Untitled Document
January 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ஜல்லிக்கட்டு போட்டி விவகாரம்: - மத்திய அரசால் எதுவும் செய்ய இயலாது - மத்திய அமைச்சர்
[Wednesday 2017-01-11 07:00]


ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசால் எதுவும் செய்ய இயலாது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 2 நாளில் தீர்ப்பளிக்க இருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மத்திய அரசால் தற்போதைக்கு எதுவும் செய்ய இயலாது என்றார்.
காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளோம். மக்களின் உணர்வுகளை நீதிமன்றம் மதிக்கும் என்று நம்புகிறோம்.உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்போரிடமும், எதிர்ப்பாளர்களிடமும் கருத்து கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசால் எதுவும் செய்ய இயலாது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 2 நாளில் தீர்ப்பளிக்க இருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மத்திய அரசால் தற்போதைக்கு எதுவும் செய்ய இயலாது என்றார். காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளோம். மக்களின் உணர்வுகளை நீதிமன்றம் மதிக்கும் என்று நம்புகிறோம்.உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்போரிடமும், எதிர்ப்பாளர்களிடமும் கருத்து கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது.ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்தாண்டு பொங்கல் பண்டிகையுடன் சேர்த்து நடத்த வேண்டும் என்று கூறி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் மத்திய அமைச்சரின் இந்த பேச்சு, கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல் இந்த முறையும் தமிழக்த்தில் ஜல்லிக்கட்டு நடைபெறாது என்பதையையே சுட்டிக்காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



தீவிர அரசியலில் குதிக்கத் தயாராகிறார் பிரியங்கா
[Tuesday 2017-01-24 19:00]

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவை தீவிர அரசியலுக்கு வருமாறு காங்கிரசார் அழைத்து வருகிறார்கள். ஆனால் பிரியங்கா இது வரை நேரடி அரசியலுக்கு வரவில்லை. சோனியா வெற்றி பெற்ற ரேபரேலி தொகுதி மற்றும் ராகுல்காந்தி வெற்றி பெற்ற அமேதி ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே பிரியங்கா தீவிர கவனம் செலுத்துவதை வழக்கில் வைத்துள்ளார். 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பிரியங்காவை நாடு முழுவதும் பிரசாரத்துக்கு வருமாறு காங்கிரசார் அழைத்தனர்.



டிரம்ப் - மோடி இடையேயான தொலைபேசி உரையாடல் இன்று..
[Tuesday 2017-01-24 19:00]

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று இரவு தொலைபேசியில் உரையாடுகிறார். அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற நான்காவது நாளான இன்று இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச உள்ளார். டொனால்டு டிரம்பின் இன்றைய பணிகள் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க நேரப்படி இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய நேரப்படி இரவு 11.30 மணியளவில் இந்த உரையாடல் நடைபெறவுள்ளது.



குடியரசு தினத்தில் பங்கேற்க அபுதாபி இளவரசர் டெல்லி வருகை
[Tuesday 2017-01-24 19:00]

இந்தியக் குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் இன்று டெல்லி வந்திறங்கினார். அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். இந்தியாவின் 68-வது குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த முறை டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில், அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.



தமிழக சட்டபேரவையில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா நிறைவேற்றம்!
[Monday 2017-01-23 18:00]

தமிழக சட்டபேரவையில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.கடந்த 21ம் திகதி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை பிறப்பித்தார்.இதனையடுத்து, இந்த அவசர சட்டம் இன்று சட்டசபையில் நிறைவேற்றப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று 2017ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் தொடங்கியவுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரைக்கு பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது.



முதல்வராக பதவியேற்க திட்டமிட்ட சசிகலா? - பரபரப்பு தகவல்
[Monday 2017-01-23 18:00]

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எதிர்வரும் 28ம் திகதி முதல்வராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.அப்படியே முதல்வராக அலங்காநல்லூர் சென்று ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்து மக்களிடம் நல்ல பெயரை பெறவும் திட்டமிட்டுள்ளாராம்.ஜல்லிக்கட்டுக்கு தமிழகமெங்கும் புரட்சி போராட்டம் நடைபெற்ற நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழக சட்டபேரவையிலும் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.



அடிதடி நடத்தி போராட்டத்தை கலைக்க இதுதான் காரணமா? - வெளியான பரபரப்பு தகவல்கள்
[Monday 2017-01-23 18:00]

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் அறவழியில் நடத்தப்பட்ட போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது.தமிழகம் முழுவதும் புரட்சி போராட்டம் வெடித்ததால் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் தங்களுக்கு நிரந்த சட்டம் மட்டுமே தேவை என்று போராட்டக்காரர்கள் தங்களது போராட்டங்களை கைவிட மறுத்தனர்.இந்நிலையில் இன்று காலையில் இருந்து போராட்டக்காரர்களை பொலிசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும், கல்களை வீசியும் கலைத்து வருகின்றனர்.



இந்தியாவில் பெண்ணுக்கு பிறந்த ஏலியன் குழந்தை: - அதிர வைக்கும் சம்பவம்
[Monday 2017-01-23 18:00]

இந்தியாவில் பெண் ஒருவருக்கு தடித்த வெள்ளை தோல், சிவப்பு கண்கள் மற்றும் தலைகீழ் உதடுகளுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலத்திலே இந்த குழந்தை பிறந்துள்ளது, குழந்தையின் பெற்றோர் குழந்தை ஏற்க மறுத்துள்ளனர், தாய் குழந்தையை தூக்கி பால் கொடுக்க மறுத்து வருகிறார்.மேலும், விசித்திரமாக பிறந்த குழந்தையை காண மக்கள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.



மெரினாவில் இளைஞர்கள் மீது தடியடி: - மறுபக்கம் சட்டப்பேரவையில் ஆளுநர் புகழாரம்!
[Monday 2017-01-23 10:00]

இளைஞர்களின் எழுச்சி காரணமாகவே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்திருப்பதாக சட்டப்பேரவையில் ஆளுநர் புகழாரம் சூட்டும் அதே நேரம், அதே இளைஞர்கள், காவல்துறையினரால் கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்படும் அவலம் நடந்தேறுகிறது. தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கூட்டத் தொடரை தொடங்கி வைத்து, ஆளுநர் வித்யாசாகர் உரையாற்றினார். அப்போது, இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தால், இன்று ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும். அறவழியில் போராடிய மாணவர்கள், இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் என்று கூறினார்.மேலும், தமிழக அரசின் நடவடிக்கையால் வன்முறை இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குவதாகவும் அவர் புகழ்ந்து பேசினார்.



மெரினாவிலிருந்து கலையமறுக்கும் இளைஞர்களை வெளியேற்ற திணறும் காவல்துறை!
[Monday 2017-01-23 08:00]

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வுகோரி மெரினா கடற்கரையில் குழுமியிருக்கும் இளைஞர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர்.ஆனால் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்த இளைஞர்கள் கடற்கரையை ஒட்டி குழுமியிருக்கின்றனர்.அவர்களை காவல்துறையினர் தகாத வார்த்தைகளில் திட்டிவருகின்றனர். அத்துடன் செய்தியாளர்களையும் அப்பகுதிக்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.



மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய காவல்துறை!
[Monday 2017-01-23 07:00]

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை காவல்துறையினர் வெளியேற்றத் துவங்கியுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வேண்டி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் கூடி ஜல்லிக்கட்டுக்காக போராடி வருகின்றனர்.இந்நிலையில் இன்று அதிகாலை மெரினாவில் உள்ள போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து செல்லுமாறு சென்னை காவல்துறை அறிவுறுத்தியது. அதனைத் தொடர்ந்து கூடுதலாக 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மெரினா கடற்கரை சாலையில் குவிக்கப்பட்டனர்.



காளை பந்தயம் நடத்த அனுமதி அளிக்குமாறு மகராஷ்டிர அரசை வலியுறுத்தும் சிவசேனா!
[Monday 2017-01-23 07:00]

ஜல்லிக்கட்டுக்குக்கு அவசர சட்டம் இயற்றப்பட்டதை தொடர்ந்து காளை பந்தயம் நடத்த அனுமதி அளிக்குமாறு மகராஷ்டிர அரசை சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.போராட்டத்தின் விளைவாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் எதிரொலியாக இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.



ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மகளுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை: - ஆற்காட்டில் பரபரப்பு
[Monday 2017-01-23 07:00]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள ஆற்காட்டில் மகளுடன் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மெரினாவில் இன்று 6ஆவது நாளாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று உலக அளவில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.



அடுத்து தமிழக மாணவர்கள் போராட போவது எந்த விடயத்துக்கு தெரியுமா? - பரபரப்பு தகவல்கள்
[Monday 2017-01-23 07:00]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கோரி தமிழகமெங்கும் கடந்த ஆறு நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.மாணவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினர் இரவு, பகல் என்று பாராமல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.இதனிடையில் இந்த போராட்டத்தால் தமிழகத்துக்கு மேலும் ஒரு நல்ல விடயம் நடந்துள்ளது. டாஸ்மாக் மதுபான விற்பனை பெரும் சரிவை கண்டுள்ளது.தமிழகத்தில் மொத்தம் 6300 டாஸ்மாக் மதுகடைகள் உள்ளன. இதன் மூலம் அரசுக்கு தினசரியாக 80 கோடி அளவு வருமானம் வருகிறது.



இளைஞர்களது மரணத்துக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: - திருமாவளவன்
[Sunday 2017-01-22 17:00]

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசர சட்டம் நிறைவேற்றிவிட்டோம் எனத் தமிழக அரசாங்கம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் புதுக்கோட்டையில் தமிழக அமைச்சர் ஒருவரால் துவக்கிவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுமார் நூறுபேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பாதுகாப்பாக நடத்துவதில் அக்கறைகாட்டாமல் அவசர சட்டம் கொண்டுவந்ததற்கு சொந்தம் கொண்டாடுவதில் மட்டுமே ஆர்வம் காட்டிய தமிழக அரசின் நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். உயிரிழந்த இளைஞர்களது மரணத்துக்கு தமிழக அரசே பொறுப்பேற்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.ஜல்லிக்கட்டில் பார்வையாளராக நின்றிருந்த ஒரு இளைஞர் உயிரிழந்ததால் அவரது தந்தை தொடர்ந்த வழக்கில்தான் முதன்முதலில் ஜல்லிக்கட்டுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது.



ஜல்லிக்கட்டில் காளை முட்டி இருவர் பலி: - புதுக்கோட்டையில் சம்பவம்
[Sunday 2017-01-22 17:00]

தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது. இந்நிலையில் புதுக்கோட்டையில் ராப்பூசலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளை முட்டி ராஜா மற்றும் மோகன் என்ற இருவர் உயிரிழந்தனர்.மேலும், 55 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்தவர்களில் ஐந்து பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



சசிகலாவை கண்டுகொள்ளாத ஓபிஎஸ்: - ஏன் தெரியுமா?
[Sunday 2017-01-22 17:00]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் நடந்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று பிற்பகலில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து அந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கும் வந்தது.இதையடுத்து மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தாமே முன் நின்று தொடங்கி வைப்பேன் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.



போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவோம்: - ஜல்லிக்கட்டுக்காக பதவியை துறந்த மாமனிதரின் வேண்டுகோள்
[Sunday 2017-01-22 17:00]

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு போராட்டங்கள் இன்று 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள போதிலும், நிரந்தர சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் எனவும் அது வரை ஜல்லிக்கட்டு நடத்த கூடாது எனவும் போராட்டம் நடத்திவருபவர்கள் கூறியுள்ளார்கள்.இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதி என்பவர் ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்க்கும் விதமாக தான் வகித்து வந்த வேளாண் பல்கலைக்கழக நிர்வாக குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.அவர் தற்போது அளித்த பேட்டியில், தமிழக மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்ட உத்தவை நான் பார்க்கிறேன்.



மதுரையில் சீமான் தலைமையில் நடந்த ஜல்லிக்கட்டு: - சீறி பாய்ந்த காளைகள்
[Sunday 2017-01-22 17:00]

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மேலூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை தமுக்கம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில் மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரட்டாபட்டியை அடுத்துள்ள கூழாணிப்பட்டியில் இன்று காலை சீமான் தலைமையில் ஜல்லிக்கட்டு நடந்தது.



பீட்டாவின் முகத்திரையை அம்பலப்படுத்தும் ஆதாரங்களை வெளியிட்ட நடிகர் அரவிந்த் சாமி!
[Sunday 2017-01-22 17:00]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகர் அரவிந்த் சாமி, தற்போது பீட்டாவின் முகத்திரையை அம்பலப்படுத்தும் விதமாக ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பீட்டா ஆண்டுதோறும் ஏகப்பட்ட விலங்குகளை கொன்று குவித்து வருகிறது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் நடிகர் அரவிந்த் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், பீட்டா கொலை செய்துள்ள விலங்குகளில் விபரத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



ஜல்லிக்கட்டுக்கு எதிராக யார் வழக்கு தொடர்ந்தாலும் அதை முறியடிப்போம்: - தமிழக முதல்வர்
[Sunday 2017-01-22 17:00]

மதுரை அலங்காநல்லூரில் வாடிவாசலை திறந்து ஜல்லிக்கட்டை தொடங்கிவைக்க சென்ற தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார்.தமிழர்களில் தொடர் போராட்டத்தின் பலனாக அவரச சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க தமிழக முதல்வர் மதுரை சென்றார்.இந்நிலையில், நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் வரை யார் வந்தாலும் ஜல்லிக்கட்டு நடக்காது என அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிர்வாகிகள், மக்கள் அறிவித்தனர்.


Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
NIRO-DANCE-100213
Mahesan-Remax-169515-Seithy
AIRCOMPLUS2014-02-10-14
<b> 15-01-2017 அன்று ஃபான் ஃஅம் மையத்தில்  நடைபெற்ற முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களது பொதுக் கூட்ட  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 15-01-2017 அன்று மார்க்கம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா(Puthinamphotos.com)
<b> 14-01-2017 அன்று ரொரன்டோவில் கனேடிய தமிழர் பேரவை (CTC) நடாத்திய பொங்கல் விழா விருந்து நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா (Puthinamphotos.com)