Untitled Document
April 26, 2024 [GMT]
தமிழர் திருநாளாம் தை பொங்கல்: - சிவ கஜேந்திரகுமார் (சர்வேதேச இந்து இளைஞர் பேரவை இலங்கை)
[Friday 2017-01-13 18:00]

தமிழர்  திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு வருடமும் தை முதலாம் நாள் உலக வாழ் தமிழ்    மக்களால் கொண்டாடப்படுகின்றது.விவசாயிகள் தமது அறுவடைக்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு இணைந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றிசெலுத்தும் முகமாக  இத் திருநாளை கொண்டாடுகின்றனர். அதாவது உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்தது வழிபட்டனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு வருடமும் தை முதலாம் நாள் உலக வாழ் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகின்றது.விவசாயிகள் தமது அறுவடைக்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு இணைந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றிசெலுத்தும் முகமாக இத் திருநாளை கொண்டாடுகின்றனர். அதாவது உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்தது வழிபட்டனர்.

  

பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இலங்கையில் அநேகமாக இரு நாட்களே பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகிப் பண்டிகை : - சூரிய நாட்காட்டியின் படி, தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.

போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள், தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுப்படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும்.

இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால், நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமாக இருக்கலாம் எனக் கருதுவர் இரண்டாம் நாள் தைப்பொங்கல்: - தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க, பொங்கலுக்குத் தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். புதுப்பானை வாங்குவர். மேற்கு உலக நாடுகளில் பொங்கலுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். பொங்கலன்று அதிகாலை எழுந்து மொழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள்.

புதிய பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும், புதிய கரும்பையும், புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். கோலமிட்ட இடத்தில் தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே, தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்: - மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு வண்ணம் பூசி, கூரான கொம்பில் சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்குத் தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.உழவுக்கருவிகளைச் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள்.

தாம்பாளத் தட்டுகளில் தோட்டம், காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனைக் காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறுவது வழமை. உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல்... மாட்டு பொங்கல் பட்டி பெருக.. பால் பானை பொங்க.. நோவும் பிணியும் தெருவோடு போக..' என்று கூறி. மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

நான்காம் நாள் காணும் பொங்கல்: - காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் விழா. காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து பெறும். இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினைக் கட்டி, அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று, அதனை கல்லில் இழைத்து பாதத்திலும் முகத்திலும் பூசிக்கொள்வார்கள். இவ்வகையில் தமிழர் திருநாள் நன்முறையில் அனைத்து வகை மக்களாலும் கொண்டாடப்படும்.

எனவே தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். இத்தனை காலமும் தடைப்பட்ட காரியங்கள் தை பிறந்தவுடன் ஈடேறும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. எனவே நாமும் இயற்கைக்கும், சூரியனுக்கும், கால்நடைகளுக்;கும் நன்றி கூறி அனைத்து சுப காரியங்களும் ஈடேற பிரார்த்திப்போம்.

  
   Bookmark and Share Seithy.com



சஹ்ரானை வளர்த்து விட்டவர் சுரேஸ் சாலே! - சரத் பொன்சேகா குற்றச்சாட்டு.
[Friday 2024-04-26 16:00]

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் நிகழ்வு! Top News
[Friday 2024-04-26 16:00]

தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது. தந்தை செல்வா நினைவு அறக்காவற் குழுவின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில், தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் அன்னாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.



மத்தல விமான நிலைய நிர்வாகம் இந்திய, ரஷ்ய நிறுவனங்களிடம்!
[Friday 2024-04-26 16:00]

மத்தல விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



வவுனியாவில் புளொட் பிரமுகர் வீட்டில் திருடப்பட்டதாக கூறப்பட்ட நகைகள் வீட்டுக் கூரைக்குள் இருந்து மீட்பு!
[Friday 2024-04-26 16:00]

வவுனியா - நகரசபையின் முன்னாள் உபநகர பிதாபின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.



வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை - ஒளிந்திருந்த சந்தேக நபர் கைது!
[Friday 2024-04-26 16:00]

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முன்னிலையில்!
[Friday 2024-04-26 16:00]

உலகில் ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



பிரதான சான்றுப் பொருள் இல்லை - நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டு வழக்கு ஒத்திவைப்பு!
[Friday 2024-04-26 16:00]

நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படாததால் , வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



அளவெட்டியில் எரிந்த நிலையில் முதியவரின் சடலம்!
[Friday 2024-04-26 16:00]

யாழ்ப்பாணம் - அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது!
[Friday 2024-04-26 16:00]

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



சுவீடனுக்குப் பறந்தார் அனுரகுமார!
[Friday 2024-04-26 16:00]

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சுவீடன் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.



நாட்டில் தமிழர்கள் வாழக்கூடாது என அரசு நினைக்கின்றதா?
[Friday 2024-04-26 08:00]

இந்த நாட்டில் தமிழர்கள் இருக்கக்கூடாது அல்லது வாழக்கூடாது என அரசு நினைக்கின்றதா? என கேள்வியெழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான எஸ்.ஸ்ரீதரன் யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் நிறைவுறுவதாக சொல்லப்படுகின்ற நிலையில் கூட தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாதுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.



முறிகண்டியில் விபத்து - சிப்பாய் பலி, 7 பேர் காயம்!
[Friday 2024-04-26 08:00]

முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.



வடக்கு ஆளுநர் செயலகத்தில் அடிதடி!
[Friday 2024-04-26 08:00]

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சர்வதேச சூழ்ச்சி இல்லை!
[Friday 2024-04-26 08:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னால் சர்வதேச சூழ்ச்சி இருந்ததாக தெரியவில்லை என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.



பிள்ளையானைப் பிடித்தால் உண்மைகளை அறிந்து கொள்ளலாம்!
[Friday 2024-04-26 08:00]

பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.



நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடத்தி விளையாடும் திடல் இல்லை!
[Friday 2024-04-26 08:00]

நல்லூர் ஆலய சூழல், துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.



பொருளாதாரம் இலக்கைத் தாண்டி 6 வீதம் மேலதிக வளர்ச்சி!
[Friday 2024-04-26 08:00]

இந்த வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக உயர்ந்திருப்பதாகவும், இது எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியாகும் எனவும் அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.



தாக்குதல்தாரிகளும், தாக்குதலை தடுக்கத் தவறியவர்களும் கூட்டாக சேர்ந்து செயற்பட்டனரா?
[Friday 2024-04-26 08:00]

வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சஹ்ரான் தரப்பினரால் கொல்லப்பட்ட போது அதன் விசாரணைகள் ஏன் வேறு பக்கத்திற்கு திருப்பப்பட்டன? எனக்கேள்வி எழுப்பிய ஜே .வி.பி தலைவரும்,எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க தாக்குதல்தாரிகளும் தாக்குதலை தடுக்கத் தவறியதாக கூறப்படும் தரப்பினரும் கூட்டாக இணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தினரா என்ற சந்தேகங்கள் உள்ளதாகவும் கூறினார்.



சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க!
[Friday 2024-04-26 08:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.



வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் இளைஞன் கைது!
[Friday 2024-04-26 08:00]

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக வியாழக்கிழமைகாலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா