Untitled Document
October 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பஞ்சத்தால் பாதிக்கப்பட்டரா பண்டாரவன்னியன்? - வடமாகாணசபையில் கேள்வி
[Wednesday 2017-01-11 07:00]

மல்லாவி நகரில் உள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் உருவச்சிலை எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவர்களைப் போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன் கவலை வெளியிட்டுள்ளார்.

மல்லாவி நகரில் உள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் உருவச்சிலை எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவர்களைப் போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன் கவலை வெளியிட்டுள்ளார்.

  

வடக்கு மாகாண சபையின் 82ஆம் அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது குறித்த உருவ சிலை தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “மல்லாவி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு கீழ் பண்டாரவன்னியன் என எழுதியால் மட்டுமே அது பண்டாரவன்னியனின் சிலை என மற்றவர்களுக்கு தெரிந்து விடாது.

ஒரு மாவீரனின் சிலையை சோமாலியா, எதியோப்பியா போன்ற நாடுகளில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் தோற்றத்தில் அமைத்துள்ளார்கள். வெளிநாட்டில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் இங்கே வருகிறவர்கள் அந்த சிலையை பார்த்தால் தமிழர்களின் வீரம் குறித்து என்ன நினைப்பார்கள்? இது பண்டாரவன்னியனை கொச்சை படுத்தும் ஒரு செயல் போன்று அமைகிறது” என குறிப்பிட்டார்.

  
   Bookmark and Share Seithy.comஅரசியல் யாப்பு மாற்றத்தை பௌத்த தேரர்கள் நிராகரிப்பது ஏன்? - விக்னேஸ்வரன் விளக்கம் Top News
[Sunday 2017-10-22 09:00]

அரசியல் யாப்பு மாற்றத்துக்கு பௌத்த தேரர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதன் பின்னணி என்ன என்பதை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களால் கேட்கப்படும் பொதுவான கேள்விகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாராவாரம் தனது கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். இந்த வாரத்துக்கான அவரது கேள்வி- பதில் அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை விபரித்துள்ளார்.தவிர்க்க முடியாததாகி விட்ட கோத்தாவின் கைது!
[Sunday 2017-10-22 09:00]

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கைது தவிர்க்க முடியாதது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்து அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்துவது தொடர்பில் அரசாங்க தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடனும் கடந்த வாரம் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. கடந்த வாரம் அமெரிக்கா விஜயத்தை முடித்து கொண்டு நாடு திரும்பிய கோத்தபாயவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்வதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.மாவையே அடுத்த முதலமைச்சர் வேட்பாளர்! - சிறிதரன் எம்.பி
[Sunday 2017-10-22 09:00]

வடக்கு மாகாணசபைக்கான அடுத்த தேர்தலில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர், இரண்டு பௌத்த பிக்குகளை கூட்டமைப்பு தமது வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவுள்ளதாகவும், முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதியரசர் சிறீபவனை நிறுத்தவுள்ளதாகவும் வெளியான செய்திகளையும் அவர் நிராகரித்துள்ளார்.சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் மஹிந்த?
[Sunday 2017-10-22 09:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளின் பதவிகளில் இருந்து மகிந்த ராஜபக்ச நீக்கப்படலாம் என்று தெரியவருகிறது. உள்ளூராட்சித் தேர்தல் குறித்து ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பன நிர்வாகிகள் மட்ட சந்திப்புகளை நடத்தி வருகின்றன.இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய மைத்திரி இணக்கம்!
[Sunday 2017-10-22 09:00]

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான முறுகல் நிலை அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கவும், இதன்மூலம் விளிம்பு நிலையில் இருக்கும் ‘சார்க்’ கட்டமைப்பின் சரிவைத் தடுத்து நிறுத்தவும் இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்களை நியமிக்க நடவடிக்கை!
[Sunday 2017-10-22 09:00]

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்தைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­காக ஆணையாளர்க­ளைத் தெரிவு செய்­யும் நட­வ­டிக்­கை­யில் அர­ச­மைப்­புப் பேரவை தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளது. தலை­வர், செய­லர் உட்­பட பத­வி­நிலை ஆணையாளர்க­ளைத் தேர்ந்­தெ­டுப்­பது தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய தலை­மை­யில் அர­ச­மைப்­புப் பேரவை நாடா­ளு­மன்­றத்­தில் கூடி­யது.அதிகாரப் பகிர்வு அரசியல்வாதிகளுக்கு அல்ல! - ஜனாதிபதி
[Sunday 2017-10-22 09:00]

அதிகாரப் பகிர்வு அரசியல்வாதிகளுக்கு அல்ல, அது மக்களை பலப்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.விண்கல்லின் பாகம் மீட்பு! Top News
[Sunday 2017-10-22 09:00]

திக்வெல்லையில், விண்கல் துகள் எனக் கருதப்படும் ஒரு சிறு கல் துண்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மாத்தறை கடற்பகுதியில் கடந்த புதனன்று விண்கல் என்று சந்தேகிக்கப்படும் ஒரு பொருள் விழுந்து வெடித்தது. இந்நிலையில், மாத்தறை மாவட்டம், திக்வெல்லையின் வீடொன்றின் கூரையில் கல் துண்டு ஒன்று இருப்பதைக் கண்ட வீட்டு உரிமையாளர், அது குறித்து பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தார்.கேப்பாப்புலவில் இராணுவச் சிப்பாய் பலி!
[Sunday 2017-10-22 09:00]

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில் நேற்றிரவு இடமம்பெற்ற விபத்து ஒன்றில்,59 ஆவது படைப்பிரிவை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்கு உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது அவர் விபத்தில் சிக்கியுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இராணுவ வீரரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றுவதை ஐ.நா உறுதிப்படுத்த வேண்டும்! - சம்பந்தன் Top News
[Saturday 2017-10-21 18:00]

இலங்கை வந்துள்ள ஐ.நாவின் உண்மை, நீதி, நஷ்டஈடு, மற்றும் மீள் நிகழாமையை உறுதி செய்வதற்கான விசேட நிபுணர் பப்லோ டி க்ரீப் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது காணி விடுவிப்பு, காணாமல்ஆக்கப்பட்டோர்,மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் போன்ற விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விசேட நிபுணரின் கவனத்திற்கு இரா. சம்பந்தன் கொண்டு வந்தார்.அரசியல் கைதிகள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வைத் தருமாறு ஜனாதிபதியிடம் கோரினேன்! - சிவாஜிலிங்கம்
[Saturday 2017-10-21 18:00]

அரசியல் கைதிகள் பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வைப் பெற்று தருமாறு ஜனாதிபதியிடம் தான் கோரிக்கை விடுத்துள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.வறுமையில் வடக்கு முதலிடம்!
[Saturday 2017-10-21 18:00]

இலங்கையில் வறுமை நிலை குறைந்துள்ள போதிலும், வடக்கு மாகாணத்தில் வறுமை நிலை அதிகளவில் உள்ளதாக சனத்தொகை புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அதிகாரபூர்வ தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. மாவட்ட அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில், அதிகபட்சமாக வறுமை நிலை காணப்படுகின்றது.மாணவர்களை ஏமாற்றிய ஜனாதிபதி மைத்திரி!
[Saturday 2017-10-21 18:00]

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று காலை 9.30 மணியளவில் "நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை" ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.பயங்கரவாதத்தைத் தூண்டுவதாக சிவகரன் மீது குற்றச்சாட்டு!
[Saturday 2017-10-21 18:00]

விடுதலைப்புலிகளின் கருத்தியல் போக்கை வலுப்படுத்துகின்ற வகையிலும், பயங்கரவாதத்தைத் தூண்டுகின்ற விதத்திலும் தொடர்ச்சியான செயற்பாடுகளும் கருத்துகளையும் முன்னெடுத்து வருவதாக தன்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.யாழ். போதனா வைத்தியசாலை படுகொலைகளின் 30 ஆவது ஆண்டு நினைவுகூரல்! Top News
[Saturday 2017-10-21 18:00]

யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவுநாள் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, 22 ஆம் திகதிகளில் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய படையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 21 பேரின் நினைவு தினம் இன்று நினைவு கூரப்பட்டது.வித்தியா வீட்டில் ஜனாதிபதி! - குடும்பத்தினரைச் சந்திப்பு Top News
[Saturday 2017-10-21 18:00]

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்தினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்தார். நடமாடும் சேவையில் கலந்து கொள்வதற்காக வவுனியாவிற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தால் வவுனியாவில் வழங்கப்பட்ட வீட்டில் தற்போது வசித்து வரும் வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.கிளிநொச்சியில் 14 கிலோ கேரள கஞ்சா மீட்பு! - ஒருவர் கைது
[Saturday 2017-10-21 18:00]

கிளிநொச்சி பொலிசாரால் நேற்றிரவு 13.730 கிலோ எடையுள்ள கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தொண்டமான்நகர் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட குறித்த கேரளா கஞ்சா பொதி பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசேட மது ஒழிப்பு பிரிவினரின் விசேட தேடுதலில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.வாழைச்சேனை விபத்தில் இளைஞன் பலி!
[Saturday 2017-10-21 18:00]

வாழைச்சேனை - பாசிக்குடா பிரதான வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்தார். இருவர் காயமடைந்தனர். பாசிக்குடா பிரதேசத்தில் இருந்து வாழைச்சேனை நோக்கி வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் வலப் பக்கமாக திரும்புவதற்கு முற்பட்ட வேளையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.கொலை செய்யப்பட்ட தாய்,மகனின் சடலங்கள் ஒரே குழியில் அடக்கம்! Top News
[Saturday 2017-10-21 18:00]

ஏறாவூர், சவுக்கடியில் படுகொலை செய்யப்பட்ட தாய்-மகன் இருவரின் உடல்களும் ஒரே குழியில் இன்று அடக்கம் செய்யப்பட்டன. மதுவந்தி (27) என்ற அந்தத் தாயும், அவரது மகனான மதுசன் (11) ஆகிய இருவரும் கடந்த 18ஆம் திகதி தீபாவளி தினத்தன்று மர்மமான முறையில், வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.இந்திய மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது!
[Saturday 2017-10-21 18:00]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறிய படகுகள் முலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மினவர்களே அவர்களின் படகுகளுடன் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கூறினார். குறித்த மீனவர்கள் இந்தியாவின் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் உதவி கடற்றொழில் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.


SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா