Untitled Document
July 28, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
நாவற்குழியில் சிங்களக் குடும்பங்களுக்கு 50 வீடுகள்!
[Thursday 2017-01-12 08:00]

நாவற்குழி பகுதியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமைப்பு திட்டம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டுக்கான மிகப்பெரிய திட்டமாக நாவற்குழி பிரதேசத்தில் 250 வீடுகளை கொண்ட மாதிரி கிராமம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நாவற்குழி பகுதியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமைப்பு திட்டம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டுக்கான மிகப்பெரிய திட்டமாக நாவற்குழி பிரதேசத்தில் 250 வீடுகளை கொண்ட மாதிரி கிராமம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

  

நாவற்குழி பிரதேசத்தில் குடியேறியுள்ள 200 தமிழ் குடும்பங்களில் 50 சிங்களக் குடும்பங்களுக்கான வீடுகளே அமைத்து கொடுக்கப்படவுள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் 5 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், குறித்த மாதிரிக் கிராமத்திலே அனைத்து வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.comடோரன்ரோவில் நாளை உலக பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் விறு விறுப்பான 5 வது சுற்றுப் பேட்டி ஆரம்பம்: 15 நாடுகளிலிருந்து 250 க்கு மேற்பட்ட தமிழ் பேட்டியாளர்கள் Top News Top News
[Friday 2017-07-28 20:00]

உலக பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் 5 வது சுற்றுப் பேட்டி நாளை டோரன்ரோவில் ஆரம்பமாகிறது.

நாளை காலை ஆரம்பமாகவுள்ள இந்த சுற்றுப் பேட்டியில் கனடா உட்பட உலகின் 15 நாடுகளிலிருந்து 250 க்கு மேற்படட தமிழ் பேட்டியாளர்கள் வீர வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள் இம் மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள நிலையில் போட்டியாளர்கள் டொரோண்டோவை வந்தடைந்துள்ள நிலையில் பயிற்சிகளும் ஒத்திகைகளும் இரவு பகலாக நடைபெற்றவண்ணமுள்ளன.வட மாகாணசபை போனஸ் ஆசனம் புளொட்டுக்கு மறுப்பு - சம்பந்தனுக்கு சித்தார்த்தன் அவசர கடிதம்!
[Friday 2017-07-28 19:00]

சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் வழங்கப்பட்டு வந்த வட மாகாணசபையின் போனஸ் ஆசனம் தமது கட்சிக்கு மறுக்கப்படுவதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நல்லைக் கந்தன் கொடியேற்றம்! Top News
[Friday 2017-07-28 19:00]

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ- கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பித்துள்ளது. ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ குமரகுருபர சிவாச்சாரியார்கள் தலைமையிலான சிவாச்சாரியர் கொடியேற்ற மஹோற்சவத்தினை நடாத்தி வைத்தனர். முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையாருக்கு அபிசேகங்களும், ஆராதனைகளும் வசந்த மண்டபத்தில் இடம்பெற்றன.கைது செய்யப்படுவாரா விஜயகலா? திங்கட்கிழமை விசாரணைக்கு அழைப்பு
[Friday 2017-07-28 19:00]

வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை தப்பிக்க விட்ட விவகாரம் தொடர்பாக, வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்வதற்காக இன்று குற்ற விசாரணை பிரிவிற்கு வருமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் கைது செய்யப்படும் கூடும் என்ற அச்சத்தினால் அவர், விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு மாற்றிக் கொண்டுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.சம்பந்தனைச் சந்தித்தார் கனடியத் தூதுவர்!
[Friday 2017-07-28 19:00]

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங் இன்று எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு நடந்தது.நாடாளுமன்றத்தில் குழப்பம்! Top News
[Friday 2017-07-28 19:00]

எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட குழப்பநிலையால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுகின்றன என்று சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.காரைநகர் கடலில் ஆணின் சடலம் மீட்பு! Top News
[Friday 2017-07-28 19:00]

காரைநகர் கடற்பரப்பில் இன்று ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் உள்ளது. சடலத்தை அடையாளம் காணும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணையினை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் - சம்பந்தனுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பேச்சு! Top News
[Friday 2017-07-28 19:00]

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களின் பரம்பரைகளும் அங்கு மீள்குடியேறுவதற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் தாம் வலியுறுத்தியதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் தெரிவித்தார்.அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு- நாளை கைச்சாத்து!
[Friday 2017-07-28 19:00]

அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் நாளை கைச்சாத்திடப்படும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று அறிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபைக்கும் சீன மேர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் கம்பனி லிமிட்டெட் என்ற சீன நிறுவனத்துக்கும் இடையிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.இரணைமடுக் குளத்தில் நீர் வற்றியதால் வாய்க்காலை ஆழப்படுத்தும் விவசாயிகள்! Top News
[Friday 2017-07-28 19:00]

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தும் பணியில் கிளிநொச்சி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இரணைமடு குளத்தின் கீழ் 800 ஏக்கர் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது, இந்த நிலையில் குறித்த குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையால் பயிர்செய்கை நிலங்களிற்கு நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்! Top News
[Friday 2017-07-28 19:00]

மட்டக்களப்பு, வாழைச்சேனை விநாயகபுரத்திலுள்ள கைவிடப்பட்ட காணியிலிருந்து, குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை, இன்று மீட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜ.பி.ரவிச்சந்திரன் தெரிவித்தார். கல்மடு மருத நகர் விநாயகபுரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான இராசையா ரவிச்சந்திரன் வயது (38) என்பவரது சடலமே, மீட்கப்பட்டுள்ளது.கடற்படைக்கு புத்தம்புதிய போர்க்கப்பல்! Top News
[Friday 2017-07-28 19:00]

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படை வரலாற்றில் புதிதாக வாங்கப்பட்ட முதல் நவீன போர்க் கப்பல் இதுவாகும். இதனைத் தயாரிப்பதற்கு சுமார் 66.55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் பலி!
[Friday 2017-07-28 19:00]

மட்டக்களப்பு - வெல்லாவெளி பகுதியில் இன்று மதியம் காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். வெல்லாவெளி 38ஆம் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான நாகமணி இராசதுரை என்பரே காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார். தமது கால்நடைகளை மேய்ப்பதற்காகச் சென்ற வேளையில் பற்றைக்காடுகளின் அருகில் மறைந்திருந்த காட்டுயானை அவரை தாக்கியுள்ளது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.ஓசன் லேடி கப்பல் விவகாரம் - 4 தமிழர்களை விடுவித்தது கனடிய உச்சநீதிமன்றம்!
[Friday 2017-07-28 09:00]

இலங்கை தமிழ் அகதிகளை ஓசன் லேடி கப்பலில் கனடாவுக்கு கடத்தி வந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த நான்கு தமிழர்களை பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது. பிரான்சிஸ் அந்தோனிமுத்து அப்புலோனப்பு, கமல்ராஜ் கந்தசாமி, ஜெயச்சந்திரன் கனகராஜ், விக்னராஜா தேவராஜ் ஆகிய நால்வரே ஆட்கடத்தல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.கொழும்பில் மகிந்த அரசு பறிமுதல் செய்த தமிழரின் வீட்டை ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
[Friday 2017-07-28 09:00]

விடுதலை புலிகளின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள தமிழர் ஒருவருக்கு சொந்தமான வீட்டை பறிமுதல் செய்ய, அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்துள்ளது.அரசியல் தலையீடு- பொருத்து வீடுகளால் வவுனியா மக்களிடையே பதற்றம்! Top News
[Friday 2017-07-28 09:00]

வவுனியாவில் பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்சி சார்ந்த ரீதியில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக நேற்று மாலை 4 மணியளவில் பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் ஒன்றிணைந்த அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர்.டுபாய் வங்கியில் 272 பில்லியன் ரூபாவை வைப்பிலிட்டுள்ள அரசியல் வாரிசு!
[Friday 2017-07-28 09:00]

கடந்த அரசாங்கத்தின் மிக முக்கிய பிரமுகர் ஒருவரின் மகன் டுபாய் வங்கி ஒன்றில் 272 பில்லியன் ரூபா பணத்தை வைப்பிலிட்டுள்ளார் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இவ்வளவு பாரிய தொகைப் பணம் டுபாய் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.தளம் அனுமதிக்க சீனாவுக்கு இடமளியோம்! - இந்தியாவுக்கு இலங்கை அரசு உறுதி
[Friday 2017-07-28 09:00]

கடற்படைத் தளம் அமைப்பதற்கு சீனாவிற்கு அனுமதியளிக்கப்படாது என இந்தியாவிடம் இலங்கை தெரிவித்துள்ளது. வர்த்தக நடவடிக்கைகளுக்காகவே இலங்கையில் சீனாவிற்கு இடமளிக்கப்பட்டது எனவும் இலங்கை தெரிவித்துள்ளது.இலங்கையை அதிகம் விரும்பும் பெண் சுற்றுலாப் பயணிகள்!
[Friday 2017-07-28 09:00]

கடந்த ஆண்டு 2.05 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணம் செய்துள்ளனர். இவர்களில் 54.7 சதவீதமானோர் அல்லது 1.12 மில்லியன் பேர் பெண் சுற்றுலாப் பயணிகள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்திலும் பார்க்க, கூடுதலான பெண் சுற்றுலாப்பயணிகள் இவ்வருடம் இலங்கைக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.புலோலி இளைஞனுக்கு கலட்டிச் சந்தியில் வாள்வெட்டு! - துண்டானது விரல்
[Friday 2017-07-28 09:00]

யாழ்ப்பாணம், கலட்டிப் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி விரல் துண்டிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புலோலி பகுதியைச் சேர்ந்த தினேஸ்குமார் சலோஜிதன் (வயது 18) என்ற இளைஞனே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா