்பட்ட மர்ப நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



எழுபத்தியொரு வயது முதியவரால் ஐந்து வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!
[Sunday 2017-02-19 18:00]

இந்தியாவில் 5 வயது சிறுமி 71 முதியவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது. மும்பை Nalasopara பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.குறித்த குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வந்த 71 வயது முதியவர், 5 வயது சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்று தவறாக நடந்துள்ளார்.இதைகண்ட அக்குடியிருப்பை சேர்ந்த ஒருவர் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், குடியிருப்பாளர்கள் காவலாளியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.



துப்பாக்கி ஏந்திய பொலிசாரின் பாதுகாப்புடன் ஊர் திரும்பும் சசிகலா எம்எல்ஏக்கள்!
[Sunday 2017-02-19 18:00]

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதிகளுக்கு திரும்ப திட்டமிட்டு இருப்பதால் அவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட பொலிஸ் உயர்அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களுக்கு அவர்களது வீடு, அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தவிர ஓபிஎஸ்.அணி எம்எல்ஏக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள வீட்டிற்கும், சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கும் துப்பாக்கி ஏந்திய பொலிசார் உள்பட 10 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



பன்னீர் செல்வம் அணியினரால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க முடியும்: - வெளியான பரபரப்பு தகவல்
[Sunday 2017-02-19 17:00]

திமுக, ஓ.பன்னீர் செல்வம் அணியினரால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க முடியும் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.இதுகுறித்து எழுத்தாளர் ஞாநி சங்கரன் வெளியிட்டுள்ள பதிவில், தி.மு.க எம்.எல்.ஏக்களும் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்யலாம்.ஏறத்தாழ பாதி மன்றம் காலியாகிவிடும். அப்படிச் செய்தால் சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த உத்தரவிடும் கட்டாயத்தை ஆளுநருக்கு ஏற்படுத்த முடியலாம் என குறிப்பிட்டுள்ளார்.திமுக எம்.பிக்கள், தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக ஆளுநரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து ஆளுநர் தற்போது மும்பை புறப்பட்டு சென்றுள்ளார்.



சசிக்கு 4 வருஷம், எடப்பாடிக்கு 6 மாசம்! - மார்கண்டேய கட்ஜூ அதிரடி!
[Sunday 2017-02-19 12:00]

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 4 வருட தண்டனை சிறையில் தான் இருக்க வேண்டும். அவரின் மறு ஆய்வு மனுவால் எந்த பலனும் கிடைக்காது என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வருகை தந்த மார்க்கண்டேய கட்ஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது; தமிழக முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் விசுவாசி என்று கேள்விப்பட்டேன்.



இது சட்டப்பேரவையா அல்லது சட்டையை கிழிக்கும் பேரவையா: - தமிழிசை சௌந்தரராஜன்
[Sunday 2017-02-19 09:00]

சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் தனபால் அதை நிராகரித்துவிட்டார். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனால் அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது மு.க. ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் சிலர் தாக்கப்பட்டதாகவும், இதில் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது.இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



நாட்டுக்காக போராடி சிறைக்கு சசிகலா வரவில்லை: - டி.ஜி.பி பேட்டி
[Sunday 2017-02-19 09:00]

சசிகலாவுக்கு மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுதான் வழங்கப்படுகிறது. மற்ற கைதிகளுக்கு எந்தநேரத்தில் உணவு வழங்கப்படுகிறதோ அதே நேரத்தில் தான் சசிகலாவுக்கும் உணவு வழங்கப்படுகிறது. அவர் நன்றாக இருக்கிறார். மிகவும் அமைதியாக காணப்படுகிறார்.இங்கு எல்லா கைதிகளும் குற்றவாளிகள் தான். யாருக்கும் சிறப்பு சலுகை அளிக்கப்படவில்லை. தினமும் காலையில் புளிசாதம், உப்புமா, அவல்சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவையும், மதியம் கேழ்வரகு களி, சோறு, சப்பாத்தி, இரவில் சப்பாத்தி,களி ஆகியவை வழங்கப்படுகின்றன. வாரம் ஒருமுறை மட்டனும்,சிக்கனும் வழங்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு முறை டீ, காபியும் வழங்கப்படுகிறது.



எடப்பாடி வெற்றி செல்லாது! சபை மரபு மீறப்பட்டுள்ளது! ஆட்சி கலைக்க கவர்னர் முடிவு ?
[Sunday 2017-02-19 09:00]

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் ஒரு முறை கொண்டு வந்து, தோல்வி அடைந்தால் அடுத்து முறை நம்பிக்கை வாக்கெடுப்பு 6மாதம் கழித்து தான் மீண்டும் கொண்டு வரமுடியும். ஆனால், இன்று தமிழக சட்டசபையில் காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வந்தார். தி.மு.க.,உட்பட எதிர் கட்சிகள் ரகசியவாக்கெடுப்பு நடத்தவேண்டும் கோரிக்கை விடுத்தனர்.



சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக படுகொலை: - ஜெ. தீபா
[Sunday 2017-02-19 09:00]

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில் அ.தி.மு.க.வின் இரு அணிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமே சபையில் இருந்தனர். அப்போது நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக படுகொலை. ஒரு குறிப்பிட்ட குடும்பம் ஆட்சியை கைப்பற்ற விட்டுவிடக் கூடாது. அராஜக ஆட்சி தொடரக்கூடாது. மக்களும் எதிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.



ஜனநாயக முறையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: - சீமான்
[Sunday 2017-02-19 08:00]

பொன்னேரியில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் இல்லத்திருமண விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பதவியேற்ற பிறகும் அடைத்து வைத்துள்ளனர். இதிலிருந்து வெளியே ஓடிவிடுவார்கள், மாயமாகி விடுவார்கள் என்ற அச்சம் உள்ளது. உடனடியாக ஜனநாயக முறையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.



தமிழ் நாட்டிற்கு தண்ணீர் இல்லை: - கர்நாடகா
[Sunday 2017-02-19 08:00]

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, தமிழக - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில், டில்லியில் நடந்த காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய கர்நாடக தலைமை செயலர், சுபாஷ் சந்திரா ஹூண்டியா பேசும்போது, "கர்நாடகத்தில் தொடர்ந்து வறட்சி நிலவி வருவதால் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது. அதனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, தமிழகத்துக்கு தினமும், 2,000 கன அடி



ஓ.பி.எஸ் உள்ளிட்ட 10 பேர் எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்கப்படுகின்றதா?
[Sunday 2017-02-19 08:00]

நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிபோகும் சூழல் எழுந்துள்ளது.சட்டசபையில் முதல்வர் இடைப்பாடி பழனிசாமி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு எதிராக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் வாக்களித்துள்ளனர். கட்சி கொறடா உத்தரவை மீறியதால் இவர்களின் எம்.எல்.ஏ. பதவி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறுகையில், முதலில் கட்சி கொறடா நியமனம் குறித்தே கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். அணியில் இருந்து கொறடாவாக செம்மலை நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் கொறடாவாக ராஜேந்திரன் உள்ளார் என முதல்வர் தரப்பில் கூறப்படுகிறது.



சட்டையை தானே கிழித்துக் கொண்டாரா ஸ்டாலின்?
[Sunday 2017-02-19 08:00]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றியடைந்துள்ளது.சட்டசபை கூட்டம் தொடங்கியவுடன் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரியும், ஒருவாரம் கழித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர் திமுக எம்எல்ஏ-க்கள்.இதனை சபாநாயகர் தனபால் மறுத்ததால் ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏ-க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து சபாநாயகரின் உத்தரவின்படி ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏ-க்களை கூண்டாக வெளியேற்றினர்.



அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா ஜெயலலிதா சமாதியில் செய்த மூன்று சபதங்கள்: - வெளியான அதிர்ச்சி தகவல்!
[Sunday 2017-02-19 08:00]

அதிமுக- பொதுச் செயலாளரான சசிகலா ஜெயலலிதா சாமதியில் செய்த மூன்று சபதங்கள் என்ன என்பது பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது.முறைகேடாக சொத்துக்குவித்த வழக்கில் சசிகாலவுக்கு உச்சநீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.இந்நிலையில் அவர் கடந்த 15 ஆம் திகதி போயஸ் கார்டனிலிருந்து பெங்களூர் சிறைக்குப் புறப்பட்டார். அப்போது சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர்தூவி மரியாதை செய்தார்.அப்போது திடீரென அவர் தரையில் அடித்து சத்தியம் செய்தார். தொடர்ந்து மூன்று முறை தரையிலடித்த சசிகலா, கடுங்கோபத்துடனும் லேசான அழுகையுடனும் காணப்பட்டார்.அவர் அங்கு என்ன கூறி சபதம் செய்தார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் தற்போது அவர் என்ன சபதம் செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.



மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு? - அதிர்ச்சியில் சசிகலா தரப்பு
[Sunday 2017-02-19 08:00]

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஆளுநருக்கு திருப்தி அளிக்காவிட்டால் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.சசிகலாவுக்கும், பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சசிகலா ஆதரவாளரும் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கூறப்பட்டது.இந்நிலையில் இன்று பெரும்பான்மை நிரூபிப்பதற்கு இரு தரப்பினரும் சட்டப்பேரவை வந்திருந்தனர்.இதைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில், பெரிய அமளி ஏற்பட்டது. இதனால் எதிர்கட்சி எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.



அதிமுக இயக்கத்தை அழிக்க நினைத்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது: - பன்னீர்செல்வத்தை விளாசும் முதல்வர்
[Saturday 2017-02-18 17:00]

தி.மு.க.வுடன் கூடிக்குலாவி இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி, பன்னீர்செல்வத்தை கடுமையாக சாடியுள்ளார். சட்டமன்றத்தை முடக்கி ரகளை செய்து வாக்கெடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு திமுக உறுப்பினர்கள் வந்தார்கள். ஆனால் அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. அராஜகத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் மீது சபாநாயகர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் என்று நிரூபித்திக்கிறார்கள். இந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தி.மு.க.வுடன் கூடிக்குலாவி இருக்கும் காட்சி சட்டமன்றத்திலேயே அனைத்து தொலைக்காட்சியிலும் வந்துள்ளது. ஜெயலலிதாவின் தீர்ப்பு பற்றி திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கடுமையாக விமர்சனம் செய்தபோது, இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒருவர் கூட எதிர்த்துப் பேசவில்லை. இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவோம். எங்கள் பொதுச் செயலாளர் சசிகலா எடுத்த சபதம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.



உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் அதிரடி கைது: - தமிழகம் முழுவதும் திமுக-வினர் போராட்டம்
[Saturday 2017-02-18 17:00]

சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டதை கண்டித்து மெரினாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை உட்பட தமிழகத்திலன் பல இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று சட்டசபையில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுகவினர் ரகசிய வாக்கெடுப்பு கோரி ரகளையில் ஈடுபட்டனர்.இதனையடுத்து, சபாநாயகர் திமுகவினரை வெளியேற்றும் படி உத்தரவிட்டார். இதனையடுத்து, எதிர்கட்சி தலைவர் தாக்கப்பட்டு சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் வெளியேற்றப்பட்டார்.



எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி!
[Saturday 2017-02-18 17:00]

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.ஆனால் இதற்கு திமுக, காங்கிரஸ் மற்றும் ஓபிஎஸ் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.



தமிழக சட்டமன்றத்தில் ஸ்டாலினின் சட்டையை கிழித்து கொடூர தாக்குதல்!
[Saturday 2017-02-18 17:00]

தமிழக சட்டமன்றத்தில் நிகழ்ந்த அமளியின் மத்தியில் எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினின் சட்டையை கிழித்து தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருந்த நம்பிக்கை வாக்கெடுப்பு அமளியாக மாறி தற்போது 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.சட்டமன்றத்தில் இருந்து திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்களை வெளியேற்ற சட்டமன்ற காவலர்கள் முயன்றுள்ளனர்.ஆனால், காவலர்களின் பிடியில் சிக்காத திமுகவினர் அவையின் மத்தியில் தொடர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளனர்.



ஒரு மாத கைக்குழந்தையை மிருகங்கள் வாழும் காட்டில் வீசிச்சென்ற பெற்றோர்: - அதிர்ச்சி சம்பவம்
[Saturday 2017-02-18 16:00]

இந்தியாவில் ஒரு மாத கைக்குழந்தையை மிருகங்கள் வாழும் காட்டில் வீசிச்சென்ற பெற்றோரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு அடர்ந்த காட்டின் வழியாக பொது மக்கள் சிலர் சென்றுள்ளனர்.அப்போது அங்கு ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அருகில் சென்று பார்த்த போது 1 மாத கை குழந்தை அங்கு அழுது கொண்டிருந்தது.உடனே குழந்தையை மீட்ட அந்த மக்கள் அதை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். 2 கிலோ எடை மட்டும் இருந்த குழந்தைக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.



தமிழக சட்டசபை வரலாற்றில் 29 ஆண்டுகளுக்குப் பின் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு!
[Saturday 2017-02-18 08:00]

தமிழக சட்டசபை வரலாற்றில் 29 ஆண்டுகளுக்குப் பின், இப்போதுதான் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆர் 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்ததும், அவரது மனைவி ஜானகி எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார். அப்போது, ஜானகி அணியினர் ஒரு பிரிவாகவும், அந்த நேரத்தில் அ.தி.மு.க கொள்கைபரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா அணியினர் மற்றொரு பிரிவாகவும் செயல்பட்டனர். பின்னர் 1988-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அதில் வெற்றிபெற்ற போதிலும், பின்னர் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.அதன் பிறகு, தமிழக சட்டசபையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின் மீண்டும் அதுபோன்றதொரு சூழல் உருவாகி உள்ளது. சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிசாமி முதல்வராகி உள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணி தனியாகச் செயல்படுகின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எவ்வாறு நடைபெறும் என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவரிடம் கேட்டபோது அவர் தெரிவித்த கருத்து:-


Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
AIRCOMPLUS2014-02-10-14
<b>02-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ideal Entertainment நிறுவன அறிமுக விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>29-01-2017 அன்று ரொரன்டோவில் தமிழ்நாடு சமூக மன்றம்  நடாத்திய தைப்பொங்கல் விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>28-01-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற கனடா தமிழர் மரபு மாநாட்டு விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா