Untitled Document
January 21, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
இன்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்த யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா! Top News
[Wednesday 2017-01-11 18:00]

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32வது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகின. இப் பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கிய பல்கலைக்கழக வேந்தர் சி.பத்மநாதன் பட்டதாரிகளுக்கான பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32வது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகின. இப் பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கிய பல்கலைக்கழக வேந்தர் சி.பத்மநாதன் பட்டதாரிகளுக்கான பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.

  

இன்று பட்டமளிப்பு விழா நான்கு அமர்வுகளாக நடைபெற்றது. முதலாவது அமர்வு காலை 9 மணிக்கும் இரண்டாவது அமர்வு காலை 10.30 மணிக்கும் மூன்றாவது அமர்வு பிற்பகல் 1.30 மணிக்கும் நான்காவது அமர்வு மாலை 3மணிக்கும் நடைபெற்றன.

  
   Bookmark and Share Seithy.comகனடாவில் நடக்கும் நாடு கடந்த தமிழீழ அரசின் அமர்வை கண்காணிக்கிறதாம் இலங்கைத் தூதரகம்!
[Sunday 2018-01-21 07:00]

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வுகளை கனடாவில் உள்ள இலங்கை தூதரகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் 8 ஆவது கூட்டத்தொடர், கனடாவின் ரொரன்டோ நகரில், ஜனவரி 19ஆம் நாள் ஆரம்பமாகி இன்று வரை நடக்கிறது.சிவராமைக் கொன்றவர்கள் கூட்டமைப்புக்குள்! - என்கிறார் சிவசக்தி ஆனந்தன்
[Sunday 2018-01-21 07:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு காரணமான ஊடகவியலாளர் சிவராமை கொன்றவர்களும், கூட்டமைப்புக்குள்ளேயே உள்ளனர் என்று ஈபிஆர்எவ்எவ்வின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.கேப்பாப்புலவில் நேபாள இராணுவத் தளபதி!
[Sunday 2018-01-21 07:00]

நேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர செகேட்றி நேற்றுக் காலை முல்லைத்தீவு கேப்பாபுலவு பாதுகாப்பு படை தலைமையகத்துக்கு வருகை தந்துள்ளார். உலங்கு வானூர்தி மூலம் வருகை தந்த நேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர செகேட்றியை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு வரவேற்றதோடு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.மைத்திரியின் சூளுரை பதவியில் நீடிப்பதற்கான அறிகுறி! - ஜேவிபி
[Sunday 2018-01-21 07:00]

ஊழல், மோசடியாளர்களை நரகத்திற்கு அனுப்பிய பிறகு தான் பதவியில் இருந்து வெளியேறுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே சூளுரைத்துள்ளார். தான் தொடர்ந்தும் பதவியில் இருப்பேன் என்பதை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார்.இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பொலிஸ் மீது தாக்குதல்! - கதிர்காமத்தில் பதற்றம்
[Sunday 2018-01-21 07:00]

கதிர்காமத்தில், பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் மீது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழந்தார். இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அங்கு பரபரப்பு தோன்றியுள்ளது.கூட்டமைப்பு இதயசுத்தியுடன் செயற்படவில்லை! - தீர்வு வராமைக்கு காரணம் சொல்கிறார் மகிந்த
[Sunday 2018-01-21 07:00]

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்காக பல வழிகளிலும் நாம் முயற்சித்தோம். அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதற்கும் உத்தேசித்திருந்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதயசுத்தியுடன் செயற்படாததாலேயே அந்த முயற்சிகள் கைகூடவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 4 லட்­சத்து 68 ஆயி­ரத்து 476 பேர் வாக்களிக்கத் தகுதி!
[Sunday 2018-01-21 07:00]

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உள்ள 17 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கு­மான தேர்­த­லில் வாக்­க­ளிப்­ப­தற்கு 4 லட்­சத்து 68 ஆயி­ரத்து 476 வாக்­கா­ளர்­கள் தகுதி பெற்­றுள்­ள­னர் என யாழ்ப்பாண மாவட்ட தேர்­தல் திணைக்­கள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.கொழும்பு- சென்னை இடையே பட்ஜட் விமான சேவை ஆரம்பம்!
[Sunday 2018-01-21 07:00]

இலங்கை – இந்திய நாடுகளுக்கிடையிலான விசேட விமான சேவையொன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலாவது விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க நோக்கி நேற்றுக் காலை 8.00 மணிக்கு வந்தடைந்துள்ளது. “இன்டிகோ” விமான சேவை ஒரு நாளைக்கு மூன்று முறை இரு நாடுகளுக்கிடையில் போக்குவரத்தை வழங்கவுள்ளது.நாளை தபால் மூல வாக்களிப்பு!
[Sunday 2018-01-21 07:00]

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளது என்று தேர்தல் ஆணைய பணிப்பாளர் நாயகம் ஆர்.எல்.ஏ.எம். இரத்நாயக்க தெரிவித்துள்ளார். “நாளை, 22 ஆம் திகதி, காவல் நிலையங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள், தேர்தல் செயலகங்களில், தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும். ஏனைய அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25ஆம், 26ஆம் நாள்களில் இடம்பெறும். இம்முறை சுமார் 560,000 அரச பணியாளர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளில் மயங்கிக் கிடக்கும் கூட்டமைப்புத் தலைவர்கள்! - விக்கி காட்டம்
[Saturday 2018-01-20 19:00]

இலங்கை ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மயக்கிக் கிடப்பதாக வடக்கு மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மஸ்கெலியவில் கல்லில் பதிந்த வலது கால் பாதம் கண்டுபிடிப்பு! Top News
[Saturday 2018-01-20 19:00]

மஸ்கெலியா வட்மோர் தோட்டக்காட்டு பகுதியில் கற்பாறையில் பதந்த வலது கால் பாதம் ஒன்று இன்று கண்டு பிடிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த அதிசய சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட்மோர் தோட்ட பொதுமக்களால் இந்த வலது கால் பாதம் இனங்காணபட்டவுடன் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்ட்டதாக வட்மோர் தோட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.பொருளாதார நிர்வாகத்தை ஐதேகவிடம் இருந்து கைப்பற்றினார் ஜனாதிபதி!
[Saturday 2018-01-20 19:00]

நாட்டின் பொருளாதார நிர்வாகத்தை கடந்த 3 ஆண்டுகளாக ஐக்கிய தேசிய கட்சியிடம் ஒப்படைத்திருந்ததாகவும், அதனை இவ்வாண்டு முதல் தான் பொறுப்பெடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.எம். ஏ சுமந்திரனுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பகிரங்க சவால் !! பதில் என்ன ?
[Saturday 2018-01-20 19:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அவர்களுக்க பகிரங்க சவால் ஒன்றிறை விடுத்துள்ளார். சிங்கள மக்களை திருப்பித்திப்படுத்தும் நோக்கில் தமிழீழக் கோரிக்கையினை தமிழ்மக்கள் கைவிட்டுவிட்டார்கள் என எம். ஏ. சுமந்திரன் அவர்களை மையப்படுத்தி செய்திகள் வெளிவந்திருந்தன.அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்ற கோத்தா!
[Saturday 2018-01-20 19:00]

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு நேரடி தொடர்பு உள்ளது. ஆனால், கோத்தபாய தொடர்புபட்டிருந்த அறிக்கை அரசியல் அழுத்தங்களுக்கு அமைய நீதிமன்றின் பார்வைக்கு அனுப்பாமல் மறைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.முதலமைச்சர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்! - ஜோசப் ஸ்டாலின்
[Saturday 2018-01-20 19:00]

பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றச்சாட்டின் கீழ் ஊவா மாகாண முதலமைச்சர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என அதிபர்கள் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதிகாரத்திற்கு கட்டுப்படாத பதுளை பாடசாலை அதிபரை மண்டியிட வைத்தமை குறித்து இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அரசின் மோசடியை மூடிமறைப்பதற்கே கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி!
[Saturday 2018-01-20 19:00]

அரசாங்கம் செய்யும் அரசியல் மோசடியை மூடி மறைப்பதற்கே, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று கிண்ணையடியில் நடைபெற்ற போது உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அதிபரை அச்சுறுத்திய முதலமைச்சர் - சுதந்திரக் கட்சி கண்டனம்!
[Saturday 2018-01-20 19:00]

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபரை அச்சுறுத்திய சம்பவத்தை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கண்டிப்பதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.புலம்பெயர்ந்தோரின் பேரப்பிள்ளைகளுக்கு குடியுரிமை பெற எளிய வழி! - சுவிசில் அறிமுகம்
[Saturday 2018-01-20 19:00]

சுவிற்சர்லாந்தில் மூன்று தலைமுறைகளாக வாழும் வெளிநாட்டவர்களும்கூட, அவர்களது பெற்றோருக்கும் தாத்தா பாட்டிக்கும் சுவிஸ் குடியுரிமை இல்லாமல் தவிக்கின்றனர். இவர்கள் குடியுரிமை பெறவேண்டுமென்றால், ஒரு நீண்ட, கடினமான, பணம் செலவாகக்கூடிய நடைமுறைக்கு உட்படவேண்டும்.ரயிலை மறித்துப் போராட்டம்! Top News
[Saturday 2018-01-20 19:00]

வவுனியா - ஓமந்தை, பெரியவிளாத்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் வீதி ரயில் திணைக்களத்தால் மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து கிராம மக்கள் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த கடுகதி ரயில் இரண்டு மணிநேரம் ஓமந்தை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.பீபா உலகக் கிண்ணம் கொழும்பு வருகிறது!
[Saturday 2018-01-20 19:00]

பீபா உலகக் கிண்ணம் எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதனால் பீபா உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடரின் சாம்பியன் கிண்ணத்தை பார்வையிட இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது. உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 15ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா