Untitled Document
May 30, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை - ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!
[Wednesday 2017-01-11 18:00]

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  இதன்மூலம் இலங்கையின் உற்பத்தி பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு இலகுவில் ஏற்றுமதி செய்து கொள்ள முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையாளர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கையின் உற்பத்தி பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு இலகுவில் ஏற்றுமதி செய்து கொள்ள முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையாளர் கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com



100 ஆவது நாளில் கிளிநொச்சி மக்களின் போராட்டம்! Top News
[Tuesday 2017-05-30 08:00]

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தொடர்பில் தகவல்களை வழங்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 100 ஆவது நாளை எட்டியுள்ளது. தமது போராட்டம் 100 ஆவது நாளை எட்டியுள்ளதை தெளிவூட்டும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.



சம்பந்தனின் சவால் - ஏற்க முடியாமல் சங்கடத்துக்குள்ளான அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள்!
[Tuesday 2017-05-30 08:00]

‘உங்கள் அனைவரையும் விட, இலங்கை மீது அதிக அக்கறைகொண்டவன் நான்தான்’ என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கடந்தவாரம் இடம்பெற்ற அரசியலமைப்புக் கவுன்ஸிலில் வாக்குவாதப்பட்டுள்ளார்.



கிளிநொச்சி நகர அபிவிருத்திக்கு இராணுவமே தடை! - சிறிதரன் எம்.பி குற்றச்சாட்டு
[Tuesday 2017-05-30 08:00]

கிளிநொச்சி நகரம் அபிவிருத்தி அடையாமல் இருப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் காரணமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றம்சாட்டியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், நகர திட்டமிடல் பற்றி விளக்கமளித்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.



அரசியலில் நேர்மையுடன் செயற்பட்ட உயரிய பண்பாளர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி! - சம்பந்தன் இரங்கல்
[Tuesday 2017-05-30 08:00]

அரசியலில் நேர்மையும், அனைவரையும் அரவணைத்துச் செயற்படும் உயரிய பண்பும் கொண்டு விளங்கிய அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் இழப்பு, தமிழ் மக்களுக்கும் அவர் சார்ந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பேரிழப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.



இலங்கைக்கு உதவுவதாக மூன்று நாடுகள் வாக்குறுதி! Top News
[Tuesday 2017-05-30 08:00]

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு உலகின் பிரதான மூன்று நாடுகள் முன்வந்துள்ளன. அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்க முன்வந்துள்ளதாக, வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் நேற்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், நிதியமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.



வெள்ளத்தை வேடிக்கை பார்க்கச் சென்ற 18 பேர் மரணம்! Top News
[Tuesday 2017-05-30 08:00]

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை வேடிக்கை பார்க்கச் சென்ற 18 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் வஜித அபேவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறான ஆபத்தான நிலைமைகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு செல்வதனால் ஏற்படும் மரணங்களை தவிர்க்குமாறு அமைச்சர், பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.



கோத்தாவுக்கு எதிரான வழக்கு - ஜூலை 12ஆம் திகதி விசாரணை!
[Tuesday 2017-05-30 08:00]

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அவன்ட் காட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உட்பட எழுவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வாய்மொழிமூல ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான தினமாக ஜூலை 12ஆம் திகதியை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நேற்று குறித்தது.



மட்டக்களப்பு ஆலயத்தில் தங்கச் சங்கிலி அபகரிப்பில் ஈடுபட்ட 7 பெண்கள் மடக்கிப் பிடிப்பு!
[Tuesday 2017-05-30 08:00]

மட்டக்களப்பு பெரியகல்லாறில் உள்ள ஆலயம் ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் கும்பாபிசேகம்நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் பெருமளவான பக்தர்களும் கலந்து கொண்டனர். இதன்போது நான்கு பெண்களின் சங்கிலிகள் அறுக்கப்பட்டதை தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினரும் இளைஞர்களும் துரித கதியில் செயற்பட்டதன் காரணமாக ஆலயத்தின் வளாகம் மற்றும் வீதிகளில் இருந்து ஏழு பெண்களை பிடித்துள்ளனர்.



இலங்கை நிலைமையை கண்காணிக்கும் ஏழு சர்வதேச மீட்புக் குழுக்கள்!
[Tuesday 2017-05-30 08:00]

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து ஏழு சர்வதேச தேடல்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் கண்காணித்து வருவதாக கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இந்த அமைப்புகள் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.



வித்தியா கொலை விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் தொடங்கியது!
[Monday 2017-05-29 21:00]

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கினை விசாரணை செய்யவுள்ள மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட் பார் நீதிமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று இடம்பெற்றது. இன்றைய முதல் அமர்வின் போது, வழக்கின் முதல் ஒன்பது சந்தேக நபர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு ட்ரயல் அட் பார் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



வெள்ளம், நிலச்சரிவுக்குப் பலியானோர் தொகை 177 ஆக அதிகரிப்பு! Top News
[Monday 2017-05-29 21:00]

இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 177ஆக அதிகரித்துள்ளதுடன், 109 காணால் போயுள்ளதாகவும், , 88 பேர் காயமடைந்துள்ளதாகவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.



மாணவிகள் வன்புணர்வைக் கண்டித்து மூதூர் பாடசாலைகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! Top News
[Monday 2017-05-29 21:00]

திருகோணமலையில் எட்டு வயது சிறுமிகள் மூவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மூதூரில் இன்று காலை பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கிளிவெட்டி, மல்லிகைத்தீவு, மற்றும் மூதூர் கிழக்குப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே தமது பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.



இரணைதீவுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி! Top News
[Monday 2017-05-29 21:00]

தங்களின் பூர்வீக நிலத்திற்கு திரும்பிச் செல்ல அனுமதி வழங்கக் கோரி, இரணைத்தீவு மக்கள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ப் பேரணி ஒன்றை நடத்தினர். இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு கிளிநொச்சி திரேசாம்பாள் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. அங்கு மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.



வவுனியாவில் உருவானது வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் ஒன்றியம்! Top News
[Monday 2017-05-29 21:00]

வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் ஒன்றியம் என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்று இன்று வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மலையக மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து ஆராயும் மாநாடும் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த மலையக மக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.



மீட்புப் பணியின் போது விழுந்து நொருங்கியது விமானப்படை ஹெலி! Top News
[Monday 2017-05-29 17:00]

காலி - பத்தேகம பகுதியில், விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ 17 ஹெலிகொப்டர் இன்று காலை விழுந்து நொருங்கியது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, இந்தச் சம்பவம் இடம்பெற்றது. உணவுப் பொருட்களுடன் சென்ற ஹெலி, தரையிறங்க முற்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றின் மீது விழுந்தது.



பருத்தித்துறை துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு எதிராக பேரணி! Top News
[Monday 2017-05-29 17:00]

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொட்டடி கடற்தொழிலாளர் சங்கத்தினரால் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பருத்தித்துறை துறைமுகப் பகுதி அபிவிருத்தி செய்யப்படும்போது, துறைமுக விரிவாக்கம் கொட்டடிப் பகுதிக்குள் வருவதால் தமது தொழில் பாதிக்கப்படும் என்பதை காரணம் காட்டியே குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.



கத்திக் குத்தில் முடிந்தது வாய்த்தர்க்கம் – ஒருவர் பலி, பெண் படுகாயம்! Top News
[Monday 2017-05-29 17:00]

மட்டக்களப்பு, சித்தாண்டி பிரதேசத்தில் உதயன்மூலை பாடசாலை வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்ர். பெண் ஒருவர் காயமடைந்தார். அவர்களைக் கத்தியால் குத்தியதாக கூறப்படும் இருவர் உடனடியாகப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர்.



ஹெலியில் பிறந்த குழந்தை!
[Monday 2017-05-29 17:00]

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட விமானப்படையினரால் மீட்கப்பட்ட பெண், ஒருவருக்கு எம்.ஐ 17 ஹெலிகொப்டரில், நடுவானில் குழந்தை பிறந்துள்ளது. கலவானையில் இருந்து இரத்தினபுரிக்கு ஹெலிகொப்டரில் அழைத்துச் செல்லப்பட்ட 19 வயது கர்ப்பிணி பெண்ணே குழந்தையை பிரசவித்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.



கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்! Top News
[Monday 2017-05-29 17:00]

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று, தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.



வடக்கிற்கான பயணத்தை ரத்துச் செய்தார் இந்தியத் தூதுவர்!
[Monday 2017-05-29 17:00]

சீரற்ற காலநிலையினால், வட மாகாணத்திற்கான பயணத்தை இந்திய தூதுவர் ரத்து செய்துள்ளார் என்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் சந்து, இந்த மாதம் 30ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் வட மாகாணத்திற்கு பயணம் மேற்கொள்ளவிருந்தார். தென் மாகாணத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b>06-05-2017 அன்று கனடா- ரொரன்டோவில் அபிநயாலயா நாடியாலயம் நடாத்திய 20வது ஆண்டுவிழா நிகழ்வின் படத்தொகுப்பு. </b> படங்கள் - குணா
<b>30-04-2017 அன்று கனடா- ரொரன்டோவில்  நடைபெற்ற சங்கீத சங்கமம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா