Untitled Document
March 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சுன்னாகம் குடிநீர் வழக்கு - மீண்டும் ஒத்திவைப்பு!
[Wednesday 2017-01-11 07:00]

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பான வழக்கை, எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டார். குறித்த பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நேற்று மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பான வழக்கை, எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டார். குறித்த பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நேற்று மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

  

சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் கிடைக்கும் நிலத்தடி நீரினை குடிக்கலாமா, இல்லையா என்பது தொடர்பில் இதுவரை முறையான அறிக்கை எதுவும் நீதிமன்றில் சமர்பிக்கப்படவில்லை எனவும் நீதிவான் ஏ.யூட்சன் தெரிவித்திருந்தார்.

பிரதேச வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

  
   Bookmark and Share Seithy.comவடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றக் கோருகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்!
[Friday 2017-03-24 09:00]

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் கோரியுள்ளார். சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் கடந்த எட்டு ஆண்டுகளில் எவ்வித அசெ்சுறுத்தலான விடயங்களும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் தங்கியிருக்கும் நோக்கில் படையினர் சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இனச்சுத்திகரிப்பு குற்றச்சாட்டு - நாடாளுமன்றில் காரசார விவாதம்!
[Friday 2017-03-24 09:00]

இறுதிப் போரில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் இடையில் நேற்று வாக்குவாதம் இடம்பெற்றது. இனச்சுத்திகரிப்பு இடம்பெற்றதாக சிறிதரன் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, யார் ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் யுத்தத்தை முன்னெடுத்திருப்பார்கள் எனக் கூறினார்.விடத்தல்தீவில் கடற்படைப் படகு மோதி மீனவர் பலி!
[Friday 2017-03-24 09:00]

மன்னார்- விடத்தல்தீவு கடற்பகுதியில் கடற்படை படகு மோதி மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரு கடற்படையினர் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேஜர் ஜெனரல் கல்லகேயின் வீசா விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கிறதாம்!
[Friday 2017-03-24 09:00]

இலங்கை இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் வீசா விண்ணப்பம் தொடர்பாக இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு கொடுத்த புராதன வாள்! Top News
[Friday 2017-03-24 09:00]

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யா சென்றுள்ளார். அவர் நேற்று மொஸ்கோவில் உள்ள கிரம்ளின் மாளிகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதிக்கு, ரஷ்ய ஜனாதிபதி சிறப்பு நினைவு பரிசு ஒன்றை வழங்கினார்.வடக்கில் கடந்த ஆண்டு 10 பேருக்கு எச்ஐவி தொற்று!
[Friday 2017-03-24 09:00]

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு எச்.ஐ.வி தொற்றால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்தம் முடிவடைந்த பின் வடக்கில் திடீரென அதிகரித்த எச்.ஐ.வி தொற்று தற்போது குறைவடைந்து வருகின்றது.வவுனியா நோக்கிச் சென்ற பஸ் மீது தாக்குதல்- 5 பேர் காயம்!
[Friday 2017-03-24 09:00]

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பஸ் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து நேற்று மாலை 4.45 மணியளவில் வவுனியா நோக்கி பயணித்த அரச பஸ் இரவு 10.30 மணியளவில் அனுராதபுரத்தினை அண்மித்தது. இதன் போது கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸுக்கும் அரச பஸ்ஸுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.விசாரணைக்கு ஆஜரானார் மஹிந்த!
[Friday 2017-03-24 09:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ கடந்த 16 ஆம் திகதி ஆணைக்குழுவுக்கு சமுகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டது. எனினும் அன்று அங்கு வருகைத்தரவில்லை. இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலமளிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.ஆட்கடத்தல் விசாரணைக்கு இடையூறு செய்யும் கடற்படைத் தளபதி!
[Friday 2017-03-24 09:00]

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைகளுக்கு கடற்படைத் தளபதி ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு மேலதிக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.ரஷ்யாவிடம் போர்க்கப்பல்களை வாங்குவது குறித்து பேச்சு!
[Friday 2017-03-24 09:00]

ஜெபார்ட் 3.9 ரக போர்க் கப்பல்களை இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக இலங்கையுடன் ரஷ்யா பேச்சுக்களை நடத்தி வருகிறது. குறிப்பிட்ட விடயம் தற்போதைக்கு பேச்சுகள் அளவிலேயே காணப்படுகின்றது என ரஷ்யாவின் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான சமஷ்டி சேவையின் பிரதி இயக்குநர் மைக்கல் பெட்கோவ் கூறியுள்ளார்.வாக்கெடுப்பு நடத்தாமல் நிறைவேறியது ஜெனிவா தீர்மானம்! - இலங்கைக்கு 2 வருட காலஅவகாசம்
[Thursday 2017-03-23 19:00]

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, இலங்கைக்கு 2 ஆண்டு காலஅவகாசம் வழங்கும், தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று நிறைவேற்றபட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் தீர்மானம் மீது சற்று முன்னர் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.கடற்படையே வெளியேறு! - முள்ளிக்குளத்தில் வெடித்தது போராட்டம் Top News
[Thursday 2017-03-23 17:00]

கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் இன்று காலை 7.30 மணியளவில் முள்ளிக்குளம் கிராம நுழைவாயிலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஐ.நா மனித உரிமைச்சபையில் தமிழர்களுக்கு நீதி மீண்டுமொருமுறை மறுக்கப்பட்டிருக்கிறது: புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டறிக்கை!
[Thursday 2017-03-23 17:00]

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள 34:1 தீர்மானமானமானது, தமிழ்மக்களுக்கு மீண்டுமொருமுறை நீதி மறுக்கப்பட்டிருப்பதாக புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக தெரிவித்துள்ளன. இன்று ஜெனீவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக மக்களவை உள்ளடங்க பல தமிழ் அமைப்புக்கள் இத்தீர்மானம், உலகத் தமிழர்களுக்கு வருத்தத்தையும், பெருத்த ஏமாற்றத்தையும் தந்திருப்பதாகத் தெரிவித்துள்ளன.32 ஆவது நாளாகத் தொடரும் கிளிநொச்சி கவனயீர்ப்பு போராட்டம்!
[Thursday 2017-03-23 17:00]

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று முப்பத்து இரண்டாவது நாளாக தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த மாதம் 20-02-2017 அன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது.வவுனியாவில் தொடரும் போராட்டம்! - இன்று 28 ஆவது நாள் Top News
[Thursday 2017-03-23 17:00]

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 28ஆவது நாளாகவும் தொடர்கின்றது. தமக்கான உரிய தீர்வினை வழங்க கோரி, வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே இன்று தமது சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.திரும்பிக்கூடப் பார்க்காத விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும்! - வேலையற்ற பட்டதாரிகள் கோருகின்றனர் Top News
[Thursday 2017-03-23 17:00]

கடந்த 25 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தம்மை வந்து பார்க்காத வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டுமென வடமாகாண பட்டதாரிகள் வலியுறுத்தியுள்ளனர். யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிற்கு வருகை தந்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தம்மை வந்து பார்க்கவில்லை என்றும், தமது பிரச்சினைகள் குறித்து கேட்கவில்லை என்றும் ஆத்திரமடைந்த பட்டதாரிகள் முதலமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.போர்க்குற்ற விசாரணை இன்னொரு போருக்கு வழிவிடுமாம்! - விஜயதாஸ ராஜபக்ஸ
[Thursday 2017-03-23 17:00]

இராணுவத்திற்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுத்தால் அது மீண்டும் ஒரு யுத்தத்திற்குக் கூட வழியமைத்து விடும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார். போர்க்குற்ற விசாரணைகள் குறித்து சர்வதேசத்திலிருந்து வரும் அழுத்தங்களுக்கு அரசு அடிபணியாது என்றும் போர்க்குற்ற விசாரணையையும், நல்லிணக்கப் பொறிமுறையையும் ஒரே தடவையில் முன்னெடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.சந்தைக்குச் சென்ற விவசாயியை தாக்கிய முகமூடி நபர்கள்!
[Thursday 2017-03-23 17:00]

சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் கத்தரிக்காய் கொண்டு சென்ற விவசாயியை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த முகமூடி அணிந்த இருவர் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். இச் சம்பவம் இன்று காலை சாவகச்சேரி தனங்கிளப்பு வீதியில் இடம்பெற்றுள்ளது. முழங்காவிலைச் சேர்ந்த விவசாயி தினமும் தனது தோட்டத்தில் விளைந்த கத்தரிக்காயை சாவகச்சேரி சந்தைக்கு கொண்டு வந்து கொடுத்து வரும் நிலையில், இன்று காலையும் மோட்டார் சைக்கிளில் கத்தரிக்காய் மூடைகளுடன் சந்தைக்கு சென்றுள்ளார்.போரில் 25,363 படையினர் பலி! - நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தகவல்
[Thursday 2017-03-23 17:00]

இலங்கையில் 1972ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற போரில், 25 ஆயிரத்து 363 படையினர் பலியாகியுள்ளனர் என்றும், 38 ஆயிரத்து 675 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை! - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி
[Thursday 2017-03-23 17:00]

போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லைஎன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. யார் சர்வதேச தரப்பிடம் வாக்குறுதிகளை கொடுத்தாலும் ஜனாதிபதியின் நிலைப்பாடு உள்ளக விசாரணை பொறிமுறை என்பதே ஆட்சி மாற்றம் ஏற்படாது இருந்திருப்பின் இராணுவமும் ராஜபக்ஷக்களும் போர்க்குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை மறந்து விடக்கூடாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.


Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>11-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற United badminton League GTA நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா