Untitled Document
October 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இந்த வருடத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு நிச்சயம்! - உறுதிப்படுத்துகிறார் மஹிந்த
[Thursday 2017-01-12 09:00]

ஆட்சிக் கவிழ்ப்புக்கு காலம் கடத்தப்படாது. இந்த வருடத்திலேயே அதனை பார்க்க முடியும். எப்போது என்று கூற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று மஹிந்த பார்வையிட்டார். இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு காலம் கடத்தப்படாது. இந்த வருடத்திலேயே அதனை பார்க்க முடியும். எப்போது என்று கூற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று மஹிந்த பார்வையிட்டார். இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

  

இதேவேளை, சீன தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், சீன தூதுவருடன் சிநேகபூர்வ சந்திப்பொன்று இடம் பெற்றது. பாரம்பரிய காணிகள் தொடர்பான விடயங்களை அவருக்கு தெளிவுப்படுத்தியதாக மஹிந்த இதன்போது குறிப்பிட்டார். இது சீனாவுக்கு எதிரான நடவடிக்கை அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.comநம்பகமான பொறுப்புக்கூறல் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்! - ஐ.நா அறிக்கையாளர் Top News
[Monday 2017-10-23 19:00]

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்டுள்ள வழக்கு, மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் எச்சரிக்கை செய்துள்ளார். இலங்கையில் 14 நாட்கள் பயணத்தை மேற்கொண்டிருந்த, உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்தலுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தமது பயணத்தின் முடிவில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு! Top News
[Monday 2017-10-23 18:00]

அரியாலை கிழக்கு, மணியம்தோட்டம் பகுதியில் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மணியம் தோட்டம் உதயபுரம் கடற்கரை வீதி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டொன் போஸ்கோ ரிஸ்மன் மற்றும், நிஷாந்தன் ஆகியோர் மீது இனந்தெரியாதோரால் நேற்று பிற்பகல் துப்பாக்கி சூட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டம்! Top News
[Monday 2017-10-23 18:00]

அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டமொன்றை இன்று ஆரம்பித்துள்ளனர்.

வடக்கில் சிங்களக் குடியேற்றங்களுக்கு சுமந்திரனும், செல்வமும் துணைபோகின்றனர்! - சுரேஸ் குற்றச்சாட்டு
[Monday 2017-10-23 18:00]

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும் தமிழர் பகுதிகளை சிங்கள மயமாக்குவதற்கு உடந்தையாக செயற்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! Top News
[Monday 2017-10-23 18:00]

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும், விசாரணையின்றி சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகளின்றி விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.3 பொலிஸ் குழுக்கள் விசாரணை!
[Monday 2017-10-23 18:00]

அரியாலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பலரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பு வருகின்றன ஆறு அமெரிக்கப் போர்க்கப்பல்கள்!
[Monday 2017-10-23 18:00]

அமெ­ரிக்­காவின் ஆறு நாச­காரி போர்க்­கப்­பல்கள் இம்­மாத இறு­தியில் இலங்­கை வரவுள்ளன. விமானம் தாங்­கி போர்க்­கப்பல் ஒன்­றுடன் இணைந்தே இந்த போர்க்­கப்­பல்கள் இலங்­கை நோக்­கி பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளன. இம்­மாதம் 28 ஆம் திக­தியில் இருந்து 31 ஆம் திக­திக்குள் கொழும்பு துறை­மு­கத்தை இவை வந்­த­டையும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஒரு வார காலம் இந்த கப்­பல்கள் இலங்­கையில் தரித்­தி­ருக்க வாய்ப்­புகள் உள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.இறம்பைக்குளத்தில் டிப்பர் கவிழ்ந்து ஒருவர் படுகாயம்! Top News
[Monday 2017-10-23 18:00]

ஏ9 வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் இன்று காலை ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை மீறி பனை மரத்துடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வு மந்தம்! - துரைரட்ணசிங்கம் எம்.பி Top News
[Monday 2017-10-23 18:00]

போர் முடிவுக்கு வந்த பிற்பாடு, மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு மந்தகதியில் இருக்கின்றது. அற்ப சொற்ப சலுகைகளுக்காக மக்கள் பலரையும் நாடுகின்ற நிலைமை காணப்படுகின்றது.இவைகளில் இருந்து விடுபட்டு எமது மக்கள், விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.நாவற்குழியுடன் ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!
[Monday 2017-10-23 18:00]

கொழும்பு - காங்கேசன்துறை வரையான ரயில் சேவை நாவற்குழி ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாவற்குழியில் உள்ள ரயில் பாலத்தில் உள்ள திருத்த பணிகள் இடம்பெறுவதாலே குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.எப்போது வேண்டுமானாலும் தேர்தலுக்குத் தயார்! - மஹிந்த
[Monday 2017-10-23 18:00]

பலவந்தமாக அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதன் மூலம், நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது சிக்கலுக்குரியது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மருதானையில் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவது பயத்தினால் என குறிப்பிட்ட மஹிந்த, தேர்தல் எப்போது வந்தாலும் அதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.நவாலியில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த வாள்வெட்டுக் குழு!
[Monday 2017-10-23 18:00]

நவாலி பகுதியில் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளுக்கு வாள்வெட்டுக் குழுவினர் தீ வைத்து விட்டு தப்பி சென்ற சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது, 270,000 ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டுப் பேர் கொண்ட குழுவினரே இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள குற்றத்தடுப்பு பொலிஸார், சி.சி.டி.வி கமராக்களின் உதவியுடன் சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் சுடப்பட்ட இளைஞன் நேற்றிரவு மரணம்! - விசாரணைக்கு நீதிவான் உத்தரவு Top News
[Monday 2017-10-23 08:00]

யாழ்ப்பாணம்- அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் பகுதியில் நேற்று பிற்பகல் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், சுவாசப்பையில் ஏற்பட்ட கடுமையான இரத்த போக்கினால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். மணியம் தோட்டம் -உதயபுரம் கடற்கரை வீதி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தொன் போஸ்கோ ரிஸ்மன் மற்றும், நிஷாந்தன் ஆகியோர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருந்தது.கொக்குவிலில் கடை மீது பெற்றோல்குண்டு வீச்சு! - உரிமையாளர் மீது வாள்வெட்டு
[Monday 2017-10-23 08:00]

கொக்குவில் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பிறவுண் வீதியில், நேற்றிரவு கூரிய வாள்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட குழு அப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் மீது பெற்றோல் குண்டு வீசி விட்டு வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து உரிமையாளரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றனர். பெற்றோல் குண்டு வீச்சு மற்றும் வாள்வெட்டுக் குழுவினரின் தாக்குதல் காரணமாக குறித்த வர்த்தக நிலையத்திற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம்! Top News
[Monday 2017-10-23 08:00]

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்த போராட்டம், பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது.இதன்போது, அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும், இராணுவம் அபகரித்து வைத்திருக்கும் மக்களின் காணிகளை மீள கையளிக்க வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகளை வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மகஜர் ஒன்றும் பிரித்தானிய பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசம்! - மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி
[Monday 2017-10-23 08:00]

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரது உடல்நிலை மீண்டும் மிகமோசமான கட்டத்தை அடைந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் மூவரும் பலாத்காரமாக சிறை அலுவலர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிற்கு சேலைன் ஏற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பை சட்டமாக அனுமதியேன்! - சபாநாயகர் திட்டவட்டம்
[Monday 2017-10-23 08:00]

நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த எந்தவொரு அரசியலமைப்பும் சட்டமாக்கப்படுவதற்கு தேவையான சபாநாயகர் ஒப்பத்தை தான் ஒரு போதும் இடமாட்டேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.சின்னையாவின் கதி இன்று தெரியும்!
[Monday 2017-10-23 08:00]

கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையாவின் தொடர்ந்து பதவியில் நீடிப்பாரா என்பது இன்று தீர்மானிக்கப்படும். ட்ராவிஸ் சின்னையா 55ஆவது வயது பூர்த்தி காரணமாக கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் இருந்தார். அக்காலப் பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான பயணமொன்றை மேற்கொள்ள இருந்த நிலையில் கடற்படைத் தளபதிக்கு ஒருமாத கால பதவி நீடிப்பை வழங்கி, இது தொடர்பாக நாடு திரும்பிய பின் கலந்துரையாட அவகாசமளிப்பதாக உறுதியளித்திருந்தார்.நாளை கட்டார் செல்கிறார் ஜனாதிபதி!
[Monday 2017-10-23 08:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை கட்டாருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, ராவூப் ஹக்கீம் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகளும் கட்டார் செல்லவுள்ளனர்.கட்சித் தலைவர்களின் பிரஜாவுரிமையை ஆராய்கிறது தேர்தல் திணைக்களம்!
[Monday 2017-10-23 08:00]

புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் சஹீல முனசிங்க வெளிநாட்டவர் என்ற விடயம் தெரியவந்ததையடுத்து. நாட்டில் அனைத்து கட்சிகளின் நிர்வாகிகளினதும் பிரஜாவுரிமைகள் தொடர்பில் பரீட்சிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. கடந்த 19ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையாக ஆராய்ந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல்கள் சட்டத்தின்கீழ் கட்சிகளின் நிர்வாகிகள் வெளிநாட்டவர்களாக இருக்க முடியாது என்ற விடயத்தை கருத்திற்கொண்டு அனைத்து கட்சி நிர்வாகிகளின் பிரஜாவுரிமைகளையும் ஆராய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா